என் மலர்
தொழில்நுட்பச் செய்திகள்
ஏர்டெல் பிராட்பேண்ட் மற்றும் போஸ்ட்பெயிட் சலுகைகளுடன் டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது.
ஏர்டெல் நிறுவனம் தனது பிராட்பேண்ட் மற்றும் போஸ்ட்பெயிட் சலுகைகளுக்கு ஒரு வருடத்திற்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் விஐபி சந்தாவை இலவசமாக வழங்குகிறது. இந்த சலுகை ஏர்டெல் தேங்ஸ் செயலி மூலம் வழங்கப்படுகிறது.
முன்னதாக ஒரு வருடத்திற்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் விஐபி சந்தா ரூ. 399, ரூ. 401, ரூ. 612, ரூ. 1208 மற்றும் ரூ. 2599 போன்ற பிரீபெயிட் சலுகைகளுக்கு அறிவிக்கப்பட்டது. ஏர்டெல் போன்றே ஜியோ நிறுவனமும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் விஐபி சந்தா கொண்ட சலுகைகளை வழங்கி வருகிறது.

புதிய டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் விஐபி சந்தா தேர்வு செய்யப்பட்ட ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இது ரூ. 999 மற்றும் அதற்கும் அதிக விலையில் கிடைக்கும் பிராட்பேண்ட் சலுகைகளில் வழங்கப்படுகிறது. போஸ்ட்பெயிட் சலுகைகளில் ரூ. 499 மற்றும் அதற்கும் அதிக விலை சலுகைகளுடன் வழங்கப்படுகிறது.
ஒரு வருடத்திற்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் விஐபி சந்தா வழங்கப்பட்டு இருக்கிறதா என்பதை பயனர்கள் ஏர்டெல் தேங்ஸ் செயலியில் பார்த்து தெரிந்து கொள்ள முடியும்.
பார்வையற்றவர்களுக்கு உதவும் வகையில் ஐபோன்களில் அசத்தல் அம்சம் புது அப்டேட்டில் வழங்கப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐஒஎஸ் அப்டேட் பார்வை குறைபாடு கொண்டவர்கள் சமூக இடைவெளியை பின்பற்ற உதவுகிறது. இந்த அம்சம் பார்வையற்றவர்கள் அருகில் மனிதர்கள் எத்தனை தூரத்தில் உள்ளனர் என்பதை கணக்கிட்டு தெரிவிக்கிறது.
மக்கள் அருகில் இருப்பதை கண்டறிவதுடன் மக்கள் எத்தனை தூரத்தில் உள்ளனர் என்ற தகவலையும் இந்த அம்சம் தெரிவிக்கிறது. இந்த அம்சம் ஒஎஸ்14.2 அப்டேட் கொண்ட ஐபோன் 12 ப்ரோ மற்றும் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் மாடல்களில் பயன்படுத்த முடியும்.

இந்த அம்சம் ஆப்பிள் நிறுவனத்தின் ஏஆர்கிட் சார்ந்த ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி பிளாட்பார்மில் இயங்குகிறது. ஏஆர்கிட் 4-இல் புத்தம் புதிய டெப்த் அப்ளிகேஷன் ப்ரோகிராமிங் இன்டர்பேஸ் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இது லிடார் ஸ்கேனர் மூலம் டெப்த் விவரங்களை அறிந்து கொள்ளும்.
பின் அறிந்து கொண்ட விவரங்களை துல்லியமாக கணக்கிட்டு பயனர்களுக்கு தெரிவிக்கிறது. ஆப்பிள் நிறுவனம் சமீபத்திய ஐபோன் 12 ப்ரோ, ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் மற்றும் ஐபேட் ப்ரோ போன்ற சாதனங்களில் அதிநவீன லிடார் ஸ்கேனரை வழங்கி இருக்கிறது.
ஆப்பிள் நிறுவனம் நவம்பர் 10 ஆம் தேதி ‘One more thing’ நிகழ்வுக்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
ஆப்பிள் நிறுவனம் ‘One more thing’ விர்ச்சுவல் நிகழ்வு நவம்பர் 10 ஆம் தேதி நடைபெறும் என அறிவித்து இருக்கிறது. இந்த நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் சிலிகான் மேக் சாதனங்களை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த மாதங்களில் தொடர்ச்சியாக ஆப்பிள் நிகழ்வுகள் விர்ச்சுவல் முறையில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. முன்னதாக ஆப்பிள் வல்லுநர் மிங் சி கியோ ஏஆர்எம் மேக் பிராசஸர் கொண்ட முதல் சாதனம் 13 இன்ச் மேக்புக் ப்ரோ என கணித்திருந்தார்.
ஆப்பிள் சிலிகான் பிராசஸர்கள் தலைசிறந்த செயல்திறன் கொண்டிருக்கும் என்றும் இதில் அதிநவீன தொழில்நுட்பங்கள், மேம்பட்ட பவர் மேனேஜ்மென்ட் வழங்கும் என ஆப்பிள் ஏற்கனவே தெரிவித்து இருக்கிறது.
அந்த வகையில் இந்த பிராசஸர் கொண்ட சாதனம் நீண்ட பேட்டரி பேக்கப், அதிக பாதுகாப்பு வழங்கும். மேலும் இதில் தரமான கிராபிக்ஸ் அனுபவத்தை வழங்கும் உயர் ரக ஜிபியு, நியூரன் என்ஜின் மற்றும் மெஷின் லேர்னிங் அக்செல்லரேட்டர்கள், வீடியோ, டிஸ்ப்ளே மற்றும் இமேஜ் பிராசஸிங் என்ஜின்களை கொண்டிருக்கும்.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் 8டி சைபர்பண்க் 2077 லிமிட்டெட் எடிஷன் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது.
ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் 8டி சைபர்பண்க் 2077 லிமிட்டெட் எடிஷன் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. சைபர்பண்க் 2077 ஆர்பிஜி கேமை தழுவி உருவாகி இருக்கும் புதிய ஸ்பெஷல் எடிஷன் மாடல் மிக மெல்லிய வடிவமைப்பு மற்றும் மூன்று வித்தியாச பட்டன்களை கொண்டுள்ளது.
மற்றபடி இதன் அம்சங்கள் ஒன்பிளஸ் 8டி ஸ்டான்டர்டு மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது. ஸ்மார்ட்போனின் பின்புறம் மூன்று பாகங்கள் உள்ளன.
ஸ்பெஷல் எடிஷன் மாடலின் பின் மேல்புறம் பானரோமிக் விண்டோ, மத்தியில் ஸ்பெஷல் ஸ்னோ ஏஜி கிளாஸ் பினிஷ் மற்றும் கீழ்புறத்தில் போர்ஜ் செய்யப்பட்ட கார்பன் பைபர் டெக்ஸ்ச்சரில் சைபர்பண்க் 2077 பொறிக்கப்பட்டு உள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் விசேஷமாக புதிய சிஸ்டம் சவுண்ட் எபெக்ட்கள், இரண்டு கஸ்டம் பில்ட்டர்கள் நைட் சிட்டி மற்றும் நார்தன் கலிபோர்னியா பெயரில் வழங்கப்பட்டு இருக்கிறது. இவை பகல் மற்றும் இரவு நேரங்களில் சைபர்பண்க் 2077 கேமினை பிரதிபலிக்கிறது. இதை கொண்டு வீடியோக்களை பதிவு செய்ய முடியும்.
சைபர்பண்க் 2077 ஸ்பெஷல் எடிஷனுடன் கஸ்டமைஸ் செய்யப்பட்ட லூமினஸ் மொபைல் போன் கேஸ் வழங்கப்படுகிறது. இதன் மேனுவலில் ஆறு லிமிட்டெட் பேட்ஜ்கள் மற்றும் போஸ்டர் வழங்கப்படுகிறது.
ஒன்பிளஸ் 8டி சைபர்பண்க் 2077 லிமிட்டெட் எடிஷன் மாடல் 12 ஜிபி + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டில் கிடைக்கிறது. இதன் விலை 3999 யுவான், இந்திய மதிப்பில் ரூ. 44,430 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
விவோ நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வி20 எஸ்இ மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
விவோ நிறுவனத்தின் வி20 எஸ்இ ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 6.44 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் AMOLED ஹாலோ டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர், 8 ஜிபி ரேம், 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு சென்சார், 2 எம்பி டெப்த் சென்சார் மற்றும் 32 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது.
இத்துடன் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 4100 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்பட்டு இருக்கிறது. இது ஸ்மார்ட்போனை 0 முதல் 62 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 30 நிமிடங்களை எடுத்துக் கொள்கிறது.

விவோ வி20 எஸ்இ சிறப்பம்சங்கள்
- 6.44 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+ AMOLED டிஸ்ப்ளே
- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 665 11nm பிராசஸர்
- அட்ரினோ 610 GPU
- 8 ஜிபி ரேம்
- 128 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 10 மற்றும் பன்டச் ஒஎஸ் 11
- டூயல் சிம்
- 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.8, எல்இடி பிளாஷ்
- 8 எம்பி 120° வைடு ஆங்கில் கேமரா, f/2.2
- 2 எம்பி டெப்த் கேமரா, f/2.4
- 32 எம்பி செல்பி கேமரா, f/2.0
- இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யுஎஸ்பி டைப் சி
- 4100 எம்ஏஹெச் பேட்டரி
- 33 வாட் பாஸ்ட் சார்ஜிங்
விவோ வி20 எஸ்இ ஸ்மார்ட்போன் கிராவிட்டி பிளாக் மற்றும் அக்வாமரைன் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 20,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
சாம்சங் நிறுவனத்திற்கு போட்டியாக சியோமி நிறுவனம் புதிதாக மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
சியோமி நிறுவனம் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருகிறது. இதில் 108 எம்பி பிரைமரி கேமரா வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இதன் வெளியீடு அடுத்த ஆண்டு நடைபெறலாம் என கூறப்படுகிறது.
புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் எம்ஐயுஐ12 குறியீடுகளில் இருந்து கிடைத்து இருக்கிறது. இவற்றை தனியார் செய்தி நிறுவனம் கண்டறிந்து வெளியிட்டு இருக்கிறது. அதன்படி புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் சீடஸ் எனும் குறியீட்டு பெயரில் உருவாகி வருகிறது.

இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 சார்ந்த எம்ஐயுஐ இயங்குதளம் கொண்டிருக்கிறது. தற்போதைய தகவல்களின் படி சியோமி மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் 2021 சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிறப்பம்சங்களை பொருத்தவரை ஸ்னாப்டிராகன் 865 பிளஸ் பிராசஸர், 5ஜி கனெக்டிவிட்டி, 108 எம்பி பிரைமரி கேமரா வழங்கப்படலாம். இந்த சென்சார் சியோமி தனது எம்ஐ10 சீரிஸ் மாடலில் வழங்கியதாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி 5ஜி சிறப்பம்சங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய மோட்டோ ஜி 5ஜி ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி 5ஜி ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 750ஜி பிராசஸர் கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. புதிய மோட்டோ ஜி 5ஜி ஸ்மார்ட்போன் ஜூலை மாதம் அறிமுகம் செய்யப்பட்ட மோட்டோ ஜி 5ஜி பிளஸ் மாடலின் வெனிலா வேரியண்ட் ஆகும்.
தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி மோட்டோ ஜி 5ஜி மாடலில் ஒற்றை பன்ச் ஹோல் செல்பி கேமரா, பின்புறம் மூன்று பிரைமரி கேமரா சென்சார்கள் வழங்கப்படுகின்றன. முந்தைய தகவல்களின் படி இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 690 பிராசஸர் வழங்கப்படும் என கூறப்பட்டது.
எனினும், இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 750 சிப்செட் வழங்கப்படும் என தெரியவந்துள்ளது. இதுதவிர 6.66 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் 1080x2400 பிக்சல் 60 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்படும் என கூறப்படுகிறது.
புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி இரண்டாவது சென்சார், 2 எம்பி மூன்றாவது சென்சார் வழங்கப்படுகிறது. முன்புறம் 16 எம்பி செல்பி கேமரா வழங்கப்படுகிறது. இத்துடன் 5000 எம்ஏஹெச் பேட்டரி, கூகுள் அசிஸ்டண்ட் பட்டன், ஆண்ட்ராய்டு 10 வசதி வழங்கப்படுகிறது.
பென்ச்மார்க் புள்ளிகளில் ஆப்பிள் புதிய பிராசஸரை குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர் பின்னுக்குத் தள்ளி இருக்கிறது.
குவால்காம் நிறுவனத்தின் புதிய பிளாக்ஷிப் பிராசஸர் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய ஸ்னாப்டிராகன் 875 பிராசஸர் முந்தைய ஆண்டின் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸரின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். சமீபத்தில் புதிய குவால்காம் ஸ்னாப்டிராகன் 875 பிராசஸர் பென்ச்மார்க் செயல்திறன் பற்றிய விவரங்கள் வெளியாகி உள்ளது.
அந்த வகையில் ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதை விட முந்தைய ஸ்னாப்டிராகன் 865 பிராசஸரை விட புதிய பிளாக்ஷிப் பிராசஸர் 25 மடங்கு வேகமாக இருக்கிறது. அன்டுடு பென்ச்மார்க் சோதனையில் இந்த பிராசஸர் 8,47,868 புள்ளிகளை பெற்று இருக்கிறது. இது ஆப்பிள் நிறுவன பிராசஸர்களை விட அதிகம் ஆகும்.

பென்ச்மார்க் விவரங்களின் படி புதிய ஆப்பிள் ஏ14 பயோனிக் பிராசர் 6,60,000 புள்ளிகளை பெற்று இருந்தது. இதேபோன்று கிரின் மற்றும் எக்சைனோஸ் முறையே 6,96,000 மற்றும் 6,93,000 புள்ளிகளை பெற்று இருந்தன. புள்ளிகள் அடிப்படையில் சில பிராசஸர்கள் அதிக புள்ளிகளை பெற்று இருக்கின்றன.
எனினும், பிராசஸர்கள் எந்தளவு மென்பொருளுடன் சீராக இணைந்து செயல்படுகிறது என்பதை பொருத்தே அதன் செயல்திறனை அறிந்து கொள்ள முடியும். அந்த வகையில் முந்தைய காலக்கட்டங்களில் ஆப்பிள் மற்றும் கூகுள் இந்த விஷயத்தில் அதிக சிறப்பாக செயலாற்றி இருக்கின்றன.
சியோமி, ஒன்பிளஸ் மற்றும் ரியல்மி போன்ற நிறுவனங்களும் இந்த பிளாக்ஷிப் பிராசஸரை பயன்படுத்த இருக்கின்றன. அந்த வகையில் பிராசஸரை எந்த நிறுவனம் சிறப்பாக கையாள்கிறது என்பதை பொருத்து இருந்து பார்க்க வேண்டும்.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஸ்மார்ட்போன் சீரிஸ் ஆப்பிள் ஸ்டைலில் விற்பனைக்கு வரும் என தகவல் வெளியாகி உள்ளது.
ஐபோன் 12 சீரிஸ் மாடல்களுடன் ஆப்பிள் நிறுவனம் சார்ஜர் மற்றும் இயர்போன்களை வழங்கவில்லை. இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்புக் கிளம்பி இருக்கிறது. இந்த நிலையில், சாம்சங் நிறுவனமும் ஆப்பிள் வழியை பின்பற்றலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி சாம்சங் கேலக்ஸி எஸ்21 சீரிஸ் மாடல்களில் சார்ஜர் மற்றும் இயர்போன் வழங்கப்படாது என கூறப்படுகிறது. இந்த நடவடிக்கைக்கு ஆப்பிள் போன்றே சுற்றுச்சூழல் பாதுகாப்பு காரணத்தை முன்வைக்கும் என தெரிகிறது.

ஐபோன் 12 சீரிஸ் வெளியீட்டின் போது சாம்சங் நிறுவனம் ஆப்பிளை சீண்டும் கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டது. முந்தைய காலகட்டங்களில் ஆப்பிள் புதிய முயற்சிகளுக்கு சாம்சங் காட்டம் தெரிவித்து, பின் அதே நடவடிக்கையை மேற்கொண்டு இருக்கிறது.
தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் உண்மையாகும் பட்சத்தில் சாம்சங் கேலக்ஸி எஸ்21 சீரிஸ் விலையை குறைவாக நிர்ணயம் செய்யலாம் என எதிர்பார்க்கலாம். ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12 சீரிஸ் விலையும் இதே போன்றே நிர்ணயம் செய்து இருக்கிறது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இரண்டாவது காலாண்டில் மட்டும் 73 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ளது.
இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டு நிலவரப்படி ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 40.56 கோடியாக இருக்கிறது. இந்த தகவலை ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் தனது வருவாய் அறிக்கையில் தெரிவித்து இருக்கிறது.
இந்நிறுவனம் இரண்டாவது காலாண்டில் மட்டும் புதிதாக 73 லட்சம் வாடிக்கையாளர்களை இணைத்து உள்ளது. முந்தைய காலாண்டில் ஜியோ நிறுவனம் புதிதாக 99 லட்சம் வாடிக்கையாளர்களை இணைத்து இருந்தது.

மேலும் இரண்டாவது காலாண்டில் ஜியோ நிறுவனம் ஒரு பயனரிடம் இருந்து பெற்ற வருவாய் ரூ. 145 ஆக இருந்தது. இது முந்தைய காலாண்டை விட 3.2 சதவீதம் வரை அதிகம் ஆகும்.
புதிய வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையில் ஜியோ வருடாந்திர அளவில் 13.96 வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் ஜியோ வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 35.59 கோடிகளாக இருந்தது.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஒன்பிளஸ் 8டி லிமிட்டெட் எடிஷன் ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.
ஒன்பிளஸ் 8டி சைபர்பணக் 2077 லிமிட்டெட் எடிஷன் ஸ்மார்ட்போன் நவம்பர் 2 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. தற்சமயம் இந்த ஸ்மார்ட்போனின் புதிய டீசர் வெளியிடப்பட்டு உள்ளது.
அந்த வகையில் இந்த ஸ்மார்ட்போன் எல்லோ மற்றும் கிரே அக்சென்ட் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. ஒன்பிளஸ் நிறுவனம் கேம் டெவலப்பர் சிடி ப்ரோஜெக்ட் நிறுவனத்துடன் இணைந்துள்ளது. சைபர்பண்க் 2077 மாடல் விரைவில் வெளியாக இருக்கும் அதிரடி வீடியோ கேம் ஆகும்.

பலமுறை தாமதமாகி தற்சமயம் சைபர்பண்க் 2077 டிசம்பர் 10 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய ஒன்பிளஸ் 8டி சைபர்பண்க் 2077 எடிஷன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படுமா என்பது பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.
ஒன்பிளஸ் 8டி சைபர்பண்க் 2077 எடிஷன் நவம்பர் 2 ஆம் தேதி இந்திய நேரப்படி 11.30 மணிக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய லிமிட்டெட் எடிஷன் மாடல் ரீடெயில் பேக்கேஜ் சற்றே வித்தியாசமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி சாதனங்களை கண்டறியும் புதிய சேவையை அறிமுகம் செய்து உள்ளது.
சாம்சங் நிறுவனம் ஸ்மார்ட்திங்ஸ் எனும் சேவையை தனது ஸ்மார்ட்திங்ஸ் செயலியில் அறிமுகம் செய்து உள்ளது. இந்த அம்சம் ப்ளூடூத் லோ எனர்ஜி மற்றும் அல்ட்ரா வைடுபேண்ட் கொண்டு இணைக்கப்பட்ட சாம்சங் சாதனங்களை கண்டறிகிறது.
இந்த அம்சம் சாம்சங் ஸ்மார்ட்போன், டேப்லெட் மற்றும் வயர்லெஸ் இயர்போன் மற்றும் ஸ்மார்ட்வாட்ச் போன்ற சாதனங்களிடையே சீராக இயங்குகிறது. ப்ளூடூத் சார்ந்து இயங்குவதால் இது சாதனம் 30 நிமிடங்கள் வரை ஆப்லைனில் இருந்தாலும் சாதனங்களை கண்டறியும்.

சாதனங்களிடையே தரவுகள் அனைத்தும் என்க்ரிப்ட் செய்யப்பட்டு பரிமாற்றம் செய்யப்படுகிறது. ஸ்மார்ட்திங்ஸ் செயலியினுள் இன்டகிரேட் செய்யப்பட்ட மேப் வழங்கப்பட்டு இருக்கிறது. இதை கொண்டு காணாமல் போன சாதனங்களை ரிங் செய்யும் வசதியை வழங்குகிறது.
மேலும் சாதனங்களின் அருகில் இருக்கும் போது சாதனங்களை ஏஆர் சார்ந்த சர்ச் வசதி மூலம் கண்டறிய முடியும். இது சாதனத்தின் அருகில் இருக்கும் போது கலர் கிராபிக்ஸ் திரையில் தோன்றும்.
ஆண்ட்ராய்டு 8 மற்றும் அதற்கும் அதிக இயங்குதளம் கொண்ட சாம்சங் ஸ்மார்ட்போன்களில் ஸ்மார்ட்திங்ஸ் பைண்ட் அம்சம் அப்டேட் மூலம் வழங்கப்பட இருக்கிறது.






