search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ஐபோன் 12
    X
    ஐபோன் 12

    இணையத்தில் வெளியான ஐபோன் 13 அம்சங்கள்

    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 13 சிறப்ப்மசங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.


    ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே அம்சம் OLED தொழில்நுட்பத்தில் சாத்தியப்படுத்தப்பட்டு தற்சமயம் பல்வேறு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் இது வழங்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் ஆப்பிள் நிறுவனமும் இந்த அம்சத்தை ஐபோன்களில் சேர்க்க இருப்பதாக கூறப்படுகிறது.

    அந்த வகையில் ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே அம்சம் பெறும் முதல் மாடல் ஐபோன் 13 என்றும் இது கடிகாரம், பேட்டரி மற்றும் இதர நோட்டிபிகேஷன்களை காண்பிக்கும் என தெரிகிறது. முன்னதாக வெளியான தகவல்களில் புதிய ஐபோன் சீரிசிற்கு ஆப்பிள் நிறுவனம் சாம்சங்கின் LTPO OLED பேனல்களை பயன்படுத்தும் என கூறப்பட்டது.

     ஐபோன் 12

    இது ஐபோன்களில் ப்ரோமோஷன் தொழில்நுட்பத்தை வழங்கி ஆல்வேஸ்-ஆன் டிஸ்ப்ளே அம்சத்தையும் செயல்படுத்த வழி வகுக்கும். இத்துடன் புதிய ஐபோன் 13 மாடல்களில் உறுதியான மேக்சேப் மேக்னட்கள் வழங்கப்படும் என்றும் நட்சத்திரங்களை பார்த்ததும் ஆஸ்ட்ரோ மோட் வசதியை தானாக ஆன் செய்யும் என கூறப்படுகிறது.

    இவைதவிர புதிய ஐபோன் 13 சீரிஸ் மேட் பினிஷ் செய்யப்பட்டு, போர்டிரெயிட் மோட் வீடியோவிலும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக வெளியான தகவல்களில் புதிய ஐபோன் சீரிஸ் மேம்பட்ட அல்ட்ரா வைடு கேமராக்கள், சிறிய நாட்ச் மற்றும் ஷிப்ட் OIS வழங்கப்படலாம் என கூறப்பட்டது.
    Next Story
    ×