search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    கேலக்ஸி எஸ்20 பிளஸ்
    X
    கேலக்ஸி எஸ்20 பிளஸ்

    இணையத்தில் லீக் ஆன சாம்சங் பிளாக்ஷிப் மாடல் விவரங்கள்

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்21 பிளாக்ஷிப் மாடலின் புதிய விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன.


    சாம்சங் கேலக்ஸி எஸ்21 சீரிஸ் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் வழக்கத்தை விட முன்கூட்டியே அறிமுகம் செய்யப்படும் என முன்னதாக வெளியான தகவல்களில் தெரிவிக்கப்பட்டது. அந்த வகையில் கேலக்ஸி எஸ்21 மாடல் பற்றிய விவரம் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.

    கேலக்ஸி எஸ்21 விவரங்கள் சீனாவின் 3சி சான்றளிக்கும் வலைதளத்தில் இருந்து லீக் ஆகி இருக்கிறது. அதன்படி புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் SM-G9910 எனும் மாடல் நம்பர் கொண்டு உருவாக்கப்படுவதாக கூறப்படுகிறது. 

     கேலக்ஸி எஸ்20 பிளஸ்

    மேலும் இந்த மாடலுடன் 25 வாட் பாஸ்ட் சார்ஜர் வழங்கப்பட இருப்பதாக தெரிகிறது. சாம்சங் கேலக்ஸி எஸ்21 ஸ்மார்ட்போன் வியட்நாமில் உள்ள தாய் நுயென் ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது. புதிய பிளாக்ஷிப் சீரிஸ் பற்றி வெளியாகி இருக்கும் முக்கிய விவரமாக இது பார்க்கப்படுகிறது. 

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி கேலக்ஸி எஸ்21 மாடலில் 3880 எம்ஏஹெச் பேட்டரி, ஸ்னாப்டிராகன் 875 சிப்செட் வழங்கப்படும் என தெரிகிறது. புதிய ஸ்னாப்டிராகன் பிராசஸர் டிசம்பர் 1 ஆம் தேதி நடைபெற இருக்கும் குவால்காம் நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    கேலக்ஸி எஸ்21 சீரிஸ் மாடல்களில் 108 எம்பி பிரைமரி கேமரா சேர்த்து மொத்தம் ஐந்து லென்ஸ், 1440 பிக்சல் டிஸ்ப்ளே, அதிகபட்சம் 144 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. கேலக்ஸி எஸ்21 அல்ட்ரா மாடல் 5000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 60 வாட் பாஸ்ட் சார்ஜிங் கொண்டிருக்கும் என தெரிகிறது.
    Next Story
    ×