என் மலர்tooltip icon

    தொழில்நுட்பச் செய்திகள்

    சியோமியின் ரெட்மி நோட் 10 4ஜி ஸ்மார்ட்போன் விவரங்கள் சீன வலைதளத்தில் லீக் ஆகி இருக்கிறது.


    ரெட்மி நோட் 10 4ஜி ஸ்மார்ட்போன் விவரங்கள் சீனாவின் 3சி வலைதளத்தில் லீக் ஆகி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் M2010J19SC எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. முன்னதாக இதே மாடல் நம்பர் கொண்ட ஸ்மார்ட்போன் விவரங்கள் சீனாவின் தகவல் தொழில்நுட்ப வலைதளத்தில் லீக் ஆனது.

    அந்த வகையில் இந்த ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் அறிமுகமாகும் என தெரிகிறது. ரெட்மி நோட் 10 4ஜி வேரியண்ட்டில் அதன் 5ஜி வேரியண்ட் கொண்டிருக்கும் பெரும்பாலான சிறப்பம்சங்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. 

     ரெட்மி நோட் 9

    தற்போதைய தகவல்களின் படி ரெட்மி நோட் 10 4ஜி வேரியண்ட் 22.5 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதனுடன் வழங்கப்படும் சார்ஜர் MDY-11-EM எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் பல்வேறு வேரியண்ட்களில் அறிமுகமாகிறது.

    புதிய ரெட்மி நோட் 10 4ஜி மாடல் பற்றி சியோமி சார்பில் இதுவரை எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. மேலும் M2010J19SC எனும் மாடல் நம்பர் கொண்ட ஸ்மார்ட்போன் ரெட்மி நோட் சீரிசில் அறிமுகமாகுமா அல்லது முற்றிலும் புதிய மாடலாக இருக்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
    அசத்தலான டீசருடன் பாஜி கேம் இந்திய வெளியீட்டு விவரங்களை என்கோர் கேம்ஸ் நிறுவனம் அறிவித்து இருக்கிறது.


    பாஜி கேம் இந்திய வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. எனினும், இந்த கேமை உருவாக்கி வரும் என்கோர் கேம்ஸ் தனது பாஜி கேம்வெளியீட்டு விவரங்களை தனது ட்விட்டர் அக்கவுண்ட்டில் அறிவித்து உள்ளது.

    பாஜி - பியர்லெஸ் அண்ட் யுனைட்டெட் கார்ட்ஸ் என்ற விரிவாக்கம் கொண்ட கேம் நவம்பர் மாதம் வெளியாகிறது. மேலும் இந்த கேமின் 1 நிமிட டீசர் வீடியோவையும் என்கோர் கேம்ஸ் வெளியிட்டு உள்ளது. டீசரில் புதிய கேம் கிராபிக்ஸ் மற்றும் கேம்பிளே தெரியவந்துள்ளது. 

     பாஜி

    முன்னதாக  இந்த கேம் பற்றிய அறிவிப்பு செப்டம்பர் மாதம் வெளியானது. முன்னதாக இந்தியாவில் பப்ஜி கேமிற்கான தடை உத்தரவு வெளியானது. கேம் அறிவிப்பின் போது, இது அக்டோபர் மாத இறுதியில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. எனினும், இந்த கேம் வெளியீடு எதிர்பார்க்கப்பட்டவிட மேலும் தாமதமாகும் என தெரிகிறது.

    பாஜி கேம்பிளே கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெறும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. எனினும், வெளியீட்டின் போது இந்த கேமில் பேட்டிள் ராயல் மோட் வழங்கப்படாது என பாஜி இணை நிறுவனர் விஷால் கோண்டல் தெரிவித்து இருக்கிறார்.

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் நார்டு என்100 ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.


    ஒன்பிளஸ் நார்டு என்100 விவரங்கள், விலை மற்றும் வெளியீட்டு தேதி உள்ளிட்டவை இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. அதன்படி ஒன்பிளஸ் நார்டு என்100 ஸ்மார்ட்போனில் 6.52 இன்ச் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 460 பிராசஸர், 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி வழங்கப்படும் என தெரிகிறது.

    இத்துடன் ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ், 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி போர்டிரெயிட் மற்றும் 2 எம்பி மேக்ரோ லென்ஸ், 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்படலாம். மேலும் இந்த ஸ்மார்ட்போனில் ஹெட்போன் ஜாக், 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

     ஒன்பிளஸ் நார்டு

    புதிய ஒன்பிளஸ் நார்டு என்100 ஸ்மார்ட்போனுடன் நார்டு என்10 5ஜி ஸ்மார்ட்போனும் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. ஒன்பிளஸ் நார்டு என்100 மாடலின் விலை 199 யூரோக்கள் இந்திய மதிப்பில் ரூ. 17,500 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இந்திய சந்தையில் ஒன்பிளஸ் நார்டு என்100 மாடல் விலை ரூ. 15 ஆயிரம் பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
    ரியல்மி நிறுவனத்தின் புதிய வாட்ச் எஸ் ஸ்மார்ட்வாட்ச் மாடல் சர்வதேச வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.


    ரியல்மி நிறுவனத்தின் புதிய வாட்ச் மாடல் விரைவில் அறிமுகம் ஆக இருக்கிறது. ரியல்மி வாட்ச் எஸ் மாடல் நவம்பர் 2 ஆம் தேதி அறிமுகமாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது.

    புதிய வாட்ச் மாடல் வெளியீட்டை ஒட்டி ரியல்மி பகிர்ந்து இருக்கும் புதிய டீசரில் வாட்ஸ் எஸ் மாடலின் வடிவமைப்பு மற்றும் அம்சங்கள் பற்றிய விவரங்கள் தெரியவந்து இருக்கிறது.

     ரியல்மி வாட்ச் எஸ்

    அதன்படி புதிய வாட்ச் எஸ் 1.3 இன்ச் ஆட்டோ பிரைட்னஸ் வசதி கொண்ட டச் ஸ்கிரீன், இதய துடிப்பு சென்சார், எஸ்பிஒ2 மாணிட்டர் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இத்துடன் OLED டிஸ்ப்ளே மற்றும் 15 நாட்கள் பேட்டரி பேக்கப் வழங்கும் என தெரிகிறது.

    ரயல்மி வாட்ச் எஸ் மாடலில் போன் மூலம் மியூசிக் பிளேபேக் கண்ட்ரோல் வசதி வழங்கப்படுகிறது. புதிய ரியல்மி வாட்ச் இந்திய சந்தையில் அறிமுகம் ஆகுமா என்பது தற்போது கேள்விக்குறியாகவே உள்ளது. 
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எப் சீரிஸ் மாடல் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.


    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எப் சீரிஸ் புதிய ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. அதன்படி புதிய மாடல் எப்12 பெயரில் வெளியாகும் என கூறப்படுகிறது.

    தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின் படி புதிய கேலக்ஸி எப்12 ஸ்மார்ட்போன் SM-F127G எனும் மாடல் நம்பர் கொண்டு உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இத்துடன் மற்றொரு கேலக்ஸி ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்களும் வெளியாகி இருக்கிறது.

     கேலக்ஸி எம்01

    முந்தைய கேலக்ஸி எப்41 ஸ்மார்ட்போன் போன்றே புதிய கேலக்ஸி எப்12 மாடலும் கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போனின் ரீ-பிராண்டு செய்யப்பட்ட வெர்ஷனாக இருக்கும் என தெரிகிறது.

    இத்துடன் கேலக்ஸி ஏ02எஸ் ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்களும் இணையத்தில் லீக் ஆகி உள்ளது. அதன்படி கேலக்ஸி ஏ02எஸ் ஸ்மார்ட்போன் SM-A025G எனும் மாடல் நம்பர் கொண்டு உருவாகி வருகிறது.

    சிறப்பம்சங்களை பொருத்த வரை கேலக்ஸி ஏ02எஸ் ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம், ஆக்டா கோர் குவால்காம் பிராசஸர், ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ் வழங்கப்படும் என தெரிகிறது.
    வாட்ஸ்அப் செயலியில் இரண்டு புதிய அம்சங்கள் விரைவில் வழங்கப்பட இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    பிரபல குறுந்தகவல் செயலியான வாட்ஸ்அப்பில் அவ்வப்போது புதிய அம்சங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் வாட்ஸ்அப்  நிறுவனம் தனது பீட்டா செயலியில் 2.20.203.3 அப்டேட்டை வெளியிட்டு உள்ளது. 

    புதிய அப்டேட்டில் மிஸ்டு கால்களில் இணைவது, பேஸ் அன்லாக் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. தற்சமயம் க்ரூப் கால்களை ஏற்கவில்லை எனில், கால் செய்தவர் முயற்சிக்காமல் பயனர்களால் அதில் இணைய முடியாது. 

     வாட்ஸ்அப்

    தற்சமயம், இந்த பிரச்சனையை தீர்க்க மிஸ்டு கால்களில் இணைந்து கொள்ளும் வசதியை வாட்ஸ்அப் சோதனை செய்து வருகிறது. இந்த வசதி க்ரூப் கால் நிறைவுறும் வரையில் செயல்படும். இதனை இயக்க பயனர்கள் வாட்ஸ்அப் செயலியை திறந்தாலே போதுமானது. பின் திரையில் அழைப்பில் இணைந்து கொள்ள கோரும் ஆப்ஷன் தோன்றும்.

    இத்துடன் செயலியின் பாதுகாப்பை மேம்படுத்த கைரேகை வசதியுடன் பேஸ் அன்லாக் வசதியும் வாட்ஸ்அப்பில் சோதனை செய்யப்படுகிறது. சமீபத்திய ஸ்மார்ட்போன்களில் பேஸ் அன்லாக் வசதி அதிக பிரபலமாகி வருவதை அடுத்து வாட்ஸ்அப் இதனை தனது செயலியில் சேர்ப்பதற்கான சோதனையை துவங்கி இருக்கிறது.
    மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இன் பிராண்டு ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.


    மைக்ரோமேக்ஸ் நிறுவனம் இன் எனும் புதிய பிராண்டை கடந்த வாரம் அறிமுகம் செய்தது. புதிய இன் பிராண்டிங் ஸ்மார்ட்போன் மாடல்களுடன் விரைவில் சந்தையில் ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கிறது. 

    தற்சமயம் புதிய இன் பிராண்டு ஸ்மார்ட்போன் நவம்பர் 3 ஆம் தேதி அறிமுகமாகும் என மைக்ரோமேக்ஸ் இந்தியா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளது. 

     இன்

    புதிய இன் சீரிஸ் மாடல் மலிவு விலையில் கிடைக்கும் என அதன் தலைமை செயல் அதிகாரி ராகுல் ஷர்மா ஏற்கனவே தெரிவித்தார். மேலும் புதிய இன் சீரிஸ் மாடல்களின் விலை ரூ. 7 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 25 ஆயிரம் பட்ஜெட்டில் கிடைக்கும் என கூறப்பட்டது.

    நவம்பர் மாத பண்டிகை காலத்தில் பல்வேறு புதிய மாடல்கள் இந்திய சந்தையில் வெளியாக இருக்கின்றன. அந்த வரிசையில் தற்சமயம் மைக்ரோமேக்ஸ் இணைய இருப்பதை அதிகாரப்பூர்வமாக தெரிவித்து இருக்கிறது.
    பிஎஸ்என்எல் நிறுவனம் தனது பிரீபெயிட் சலுகைகளில் திடீர் மாற்றம் செய்துள்ளதாக அறிவித்து இருக்கிறது.


    பிஎஸ்என்எல் பிரீபெயிட் மற்றும் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது புதிய சலுகைகளை அந்நிறுவனம் அறிவித்து வருகிறது. இத்துடன் ஏற்கனவே அறிவித்த சலுகைகளை மாற்றியமைத்து வருகிறது. அந்த வரிசையில், பிஎஸ்என்எல் ரூ. 135 சலுகையை மாற்றி இருக்கிறது.

    பண்டிகை காலத்தை முன்னிட்டு பிஎஸ்என்எல் ரூ. 135 விலை சலுகையின் வேலிடிட்டி நான்கு நாட்கள் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் வாய்ஸ் கால் அளவு முந்தைய 300 நிமிடங்களில் இருந்து தற்சமயம் 1440 நிமிடங்கள் வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. 

     கோப்புப்படம்

    மேலும் எம்டிஎன்எல் நெட்வொர்க்கில் மும்பை மற்றும் டெல்லி வட்டாரங்களில் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளை வழங்குகிறது. தற்போதைய தகவல்களின் படி வேலிடிட்டி நீட்டிப்பு தற்சமயம் தமிழ் நாடு வட்டாரத்திற்கு மட்டுமே பொருந்தும் என கூறப்படுகிறது.

    பிஎஸ்என்எல் ரூ. 147, ரூ. 247, ரூ. 699 மற்றும் ரூ. 1999 விலை சலுகைகளின் வேலிடிட்டியும் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. இந்த சலுகைகள் நவம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. 
    இன்பினிக்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் ஹாட் 10 ஸ்மார்ட்போனின் புது வேரியண்ட்டை அறிமுகம் செய்துள்ளது.


    டிரான்சிஷன் குழுமம் இன்பினிக்ஸ் ஹாட் 10 ஸ்மார்ட்போனினை இந்த மாத துவக்கத்தில் அறிமுகம் செய்தது. தற்சமயம் இந்த ஸ்மார்ட்போனின் 4 ஜிபி + 64 ஜிபி வேரியண்ட்டை அறிமுகம் செய்துள்ளது.

    புதிய ஸ்மார்ட்போனில் 6.78 இன்ச் ஹெச்டி பிளஸ் பின்ஹோல் எல்சிடி ஸ்திரீன், மீடியாடெக் ஹீலியோ ஜி70 பிராசஸர், 4 ஜிபி / 6 ஜிபி ரேம், 64 ஜிபி / 128 ஜிபி மெமரி வழங்கப்பட்டு உள்ளது. 

    புகைப்படங்களை எடுக்க 16 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா, 2 எம்பி டெப்த் சென்சார், லோ-லைட் வீடியோ கேமரா மற்றும் 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. பின்புறம் கைரேகை சென்சார் மற்றும் 5200 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

     இன்பினிக்ஸ் ஹாட் 10

    இன்பினிக்ஸ் ஹாட் 10 சிறப்பம்சங்கள்

    - 6.78 இன்ச் 1640x720 பிக்சல் ஹெச்டி பிளஸ் 20.5:9 பின்ஹோல் டிஸ்ப்ளே
    - ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி70 பிராசஸர்
    - ஏஆர்எம் மாலி ஜி52 2இஇஎம்சி2 ஜிபியு
    - 4 ஜிபி / 6 ஜிபி ரேம்
    - 64 ஜிபி / 128 ஜிபி மெமரி
    - டூயல் சிம் ஸ்லாட்
    - எக்ஸ்ஒஎஸ் 7 சார்ந்த ஆண்ட்ராய்டு 10
    - 16 எம்பி பிரைமரி கேமரா, f/1.79
    - 2 எம்பி மேக்ரோ கேமரா
    - 2 எம்பி டெப்த் கேமரா
    - லோ-லைட் வீடியோ கேமரா, குவாட் எல்இடி பிளாஷ்
    - 8 எம்பி செல்பி கேமரா, f/1.8, டூயல் எல்இடி பிளாஷ்
    - பின்புறம் கைரேகை சென்சார்
    - 3.5 எம்எம் ஜாக், டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    - மைக்ரோ யுஎஸ்பி
    - 5200 எம்ஏஹெச் பேட்டரி

    இன்பினிக்ஸ் ஹாட் 10 ஸ்மார்ட்போன் ஓசன் வேவ், ஆம்பர் ரெட், மூன்லைட் ஜேட் மற்றும் ஆப்சிடியன் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 8,999 மற்றும் ரூ. 9,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
    இந்திய சந்தையில் பப்ஜி மொபைல் கேமிற்கு விதிக்கப்பட்ட தடை நீங்க இருப்பதாக இணையத்தில் தகவல் வெளியாகி இருக்கிறது.


    இந்தியாவில் பப்ஜி மொபைல் கேமிற்கு விதிக்கப்பட்ட தடை விரைவில் நீங்கலாம் என இணையத்தில் தகவல் வெளியாகி இருக்கிறது. பப்ஜி கார்ப்பரேஷன் இந்தியாவில் இணை மேலாளர் பணிக்கு ஆட்களை தேடுவதாக லின்க்டு-இன் தளத்தில் பதிவிட்டு இருக்கிறது. 

    இதன் காரணமாக பப்ஜி மொபைல் கேமிற்கு இந்தியாவில் விதிக்கப்பட்ட தடை விரைவில் நீங்க வாய்ப்புகள் இருப்பதாக இணையத்தில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

     பப்ஜி மொபைல்

    பப்ஜி வெளியிட்ட விவரங்களின் படி, கார்ப்பரேட் டெவலப்மென்ட் பிரிவு மேலாளர் பதிவிக்கு தகுதியுள்ளவர்களை தேர்வு செய்வதாக தெரிவித்து இருக்கிறது. இந்த பதவியில் இருப்பவர் இந்திய சந்தைக்கு ஏற்ற வகையிலான முதலீடு, வளர்ச்சி பணிகளை மேற்கொள்வதற்கான திட்டமிடல் உள்ளிட்டவைகளை மேற்கொள்வார்.

    இத்துடன் இந்த பணியில் சேர்பவர் பப்ஜி இந்தியாவுக்கான கட்டமைப்பு பணிகளை தென் கொரியாவில் செயல்படும் கிராப்டன் தலைமையகத்தின் வழிகாட்டுதலுடன் மேற்கொள்ளவார் என தெரிகிறது.

    இந்திய அலுவலகத்திற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருப்பதால், விரைவில் பப்ஜி மொபைல் இந்தியாவில் வெளியாகலாம் என பலரும் கூறி வருகின்றனர். எனினும், லின்க்டு இன் பதிவில் பப்ஜி பிரிவுக்கே ஆட்கள் தேவை என பதிவிடப்பட்டு இருக்கிறது.

    மத்திய அரசு கடந்த மாத துவக்கத்தில் பப்ஜி மொபைல் கேமிற்கு மட்டும் தடை விதித்தது. அந்த வகையில் இந்த கேம் தொடர்ந்து கணினி மற்றும் கேமிங் கன்சோல்களில் கிடைக்கிறது. 
    ஜியோணி நிறுவனத்தின் புதிய எப்8 நியோ ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.


    ஜியோணி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன் ஜியோணி எப்8 நியோ எனும் பெயரில் அறிமுகமாகி இருக்கிறது. 

    இதில் 5.45 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே, ஆக்டாகோர் பிராசஸர், 2 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி, 8 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் பேஸ் அன்லாக், ஸ்லோ மோஷன், பானரோமா, நைட் மோட், டைம் லேப்ஸ், பர்ஸ்ட் மோட், க்யூ ஆர் கோட், பேஸ் பியூட்டி மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

     ஜியோணி எப்8 நியோ

    ஜியோணி எப்8 நியோ சிறப்பம்சங்கள்

    - 5.45 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே
    - ஆக்டாகோர் பிராசஸர்
    - 2 ஜிபி ரேம்
    - 32 ஜிபி மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 10
    - 8 எம்பி பிரைமரி கேமரா
    - 5 எம்பி செல்பி கேமரா
    - 3000 எம்ஏஹெச் பேட்டரி
    - 10 வாட் சார்ஜிங்

    புதிய ஜியோணி ஸ்மார்ட்போன் பிளாக், புளூ மற்றும் ரெட் என மூன்றுவித நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் புதிய ஜியோணி எப்8 நியோ விலை ரூ. 5499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    இந்த ஸ்மார்ட்போனை நாடு முழுக்க கொண்டு சேர்க்க ஜியோணி யுடானுடன் கூட்டணி அமைத்துள்ளது. இதனால் நாடு முழுக்க சுமார் 1.5 லட்சம் முதல் 2 லட்சம் மொபைல் போன் விற்பனையாளர்களிடம் ஜியோணி எப்8 நியோ கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
    ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 ப்ரோ மாடல்களுக்கான முன்பதிவு துவங்கி உள்ளது.


    இந்தியாவில் ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 ப்ரோ முன்பதிவு துவங்கியது. முன்பதிவு ஆப்பிள் இந்தியா ஆன்லைன் ஸ்டோர், முன்னணி ஆன்லைன் வர்த்தக தளங்கள் மற்றும் ஆப்லைனில் நடைபெறுகிறது. 

    இந்தியா மட்டுமின்றி ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 ப்ரோ மாடல்கள் அமெரிக்கா, லண்டன், ஆஸ்திரேலியா, கனடா, சீனா, ஜெர்மனி மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளிலும் முன்பதிவு செய்யப்படுகிறது. 

     ஐபோன் 12

    இரு ஐபோன்களும் ஐபோன் 12 மினி மற்றும் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் மாடல்களுடன் கடந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்டன. ஆப்பிள் இந்தியா வலைதளத்தில் ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 ப்ரோ மாடல்களுக்கான முன்பதிவு நடைபெறுகிறது. 

    இதில் ஐபோன் 12 மாடலுக்கு அதிகபட்சம் ரூ. 22 ஆயிரம், ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் மாடலுக்கு ரூ. 34 ஆயிரம் வரை எக்ஸ்சேன்ஜ் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
    ×