என் மலர்tooltip icon

    தொழில்நுட்பச் செய்திகள்

    முன்னணி ஆன்லைன் விற்பனையாளர்கள் நடத்திய பண்டிகை கால விற்பனையில் பல ஆயிரம் கோடிகளுக்கு வியாபாரம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.


    இந்தியாவின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களான அமேசான், ப்ளிப்கார்ட் மற்றும் இதர ஆன்லைன் விற்பனையாளர்கள் பண்டிகை காலத்தை முன்னிட்டு அசத்தல் சலுகைகளுடன் சிறப்பு விற்பனையை நடத்தி வருகின்றனர்.

    இதுபோன்ற பண்டிகை கால விற்பனையில் இந்த நிறுவனங்கள் சுமார் ரூ. 47 ஆயிரம் கோடி வருவாயை அக்டோபர் 15 முதல் நவம்பர் 15 வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் ஈட்டும் என நுகர்வோர் செலவீனம் பற்றி ஆய்வு செய்யும் நிறுவனம் கணித்து இருக்கிறது.

     ப்ளிப்கார்ட்

    மேலும் இந்த தொகையில் கிட்டத்தட்ட 75 சதவீதம் அதாவது ரூ. 35,400 கோடிகள் அக்டோபர் 15 முதல் அக்டோபர் 21 வரையிலான காலக்கட்டத்தில் அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் சிறப்பு விற்பனையிலேயே நுகர்வோர் செலவு செய்து இருக்கலாம் என தெரிவித்து இருக்கிறது.

    சமீபத்திய ஆன்லைன் விற்பனைகளில் சுமார் 5.5 முதல் 6 கோடி பயனர்கள் கலந்து கொண்டிருப்பர் என்றும், இந்த ஆண்டு பண்டிகை கால விற்பனை அதிகபட்சம் 34 சதவீத வளர்ச்சியை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆன்லைன் விற்பனையில் ஸ்மார்ட்போன்கள் அதிகம் விரும்பப்படும் சாதனமாக இருக்கிறது.

    வாடிக்கையாளர்களை கவரும் நோக்கில் முன்னணி ஒடிடி தளமான நெட்ப்ளிக்ஸ் அதிரடி சலுகையை அறிவித்து இருக்கிறது.


    பிரபல ஒடிடி தள சேவையான நெட்ப்ளிக்ஸ் இந்தியாவில் குறுகிய காலக்கட்டத்திற்கு இலவசமாக வழங்கப்பட இருக்கிறது. இது விளம்பர நோக்கில், அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்கும் நோக்கில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. 

    இலவச சலுகையானது ஸ்டிரீம்பெஸ்ட் எனும் பெயரில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை டிசம்பர் 4 ஆம் தேதி துவங்க இருக்கிறது. இதில் வாடிக்கையாளர்களுக்கு வார இறுதிநாட்களில் நெட்ப்ளிக்ஸ் சேவை முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. 

     கோப்புப்படம்

    இதை பயன்படுத்த வாடிக்கையாளர்கள் பதிவு செய்யவோ கட்டணம் செலுத்தவோ தேவையில்லை என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. விருப்பம் உள்ளவர்கள் டிசம்பர் 4 ஆம் தேதிக்கு பின் எப்போது வேண்டுமானாலும் 48 மணி நேரத்திற்கு நெட்ப்ளிக்ஸ் சேவையை இலவசமாக ஸ்டிரீம் செய்ய முடியும். 

    இந்த 48 மணி நேரத்திற்கு பயனர்கள் நெட்ப்ளிக்ஸ் சேவையில் பதிவு செய்யவோ, கட்டணம் செலுத்தவோ அவசியம் இல்லை. இதுவரை 30 நாட்களுக்கு இலவச சேவை வழங்கப்படுகிறது. எனினும், இதனை பயன்படுத்த பயனர் தங்களின் விவரங்களை வழங்க வேண்டும். ஸ்டிரீம்பெஸ்ட் சேவை நிறைவுறும் போது எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது.
    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அசத்தல் அம்சங்களுடன் ஜியோபேஜஸ் வெப் பிரவுசர் சேவையை அறிமுகம் செய்து இருக்கிறது.


    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜியோபேஜஸ் பெயரில் வெப் பிரவுசர் சேவையை அறிமுகம் செய்து இருக்கிறது. ஜியோபேஜஸ் குரோமியம் ப்ளின்க் சார்ந்த பிரவுசர் ஆகும். இந்த பிரவுசரில் என்க்ரிப்ட்டெட் கனெக்ஷன் வசதி மற்றும் எட்டு இந்திய மொழிகளில் இயக்கும் வசதி வழங்கப்பட்டு உள்ளது.

    ஜியோபேஜஸ் பிரவுசர் கூகுள் பிளே ஸ்டோரில் டவுன்லோட் செய்ய கிடைக்கிறது. கூகுள் பிளே லிஸ்டிங்கில் புதிய வெப் பிரவுசர் இந்திய மொழிகளில் உள்ளூர் செய்திகள், ஸ்மார்ட் டவுன்லோட் மேனேஜர், இன்காக்னிட்டோ பிரவுசிங் மற்றும் தீம் உள்ளிட்ட வசதிகளை கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.

     ஜியோபேஜஸ்

    மேலும் இதில் பின்-லாக் வசதியுடன் இன்காக்னிட்டோ மோட், பில்ட் இன் ஆட் பிளாக் பிளஸ் போன்ற ஆப்ஷன்களும் வழங்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன் இந்தி, மராத்தி, தமிழ், குஜராத்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடா மற்றும் பெங்காலி போன்ற மொழிகளில் இயக்கும் வசதியும் வழங்கப்பட்டு இருக்கிறது.

    குரோமியம் சார்ந்த பிரவுசர் என்பதால் இது வேகமாக இருப்பதுடன் பயனர்களுக்கு சிறப்பான அனுபவத்தை வழங்கும் என ஜியோ தெரிவித்து உள்ளது. இதில் இணையப்பக்கங்கள் வேகமாக ரென்டர் ஆவதால், வேகமான பிரவுசிங் செய்ய முடியும். 
    எல்ஜி நிறுவனத்தின் சுழலும் திரை கொண்ட விங் ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    எல்ஜி நிறுவனம் வித்தியாசமான சுழலும் திரை கொண்ட விங் ஸ்மார்ட்போனினை கடந்த மாதம் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. அதைத் தொடர்ந்து எல்ஜி விங் ஸ்மார்ட்போன் அக்டோபர் 28 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் ஆகும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 

    மேலும் புதிய ஸ்மார்ட்போன் வெளியீட்டை உணர்த்தும் டீசர்களை எல்ஜி தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகிறது. எல்ஜி விங் ஸ்மார்ட்போனில் 6.8 இன்ச் P-OLED ஃபுல்விஷன் ஸ்கிரீன், 3.9 இன்ச் FHD+ இரண்டாவது ஸ்கிரீன் சுழலும் வசதியுடன் வழங்கப்படுகிறது. இதனால் இரே சமயத்தில் இரண்டு ஸ்கிரீன்களையும் பயன்படுத்த முடியும்.

     எல்ஜி விங்

    எல்ஜி விங் சிறப்பம்சங்கள்

    - 6.8 இன்ச் 2440×1080 பிக்சல் FHD+ 20.5: 9 P-OLED டிஸ்ப்ளே
    - 3.9 இன்ச் 1240x1080 பிக்சல் 1.15:1 G-OLED இரண்டாவது ஸ்கிரீன்
    - ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 765ஜி பிராசஸர்
    - அட்ரினோ 620 ஜிபியு
    - 8 ஜிபி ரேம்
    - 128 ஜிபி / 256 ஜிபி மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 10
    - 64 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.8, OIS
    - 13 எம்பி 117° அல்ட்ரா வைடு லென்ஸ், f/1.9
    - 12 எம்பி 120° அல்ட்ரா வைடு கிம்பல் மோட் கேமரா, f/2.2
    - 32 எம்பி பாப்-அப் செல்ஃபி கேமரா, f/1.9
    - இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் 
    - யுஎஸ்பி டைப் சி ஆடியோ 
    - 5ஜி SA/ NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1
    - யுஎஸ்பி டைப்-சி
    - 4000 எம்ஏஹெச் பேட்டரி
    - குவிக் சார்ஜ் 4.0
    - 25 ஃபாஸ்ட் சார்ஜிங்

    மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இன் பிராண்டு ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    மைக்ரோமேக்ஸ் நிறுவனம் இன் எனும் புதிய பிராண்டை கடந்த வாரம் அறிமுகம் செய்தது. புதிய இன் பிராண்டிங் ஸ்மார்ட்போன் மாடல்களுடன் விரைவில் சந்தையில் ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கிறது. 

     இன்

    புதிய இன் சீரிஸ் மாடல் மலிவு விலையில் கிடைக்கும் என அதன் தலைமை செயல் அதிகாரி ராகுல் ஷர்மா தெரிவித்தார். தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய இன் சீரிஸ் மாடல்களின் விலை ரூ. 7 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 25 ஆயிரம் பட்ஜெட்டில் கிடைக்கும் என கூறப்படுகிறது.

    மேலும் புதிய இன் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் தீபாவளிக்கு முன் இந்திய சந்தையில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பண்டிகை காலத்தில் பல்வேறு புதிய மாடல்கள் வெளியாக இருக்கின்றன. அந்த வரிசையில் தற்சமயம் மைக்ரோமேக்ஸ் இணைய இருக்கிறது.
    ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் மாடலில் வழங்கப்பட்டு இருக்கும் பேட்டரி விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன.


    ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் மாடலின் பேட்டரி விவரங்கள் சீனாவின் TENAA சான்றளிக்கும் வலைதளத்தில் லீக் ஆகி இருக்கிறது. இந்த மாடல் A2412 எனும் மாடல் நம்பர் கொண்டு உருவாகி இருக்கிறது.

    ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் மாடலில் ஆப்பிள் 3687 எம்ஏஹெச் பேட்டரி வழங்கி உள்ளது. இது ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 மினி மாடல்களில் வழங்கப்பட்டதை விட அதிகம் ஆகும். எனினும், இது ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் மாடலில் வழங்கப்பட்ட 3969 எம்ஏஹெச் பேட்டரியை விட குறைவு தான்.

     ஐபோன் 12

    ஐபோன் 12 மாடலில் 2815 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதுவும் ஐபோன் 11 மாடலில் வழங்கப்பட்ட 3110 எம்ஏஹெச் பேட்டரியை விட குறைவே. ஐபோன் 12 ப்ரோ மாடலின் பேட்டரி விவரம் இதுவரை அறியப்படவில்லை.

    ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 ப்ரோ மாடல்களுக்கான முன்பதிவு அக்டோபர் 23 ஆம் தேதி துவங்குகிறது. ஐபோன் 12 மினி மற்றும் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் மாடல்களுக்கான முன்பதிவு நவம்பர் 6 ஆம் தேதி துவங்குகிறது. 

    இந்தியாவில் ஐபோன் 12 மினி மாடல் ரூ. 69,900, ஐபோன் 12 விலை ரூ. 79,900, ஐபோன் 12 ப்ரோ ரூ. 1,19,900 மற்றும் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் மாடல் ரூ. 1,29,900 என விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்21 பிளாக்ஷிப் மாடலின் புதிய விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன.


    சாம்சங் கேலக்ஸி எஸ்21 சீரிஸ் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் வழக்கத்தை விட முன்கூட்டியே அறிமுகம் செய்யப்படும் என முன்னதாக வெளியான தகவல்களில் தெரிவிக்கப்பட்டது. அந்த வகையில் கேலக்ஸி எஸ்21 மாடல் பற்றிய விவரம் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.

    கேலக்ஸி எஸ்21 விவரங்கள் சீனாவின் 3சி சான்றளிக்கும் வலைதளத்தில் இருந்து லீக் ஆகி இருக்கிறது. அதன்படி புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் SM-G9910 எனும் மாடல் நம்பர் கொண்டு உருவாக்கப்படுவதாக கூறப்படுகிறது. 

     கேலக்ஸி எஸ்20 பிளஸ்

    மேலும் இந்த மாடலுடன் 25 வாட் பாஸ்ட் சார்ஜர் வழங்கப்பட இருப்பதாக தெரிகிறது. சாம்சங் கேலக்ஸி எஸ்21 ஸ்மார்ட்போன் வியட்நாமில் உள்ள தாய் நுயென் ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது. புதிய பிளாக்ஷிப் சீரிஸ் பற்றி வெளியாகி இருக்கும் முக்கிய விவரமாக இது பார்க்கப்படுகிறது. 

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி கேலக்ஸி எஸ்21 மாடலில் 3880 எம்ஏஹெச் பேட்டரி, ஸ்னாப்டிராகன் 875 சிப்செட் வழங்கப்படும் என தெரிகிறது. புதிய ஸ்னாப்டிராகன் பிராசஸர் டிசம்பர் 1 ஆம் தேதி நடைபெற இருக்கும் குவால்காம் நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    கேலக்ஸி எஸ்21 சீரிஸ் மாடல்களில் 108 எம்பி பிரைமரி கேமரா சேர்த்து மொத்தம் ஐந்து லென்ஸ், 1440 பிக்சல் டிஸ்ப்ளே, அதிகபட்சம் 144 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. கேலக்ஸி எஸ்21 அல்ட்ரா மாடல் 5000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 60 வாட் பாஸ்ட் சார்ஜிங் கொண்டிருக்கும் என தெரிகிறது.
    ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஆப்பிள் வாட்ச் எஸ்இ மாடலில் பிரச்சனை ஏற்படுவதாக பயனர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

    ஆப்பிள் நிறுவனம் தனது குறைந்தவிலை ஆப்பிள் வாட்ச் எஸ்இ மாடலை செப்டம்பர் மாத நிகழ்வில் அறிமுகம் செய்தது. புதிய ஆப்பிள் வாட்ச் எஸ்இ மாடல் தற்சமயம் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் விற்பனைக்கு கிடைக்கிறது. 

    இந்நிலையில், புதிய வாட்ச் எஸ்இ மாடலில் பிரச்சனை ஏற்படுவதாக பயனர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். ஆப்பிள் வாட்ச் எஸ்இ மாடல் அதிக சூடாகிறது என பயனர்கள் ரெடிட் தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். 

     ஆப்பிள் வாட்ச் எஸ்இ

    இவ்வாறு ஆப்பிள் வாட்ச் எஸ்இ மாடலில் கோளாறு தெரிவித்தவர்களில் ஆறில் மூன்று பேருக்கு ஆப்பிள் வாட்ச் மாடலுக்கான பணம் திரும்ப வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. 

    வாட்ச் எஸ்இ சார்ஜ் செய்யும் போது அதிக சூடானது என சிலர் தெரிவித்தனர். மேலும் சிலர் கையில் அணிந்திருக்கும் போதே வாட்ச் அதிக சூடானது என தெரிவித்தனர். இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி இது தென் கொரிய சந்தையில் உற்பத்தி செய்யப்பட்ட யூனிட்களில் மட்டும் இந்த பாதிப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது.

    இதனால் இந்தியாவில் ஆப்பிள் வாட்ச் எஸ்இ வாங்கியவர்கள் கவலை கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. இந்திய சந்தையில் புதிய ஆப்பிள் வாட்ச் எஸ்இ மாடல் விலை ரூ. 29,990 முதல் துவங்குகிறது. 

    ரூ. 11 ஆயிரம் பட்ஜெட்டில் 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்ட புதிய ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.


    ஒப்போ நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஏ33 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஒப்போ ஏ33 ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் பன்ச் ஹோல் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 460 பிராசஸர், கலர்ஒஎஸ் 7.2 சார்ந்த ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ் வழங்கப்பட்டு உள்ளது. 

    இத்துடன் 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த், 2 எம்பி மேக்ரோ மற்றும் 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் மற்றும் யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்கப்பட்டு உள்ளது.

     ஒப்போ ஏ33

    ஒப்போ ஏ33 சிறப்பம்சங்கள்

    - 6.5 இன்ச் 1600x720 பிக்சல் ஹெச்டி பிளஸ் எல்சிடி ஸ்கிரீன்
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
    - ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன்460 பிராசஸர்
    - அட்ரினோ 610 GPU
    - 3 ஜிபி LPDDR4x ரேம்
    - 32 ஜிபி மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம் ஸ்லாட்
    - ஆண்ட்ராய்டு 10 மற்றும் கலர்ஒஎஸ் 7.2
    - 13 எம்பி பிரைமரி கேமரா, f/2.2, எல்இடி பிளாஷ்
    - 2 எம்பி டெப்த் சென்சார்
    - 2 எம்பி மேக்ரோ சென்சார், 1.75μm, f/2.4
    - 8 எம்பி செல்பி கேமரா, f/2.0
    - பின்புறம் கைரேகை சென்சார்
    - 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    - யுஎஸ்பி டைப் சி
    - 5000 எம்ஏஹெச் பேட்டரி
    - 18 வாட் பாஸ்ட் சார்ஜிங்

    ஒப்போ ஏ33 ஸ்மார்ட்போன் மின்ட் கிரீன் மற்றும் மூன்லைட் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 11,990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் ஆப்லைன் ஸ்டோர்களில் நடைபெறுகிறது.
    ஐகூ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் யு1எக்ஸ் எனும் பெயரில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

    விவோ நிறுவனத்தின் ஐகூ பிராண்டு யு1எக்ஸ் எனும் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இதில் 6.51 இன்ச் ஹெச்டி பிளஸ் எல்சிடி ஸ்கிரீன், ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம், பக்கவாட்டில் கைரேகை சென்சார் மற்றும் ஐகூ யுஐ சார்ந்த ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் கேமரா, 2 எம்பி மேக்ரோ லென்ஸ், முன்புறம் 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 5000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 18 வாட் டூயல் என்ஜின் பிளாஷ் சார்ஜ் வழங்கப்பட்டு உள்ளது.

     ஐகூ யு1 எக்ஸ்

    ஐகூ யு1எக்ஸ் சிறப்பம்சங்கள்

    - 6.51 இன்ச் 1600x720 பிக்சல் ஹெச்டி பிளஸ் எல்சிடி ஸ்கிரீன்
    - ஆக்டாகோர் குவால்காம் 662 பிராசஸர்
    - 4 ஜிபி / 6 ஜிபி ரேம்
    - 64 ஜிபி / 128 ஜிபி மெமரி
    - ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஐகூ யுஐ 1.0
    - டூயல் சிம்
    - 13 எம்பி பிரைமரி கேமரா
    - 2 எம்பி டெப்த் கேமரா
    - 2 எம்பி மேக்ரோ கேமரா
    - 8 எம்பி செல்பி கேமரா
    - பக்கவாட்டில் கைரேகை சென்சார்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    - மைக்ரோ யுஎஸ்பி
    - 5000 எம்ஏஹெச் பேட்டரி
    - 18 வாட் டூயல் என்ஜின் பிளாஷ் சார்ஜ்

    புதிய ஐகூ யு1எக்ஸ் ஸ்மார்ட்போன் 4 ஜிபி + 64 ஜிபி மாடல் விலை 899 யுவான் இந்திய மதிப்பில் ரூ. 9930, 6 ஜிபி + 64 ஜிபி மாடல் 999 யுவான் இந்திய மதிப்பில் ரூ. 11,035 என்றும் 6 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை 1199 யுவான் இந்திய மதிப்பில் ரூ. 13,245 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 5ஜி சோதனையில் அதிகபட்சம் 1Gbps வேகத்தில் இணைய சேவை கிடைத்திருக்கிறது.


    குவால்காம் நிறுவனத்தின் 5ஜி நிகழ்வு நேற்று துவங்கியது. இவ்விழாவில் குவால்காம் 5ஜி தொழில்நுட்பத்தில் புதிய வளர்ச்சி மற்றும் மேம்பாடு பற்றிய தகவல்களை வெளியிட்டது. இதன் மூலம் அடுத்த தலைமுறை இணைய சேவையை வழங்குவதை சாத்தியப்படுத்தும் உள்கட்டமைப்பை உறுதி செய்ய குவால்காம் திட்டமிட்டு உள்ளது.

    இத்துடன் உலகம் முழுக்க பல்வேறு டெலிகாம் நிறுவனங்களுடன் நீண்ட கால கூட்டணியை வைத்துக் கொள்ளும் நோக்கில் புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அந்த வகையில் ஜியோ நிறுவனத்தில் குவால்காம் நிறுவனம் 0.15 சதவீத பங்குகளை சமீபத்தில் வாங்கியது. 

     குவால்காம் 5ஜி

    இதன் மூலம் இந்தியாவில் குறைந்த விலையில் ஜியோ 5ஜி போன்களை வெளியிட இரு நிறுவனங்களும் திட்டமிட்டு இருக்கின்றன. குவால்காம் கீநோட் உரையின் போது ரிலையன்ஸ் ஜியோ 5ஜிஎன்ஆர் சொல்யூஷனில் அதிகபட்சம் 1Gbps இணைய வேகம் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக தெரிவித்தது. 

    5ஜி தொழில்நுட்பத்தில் பயனர்கள் அதிவேக டவுன்லோட் மற்றும் அப்லோட் வேகங்களை சீராக அனுபவிக்க முடியும். மேலும் இதன் மூலம் IoT சாதனங்கள் மற்றும் 5ஜி ஸ்மார்ட்போன்களில் சீரான இணைப்பை பெறலாம்.
    எல்ஜி நிறுவனத்தின் ரோலபிள் டிவி ரூ. 63.8 விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    எல்ஜி நிறுவனம் 2019 சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் உலகின் முதல் ரோலபிள் OLED டிவி மாடலை அறிமுகம் செய்தது. இது சிக்னேச்சர் OLED ஆர் எனும் பெயர் கொண்டுள்ளது. 

    முற்றிலும் வித்தியாசமான வடிவமைப்பு கொண்டிருக்கும் இந்த டிவி உலகின் முதல் ரோபிள் டிவி மாடல் ஆகும். இது கடந்த ஆண்டே விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், இதன் விற்பனை தற்போது தான் துவங்கி உள்ளது.

     எல்ஜி சிக்னேச்சர் OLED ஆர் டிவி

    முதற்கட்டமாக எல்ஜி சிக்னேச்சர் OLED ஆர் டிவி 65 இன்ச் மாடல் தென் கொரிய சந்தையில் 87 ஆயிரம் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 63.8 லட்சம் விலையில் விற்பனைக்கு வந்தது. இதில் உள்ள OLED பேனல்கள் டிவி பயன்படுத்தாத போது, வித்தியாசமாக சுருங்கும் வசதி கொண்டுள்ளது.

    இந்த டிவியை புல் வியூ, லைன் வியூ மற்றும் ஜீரோ வியூ என மூன்றுவித பார்மேட்களில் பார்க்க முடியும். இது சிக்னேச்சர் பிளாக், மூன் கிரே, டோபஸ் புளூ அல்லது டாபி பிரவுன் என நான்குவித ஷேட்களில் கிடைக்கிறது. 

    முதற்கட்டமாக தென் கொரியாவில் விற்பனை துவங்கி இருக்கும் நிலையில், எல்ஜியின் ரோலபில் டிவி மற்ற சந்தைகளில் எப்போது விற்பனைக்கு வரும் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. 

    ×