என் மலர்
தொழில்நுட்பச் செய்திகள்
போக்கோ பிராண்டின் புதிய ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
போக்கோ பிராண்டின் புதிய ஸ்மார்ட்போன் மாடல் டிசம்பர் மாத வாக்கில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது மிட்ரேன்ஜ் மாடலாக இருக்கும் என கூறப்படுகிறது.
புதிய போக்கோ ஸ்மார்ட்போன் ரெட்மி நோட் 10 மாடலின் ரீ-பிராண்டு செய்யப்பட்ட வெர்ஷனாக இருக்கும் என தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் டிசம்பர் மாத மத்தியில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய போக்கோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகுமா என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. முன்னதாக போக்கோ மேலாளர் அங்கஸ் கை ஹோ என்ஜி புதிய போக்கோ ஸ்மார்ட்போன் வெளியீட்டிற்கான டீசரை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டு இருந்தார்.
அந்த டீசரின் படி புதிய போக்கோ ஸ்மார்ட்போன் M2010j19CG எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கும் என கூறப்பட்டு இருந்தது. இதைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன் ரெட்மி நோட் 10 4ஜி வேரியண்ட் விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தது.
இந்த மாடல் M2010J19SC எனும் மாடல் நம்பர் கொண்டு சீனாவின் 3சி தளத்தில் சான்று பெற்று இருந்தது. இதே மாடல் சர்வதேச சந்தையில் M2010j19CG எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
முன்னதாக போக்கோ சி3 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இது ரெட்மி 9சி மாடலின் மாற்றம் செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும்.
வி நிறுவனம் இந்திய சந்தையில் எட்டு புதிய ஆட் ஆன் பிரீபெயிட் சலுகைகளை அறிவித்து இருக்கிறது.
வி (வோடபோன் ஐடியா) நிறுவனம் இந்திய சந்தையில் ஆட் ஆன் பிரீபெயிட் சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இவற்றின் விலை ரூ. 32 துவங்கி ரூ. 103 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
வி ரூ. 32 ஆட் ஆன் சலுகையில் 28 நாட்களுக்கு 200 பிரபல கேம்களை விளம்பரங்கள் இன்றி விளையாட முடியும். ஸ்போர்ட்ஸ் ப்ரியர்களுக்கென ரூ. 42 சலுகை அறிவிக்கப்பட்டு உள்ளது. இது 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. இதில் பயனர்களுக்கு விளையாட்டு விவரங்கள் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படும்.

கான்டெஸ்ட் பேக் என அழைக்கப்படும் ரூ. 43 சலுகையில் போட்டிகளில் கலந்து கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது. போட்டிகளில் கலந்து கொண்டு ரீசார்ஜ் மற்றும் கோல்டு வவுச்சர்களை வெல்ல முடியும். இதேபோன்ற சலுகை ரூ. 52 விலையில் வழங்கப்படுகிறது.
இதில் பாலிவுட் பிரபலங்களுடன் நேரலையில் சாட் செய்யும் வசதி வழங்கப்படுகிறது. வி ஆட் ஆன் சலுகைகளை நீண்ட வேலிடிட்டியுடன் பெற விரும்புவோருக்கு ரூ. 62, ரூ. 72, ரூ. 73 மற்றும் ரூ. 103 விலையில் வழங்கப்படுகிறது.
அசுஸ் நிறுவனத்தின் ரோக் போன் 3 மாடல் விலை இந்தியாவில் திடீரென குறைக்கப்பட்டு இருக்கிறது.
இந்தியாவில் அசுஸ் ரோக் போன் 3 மாடலின் விலை திடீரென குறைக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி ரோக் போன் 3 விலை ரூ. 3 ஆயிரம் நிரந்தரமாக குறைக்கப்பட்டு இருக்கிறது. விலை குறைப்பின் படி அசுஸ் ரோக் போன் 3 தற்சமயம் ரூ. 46,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
முன்னதாக அசுஸ் ரோக் போன் 3 ஸ்மார்ட்போன் ரூ. 49,999 விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் ப்ளிப்கார்ட் பிக் தீபாவளி சேல் சிறப்பு விற்பனையில் அசுஸ் ரோக் போன் 3 கூடுதல் சலுகைகளுடன் கிடைக்கிறது.
இத்துடன் வட்டியில்லா மாத தவணை வசதி, ஆக்சிஸ் வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு 10 சதவீதம் உடனடி தள்ளுபடி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
விலை குறைப்பின் படி அசுஸ் ரோக் போன் 3 மாடல் பேஸ் வேரியண்ட் 8 ஜிபி + 128 ஜிபி மாடல் ரூ. 46,999, 12 ஜிபி + 256 ஜிபி மாடல் ரூ. 49,999 மற்றும் டாப் எண்ட் மாடல் 12 ஜிபி + 256 ஜிபி மாடல் ரூ. 54,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் பிளாக் நிறத்தில் மட்டும் கிடைக்கிறது.

அசுஸ் ரோக் போன் 3 சிறப்பம்சங்கள்
- 6.59 இன்ச் 2340×1080 பிக்சல் FHD+ 144Hz OLED டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 6
- 3.1 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 865 பிளஸ் பிராசஸர்
- அட்ரினோ 650 GPU
- 8 ஜிபி LPDDR5 ரேம், 128 ஜிபி (UFS 3.1) மெமரி
- 12 ஜிபி LPDDR5 ரேம், 256 ஜிபி (UFS 3.1) மெமரி
- 12 ஜிபி / 16 ஜிபி LPDDR5 ரேம், 512 ஜிபி (UFS 3.1) மெமரி
- ஆண்ட்ராய்டு 10 மற்றும் ரோக் யுஐ
- டூயல் சிம்
- 64 எம்பி பிரைமரி கேமரா, 0.8μm, f/1.8
- 13 எம்பி 125˚ அல்ட்ரா வைடு கேமரா, f/2.4
- 5 எம்பி மேக்ரோ சென்சார், f/2.0
- 24 எம்பி செல்ஃபி கேமரா, 0.9µm, f/2.0
- யுஎஸ்பி டைப்-சி
- இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 6000 எம்ஏஹெச் பேட்டரி
- 10 வோல்ட் 3ஏ 30வாட் ஹைப்பர்சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங்
மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி சீரிஸ் 5ஜி ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.
லெனோவோவின் மோட்டோரோலா கெய்வ் எனும் குறியீட்டு பெயரில் புதிய ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மோட்டோ ஜி சீரிஸ் மாடலாக இருக்கலாம் என்றும் இதில் 5ஜி வசதி வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
இத்துடன் மோட்டோ ஜி 5ஜி ஸ்மார்ட்போன் விவரங்களும் வெளியாகி இருக்கிறது. அதன்படி புதிய மோட்டோ ஜி 5ஜி மாடலில் ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 690 பிராசஸர், OLED டிஸ்ப்ளே, 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்படும் என கூறப்படுகிறது.

மேலும் புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி சென்சார், 8 எம்பி இரண்டாவது சென்சார் மற்றும் 2 எம்பி சென்சார், 16 எம்பி செல்பி கேமரா வழங்கப்படலாம் என தெரிகிறது. வெளியீட்டின் போது மோட்டோ ஜி 5ஜி மாடலில் ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய மோட்டோ ஜி 5ஜி மாடல் XT2 113-2 மற்றும் XT2 113-3 எனும் மாடல் நம்பர்களுடன் இரண்டு வேரியண்ட்களில் உருவாகி வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்தியாவின் அதிவேக நெட்வொர்க் விவரங்கள் வெளியாகி உள்ளது. இது ஜியோ பயனர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
இந்திய டெலிகாம் சந்தையில் 2020 ஆண்டின் மூன்றாவது காலாண்டில் அதிவேக மொபைல் ஆபரேட்டராக வி (வோடபோன் ஐடியா) இருந்தது.
முன்னணி நிறுவனமான ஜியோ 4ஜி சேவை வழங்குவதில் முதலிடம் பிடித்து இருக்கிறது. நெட்வொர்க் ஆய்வு நிறுவனமான ஊக்லா வெளியிட்ட சமீபத்திய அறிக்கையில் இந்த தகவல் வெளியாகி உள்ளது.

நாட்டில் அதிவேக இணைய வசதி ஒவ்வொரு மாநிலங்களுக்கும் ஏற்ப வேறுபடுகிறது. இதில் ஐதராபாத் அதிவேக டவுன்லோட் வேகம் வழங்கி இருக்கிறது. நாட்டின் ஒட்டுமொத்த டவுன்லோட் வேகம் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 11.6 சதவீதம் அதிகரித்து உள்ளது.
ஊக்லா அறிக்கையின் படி வி நிறுவனத்தின் சராசரி டவுன்லோட் வேகம் 13.74Mbps ஆகவும், 6.19Mbps அப்லோட் வேகம் வழங்கி இருந்தது. இதைத் தொடர்ந்து ஏர்டெல் 13.58Mbps டவுன்லோட், 4.15Mbps அப்லோட் வேகம் வழங்கி உள்ளது.
இதே காலக்கட்டத்தில் ஜியோ 9.71Mbps டவுன்லோட் வேகமும், 3.41Mbps அப்லோட் வேகம் வழங்கி இருக்கிறது. நாட்டில் அதிவேக டேட்டா கிடைக்கும் நகரங்கள் பட்டியலில் சென்னை நான்காவது இடத்தில் உள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி இசட் போல்டு 3 மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மூன்று ஸ்கிரீனுடன் உருவாகி வருதாக தகவல்.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி இசட் போல்டு 3 மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் டூயல் ஹின்ஜ் மற்றும் ஸ்லைடிங் கீபோர்டு கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் சாம்சங் பல்வேறு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை உருவாக்கி வருவதாக தெரிகிறது.
இதில் கேலக்ஸி இசட் போல்டு 3 என கூறப்படும் மாடலின் விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இவை 2018 ஆண்டு வாக்கில் சாம்சங் விண்ணப்பித்து இருந்து காப்புரிமைகளில் இருந்து வெளியாகி உள்ளது.

புதிய தகவல்களின் படி புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் முந்தைய கேலக்ஸி போல்டு 2 போன்ற தோற்றம் கொண்டிருக்கும். கூடுதலாக ஸ்லைடிங் கீபோர்டு வழங்கப்படும் என கூறப்படுகிறது. சாம்சங் விண்ணப்பத்தில் மொத்தம் எட்டு வரைபடங்கள் இருந்ததாக கூறப்படுகிறது.
வரைபடங்களில் ஸ்மார்ட்போன் திறக்கப்பட்ட நிலையில் காட்சியளிக்கிறது. இதில் ஸ்மார்ட்போனின் ஒருபுறம் ஸ்லைடிங் கீபோர்டு காணப்படுகிறது. மொத்தத்தில் இது கேலக்ஸி இசட் போல்டு 2 தோற்றத்தில் கூடுதலாக ஒரு ஸ்கிரீன் மட்டும் வழங்கப்பட்டு இருக்கிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் க்ளிப்ஸ் செயலி அசத்தல் அம்சங்களுடன் அப்டேட் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ஆப்பிள் நிறுவனம் தனது க்ளிப்ஸ் வீடியோ க்ரியேஷன் செயலியை அப்டேட் செய்து இருக்கிறது. புதிய வெர்ஷன் 3.0 முன்பை விட அதிகளவு புதிய அம்சங்களை கொண்டிருக்கிறது. இதில் புதிய இன்டர்பேஸ், லேண்ட்ஸ்கேப் ஒரியன்டேஷன், அதிக ஆஸ்பெக்ட் ரேஷியோ போன்ற வசதிகள் வழங்கப்பட்டு உள்ளன.
இத்துடன் ஐபோன் 12 சீரிஸ் மாடல்களுக்கென ஹெச்டிஆர் தளத்தில் வீடியோக்களை பதிவு செய்யும் வசதியை வழங்கி உள்ளது. இந்த அப்டேட் முற்றிலும் புதிய இன்டர்பேஸ் கொண்டுள்ளது. இதில் ரெக்கார்ட் செய்ய கோரும் பட்டன் திரையில் மிதக்கிறது.

மேலும் எட்டு புதிய ஸ்டிக்கர்கள், 25 புதிய சவுண்ட் டிராக்குகள் வழங்கப்பட்டுள்ளது. இவற்றை கொண்டு பயனர்கள் வீடியோக்களை பலவிதங்களில் மாற்ற முடியும். க்ளிப்ஸ் 3.0 புதிய ஆஸ்பெக்ட் ரேஷியோக்கள், மேம்பட்ட பில்ட்டர்கள், லைவ் டைட்டிள்கள் என பல்வேறு வசதிகளை வழங்குகிறது.
ஐபேட் சாதனங்களில் க்ளிப்ஸ் 3.0 செயலி லேண்ட்ஸ்கேப் மோட் வழங்குகிறது. இத்துடன் ஐஒஎஸ்14 வெர்ஷனில் ஆப்பிள் பென்சில் வழங்கும் ஸ்க்ரிபிள் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. இத்துடன் மேஜிக் கீபோர்டு அல்லது ஸ்மார்ட் கீபோர்டு வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
இவற்றுடன் ஐபோன் 12 சீரிஸ் கொண்டிருக்கும் அம்சங்களை இயக்கும் வசதி புதிய அப்டேட் மூலம் வழங்கப்பட்டு இருக்கிறது. இதனால் பயனர்கள் ஹெச்டிஆர் தரத்தில் வீடியோக்களை பதிவு செய்ய முடியும். மேம்பட்ட ஆப்பிள் க்ளிப்ஸ் 3.0 ஆப் ஸ்டோரில் இலவசமாக கிடைக்கிறது.
ரியல்மி நிறுவனம் இந்திய சந்தையில் சி15 குவால்காம் எடிஷன் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ரியல்மி சி15 குவால்காம் எடிஷன் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் மினி டிராப் டிஸ்ப்ளே, ஆண்ட்ராய்டு 10, ரியல்மி யுஐ வழங்கப்பட்டு உள்ளது.
இத்துடன் 13 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்பி மோனோ கேமரா, 2 எம்பி ரெட்ரோ கேமரா மற்றும் 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 460 பிராசஸர் வழங்கப்பட்டு உள்ளது.

ரியல்மி சி15 குவால்காம் எடிஷன் சிறப்பம்சங்கள்
- 6.52 இன்ச் 1600x720 பிக்சல் ஹெச்டி பிளஸ் மினி டிராப் டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பிளஸ்
- 2.3 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 460 பிராசஸர்
- அட்ரினோ 610 ஜிபியு
- 3 ஜிபி LPDDR4x ரேம், 32 ஜிபி (eMMC 5.1) மெமபி
- 4 ஜிபி LPDDR4x ரேம், 64 ஜிபி (eMMC 5.1) மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம் ஸ்லாட்
- ரியல்மி யுஐ சார்ந்த ஆண்ட்ராய்டு 10
- 13 எம்பி பிரைமரி கேமரா, f/2.2, எல்இடி ஃபிளாஷ், PDAF
- 8 எம்பி 119° அல்ட்ரா வைடு கேமரா, f/2.25
- 2 எம்பி ரெட்ரோ சென்சார்
- 2 எம்பி மோனோ கேமரா, f/2.4
- 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
- ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ
- கைரேகை சென்சார்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- மைக்ரோ யுஎஸ்பி
- 6000 எம்ஏஹெச் பேட்டரி
- 18 வாட் சார்ஜிங்
ரியல்மி சி15 குவால்காம் எடிஷன் ஸ்மார்ட்போன் பவர் புளூ மற்றும் பவர் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 9,999 என்றும் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 10,999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
விவோ நிறுவனத்தின் வி20 ஸ்மார்ட்போன் தற்சமயம் புதிய நிறத்தில் கிடைக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
விவோ வி20 ஸ்மார்ட்போன் தற்சமயம் மூன்லைட் சொனாட்டா நிறத்தில் கிடைக்கிறது. இதுதவிர மிட்நைட் ஜாஸ் மற்றும் சன்செட் மெலடி போன்ற நிறங்களிலும் விவோ வி20 கிடைக்கிறது.
சிறப்பம்சங்களை பொருத்தவரை விவோ வி20 ஸ்மார்ட்போனில் 44 எம்பி செல்பி கேமரா, 33 வாட் பாஸ்ட் சார்ஜிங், 4000 எம்ஏஹெச் பேட்டரி, ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.

விவோ வி20 சிறப்பம்சங்கள்
- 6.44 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் 1080x2400 பிக்சல் AMOLED டிஸ்ப்ளே
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர்
- 8 ஜிபி ரேம்
- 128 ஜிபி மெமரி
- மெமரியை நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 11 மற்றும் பன்டச் ஒஎஸ் 11
- 64 எம்பி பிரைமரி கேமரா
- 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்
- 2 எம்பி மோனோகுரோம் லென்ஸ்
- 44 எம்பி பிரைமரி கேமரா
- 4000 எம்ஏஹெச் பேட்டரி
- 33 வாட் பிளாஷ்சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங்
- டூயல் பேண்ட் வைபை, ப்ளூடூத் 5.1
- யுஎஸ்பி டைப் சி
- இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
விவோ வி20 மூன்லைட் சொனாட்டா நிற வேரியண்ட் ஆப்லைன் விற்பனை மையங்களில் கிடைக்கிறது. இதன் 8 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 24,990, 256 ஜிபி மாடல் ரூ. 27,990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
வெளியீடு தாமதம் ஆனதால் ஆத்திரத்தில் கேம் டெவலப்பருக்கு கொலை மிரட்டல் விடுத்த கேமரால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
கணினி மற்றும் கன்சோல்களில் வெளியாக இருந்த சைபர்பண்க் 2077 கேம் வெளியீடு மூன்றாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது. இம்முறை இதன் வெளியீடு நவம்பர் 19 இல் இருந்து டிசம்பர் 10 ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது.
அதிக எதிர்பார்ப்பு உள்ளதால், கேம் வெளியீட்டை தாங்க முடியாத கேமர்கள் பலரும் சமூக வலைதளங்களில் தங்களின் ஆதங்கத்தை பதிவிட்டு வருகின்றனர். மேலும் இந்த கேமை உருவாக்கும் சிடி ப்ரோஜெக்ட் நிறுவன பங்குகள் வார்சா பங்கு சந்தையில் 5.25 சதவீதம் சரிவடைந்தது.

தொடர்ந்து கேம் வெளியீடு தாமதமாகி வருவதால், ஒருத்தர் இந்த கேம் ஒருவேளை 2077 ஆண்டில் தான் வெளியாகுமா என கிண்டலாக கேள்வி எழுப்பி உள்ளார். இதுமட்டுமின்றி பலரும் கேம் டெவலப்பர்கள் குறித்து தவறான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் சிடி ப்ரோஜெக்ட் நிறுவனத்தின் மூத்த கேம்ஸ் டிசைனர் ஆண்ட்ரெஸ் வடஸ்கி கேம் பிரியர்களுக்கு பதில் அளித்துள்ளார்.
அதில், ``உங்களின் கோபம் எனக்கு புரிகிறது, விவகாரத்தில் உங்களது கருத்துக்களை வெளிப்படுத்த நீங்கள் நினைக்கின்றீர்கள். எனினும், டெவலப்பர்களுக்கு கொலை மிரட்டல் விடுப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது, மேலும் அது முற்றிலும் தவறான நடவடிக்கை. நாங்களும் உங்களை போன்று மனிதர்கள் தான்'' என குறிப்பிட்டுள்ளார்.
புதுமுக பிராண்டான அவிட்டா இந்திய சந்தையில் புதிய எசென்ஷியல் லேப்டாப் மாடலை குறைந்த விலையில் அறிமுகம் செய்துள்ளது.
இந்திய சந்தையில் புதுமுக பிராண்டு அவிட்டா எசென்ஷியல் பெயரில் புதிய லேப்டாப் மாடலை அறிமுகம் செய்து உள்ளது. புதிய லேப்டாப் 14 இன்ச் புல் ஹெச்டி ஸ்கிரீன், 1920x1080 பிக்சல் ரெசல்யூஷன் டிஸ்ப்ளே, டூயல் கோர் இன்டெல் செலரியான் என்4000 பிராசஸர் கொண்டிருக்கிறது.
பிரத்யேக சிப் டிசைன் லேப்டாப் அதிக சத்தத்தை எழுப்பாது. இதில் உள்ள பேட்டரி அதிகபட்சம் 6 மணி நேர பேக்கப் வழங்கும் என அவிட்டா தெரிவித்து உள்ளது. மேலும் இதில் இரண்டு 0.8 வாட் ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

அவிட்டா எசென்ஷியல் சிறப்பம்சங்கள்
- 14 இன்ச் புல் ஹெச்டி ஸ்கிரீன், 1920x1080 பிக்சல் ரெசல்யூஷன் டிஸ்ப்ளே
- டூயல் கோர் இன்டெல் செலரியான் என்4000 பிராசஸர்
- 4 ஜிபி ரேம்
- 128 ஜிபி எஸ்எஸ்டி ஸ்டோரேஜ்
- 2 எம்பி கேமரா
- விண்டோஸ் 10 ஒஎஸ்
- டெக்ஸ்ச்சர் பினிஷ்
- ஆன்டி-கிளேர் ஸ்கிரீன் பேனல்
- வைபை, ப்ளூடூத், ஹெச்டிஎம்ஐ, யுஎஸ்பி போர்ட்
- மைக்ரோ எஸ்டி கார்டு ரீடர்
- ஹெட்போன் ஜாக்
இந்திய சந்தையில் அவிட்டா எசென்ஷியல் மாடல் விலை ரூ. 17,990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது மாணவர்களை குறிவைத்து வெளியிடப்பட்டு இருக்கிறது.
போட் நிறுவனம் இந்திய சந்தையில் தனது முதல் ஸ்மார்ட்வாட்ச் மாடலை போட் ஸ்டாம் எனும் பெயரில் அறிமுகம் செய்து உள்ளது.
இந்திய சந்தையில் நுகர்வோர் மின்சான பொருட்களை உற்பத்தி செய்யும் முன்னணி நிறுவனம் போட். இந்நிறுவனம் இந்திய பிட்னஸ் சந்தையில் தனது முதல் ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்து உள்ளது. புதிய ஸ்மார்ட்வாட்ச் போட் ஸ்டாம் என அழைக்கப்படுகிறது.
போட் ஸ்டாம் ஸ்மார்ட்வாட்ச் மாடலில் 1.3 இன்ச் வளைந்த டிசைனில் தொடுதிரை ஸ்கிரீன் கொண்ட டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் இதய துடிப்பு, எஸ்பிஒ2 மாணிட்டரிங், பல்வேறு ஸ்போர்ட்ஸ் மோட்கள், 5ஏடிஎம் வாட்டர் ரெசிஸ்டண்ட் போன்ற வசதிகள் வழங்கப்பட்டு உள்ளன.

இந்த ஸ்மார்ட்வாட்ச் மெட்டல் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. போட் ப்ரோ-கியர் ஆப் மூலம் இந்த வாட்ச்சிற்கு பல்வேறு கஸ்டமைசேஷன் வசதிகள் வழங்கப்படுகின்றன. இதை கொண்டு பயனர்கள் 100-க்கும் அதிகமான கிளவுட் சார்ந்த வாட்ச் பேஸ்களை டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம்.
ஸ்டாம் ஸ்மார்ட்வாட்ச் மாடலில் எஸ்பிஒ2 வசதி, 24x7 இதய துடிப்பு டிராக்கிங், 9 பில்ட் இன் ஸ்போர்ட்ஸ் மோட்கள் வழங்கப்பட்டு உள்ளன. இதில் உள்ள 210 எம்ஏஹெச் பேட்டரி 10 நாட்கள் பேட்டரி பேக்கப் வழங்குகிறது. ஆக்டிவ் பிளாக், பிளாக் மற்றும் புளூ என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1999 ஆகும்.






