search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    இன்
    X
    இன்

    மீடியாடெக் பிராசஸர் மற்றும் கிரேடியன்ட் பினிஷ் டிசைனுடன் உருவாகும் இன் பிராண்டு ஸ்மார்ட்போன்கள்

    மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இன் பிராண்டு ஸ்மார்ட்போன் மாடல்கள் மீடியாடெக் பிராசஸர் மற்றும் கிரேடியன்ட் பினிஷ் டிசைனுடன் உருவாகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


    மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இன் பிராண்டு ஸ்மார்ட்போன் சீரிஸ் இந்திய சந்தையில் நவம்பர் 3 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய இன் பிராண்டு ஸ்மார்ட்போன்கள் மீடியாடெக் ஹீலியோ ஜி சீரிஸ் பிராசஸர் மற்றும் கிரேடியன்ட் பினிஷ் டிசைனுடன் உருவாகி வருகிறது.

    புதிய இன் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் பெங்களூருவில் உள்ள மைக்ரோமேக்ஸ் ஆய்வு மற்றும் உற்பத்தி மையத்தில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவை மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உருவாக்கப்படுகின்றன.  

     இன்

    இன் பிராண்டு ஸ்மார்ட்போன்கள் பற்றிய புதிய டீசர்களை மைக்ரோமேக்ஸ் தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டது. அதன்படி புதிய ஸ்மார்ட்போன்கள் மீடியாடெக் ஹீலியோ ஜி35 மற்றும் ஹீலியோ ஜி85 பிராசஸர் கொண்டு உருவாக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் கிரேடியன்ட் டிசைன் கொண்டிருக்கிறது.

    இந்தியாவில் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் புதிய இன் பிராண்டு ஸ்மார்ட்போன்கள் ரூ. 7 ஆயிரம் பட்ஜெட்டில் துவங்கி அதிகபட்சம் ரூ. 25 ஆயிரம் பட்ஜெட்டில் விலை நிர்ணயம் செய்யப்பட இருக்கின்றன.
    Next Story
    ×