search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ஆப்பிள்
    X
    ஆப்பிள்

    இணையத்தில் வெளியான மடிக்கக்கூடிய ஐபோன் ரென்டர்

    ஆப்பிள் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஐபோன் மாடல் ரென்டர் இணையத்தில் வெளியாகி உள்ளது.


    ஆப்பிள் நிறுவனமும் மடிக்கக்கூடிய ஐபோன் மாடல்களை உருவாக்கி வருவதாக பலமுறை இணையத்தில் தகவல் வெளியாகி இருக்கின்றன. சமீப காலங்களில் மடிக்கக்கூடிய ஐபோனின் விவரங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகின்றன. 

    அந்த வரிசையில் தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் மடிக்கக்கூடிய சாதனங்கள் பிரிவில் ஆப்பிள் தனக்கே உரிய பாணியில் அசத்தலாக களமிறங்கும் என கூறப்படுகிறது. அதன்படி முதல் மடிக்கக்கூடிய ஐபோன் எப்படி காட்சியளிக்கும் என்ற விவரங்கள் வீடியோ வடிவில் வெளியாகி உள்ளது. 

     மடிக்கக்கூடிய ஐபோன்

    மடிக்கக்கூடிய ஐபோன் மாடல் ஐபோன் ப்ளிப் எனும் பெயரில் அழைக்கப்படலாம். ஆப்பிள் நிறுவனம் இரண்டு விதமான ப்ரோடோடைப்களை மடிக்கக்கூடிய ஐபோனிற்காக உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

    ஆப்பிள் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஐபோன் சாம்சங் கேலக்ஸி இசட் ப்ளிப் போன்றே செங்குத்தாக திறந்து மூடும் வகையிலான வடிவமைப்பு கொண்டிருக்கும் என தெரிகிறது. சாம்சங் வழியில் ஆப்பிள் கிளாம்ஷெல் டிசைன் கொண்ட மடிக்கக்கூடிய ஐபோனினை அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது.

    புதிய மடிக்கக்கூடிய ஐபோனின் அம்சங்கள் பற்றி எந்த தகவலும் இல்லை. எனினும், இது ஏராளமான நிறங்களில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மடிக்கக்கூடிய ஐபோன் மாடல் 2022 ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
    Next Story
    ×