என் மலர்
தொழில்நுட்பம்

மைக்ரோமேக்ஸ் இன் நோட் 1
மைக்ரோமேக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு விவரம்
மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் 5ஜி ஸ்மார்ட்போன் மற்றும் இன் நோட் 1 மாடலுக்கான ஆண்ட்ராய்டு அப்டேட் விவரங்களை பார்ப்போம்.
இந்திய சந்தையில் நீண்ட இடைவெளிக்கு பின் மைக்ரோமேக்ஸ் சமீபத்தில் ரி-என்ட்ரி கொடுத்தது. அதன்படி மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இன் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.
அறிமுக நிகழ்விலேயே புதிய ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட், மூன்று ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட் வழங்கப்படும் என மைக்ரோமேக்ஸ் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், சமீபத்திய இணைய உரையாடலின் போது மைக்ரோமேக்ஸ் இணை நிறுவனர் ராகுல் ஷர்மா இன் நோட் 1 ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு 11 அப்டேட் ஏப்ரல் மாத வாக்கில் வழங்கப்படும் என தெரிவித்தார். மேலும் மைக்ரோமேக்ஸ் போரம்களில் ஆண்ட்ராய்டு 11 early access விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இந்த ஸ்மார்ட்போனிற்கு ஜனவரி 2021 அப்டேட் வழங்கப்பட்டு, EIS, RAW மோட் போன்ற அம்சங்கள், செல்பி கேமராவில் மேம்படுத்தல்கள் வழங்கப்பட்டன. இன் நோட் 1 ஸ்மார்ட்போனை தொடர்ந்து இன் 1பி மாடலுக்கும் ஆண்ட்ராய்டு 11 அப்டேட் வழங்கப்படும் என தெரிகிறது.
இவைதவிர மைக்ரோமேக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் பற்றிய கேள்விக்கும் ராகுல் ஷர்மா பதில் அளித்தார். அதன்படி, மைக்ரோமேக்ஸ் நிறுவனம் ஒரு 5ஜி ஸ்மார்ட்போன் மற்றும் வயர்லெஸ் இயர்போன்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார். இரு சாதனங்களும் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம்.
Next Story