என் மலர்
தொழில்நுட்பச் செய்திகள்
மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இன் பிராண்டு ஸ்மார்ட்போன் மாடல்கள் மீடியாடெக் பிராசஸர் மற்றும் கிரேடியன்ட் பினிஷ் டிசைனுடன் உருவாகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இன் பிராண்டு ஸ்மார்ட்போன் சீரிஸ் இந்திய சந்தையில் நவம்பர் 3 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய இன் பிராண்டு ஸ்மார்ட்போன்கள் மீடியாடெக் ஹீலியோ ஜி சீரிஸ் பிராசஸர் மற்றும் கிரேடியன்ட் பினிஷ் டிசைனுடன் உருவாகி வருகிறது.
புதிய இன் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் பெங்களூருவில் உள்ள மைக்ரோமேக்ஸ் ஆய்வு மற்றும் உற்பத்தி மையத்தில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவை மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உருவாக்கப்படுகின்றன.

இன் பிராண்டு ஸ்மார்ட்போன்கள் பற்றிய புதிய டீசர்களை மைக்ரோமேக்ஸ் தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டது. அதன்படி புதிய ஸ்மார்ட்போன்கள் மீடியாடெக் ஹீலியோ ஜி35 மற்றும் ஹீலியோ ஜி85 பிராசஸர் கொண்டு உருவாக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் கிரேடியன்ட் டிசைன் கொண்டிருக்கிறது.
இந்தியாவில் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் புதிய இன் பிராண்டு ஸ்மார்ட்போன்கள் ரூ. 7 ஆயிரம் பட்ஜெட்டில் துவங்கி அதிகபட்சம் ரூ. 25 ஆயிரம் பட்ஜெட்டில் விலை நிர்ணயம் செய்யப்பட இருக்கின்றன.
விவோ நிறுவனத்தின் வி20 எஸ்இ ஸ்மார்ட்போன் விலை விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
விவோ நிறுவனத்தின் வி20 எஸ்இ ஸ்மார்ட்போன் விலை விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது. இந்திய சந்தையில் விவோ வி20 எஸ்இ மாடல் ரூ. 20,999 விலையில் விற்பனைக்கு வரும் என தெரியவந்துள்ளது.
புதிய விவோ ஸ்மார்ட்போன் விலை விவரங்கள் ரிலையன்ஸ் டிஜிட்டல் மற்றும் க்ரோமா வலைதளங்களில் லீக் ஆகி இருக்கிறது. புதிய வி20 எஸ்இ மாடல் விலை முந்தைய வி20 மாடலை விட ரூ. 4 ஆயிரம் வரை குறைவு ஆகும். புதிய வி20 எஸ்இ வேரியண்ட் கிராவிட்டி பிளாக் நிறத்தில் கிடைக்கிறது.

சிறப்பம்சங்களை பொருத்தவரை விவோ வி20 எஸ்இ மாடலில் 6.44 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, புல் ஹெச்டி பிளஸ் ரெசல்யூஷன், 32 எம்பி செல்பி கேமரா, ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர், 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்படுகிறது.
இத்துடன் விவோவின் பன்டச் யுஐ சார்ந்த ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ், 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்பி லென்ஸ், 4100 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.
எல்ஜி நிறுவனத்தின் வெல்வெட் சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் ரூ. 36 ஆயிரம் பட்டெஜட்டில் அறிமுகம் செய்யப்பட்டது.
எல்ஜி வெல்வெட் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய்பட்டது. புதிய வெல்வெட் ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர் கொண்டுள்ளது.
இத்துடன் 6.8 இன்ச் சினிமா புல்விஷன் புல் ஹெச்டி பிளஸ் OLED டிஸ்ப்ளே, 16 எம்பி கேமரா, 6 ஜிபி ரேம், 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு, 5 எம்பி டெப்த் கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. மெட்டல் பிரேம் கொண்டிருக்கும் எல்ஜி வெல்வெட் 4300 எம்ஏஹெச் பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.

எல்ஜி வெல்வெட் சிறப்பம்சங்கள்
- 6.8 இன்ச் சினிமா ஃபுல் விஷன் டிஸ்ப்ளே
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர்
- அட்ரினோ 630 GPU
- 6 ஜிபி ரேம்
- 128 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- 48 எம்பி பிரைமரி கேமரா
- 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா
- 5 எம்பி டெப்த் சென்சார்
- 16 எம்பி செல்பி கேமரா
- ஆண்ட்ராய்டு 10
- டூயல் சிம்
- இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- யுஎஸ்பி டைப்-சி
- 4300 எம்ஏஹெச் பேட்டரி
- ஃபாஸ்ட் சார்ஜிங்
எல்ஜி வெல்வெட் ஸ்மார்ட்போன் விலை 36,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எல்ஜி வெல்வெட் மற்றும் டூயல் ஸ்கிரீன் காம்போ மாடல் விலை ரூ. 49,990 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
அமேசான் தளத்தில் எக்சேன்ஜ் முறையில் புதிய மொபைல் போன் ஆர்டர் செய்தவருக்கு கிடைத்தது இது தான்.
அமேசான் தளத்தில் நவராத்திரி சிறப்பு விற்பனை சமீபத்தில் நடைபெற்றது. இந்த விற்பனை அதிரடி சலுகைகளை வழங்கிய நிலையில், ஷாப்பிங் செய்த பலர் மகிழ்ச்சியுற்ற போதும், சிலருக்கு ஆன்லைன் ஷாப்பிங் பெரும் கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.
டெல்லியை சேர்ந்த நபர் ஒருவர் தனது பழைய மொபைல் போனை எக்சேன்ஜ் செய்து புதிதாக ரெட்மி 8ஏ டூயல் ஸ்மார்ட்போன் வாங்க அமேசான் தளத்தின் சிறப்பு விற்பனையில் ஆர்டர் செய்தார்.

அதன்படி அவரது பழைய மொபைல் போனை கொடுத்து புதிய போன் அடங்கிய பார்சலை டெலிவரி செய்த ஊழியரிடம் இருந்து பெற்றுக் கொண்டார். பின் தனது பார்சலை திறந்தவர் அதனுள் இருந்த ரின் சோப்பை கண்டு அதிர்ந்து போனார். தனக்கு ஏற்பட்ட நிலையை முதலில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.
இவரது ட்விட்டர் பதிவுக்கு பதில் அளித்த அமேசான் வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட பிரச்சினையை 4 முதல் 5 நாட்களுக்குள் தீர்வு செய்து தருவதாக வாக்குறுதி அளித்துள்ளது.
டிசிஎல் நிறுவனம் புதிய வயர்லெஸ் சப்-ஊபர் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
டிசிஎல் நிறுவனம் டிஎஸ்3015 சவுண்ட்பாரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து உள்ளது. இந்தியாவில் இதன் விலை ரூ. 8999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் அறிமுகமாகி இருக்கும் முதல் ஆடியோ சாதனம் இது ஆகும். முன்னதாக டிசிஎல் நிறுவனம் ஸ்மார்ட் டிவி மற்றும் ஏசி உள்ளிட்டவைகளை விற்பனை செய்து வருகிறது. முன்னதாக டிசிஎல் QLED மற்றும் LED ரக டிவிக்களை சி715 சீரிசில் அறிமுகம் செய்தது.

இது டிசிஎல் நிறுவனத்தின் 2.1 சேனல் சவுண்ட்பார் ஆகும். புதிய டிசிஎல் சவுண்ட்பார் அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் தளங்களில் கிடைக்கிறது.
புதிய டிசிஎல் சவுண்ட்பார் பிளாபன்ட், சியோமி மற்றும் பிலிப்ஸ் போன்ற நிறுவனங்கள் வழங்கி வரும் சவுண்ட்பார் மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. மெயின் பார் ஸ்பீக்கர் இரண்டு ஆடியோ சேனல்களை கொண்டிருக்கிறது. இதன் சப்-ஊபரில் லோ-எண்ட் பிரீக்ன்சிக்களை இயக்குகிறது.
பேஸ்புக் நிறுவனம் இலவசமாக கிளவுட் கேமிங் சேவையை அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.
உலகின் முன்னணி டெக் நிறுவனங்கள் சமீப காலமாக கிளவுட் கேமிங் துறையில் கவனம் செலுத்த துவங்கி இருக்கின்றன. மைக்ரோசாப்ட் எக்ஸ் கிளவுட் மற்றும் கூகுள் ஸ்டேடியா போன்றவை கிளவுட் கேம் ஸ்டிரீமிங் தொழில்நுட்பத்தில் களமிறங்கிய நிலையில் தற்சமயம் பேஸ்புக் நிறுவனமும் கிளவுட் கேமிங் சேவையை துவங்கி இருக்கிறது.
பேஸ்புக் கேமிங் என அழைக்கப்படும் புதிய சேவை கிளவுட் சார்ந்த கேம்களை டவுன்லோட் செய்யாமல் பேஸ்புக் செயலி மற்றும் பிரவுசரில் விளையாடும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
முதற்கட்டமாக இந்த சேவை முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. இது மொபைல் கேமிங் துறையில் மிக பெரிய காரியம் ஆகும். இந்த தளத்தில் வெளியாகும் கேம்கள் சீராக இயங்கும் வகையில் இருக்கும் என தெரிவித்து உள்ளது.

கூகுள் ஸ்டேடியா அல்லது மைக்ரோசாப்ட் எக்ஸ்-கிளவுட் போன்று இல்லாமல், பேஸ்புக்கின் கிளவுட் கேம்கள் நேரடியாக செயலி அல்லது பிரவுசரில் டவுன்லோட் ஆகி சம்பந்தப்பட்ட சாதனத்தில் விளையாட கிடைக்கிறது. பேஸ்புக் கிளவுட் கேமிங் புல் மற்றும் இலவச கேம் என இருவழிகளில் கிடைக்கிறது.
ஆஸ்பால்ட் 9 லெஜண்ட்ஸ் பை கேம்லாப்ட், மொபைல் லெஜண்ட்ஸ் - அட்வென்ச்சர் பை மூன்டன், பிஜிஏ டூர் கொல்ப் ஷூட்அவுட் பை கான்க்ரீட் சாப்ட்வேர், சாலிடேர்- ஆர்தர்ஸ் டேல் பை க்யூப்ளிக்ஸ் கேம்ஸ், டபிள்யூடபிள்யூஇ சூப்பர்கார்டு பை 2கே உள்ளிட்ட கேம்கள் இந்த வாரம் முதல் கிடைக்கிறது.
ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர், 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்ட புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
சியோமியின் ரெட்மி பிராண்டு ரெட்மி கே30எஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் எல்சிடி ஸ்கிரீன், 144 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர், ஸ்னாப்டிராகன் எக்ஸ்55 மோடெம், லிக்விட் கூலிங், ஆண்ட்ராய்டு 10 மற்றும் எம்ஐயுஐ12 வழங்கப்பட்டு உள்ளது.
இத்துடன் 64 எம்பி பிரைமரி கேமரா, 13 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 5 எம்பி சூப்பர் மேக்ரோ கேமரா, பக்கவாட்டில் கைரேகை செனசார், கிளாஸ் பேக் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு, 5000 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

ரெட்மி கே30எஸ் சிறப்பம்சங்கள்
- 6.67 இன்ச் 2340×1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன்
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர்
- அட்ரினோ 650 GPU
- 8 ஜிபி LPPDDR5 ரேம்
- 128 ஜிபி (UFS 3.1) / 256 ஜிபி (UFS 3.1) மெமரி
- டூயல் சிம்
- எம்ஐயுஐ 12 சார்ந்த ஆண்ட்ராய்டு 10
- 64 எம்பி பிரைமரி கேமரா, f/1.89, எல்இடி பிளாஷ்
- 13 எம்பி 123° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.4
- 5 எம்பி மேக்ரோ லென்ஸ், f/2.4
- 20 எம்பி செல்பி கேமரா, f/2.2
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- யுஎஸ்பி டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
- 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1
- யுஎஸ்பி டைப் சி
- 5000 எம்ஏஹெச் பேட்டரி
- 33 வாட் பாஸ்ட் சார்ஜிங்
புதிய ரெட்மி கே30எஸ் ஸ்மார்ட்போன் இன்டர்ஸ்டெல்லார் பிளாக் மற்றும் மூன்லைட் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை 2599 யுவான், இந்திய மதிப்பில் ரூ. 28,570 என்றும் 8 ஜிபி + 256 ஜிபி மாடல் விலை 2799 யுவான், இந்திய மதிப்பில் ரூ. 30,765 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
ரியல்மி நிறுவனத்தின் சி17 ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ரியல்மி நிறுவனத்தின் சி17 ஸ்மார்ட்போன் நவம்பர் இறுதியிலோ அல்லது டிசம்பர் மாத துவக்கத்திலோ அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் கடந்த மாத இறுதியில் வங்கதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
ரியல்மி சி17 ஸ்மார்ட்போனில் குவாட் கேமரா சென்சார்கள், 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 460 பிராசஸர் வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ரியல்மி எக்ஸ்7 சீரிசுடன் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

வங்கதேசத்தில் இந்த ஸ்மார்ட்போன் விலை இந்திய மதிப்பில் ரூ. 13,900 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 6 ஜிபி + 128 ஜிபி என ஒறஅறை வேரியணட், லேக் கிரீன் மற்றும் நேவி புளூ என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.
ப்ளிப்கார்ட் நிறுவனத்தின் பிக் தீபாவளி சேல் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
ப்ளிப்கார்ட் நிறுவனம் அடுத்த சில வாரங்களில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மற்றொரு சிறப்பு விற்பனையை நடத்த இருக்கிறது. இந்தியாவில் இந்த சிறப்பு விற்பனை அக்டோபர் 29 ஆம் தேதி துவங்குகிறது.
தற்போதைய அறிவிப்பின் படி தீபாவளி சிறப்பு விற்பனை அக்டோபர் 29 ஆம் தேதி துவங்கி நவம்பர் 4 வரை நடைபெற இருக்கிறது. எனினும், ப்ளிப்கார்ட் பிளஸ் வாடிக்கையாளர்கள் 12 மணி நேரம் முன்னதாகவே சிறப்பு விற்பனையில் பங்கேற்க முடியும்.

பிளஸ் வாடிக்கையாளர்களுக்கு அக்டோபர் 29 ஆம் தேதி நள்ளிரவு முதல் சிறப்பு சலுகை மற்றும் தள்ளுபடி உள்ளிட்டவை வழங்கப்பட இருக்கிறது. ப்ளிப்கார்ட் பிக் தீபாவளி 2020 விற்பனை அக்டோபர் 29 மதியம் 12 மணிக்கு நடைபெற இருக்கிறது.
சிறப்பு விற்பனையின் போது மொபைல்கள், டிவி மற்றும் இதர சாதனங்களுக்கு விசேஷ கேஷ்பேக் மற்றும் வங்கி சார்ந்த சலுகைகள் வழங்கப்படுகின்றன. இதுதவிர முந்தைய விற்பனைகளை போன்றே வட்டியில்லா மாத தவணை வசதி, கேஷ்பேக் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
ஒன்பிளஸ் நிறுவனம் பட்ஜெட் விலையில் இரு ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போன்களை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனம் நார்டு என்10 5ஜி மற்றும் நார்டு என்100 ஸ்மார்ட்போன்களை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. நார்டு என்10 5ஜி ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 690, பிராசஸர், 6 ஜிபி ரேம், குவாட் கேமரா சென்சார்கள், 4300 எம்ஏஹெச் பேட்டரி, வார்ப் சார்ஜ் 30டி சார்ஜிங் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
நார்டு என்100 மாடலில் 6.52 இன்ச் ஹெச்டி பிளஸ் 60 ஹெர்ட்ஸ் ஸ்கிரீன், 8 எம்பி பன்ச் ஹோல் கேமரா, ஸ்னாப்டிராகன் 460 பிராசஸர், 4 ஜிபி ரேம், மூன்று கேமரா சென்சார்கள், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் சார்ஜிங் வழங்கப்பட்டு இருக்கிறது.
இரு ஸ்மார்ட்போன்களும் ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஆக்சிஜன் ஒஎஸ் 10.5, பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் ஒவ்வொரு சந்தைக்கு ஏற்ப இவை சிங்கில் மற்றும் டூயல் சிம் கார்டு வெர்ஷன்களில் கிடைக்கிறது.

ஒன்பிளஸ் நார்டு என்10 5ஜி சிறப்பம்சங்கள்
- 6.49 இன்ச் 1080x2400 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன்
- 2.5D கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு
- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 690 பிராசஸர்
- அட்ரினோ 619L GPU
- 6 ஜிபி LPDDR4x ரேம்
- 128 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம்
- ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஆக்சிஜன் ஒஎஸ் 10.5
- 64 எம்பி பிரைமரி கேமரா, f/1.79
- 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, f/2.25
- 2 எம்பி மோனோகுரோம் சென்சார்
- 2 எம்பி மேக்ரோ கேமரா, f/2.4
- 16 எம்பி செல்பி கேமரா, f/2.05
- பின்புறம் கைரேகை சென்சார்
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
- 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- யுஎஸ்பி டைப் சி
- 4,300 எம்ஏஹெச் பேட்டரி
- வார்ப் சார்ஜ் 30டி சார்ஜிங்
ஒன்பிளஸ் நார்டு என்100 சிறப்பம்சங்கள்
- 6.52 இன்ச் 1600x720 பிக்சல் HD+ LCD ஸ்கிரீன்
- 2.5D கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு
- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 460 பிராசஸர்
- அட்ரினோ 610 GPU
- 6 ஜிபி LPDDR4x ரேம்
- 64 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம்
- ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஆக்சிஜன் ஒஎஸ் 10.5
- 13 எம்பி பிரைமரி கேமரா, f/2.2
- 2 எம்பி டெப்த் சென்சார்
- 2 எம்பி மேக்ரோ சென்சார்
- 8 எம்பி செல்பி கேமரா, f/2.0
- பின்புறம் கைரேகை சென்சார்
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- யுஎஸ்பி டைப் சி
- 5000 எம்ஏஹெச் பேட்டரி
- 18 வாட் பாஸ்ட் சார்ஜிங்
ஒன்பிளஸ் நார்டு என்10 ஸ்மார்ட்போன் மிட்நைட் ஐஸ் நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை 329 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 28,785 என்றும் நார்டு என்100 ஸ்மார்ட்போன் மிட்நைட் பிராஸ்ட் நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை 179 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 15,665 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதிவேக மொபைல் டேட்டா வழங்கும் நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு எந்த இடம் என தொடர்ந்து பார்ப்போம்.
உலகளவில் ஸ்மார்ட்போன் பயனர்கள் அதிகம் கொண்ட நாடு இந்தியா. உலகின் மற்ற நாடுகளில் இருப்பதை விட இந்தியாவில் மொபைல் டேட்டாவுக்கான கட்டணமும் குறைவு.
தற்சமயம் வெளியாகி இருக்கும் ஆய்வு அறிக்கையின் படி சர்வதேச சந்தையில் அதிவேக மொபைல் டேட்டா வழங்கும் நாடுகள் பட்டியலில் இந்தியா 131-வது இடம் பிடித்துள்ளது. தென் கொரியா, இலங்கை, நேபால் மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளை விட இந்தியாவில் மொபைல் டேட்டா வேகம் குறைவு ஆகும்.

ஆய்வு நிறுவனமான ஊக்லா வெளியிட்ட தகவல்களின் படி செப்டம்பர் மாதத்தில் இந்திய சந்தையில் மொபைல் டேட்டா டவுன்லோட் வேகம் சராசரியாக 12.07Mbps ஆக இருந்துள்ளது. சர்வதேச அளவில் மொபைல் டேட்டா வேகம் சராசரியாக 35.06Mbps ஆக இருக்கிறது.
அதிவேக மொபைல் டேட்டா வழங்கும் நாடுகள் பட்டியலில் நேபால், பாகிஸ்தான் மற்றும் இலங்கை உள்ளிட்ட நாடுகள் முறையே 102, 116 மற்றும் 117-வது இடங்களை பிடித்துள்ளன.
பிராட்பேண்ட் வேகத்தை பொருத்தவரை இந்தியா 70-வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் பிராட்பேண்ட் டவுன்லோட் வேகம் சராசரியாக 46.47Mbps ஆக இருக்கிறது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி இசட் ப்ளிப் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனிற்கு அதிரடி தள்ளுபடி வழங்கப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி இசட் ப்ளிப் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ரூ. 39,009 தள்ளுபடியில் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இந்த தகவலை மகேஷன் டெலிகாம் வெளியிட்டு இருக்கிறது. இந்தியாவில் கேலக்ஸி இசட் ப்ளிப் விலை ரூ. 1,08,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
எனினும், தற்சமயம் இந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனிற்கு ரூ. 39,009 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதனால் சாம்சங் கேலக்ஸி இசட் ப்ளிப் ஸ்மார்ட்போன் ரூ. 69,990 விலையில் கிடைக்கிறது. இது குறுகிய கால சலுகை ஆகும்.

இந்த அதிரடி விலை குறைப்பு ரீடெயில் ஸ்டோர்களில் மட்டுமே வழங்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனை வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது 10 சதவீதம் வரை கேஷ்பேக் பெற முடியும்.
சிறப்பம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி இசட் ப்ளிப் மாடலில் 6.7 இன்ச் புல் ஹெச்டி 1080x2636 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, 1.1 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 பிளஸ் பிராசஸர், அட்ரினோ 650 ஜிபியு கொண்டுள்ளது.
மேலும் 8 ஜிபி + 256 ஜிபி மெமரி, 12 எம்பி வைடு ஆங்கில் லென்ஸ், 12 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 10 எம்பி செல்பி கேமரா, பக்கவாட்டில் கைரேகை சென்சார், 3300 எம்ஏஎஹ்ச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.






