என் மலர்
தொழில்நுட்பச் செய்திகள்
அசத்தல் வசதியுடன் உருவாக்கி வரும் புதிய ரியல்மி வயர்லெஸ் இயர்பட்ஸ் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
ரியல்மி நிறுவனத்தின் புதிய வயர்லெஸ் இயர்பட்ஸ் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய இயர்பட்ஸ் மாடலை ரியல்மி நிறுவனம் பாப் இசை கலைஞர்களான தி செயின்ஸ்மோக்கர்ஸ் உடன் இணைந்து வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் ரியல்மி இயர்பட்ஸ் மாடலுக்கு இலை கலைஞர்கள் இடம்பெற்று இருக்கும் விளம்பர படம் வெளியாகி உள்ளது. மேலும் இதில் உள்ள வாசகம்-“Noise off, Realme on” இது ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதியை கொண்டிருக்கும் என்பதை தெரியப்படுத்துகிறது.
இந்த தகவல்களை கொண்டு பார்க்கும் போது, புதிய இயர்பட்ஸ் ரியல்மி கடந்த ஆண்டு அறிமுகம் செய்த ரியல்மி பட்ஸ் ஏர் ப்ரோ மாடலின் மேம்பட்ட வெர்ஷனாக இருக்கும் என தெரிகிறது. புதிய ரியல்மி வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலின் இந்திய வெளியீடு பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.
ஆண்ட்ராய்டு 12 தளத்தின் பீட்டா அப்டேட் வெளியீடு தேதி மற்றும் இதர விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
கூகுள் நிறுவனம் அடுத்த தலைமுறை ஆண்ட்ராய்டு வெர்ஷனில் பல்வேறு புது அம்சங்களை வழங்குவதோடு, இன்டர்பேஸ் அளவிலான மாற்றங்களை மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆண்ட்ராய்டு 12 தளத்தில் புது இன்டர்பேஸ் பற்றிய விவரங்களுடன், இதனை கூகுள் நிறுவனம் இந்த மாதத்திலேயே வெளியிடலாம் என கூறப்படுகிறது. ஆண்ட்ராய்டு 12 டெவலப்பர் பிரீவியூ பிப்ரவரி 17 ஆம் தேதியும், ஆண்ட்ராய்டு 12 ஸ்டேபில் வெர்ஷன் செப்டம்பர் 2 ஆம் தேதியும் வெளியாகும் என கூறப்படுகிறது.
முன்னதாக ஆண்ட்ராய்டு 7 முதல் 9 வரையிலான வெர்ஷன்களை ஆகஸ்ட் மாதத்தின் திங்கள் கிழமைகளில் வெளியிட்டது. பின் செப்டம்பர் மாதத்தின் முதல் செவ்வாய் கிழமை தினத்தன்று ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஆண்ட்ராய்டு 11 வெளியானது. அந்த வரிசையில் இந்த ஆண்டு செப்டம்பர் 2-இல் ஆண்ட்ராய்டு 12 வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூகுள் நிறுவனத்தின் டிசைன் கான்செப்ட் விவரங்களில் ஆண்ட்ராய்டு 12 தளத்தில் புது நோட்டிபிகேஷன் யுஐ இடம்பெற்று இருக்கும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அதன்படி குவிக் செட்டிங்ஸ் ஐகான்களின் எண்ணிக்கை ஆறில் இருந்தது நான்கு என குறைக்கப்படுகிறது. மேலும் ஐகான்கள் முன்பை விட பெரிதாக இருக்கிறது. தேதி மற்றும் கடிகாரம் உள்ளிட்டவை டிஸ்ப்ளேவின் முன்புறத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றன.
மேலும் வலதுபுறத்தில் புதிதாக பிரைவசி இன்டிகேட்டர்கள் வழங்கப்படுகின்றன. இதனை க்ளிக் செய்தால் எந்தெந்த செயலிகள் ஸ்மார்ட்போனின் மைக்ரோபோன் மற்றும் கேமரா விவரங்களை இயக்குகின்றன என்ற விவரங்களை அறிந்து கொள்ள முடியும். இவைதவிர புதிய தளத்தில் மேலும் பல்வேறு மாற்றங்கள் செய்யப்படுகின்றன.
ஆப்பிள் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஐபோன் மாடல் ரென்டர் இணையத்தில் வெளியாகி உள்ளது.
ஆப்பிள் நிறுவனமும் மடிக்கக்கூடிய ஐபோன் மாடல்களை உருவாக்கி வருவதாக பலமுறை இணையத்தில் தகவல் வெளியாகி இருக்கின்றன. சமீப காலங்களில் மடிக்கக்கூடிய ஐபோனின் விவரங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகின்றன.
அந்த வரிசையில் தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் மடிக்கக்கூடிய சாதனங்கள் பிரிவில் ஆப்பிள் தனக்கே உரிய பாணியில் அசத்தலாக களமிறங்கும் என கூறப்படுகிறது. அதன்படி முதல் மடிக்கக்கூடிய ஐபோன் எப்படி காட்சியளிக்கும் என்ற விவரங்கள் வீடியோ வடிவில் வெளியாகி உள்ளது.

மடிக்கக்கூடிய ஐபோன் மாடல் ஐபோன் ப்ளிப் எனும் பெயரில் அழைக்கப்படலாம். ஆப்பிள் நிறுவனம் இரண்டு விதமான ப்ரோடோடைப்களை மடிக்கக்கூடிய ஐபோனிற்காக உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஐபோன் சாம்சங் கேலக்ஸி இசட் ப்ளிப் போன்றே செங்குத்தாக திறந்து மூடும் வகையிலான வடிவமைப்பு கொண்டிருக்கும் என தெரிகிறது. சாம்சங் வழியில் ஆப்பிள் கிளாம்ஷெல் டிசைன் கொண்ட மடிக்கக்கூடிய ஐபோனினை அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது.
புதிய மடிக்கக்கூடிய ஐபோனின் அம்சங்கள் பற்றி எந்த தகவலும் இல்லை. எனினும், இது ஏராளமான நிறங்களில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மடிக்கக்கூடிய ஐபோன் மாடல் 2022 ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
இன்பினிக்ஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.
இன்பினிக்ஸ் நிறுவனம் புதிய ஸ்மார்ட் 5 மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இது அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த ஸ்மார்ட் 4 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும்.
புதிய இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5 மாடலில் 6.82 இன்ச் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி25 பிராசஸர், 2 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 10 கோ எடிஷன் சார்ந்த எக்ஸ்ஒஎஸ் 7 வழங்கப்பட்டு இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, லோ-லைட் சென்சார், ஸ்லோ-மோ வீடியோ, 8 எம்பி செல்பி கேமரா, எல்இடி பிளாஷ் வழங்கப்பட்டு உள்ளது.

இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5 சிறப்பம்சங்கள்
- 6.82 இன்ச் 1640x720 பிக்சல் HD+ 20.5:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- 2GHz ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி25 பிராசஸர்
- IMG PowerVR GE8320 GPU
- 2 ஜிபி ரேம்
- 32 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 10 கோ எடிஷன் மற்றும் எக்ஸ்ஒஎஸ் 7
- டூயல் சிம்
- 13 எம்பி பிரைமரி கேமரா, f/1.8, குவாட் LED பிளாஷ்
- லோ-லைட் சென்சார், ஸ்லோ-மோ வீடியோ
- 8 எம்பி செல்பி கேமரா, f/2.0, LED பிளாஷ்
- பின்புறம் கைரேகை சென்சார்
- 3.5mm ஆடியோ ஜாக், DTS-HD சரவுண்ட் சவுண்ட்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- மைக்ரோ யுஎஸ்பி
- 6000 எம்ஏஹெச் பேட்டரி
- 10 வாட் சார்ஜிங்
இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5 ஸ்மார்ட்போன் ஏஜியன் புளூ, மொராண்டி கிரீன், அப்சிடியன் பிளாக் மற்றும் 7 டிகிரி பர்பிள் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 7,199 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் பிப்ரவரி 18 ஆம் தேதி துவங்குகிறது.
நாய்ஸ் கலர்பிட் ப்ரோ 3 ஸ்மார்ட்வாட்ச் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
நாய்ஸ் கலர்பிட் ப்ரோ 3 ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இது அந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த கலர்பிட் ப்ரோ 2 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். இந்த வாட்ச் நாய்ஸ்பிட் செயலியுடன் இணைந்து உடல்நலன் சார்ந்த விவரங்களை டிராக் செய்கிறது.
புதிய கலர்பிட் ப்ரோ 3 மாடலில் 1.55 இன்ச் டச் ஹெச்டி ட்ரூவியூ டிஸ்ப்ளே, 500 நிட்ஸ் பிரைட்னஸ் உடன் வழங்கப்படுகிறது. மேலும் இது ப்ளூடூத் 5.0 மற்றும் 5 ஏடிஎம் தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது. இத்துடன் 24x7 இதய துடிப்பு டிராக்கிங், எஸ்பிஒ2 மாணிட்டர், ஸ்டிரெஸ் மாணிட்டர், பிரீத் மோட் போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது.
இது ஆண்ட்ராய்டு 4.4 மற்றும் ஐஒஎஸ் 9 மற்றும் அதற்கும் பின் வெளியான இயங்குதளங்களை கொண்ட சாதனங்களுடன் இணைந்து செயல்படும். மேலும் இதில் 14 ஸ்போர்ட்ஸ் மோட்கள் வழங்கப்பட்டுள்ள. இத்துடன் உடலில் எத்தனை கலோரிக்கள் எரிக்கப்பட்டன, எத்தனை தூரம் கடக்கப்பட்டது, ஸ்லீப் மாணிட்டர் மற்றும் பல்வேறு இதர அம்சங்கள் உள்ளது.

அழைப்புகள், டெக்ஸ்ட், ஆப், சமூக வலைதள நோட்டிபிகேஷன் உள்ளிட்டவைகளக்கு வைப்ரேஷன் அலெர்ட்களை வழங்குகிறது. 35 கிராம் எடை கொண்டிருக்கும் கலர்பிட் ப்ரோ 3 ஸ்மார்ட்வாட்ச் 210 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கிறது. இது பத்து நாட்களுக்கான பேக்கப் மற்றும் 30 நாட்களுக்கான ஸ்டான்ட்பை வழங்குகிறது.
நாய்ஸ் கலர்பிட் ப்ரோ 3 மாடல் ஜெட் பிளாக், ஜெட் புளூ, ஸ்மோக் கிரே, ஸ்மோக் கிரீன், ரோஸ் பின்க் மற்றும் ரோஸ் ரெட் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 5,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. எனினும், இது அமேசான் மற்றும் நாய்ஸ் அதிகாரப்பூர்வ வலைதளங்களில் ரூ. 3,999 எனும் சிறப்பு விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் இரண்டு புதிய ஆடியோ சாதனங்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்து உள்ளது.
சியோமி இந்தியா நிறுவனம் இரண்டு புதிய ஆடியோ சாதனங்களை பிப்ரவரி 22 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இரு சாதனங்களும் இதுவரை இல்லாத வகையில் தலைசிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் புதிய சவுண்ட் வேவ் வெளியிடப்பட இருப்பதாக சியோமி டீசரில் தெரிவித்து இருக்கிறது. இதற்கான டீசர்களில் இரண்டு இன்-இயர் ஹெட்செட் இடம்பெற்று இருக்கின்றன. எனினும், இவை வையர்டு அல்லது நெக்பேண்ட் ஹெட்செட் என எதுவாக இருக்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

சியோமி இந்திய தலைவர் மனு குமார் ஜெயின் இரண்டு புத்தம் புதிய ஆடியோ சாதனங்கள் நிகழ்வில் அறிமுகம் செய்யப்படும் என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறார். எனினும், இதுபற்றி வேறு எந்த தகவலும் வழங்கப்படவில்லை.
மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் 5ஜி ஸ்மார்ட்போன் மற்றும் இன் நோட் 1 மாடலுக்கான ஆண்ட்ராய்டு அப்டேட் விவரங்களை பார்ப்போம்.
இந்திய சந்தையில் நீண்ட இடைவெளிக்கு பின் மைக்ரோமேக்ஸ் சமீபத்தில் ரி-என்ட்ரி கொடுத்தது. அதன்படி மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இன் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.
அறிமுக நிகழ்விலேயே புதிய ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட், மூன்று ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட் வழங்கப்படும் என மைக்ரோமேக்ஸ் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், சமீபத்திய இணைய உரையாடலின் போது மைக்ரோமேக்ஸ் இணை நிறுவனர் ராகுல் ஷர்மா இன் நோட் 1 ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு 11 அப்டேட் ஏப்ரல் மாத வாக்கில் வழங்கப்படும் என தெரிவித்தார். மேலும் மைக்ரோமேக்ஸ் போரம்களில் ஆண்ட்ராய்டு 11 early access விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இந்த ஸ்மார்ட்போனிற்கு ஜனவரி 2021 அப்டேட் வழங்கப்பட்டு, EIS, RAW மோட் போன்ற அம்சங்கள், செல்பி கேமராவில் மேம்படுத்தல்கள் வழங்கப்பட்டன. இன் நோட் 1 ஸ்மார்ட்போனை தொடர்ந்து இன் 1பி மாடலுக்கும் ஆண்ட்ராய்டு 11 அப்டேட் வழங்கப்படும் என தெரிகிறது.
இவைதவிர மைக்ரோமேக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் பற்றிய கேள்விக்கும் ராகுல் ஷர்மா பதில் அளித்தார். அதன்படி, மைக்ரோமேக்ஸ் நிறுவனம் ஒரு 5ஜி ஸ்மார்ட்போன் மற்றும் வயர்லெஸ் இயர்போன்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார். இரு சாதனங்களும் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம்.
ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் இரண்டு புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.
ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா 3.4 மற்றும் நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. நோக்கியா 3.4 ஸ்மார்ட்போனில் 6.39 இன்ச் ஹெச்டி பிளஸ் பன்ச் ஹோல் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 460 பிராசஸர், 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் சென்சார், 5 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 5 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
இத்துடன் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி, டூயல் சிம் ஸ்லாட், ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக், எப்எம் ரேடியோ, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப் சி, 4000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது.
நோக்கியா 5.4 ஸ்மார்ட்போனில் 6.39 இன்ச் ஹெச்டி பிளஸ் பன்ச் ஹோல் ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 16 எம்பி செல்பி கேமரா, 48 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி அல்ட்ரா வைடு சென்சார், 2 எம்பி டெப்த், 2 எம்பி மேக்ரோ சென்சார் உள்ளன.

டூயல் சிம் ஸ்லாட் கொண்டிருக்கும் நோக்கியா 5.4 மாடலில் ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ், 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக், எப்எம் ரேடியோ, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப் சி, 4000 எம்ஏஹெச் பேட்டரி, 10 வாட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
நோக்கியா 3.4 ஸ்மார்ட்போன் ஜோர்டு, டஸ்க் மற்றும் சார்கோல் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 11,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உ்ளது. இதன் விற்பனை அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் தளங்களில் பிப்ரவரி 20 ஆம் தேதி துவங்குகிறது.
நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் போலார் நைட் மற்றும் டஸ்க் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் 4 ஜிபி ரேம் மாடல் விலை ரூ. 13,999 என்றும் 6 ஜிபி ரேம் மாடல் விலை ரூ. 15,499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் பிப்ரவரி 17 ஆம் தேதி துவங்குகிறது.
நோக்கியா பவர் இயர்பட்ஸ் இந்திய சந்தையில் ரூ. 3 ஆயிரம் பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா பவர் இயர்பட்ஸ் லைட் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் ஐபிஎக்ஸ்7 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் மற்றும் ப்ளூடூத் 5 வசதிகளை கொண்டுள்ளது.
இத்துடன் 600 எம்ஏஹெச் போர்டபில் சார்ஜிங் கேஸ் வழங்கப்படுகிறது. இது இயர்பட்களை கூடுதலாக 6 முறை சார்ஜ் செய்யும் திறன் கொண்டிருக்கிறது. இந்த இயர்பட்ஸ் மொத்தத்தில் 35 மணி நேர பிளேபேக் வழங்கும் திறன் கொண்டிருக்கிறது.

நோக்கியா பவர் இயர்பட்ஸ் லைட் சிறப்பம்சங்கள்
- 6எம்எம் கிராபின் டிரைவர்களுடன் உயர் ரக ஆடியோ
- ப்ளூடூத் 5 வசதி
- வாய்ஸ் அசிஸ்டண்ட் மற்றும் டச் கண்ட்ரோல்
- வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி
- 50 எம்ஏஹெச் பேட்டரி - ஒரு இயர்பட்
- 600 எம்ஏஹெச் பேட்டரி கொண்ட சார்ஜிஙஅ கேஸ்
- யுஎஸ்பி டைப் சி சார்ஜிங்
நோக்கியா பவர் இயர்பட்ஸ் லைட் ஸ்னோ மற்றும் சார்கோல் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 3599 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை அமேசான் தளத்தில் பிப்ரவரி 17 ஆம் தேதி துவங்குகிறது.
போக்கோ பிராண்டின் புதிய போக்கோ எம்3 ஸ்மார்ட்போன் முதல் விற்பனையில் அமோக வரவேற்பை பெற்று இருக்கிறது.
போக்கோ நிறுவனம் இந்திய சந்தையில் போக்கோ எம்3 ஸ்மார்ட்போனினை கடந்த வாரம் அறிமுகம் செய்தது. இதன் துவக்க விலை ரூ. 10,999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்நிலையில், இந்த ஸ்மார்ட்போனின் முதல் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் நடைபெற்றது.
இந்தியாவில் நடைபெற்ற முதல் விற்பனையில் சுமார் 1.5 லட்சத்திற்கும் அதிக போக்கோ எம்3 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டதாக போக்கோ நிறுவனம் அறிவித்து உள்ளது. இந்த ஸ்மார்ட்போனிற்கான அடுத்த விற்பனை பிப்ரவரி 16 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

போக்கோ எம்3 சிறப்பம்சங்கள்
- 6.53 இன்ச் 2340×1080 பிக்சல் FHD+ 19.5:9 LCD ஸ்கிரீன்
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர்
- அட்ரினோ 610 GPU
- 6 ஜிபி LPPDDR4x ரேம்
- 64 ஜிபி (UFS 2.1) / 128 ஜிபி (UFS 2.2) மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம் ஸ்லாட்
- ஆண்ட்ராய்டு 10 மற்றும் MIUI 12
- 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.79, LED பிளாஷ்
- 2 எம்பி டெப்த் கேமரா
- 2 எம்பி மேக்ரோ கேமரா, f/2.4
- 8 எம்பி செல்பி கேமரா, f/2.05
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- 3.5mm ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யுஎஸ்பி டைப் சி
- 6000 எம்ஏஹெச் பேட்டரி
- 18 வாட் பாஸ்ட் சார்ஜிங்
இந்திய சந்தையில் விரைவில் 5ஜி தொழில்நுட்பத்திற்கான சோதனை துவங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வாக்கில் 5ஜி சேவையை வழங்க தயாராகி வருகின்றன. இந்த நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் இந்தியாவில் 5ஜி சேவைக்கான சோதனை இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் துவங்கலாம் என கூறப்படுகிறது.
5ஜி சோதனை குறித்து மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய்-க்கு வந்த 16 கோரிக்கைகள் பற்றி பாராளுமன்ற குழுவுக்கு தகவல் அளிக்கப்பட்டு இருக்கிறது. இந்த குழு, இந்தியாவில் ஏன் இன்னும் 5ஜி சேவைக்கான சோதனை துவங்கப்படவில்லை என கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.

டெலிகாம் நிறுவனங்களுக்கு இதுவரை 5ஜி ஸ்பெக்ட்ரம் வழங்கப்படாதது பற்றி பாராளுமன்ற குழு வருத்தம் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போதைய சூழலில் ஸ்பெக்ட்ரம் அலைகற்றை வாங்கும் முறை முன்பை விட எளிதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் 5ஜி சோதனைக்கான விண்ணப்பங்களில் கல்வி, ஆரோக்கியம், விவசாயம், பொது பாதுகாப்பு போன்ற பிரிவுகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படும் என கூறப்படுகிறது. நிதி துறையில் 5ஜி பயன்பாட்டுக்கு டிராய் ஏற்கனவே அனுமதி அளித்துவிட்டது. இதுகுறித்த பணிகள் விரைவில் துவங்க இருக்கிறது.
சியோமியின் ரெட்மி பிராண்டு தனது ரெட்மி நோட் 10 சீரிஸ் இந்திய வெளியீட்டு விவரங்களை அறிவித்து இருக்கிறது.
சியோமியின் ரெட்மி பிராண்டு தனது ரெட்மி நோட் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் மார்ச் மாத வாக்கில் அறிமுகமாகும் என தெரிவித்து இருக்கிறது. முந்தைய ரெட்மி நோட் 9 சீரிஸ் போன்றே ரெட்மி நோட் 10 சீரிஸ் மாடல்களும் அமேசான், எம்ஐ ஆன்லைன் மற்றும் எம்ஐ ஸ்டோர் தளங்களில் விற்பனை செய்யப்பட இருக்கின்றன.
இதற்கென ரெட்மி வெளியிட்டு இருக்கும் டீசரில் புதிய ஸ்மார்ட்போனின் கேமரா அதிகளவு அப்டேட் செய்யப்பட்டு இருக்கும் என தெரிகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன்களில் அதிக ரிப்ரெஷ் ரேட் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன் 120 ஹெர்ட்ஸ் FHD+LCD ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 732ஜி பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் 64 எம்பி பிரைமரி சென்சாருடன் குவாட் கேமரா சிஸ்டம், 5000 எம்ஏஹெச் பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம்.
ரெட்மி நோட் 10 ப்ரோ 5ஜி மாடலில் அதிகபட்சம் 8 ஜிபி ரேம் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. முந்தைய நோட் 9 சீரிஸ் போன்றே ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் மாடல் அறிமுகம் செய்யப்படுமா என்பது தற்சமயம் கேள்விக்குறியாகவே இருக்கிறது.






