என் மலர்
தொழில்நுட்பச் செய்திகள்
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போனிற்கு திடீர் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்11 ஸ்மார்ட்போன் விலை இந்தியாவில் குறைக்கப்பட்டு இருக்கிறது. தற்போதைய விலை குறைப்பு 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி வேரியண்ட்டிற்கு மட்டும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்11 ஸ்மார்ட்போன் 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி மற்றும் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. சிறப்பம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி எம்11 ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் HD+ TFT 720×1560 பிக்சல் டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 450 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி டெப்த் சென்சார் மற்றும் 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. பின்புறம் கைரேகை சென்சார், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு உள்ளது.

கேலக்ஸி எம்11 சிறப்பம்சங்கள்
- 6.4 இன்ச் HD+ TFT 720×1560 பிக்சல் டிஸ்ப்ளே
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 450 பிராசஸர்
- 3 ஜிபி / 4 ஜிபி ரேம்
- 32 ஜிபி / 64 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- 13 எம்பி பிரைமரி கேமரா
- 5 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்
- 2 எம்பி டெப்த் சென்சார்
- 8 எம்பி செல்ஃபி கேமரா
- கைரேகை சென்சார்
- 5000 எம்ஏஹெச் பேட்டரி
- 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ இ7 பவர் ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
மோட்டோரோலா நிறுவனம் தனது மோட்டோ இ7 பவர் ஸ்மார்ட்போனினை பிப்ரவரி 19 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்வதாக அறிவித்து உள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் மேக்ஸ் டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் பிராசஸர் வழங்குவதை உறுதிப்படுத்தி இருக்கிறது.
இதுதவிர புதிய மோட்டோ இ7 பவர் ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி கொண்டிருக்கும். புகைப்படங்களை எடுக்க 13 எம்பி டூயல் பிரைமரி கேமரா 5 எம்பி செல்பி கேமரா வழங்கப்படலாம். இத்துடன் 5000எம்ஏஹெச் பேட்டரி, யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்கப்படுகிறது.

மோட்டோ இ7 பவர் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்
- 6.5 இன்ச் 1600x720 பிக்சல் HD+ மேக்ஸ்விஷன் டிஸ்ப்ளே
- 2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி25 பிராசஸர்
- IMG PowerVR GE8320 GPU
- 4 ஜிபி ரேம்
- 64 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- 13 எம்பி பிரைமரி கேமரா, f/2.0, LED பிளாஷ்
- 2 எம்பி மேக்ரோ கேமரா
- 5 எம்பி செல்பி கேமரா
- ஆண்ட்ராய்டு 10
- டூயல் சிம் ஸ்லாட்
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
- கைரேகை சென்சார்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 4.2
- யுஎஸ்பி டைப் சி
- 5,000 எம்ஏஹெச் பேட்டரி
மோட்டோ இ7 பவர் ஸ்மார்ட்போன் டிஜிட்டல் புளூ மற்றும் ஆக்சி ரெட் நிறங்களில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை மற்றும் விற்பனை விவரங்கள் இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்பட இருக்கிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 13 சிறப்ப்மசங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.
ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே அம்சம் OLED தொழில்நுட்பத்தில் சாத்தியப்படுத்தப்பட்டு தற்சமயம் பல்வேறு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் இது வழங்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் ஆப்பிள் நிறுவனமும் இந்த அம்சத்தை ஐபோன்களில் சேர்க்க இருப்பதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே அம்சம் பெறும் முதல் மாடல் ஐபோன் 13 என்றும் இது கடிகாரம், பேட்டரி மற்றும் இதர நோட்டிபிகேஷன்களை காண்பிக்கும் என தெரிகிறது. முன்னதாக வெளியான தகவல்களில் புதிய ஐபோன் சீரிசிற்கு ஆப்பிள் நிறுவனம் சாம்சங்கின் LTPO OLED பேனல்களை பயன்படுத்தும் என கூறப்பட்டது.

இது ஐபோன்களில் ப்ரோமோஷன் தொழில்நுட்பத்தை வழங்கி ஆல்வேஸ்-ஆன் டிஸ்ப்ளே அம்சத்தையும் செயல்படுத்த வழி வகுக்கும். இத்துடன் புதிய ஐபோன் 13 மாடல்களில் உறுதியான மேக்சேப் மேக்னட்கள் வழங்கப்படும் என்றும் நட்சத்திரங்களை பார்த்ததும் ஆஸ்ட்ரோ மோட் வசதியை தானாக ஆன் செய்யும் என கூறப்படுகிறது.
இவைதவிர புதிய ஐபோன் 13 சீரிஸ் மேட் பினிஷ் செய்யப்பட்டு, போர்டிரெயிட் மோட் வீடியோவிலும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக வெளியான தகவல்களில் புதிய ஐபோன் சீரிஸ் மேம்பட்ட அல்ட்ரா வைடு கேமராக்கள், சிறிய நாட்ச் மற்றும் ஷிப்ட் OIS வழங்கப்படலாம் என கூறப்பட்டது.
சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி எப்62 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் ரூ. 23,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.
சாம்சங் நிறுவனம் ஏற்கனவே அறிவத்தப்படி இந்தியாவில் கேலக்ஸி எப்62 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் இன்பினிட்டி ஒ சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, எக்சைனோஸ் 9825 பிராசஸர், 8 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் 64 எம்பி பிரைமரி கேமரா, 12 எம்பி அல்ட்ரா-வைடு ஆங்கில் கேமரா, 5 எம்பி டெப்த் சென்சார், 5 எம்பி மேக்ரோ கேமரா, 32 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. ஆண்ட்ராய்டு 11 சார்ந்த ஒன் யுஐ 3.1 கொண்டிருக்கும் கேலக்ஸி எப்61 ஸ்மார்ட்போன் 3டி கிளாஸ்டிக் பேக் மற்றும் கிரேடியன்ட் பினிஷ் கொண்டிருக்கிறது.

சாம்சங் கேலக்ஸி எப்62 சிறப்பம்சங்கள்
- 6.7 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ இன்பினிட்டி ஒ சூப்பர் AMOLED பிளஸ் 20:9 டிஸ்ப்ளே
- ஆக்டாகோர் சாம்சங் எக்சைனோஸ் 9825 பிராசஸர்
- மாலி-G76 MP12 GPU
- 6 ஜிபி / 8 ஜிபி LPDDR4x ரேம்
- 128 ஜிபி (UFS 2.1) மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஒன் யுஐ 3.1
- டூயல் சிம் ஸ்லாட்
- 64 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், f/1.8 aperture
- 12 எம்பி 123° அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, f/2.2
- 5 எம்பி டெப்த் சென்சார், f/2.2
- 5 எம்பி மேக்ரோ சென்சார், f/2.4
- 32 எம்பி செல்பி கேமரா, f/2.2
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- சாம்சங் பே
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ, டால்பி அட்மோஸ்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யுஎஸ்பி டைப் சி
- 7000 எம்ஏஹெச் பேட்டரி
- 25 வாட் பாஸ்ட் சார்ஜிங்
சாம்சங் கேலக்ஸி எப்62 ஸ்மார்ட்போன் லேசர் கிரீன் மற்றும் லேசர் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 23,999 என்றும் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 25,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இதன் விற்பனை சாம்சங், ப்ளிப்கார்ட், ரிலையன்ஸ் டிஜிட்டல், ஜியோ ஸ்டோர்களில் பிப்ரவரி 22 ஆம் தேதி துவங்குகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்துவோருக்கு ரூ. 2500 உடனடி கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
வாட்ஸ்அப் பிரைவசி பாலிசி விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.
உலகின் முன்னணி குறுந்தகவல் செயலியான வாட்ஸ் அப், சமீபத்தில் தனது தனியுரிமை கொள்கையில் மாற்றம் செய்தது. புதிய மாற்றத்திற்கு நாடு முழுக்க கடும் எதிர்ப்பு எழந்ததை தொடர்ந்து தனியுரிமை கொள்கையை அமலாக்குவதை வாட்ஸ்அப் தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.
இந்த நிலையில் வாட்ஸ்அப் புதிய தனியுரிமை கொள்கையை செயல்படுத்த தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு எடுத்து கொண்ட உச்சநீதிமன்றம், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு, வாட்ஸ் அப், பேஸ்புக் ஆகியவை பதிளிக்குமாறு உத்தரவிட்டு, விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளிவைத்தது.

மனு விசாரணையின் போது, பணத்தை விட தனிப்பட்ட தகவல்களை இந்திய மக்கள் பெரிதாக கருதுகின்றனர். மக்களின் தனியுரிமையை பாதுகாக்க நாங்கள் தலையிட வேண்டியிருக்கும் என கருத்து இருக்கிறது.
வழக்கில் மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான், வாட்ஸ்அப் செயலி இந்திய பயனர்களுக்கு மிக குறைந்த அளவு தனியுரிமையை வழங்க முயற்சித்துள்ளது. மேலும் பேஸ்புக்குடன் தகவல்களை பகிராவிட்டால் செயலியை தொடர்ந்து பயன்படுத்த முடியாது என உத்தரவு பிறப்பித்தது என வாதிட்டார்.
பேஸ்புக் நிறுவனம் புதிதாக ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
உலகின் முன்னணி சமூக வலைதள நிறுவனமான பேஸ்புக் ஸ்மார்ட்வாட்ச் சந்தையில் களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பேஸ்புக்கின் புது ஸ்மார்ட்வாட்ச் மாடல் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
புதிய ஸ்மார்ட்வாட்ச் செல்லுலார் இணைப்பு வசதி கொண்டிருக்கும். அந்த வகையில் இது ஸ்மார்ட்போன் இல்லாமலும் இயங்கும். இத்துடன் புதிய வாட்ச் பேஸ்புக் மெசன்ஜர் மற்றும் பல்வேறு முன்னணி பிட்னஸ் தளங்களுடன் இணைந்து செயல்படும் வசதி கொண்டிருக்கலாம்.

பேஸ்புக்கின் அணியக்கூடிய சாதனம் கூகுளின் ஆண்ட்ராய்டு ஒஎஸ் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. தற்போதைய பேஸ்புக் ஹார்டுவேர் சாதனங்களை போன்றே இதுவும் கூகுள் தளத்தை கொண்டிருக்கும். எனினும், பேஸ்புக் நிறுவனம் தனது அணியக்கூடிய சாதனங்களுக்கென சொந்தமாக ஒஎஸ் ஒன்றை உருவாக்கி வருவதாகவும் கூறப்படுகிறது.
புதிய அணியக்கூடிய சாதனத்தின் விலையை 200 டாலர்கள் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது. புதிய சாதனம் ஆப்பிள் வாட்ச் மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.
லெனோவோ நிறுவனத்தின் புதிய டேப்லெட் மாடல் பிரீமியம் விலையில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
லெனோவோ நிறுவனம் இந்தியாவில் டேப் பி11 ப்ரோ மாடலை அறிமுகம் செய்தது. புதிய டேப்லெட் சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்7 மற்றும் ஆப்பிள் ஐபேட் ஏர் 2020 மாடலுக்கு போட்டியாக அமைகிறது. முன்னதாக இந்த மாடல் லெனோவோ டேப் எம்10 ஹெச்டி ஜென் 2 மாடலுடன் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
சிறப்பம்சங்களை பொருத்தவரை லெனோவோ டேப் பி11 ப்ரோ மாடலில் OLED டிஸ்ப்ளே, டால்பி விஷன், ஹெச்டிஆர் வசதி கொண்டிருக்கிறது. இத்துடன் இன்பில்ட் டைம்-ஆப்-பிளைட் சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஆப்ஷனல் கீபோர்டு கவர் ஒன்றும் வழங்கப்படுகிறது.

லெனோவோ டேப் பி11 ப்ரோ சிறப்பம்சங்கள்
- 11.5 இன்ச் WQXGA 2560x1600 பிக்சல் OLED டிஸ்ப்ளே
- டால்பி விஷன், ஹெச்டிஆர்
- ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 730ஜி பிராசஸர்
- அட்ரினோ 618 GPU
- 6 ஜிபி ரேம்
- 128 ஜிபி மெமரி
- ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ்
- இன்பில்ட் டைம்-ஆப்-பிளைட் சென்சார்
- ஆப்ஷனல் கீபோர்டு கவர்
- யுனிபாடி மெட்டல் டிசைன்
இந்தியாவில் புதிய லெனோவோ டேப் பி11 ப்ரோ மாடல் விலை ரூ. 44,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது ஸ்லேட் கிரே நிறத்தில் கிடைக்கிறது. இதன் விற்பனை முன்னணி ஆன்லைன் தளங்களில் நடைபெறுகிறது.
ரிலையன்ஸ் ஜியோ பயனர்களுக்கு இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் கிரிகெட் தொடரை இலவசமாக பார்க்கும் வசதி வழங்கப்படுகிறது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவன பயனர்களுக்கு இந்தியாவில் நடைபெறும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகளை இலவசமாக பார்க்கும் வசதி வழங்கப்படுகிறது.
இந்தியாவில் சுற்று பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி பிப்ரவரி 5 துவங்கி மார்ச் 28 வரை இந்திய அணியுடன் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட இருக்கிறது. இரு அணிகளுக்கு இடையில் ஒரே டெஸ்ட் போட்டி மட்டுமே நிறைவுற்று இருக்கிறது. இந்நிலையில், தொடரின் மற்ற போட்டிகளை ஜியோ பயனர்கள் இலவசமாக பார்க்க முடியும்.
ஜியோ பயனர்கள் தங்களின் ஜியோடிவி செயலி மூலம் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடும் போட்டிகளை இலவசமாக பார்க்கலாம். இந்த சேவைக்கு பயனர்கள் எவ்வித கட்டணமும் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. இந்த செயலி கொண்டு நேரலை போட்டிகள் மட்டுமின்றி, ஹைலைட்களையும் பார்க்க முடியும்.
ஜியோடிவி செயலி கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் கிடைக்கிறது. இதற்கு சரியான பிளே ஸ்டோர் சென்று செயலியை டவுன்லோட் செய்து போட்டிகளை பார்க்கலாம்.
சியோமி நிறுவனம் காதர் தினத்தை முன்னிட்டு தனது சாதனங்களுக்கு சிறப்பு சலுகைகளை அறிவித்து இருக்கிறது.
காதலர் தினத்தை முன்னிட்டு சியோமி இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளத்தில் சிறப்பு சலுகை விற்பனையை அறிவித்து இருக்கிறது. சிறப்பு விற்பனையில் சியோமி நிறுவன சாதனங்களுக்கு அசத்தல் சலுகை மற்றும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. சிறப்பு விற்பனை சியோமி இந்தியா வலைதளத்தில் நடைபெறுகிறது.
காதலர் தின சிறப்பு விற்பனையில் அணியக்கூடிய சாதனங்கள், ஆடியோ, ஸ்மார்ட் டிவி, ஸ்மார்ட் ஐஒடி சாதனங்கள் உள்ளிட்டவைகளுக்கு அசத்தல் சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன.
சியோமி எம்ஐ வாட்ச் ரிவால்வ் மாடல் விலை ரூ. 10,999 இல் இருந்து தற்சமயம் ரூ. 7,999 என குறைக்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ரெட்மி பேண்ட் மாடல் விலை ரூ. 1,599 இல் இருந்து தற்சமயம் ரூ. 1,399 என குறைக்கப்பட்டு உள்ளது.

சியோமி எம்ஐ டிவி 4ஏ ப்ரோ 43 இன்ச் மாடல் விலை ரூ. 23,999 என்றும், எம்ஐ டிவி 4எக்ஸ் 43 இன்ச் மாடல் விலை ரூ. 27,999 என்றும், எம்ஐ டிவி 4எக்ஸ் 50 இன்ச் மாடல் விலை ரூ. 33,999 என்றும், எம்ஐ டிவி ஹாரிசான் எடிஷன் 32 இன்ச் மாடல் விலை ரூ. 15,499 என குறைக்கப்பட்டு இருக்கிறது.
எம்ஐ டிவி ஸ்டிக் விலை ரூ. 2299 என்றும் எம்ஐ பாக்ஸ் 4கே விலை ரூ. 3299 என்றும் மாற்றப்பட்டு உள்ளது. எம்ஐ ட்ரூ வயர்லெஸ் இயர்போன் 2 மாடல் விலை ரூ. 2999, எம்ஐ ட்ரூ வயர்லெஸ் இயர்போன் 2சி மாடல் விலை ரூ. 2199, எம்ஐ டூயல் டிரைவர் இன்-இயர் இயர்போன் விலை ரூ. 699 என மாறி உள்ளது.
ரெட்மி பவர் பேங்க் விலை ரூ. 1199, எம்ஐ ஸ்மார்ட் வாட்டர் பியூரிபையர் ரூ. 10,999, எம்ஐ ஏர் பியூரிபையர் விலை ரூ. 9999 மற்றும் எம்ஐ பியர்டு ட்ரிம்மர் 1சி விலை ரூ. 899 என குறைக்கப்பட்டு இருக்கிறது.
ரியல்மி நிறுவனத்தின் குறைந்த விலை 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
ரியல்மி எக்ஸ்7 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் ரூ. 19,999 துவக்க விலையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதுதவிர மேலும் பல்வேறு 5ஜி ஸ்மார்ட்போன்களை குறைந்த விலையில் அறிமுகம் செய்ய ரியல்மி திட்டமிட்டு வருகிறது.
சமீபத்திய இணைய உரையாடலின் போது ரியல்மி தலைமை செயல் அதிகாரி மாதவ் சேத் 5ஜி ஸ்மார்ட்போன்கள் விலையை மேலும் குறைவாக நிர்ணயிக்க வேண்டுமா எனும் கேள்வியை எழுப்பினார். இதை கொண்டு பார்க்கும் போது புதிய 5ஜி ஸ்மார்ட்போன் விலையை ரியல்மி எக்ஸ்7 மாடலை விட குறைவாக நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது.

மாதவ் சேத் சமீபத்திய கேள்வி ரியல்மி நார்சோ 30 இந்திய வெளியீட்டை உணர்த்துவதாக கூறப்படுகிறது. ரியல்மி நார்சோ 30 மாடலின் இந்திய விலை ரியல்மி எக்ஸ்7 மாடலை விட குறைவாக நிர்ணயம் செய்யப்படலாம்.
சிறப்பம்சங்களை பொருத்தவரை ரியல்மி நார்சோ 30 மாடலில் 6.5 இன்ச் டிஸ்ப்ளே, 4800 எம்ஏஹெச் பேட்டரி, ஆண்ட்ராய்டு 11, ஸ்னாப்டிராகன் அல்லது மீடியாடெக் பிராசஸர் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
போட் நிறுவனத்தின் ராக்கர்ஸ் 255 ப்ரோ பிளஸ் வயர்லெஸ் இயர்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
போட் ராக்கர்ஸ் 255 ப்ரோ பிளஸ் வயர்லெஸ் இயர்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய வயர்லெஸ் இயர்போன் மேம்பட்ட நெக்பேண்ட் ரக வயர்லெஸ் இயர்போன் ஆகும்.
புதிய வயர்லெஸ் இயர்போன் ஐபிஎக்ஸ்7 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, குவால்காம் ஆப்ட்-எக்ஸ் ப்ளூடூத் கோடெக் அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ப்ளூடூதத் 5 கனெக்டிவிட்டி, ஹை-ரெசஸ் ஆடியோ டிரான்ஸ்மிஷன், குவால்காம் சிவிசி என்விரான்மென்டல் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி வழங்கப்பட்டு உள்ளது.

மேலும் புதிய இயர்போன்களில் யுஎஸ்பி டைப் சி போர்ட், பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு உள்ளது. இதில் உள்ள பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டு பத்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால் இயர்போன்கள் பத்து மணி நேரத்திற்கு பிளேபேக் வழங்குகிறது. இதில் உள்ள பேட்டரிகள் 40 மணி நேரத்திற்கு பேக்கப் வழங்குகிறது.
இத்துடன் போட் ராக்கர்ஸ் 255 ப்ரோ பிளஸ் இயர்போன்களில் 10 எம்எம் டைனமிக் டிரைவர்கள், எஸ்பிசி மற்றும் ஏஏசி ப்ளூடூத் கோடெக்குகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இவைதவிர கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் சிரி போன்ற வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்திய சந்தையில் புதிய போட் ராக்கர்ஸ் 255 ப்ரோ பிளஸ் இயர்போன் ரூ. 1499 எனும் துவக்க விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இது போட் ஆன்லைன் ஸ்டோர் மற்றும், அமேசான், ப்ளிப்கார்ட் என முன்னணி ஆன்லைன் தளங்களிலும் விற்பனை செய்யப்படுகிறது.
ரூ. 15 ஆயிரம் பட்ஜெட்டில் உருவாகி வரும் கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அதன்படி புதிய கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் டிஎப்டி டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ பி35 பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி டெப்த் சென்சார், 2 எம்பி மேக்ரோ சென்சார் மற்றும் 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்படும் என தெரிகிறது.

இத்துடன் ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ், 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி, பக்கவாட்டில் கைரேகை சென்சார், 5000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம். கனெக்டிவிடிக்கு வைபை, ப்ளூடூத் 5, ஜிபிஎஸ் மற்றும் யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்கப்படலாம்.
சர்வதேச சந்தையில் கேலக்ஸி ஏ12 மாடலின் விலை 179 யூரோக்கள் இந்திய மதிப்பில் ரூ. 15,800 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பிளாக், புளூ, வைட் மற்றும் ரெட் நிறங்களில் கிடைக்கிறது.






