என் மலர்
தொழில்நுட்பச் செய்திகள்
ரியல்மி நார்சோ 30 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ரியல்மி நிறுவனம் தனது நார்சோ 30 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் பிப்ரவரி 24 ஆம் தேதி அறிமுகமாகும் என அறிவித்து உள்ளது. நார்சோ 30 சீரிசில் நார்சோ 30 ப்ரோ 5ஜி, நார்சோ 30ஏ ஸ்மார்ட்போன்களும் பட்ஸ் ஏர் 2 இயர்போன் மாடலும் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.
முந்தைய ரியல்மி ஸ்மார்ட்போன்களை போன்றே புதிய நார்சோ சீரிஸ் மாடல்களும் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கின்றன. நார்சோ 30 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டிமென்சிட்டி 800யு பிராசஸர் வழங்கப்படும் என்றும் நார்சோ 30ஏ மாடலில் மூன்று பிரைமரி கேமராக்கள், பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்படுகிறது.
சமீபத்திய டீசரில் புதிய ஸ்மார்ட்போன் 48 எம்பி பிரைமரி கேமரா, மேட் பினிஷ், பக்கவாட்டில் கைரேகை சென்சார், பன்ச்-ஹோல் ரக டிஸ்ப்ளே வழங்கப்படும் என தெரியவந்துள்ளது. இது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட ரியல்மி கியூ2 5ஜி ஸ்மார்ட்போன் போன்றே காட்சியளிக்கிறது.

ரியல்மி நார்சோ 30 ப்ரோ 5ஜி / கியூ2 5ஜி சிறப்பம்சங்கள்
- 6.5 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன்
- ஆக்டாகோர் மீடியாடெக் டிமென்சிட்டி 800யு பிராசஸர்
- 4 ஜிபி / 6 ஜிபி LPDDR4x ரேம்
- 128 ஜிபி (UFS 2.1) மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஹைப்ரிட் டூயல் சிம்
- ஆண்ட்ராய்டு 10 மற்றும் ரியல்மி யுஐ
- 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.8, LED பிளாஷ்
- 8 எம்பி 119° அல்ட்ரா-வைடு ஆங்கில் லென்ஸ், f/2.3
- 2 எம்பி 4cm மேக்ரோ சென்சார், f/2.4
- 16 எம்பி செல்பி கேமரா, f/2.1
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
- 5ஜி SA/ NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யுஎஸ்பி டைப் சி
- 5000 எம்ஏஹெச் பேட்டரி
- 30 வாட் டார்ட் சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங்
டைவா நிறுவனம் இந்திய சந்தையில் இரண்டு புதிய டிவி மாடல்களை குறைந்த விலையில் அறிமுகம் செய்து உள்ளது.
டைவா நிறுவனம் இந்திய சந்தையில் இரண்டு புதிய டிவி மாடல்களை- டைவா D32S7B மற்றும் D40HDRS எனும் பெயர்களில் அறிமுகம் செய்துள்ளது. முன்னதாக டைவா நிறுவனம் 43 இன்ச் ஸ்மார்ட் டிவி மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.
புதிய டிவி மாடல்கள் 32 இன்ச் மற்றும் 39 இன்ச் அளவுகளில் கிடைக்கின்றன. இரு டிவி மாடல்களிலும் அலெக்சா சார்ந்த வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி உள்ளது. இந்த டிவியுடன் வழங்கப்படும் ரிமோட் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் சோனி லிவ் போன்ற தளங்களை இயக்க ஹாட்கீ கொண்டிருக்கிறது.

இரு மாடல்களில் 39 இன்ச் டிவி மட்டுமே ஹெச்டி ரெடி வசதி கொண்டிருக்கிறது. இதன் டிஸ்ப்ளே 1366x768 பிக்சல் ரெசல்யூஷன் ஆகும். இரு மாடல்களிலும் மூன்று HDMI மற்றும் இரண்டு யுஎஸ்பி போர்ட்கள், ப்ளூடூத் மற்றும் இ-ஷேர் போன்ற வசதிகள் உள்ளன.
இ-ஷேர் வசதி இருப்பதால் டிவியை ஸ்மார்ட்போன் கொண்டே இயக்க முடியும். இரு மாடல்களிலும் குவாட்கோர் பிராசஸர், ஆண்ட்ராய்டு 8, 1 ஜிபி ரேம், 8 ஜிபி மெமரி மற்றும் டைவா நிறுவனத்தின் தி பிக் வால் மென்பொருள் வழங்கப்பட்டு இருக்கிறது. இது பல்வேறு ஒடிடி தளங்களில் இருந்து தரவுகளை வழங்குகிறது.
இந்தியாவில் டைவா D32S7B மாடல் விலை ரூ. 15,990 என்றும் D40HDRS மாடல் விலை ரூ. 21,990 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இரு டிவிக்களும் ஒரு வருடத்திற்கான வாரண்டியை கொண்டுள்ளன. இவற்றின் விற்பனை விரைவில் துவங்க இருக்கின்றன.
ஜீ5 பிரீமியம் வருடாந்திர சந்தா கட்டணத்திற்கு சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
இந்தியாவில் ஜீ5 பிரீமியம் சேவைக்கான வருடாந்திர சந்தா 50 சதவீதம் குறைக்கப்பட்டு உள்ளது. ஜீ5 ஒடிடி தளம் துவங்கி மூன்றாவது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் இந்த சலுகை தற்காலிகமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் ஜீ5 வருடாந்திர சந்தா ரூ. 499 மட்டும் தான்.
இந்த சலுகை இம்மாத இறுதி வரை வழங்கப்படுகிறது. அதன் பின் ஜீ5 பிரீமியம் வருடாந்திர சந்தாவின் விலை ரூ. 999 என முந்தைய விலைக்கே மாறிவிடும். ஜீ5 பிரீமியம் மாதாந்திர, மூன்று மாத சலுகை கட்டணங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

ஜீ5 மூன்றாம் ஆண்டு விழாவை முன்னிட்டு அதன் பிரீமியம் வருடாந்திர சந்தா 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. இந்த சலுகை பிப்வரி 28 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது. ஜீ5 பிரீமியம் ஒரு மாதம் மற்றும் மூன்று மாதங்களுக்கான சந்தா விலை முறையே ரூ. 99 மற்றும் ரூ. 299 ஆகும்.
ஜீ5 பிரீமியம் சந்தா ஜீ5 ஒரிஜினல்ஸ், பிரத்யேக தொடர்கள், திரைப்படங்கள், அனைத்து ஆல்ட் பாலாஜி, ஜிந்தகி நிகழ்ச்சிகள், நேரலை டிவி மற்றும் டிவியில் ஒளிபரப்பாகும் முன் டிவி தொடர்களை பார்க்கும் வசதியை வழங்குகிறது. பிரீமியம் சந்தாவில் ஒரே சமயத்தில் ஐந்து வெவ்வேறு சாதனங்களில் பயன்படுத்த முடியும்.
இந்திய மின்சாதன உற்பத்தியாளரான லுமிபோர்டு புதிய ப்ளூடூத் ஹெட்போன் மாடல்களை அறிமுகம் செய்து உள்ளது.
இந்திய நுகர்வோர் மின்சாதன உற்பத்தியாளரான லுமிபோர்டு புதிய ப்ளூடூத் ஹெட்போன் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இவை HD50, HD60 மற்றும் HD70 என அழைக்கப்படுகின்றன. இவற்றில் 40mm ஹெச்டி ட்ரூ-பேஸ் டிரைவர்கள், மடிக்கக்கூடிய ஹெட்பேண்ட் டிசைன், நாய்ஸ் கேன்சலேஷன் போன்ற வசதிகள் உள்ளன.
மூன்று புதிய ஹெட்போன்களும் ஒவர்-இயர் ரக மாடல்கள் ஆகும். இவற்றில் ப்ளூடூத் 5.0 மற்றும் டூயல் போன் கனெக்டிவிட்டி வழங்கப்பட்டு இருக்கின்றன. இதன் ஹெட்பேண்ட்கள் அட்ஜஸ்ட் மற்றும் மடிக்கும் தன்மை கொண்டிருக்கின்றன.

இத்துடன் நீண்ட நேரம் பயன்படுத்தும் போது காதுகளில் சவுகரியத்தை வழங்கும் வகையில் மென்மையான குஷன்கள் வழங்கப்பட்டு உள்ளன. மூன்று ஹெட்போன்களிலும் 400 எம்ஏஹெச் பேட்டரிகள் வழங்கப்பட்டு உள்ளன. HD50 மாடல் 10 மணி நேரத்திற்கு பேக்கப் வழங்குகிறது.
லுமிபோர்டு HD60 மற்றும் HD70 ஹெட்போன்கள் 12 மணி நேரத்திற்கு பேக்கப் வழங்கும் திறன் கொண்டுள்ளன. மூன்று ஹெட்போன்களிலும் AUX, மைக்ரோ எஸ்டி கார்டு மற்றும் எப்எம் ரேடியோ உள்ளன.
லுமிபோர்டு லாங் டிரைவ் HD சீரிஸ் இயர்போன்கள்- HD50, HD60 மற்றும் HD70 விலை முறையே ரூ. 2599, ரூ. 2999 மற்றும் ரூ. 3699 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளன.
சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன் ரூ. 12,999 விலையில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் இன்பினிட்டி வி டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ பி35 பிராசஸர், 4 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.
புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்பி மேக்ரோ மற்றும் டெப்த் கேமராக்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன் 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கிறது.

சாம்சங் கேலக்ஸி ஏ12 சிறப்பம்சங்கள்
- 6.5 இன்ச் 1560×720 பிக்சல் HD+ LCD இன்பினிட்டி வி டிஸ்ப்ளே
- ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ பி35 பிராசஸர்
- IMG PowerVR GE8320 GPU
- 4 ஜிபி ரேம்
- 64 ஜிபி / 128 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 10 மற்றும் சாம்சங் ஒன் யுஐ 2.5
- டூயல் சிம்
- 48 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், f/2.0
- 5 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, f/2.2
- 2 எம்பி டெப்த் கேமரா
- 2 எம்பி மேக்ரோ கேமரா
- 8 எம்பி செல்பி கேமரா, f/2.0
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- 5,000 எம்ஏஹெச் பேட்டரி
- 15 வாட் பாஸ்ட் சார்ஜிங்
சாம்சங் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போன் பிளாக், புளூ மற்றும் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 12,999 என்றும் 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 13,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
ட்விட்டர் சமூக வலைதளத்தில் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ட்விட்டர் நிறுவனம் தனது தளத்தில் வாய்ஸ் மெசேஜிங் வசதியை வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வந்தது. தற்சமயம் இந்த அம்சம் இந்தியா, பிரேசில் மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் படிப்படியாக வெளியிடப்பட்டு வருகிறது. வாய்ஸ் டிஎம் (Voice DM) என அழைக்கப்படும் புது அம்சம் கொண்டு மற்றவர்களுக்கு தெரிவிக்க விரும்பும் தகவலை குரல்வழி பதிவாக அனுப்ப முடியும்.
முன்னதாக வாய்ஸ் ட்விட் எனும் அம்சத்தை ட்விட்டர் நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது. முந்தைய வாய்ஸ் ட்விட் போன்றே வாய்ஸ் டிஎம் அனுப்புவதற்கான கால அளவு 140 நொடிகளாக நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இதனால் பயனர்கள் அதிகபட்சம் 140 நொடிகளுக்குள் தங்களின் தகவலை பதிவு செய்து அனுப்ப முடியும்.

புதிய வாய்ஸ் டிஎம் அம்சம் ட்விட்டர் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் பயனர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ட்விட்டரில் வழக்கமான டிஎம் செய்வதை போன்றே புதிய அம்சத்தையும் இயக்க முடியும். இதற்கு டிஎம் ஆப்ஷனில் Voice Recording எனும் ஐகானை க்ளிக் செய்து குரலை பதிவு செய்ய வேண்டும். குரல் பதிவு முடிந்ததும், மற்றொரு முறை க்ளிக் செய்ய வேண்டும்.
பின் பயனர் பதிவு செய்த குரலை மீண்டும் கேட்பதற்கான வசதி வழங்கப்படுகிறது. இதனால் குரல் பதிவை அனுப்பும் முன், அதனை சரிபார்க்க மீண்டும் அதனை கேட்கலாம். ஐஒஎஸ் பயனர்கள் வாய்ஸ் ரெக்கார்டு செய்யும் ஐகானை அழுத்தி பிடித்து குரலை பதிவு செய்ய துவங்க வேண்டும், பின் மேல்புறமாக ஸ்வைப் செய்து ஐகானில் இருந்து விரலை விடுவிக்க வேண்டும்.
முதற்கட்டமாக வாய்ஸ் டிஎம் வசதி ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் தளங்களில் மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது. வெப் பிரவுசரில் வாய்ஸ் டிஎம்-களை கேட்க முடியும். புதிய அம்சம் வலைதள உரையாடல்களை மேலும் உயிரூட்டும் என ட்விட்டர் தெரிவித்து உள்ளது.
வி நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு இரவு நேரத்தில் இலவச டேட்டா வழங்குவதாக அறிவித்து உள்ளது.
வி (வோடபோன் ஐடியா) நிறுவனத்தின் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு இரவு நேர அதிவேக டேட்டா வழங்கப்படுகிறது. இதனை நள்ளிரவு 12 மணி துவங்கி காலை 6 மணி வரை பயன்படுத்தலாம். இந்த சலுகை வி ரூ. 249 மற்றும் அதற்கும் அதிக விலை கொண்ட சலுகைகளுக்கு மட்டும் பொருந்தும்.
மேலும் இரவு நேர அதிவேக டேட்டா சலுகை பிப்ரவரி 16 ஆம் தேதி அல்லது அதன் பின் மேற்கொள்ளப்படும் ரீசார்ஜ்களுக்கு மட்டுமே பொருந்தும். இணையதளம் மற்றும் ஒடிடி பயன்பாடு இரவு நேரங்களில் அதிகரித்து வருவதை தொடர்ந்து இந்த சலுகை அறிவிக்கப்பட்டு இருப்பதாக வி நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.
ஒடிடி தளங்கள், வி மூவிஸ் மற்றும் டிவி ஆப் வழங்கும் தரவுகளை டவுன்லோட் செய்தல், இதர இணையதள பிரவுசிங் மற்றும் டவுன்லோட் உள்ளிட்டவைகளை இரவு நேர அதிவேக டேட்டா கொண்டு மேற்கொள்ளலாம் என்றும் வி தெரிவித்து உள்ளது.

வாடிக்கையாளர்கள் தொடர்ந்து வி நிறுவன சேவையை பயன்படுத்தவும், புதிய வாடிக்கையாளர்களை வி நெட்வொர்க் பயன்படுத்த செய்யும் நோக்கத்தில் இந்த சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக வார இறுதியில் டேட்டா ரோல் ஒவர் சலுகையை வி நிறுவனம் அறிவித்து இருந்தது.
இளம் வயதினர் இரவு நேரங்களில் அதிக டேட்டா பயன்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக இந்த சலுகை அவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என வி நிறுவனம் தெரிவித்து உள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் வி நிறுவனம் ரூ. 351 விலையில் பிரீபெயிட் சலுகை ஒன்றை அறிவித்தது. இந்த சலுகையில் 100 ஜிபி டேட்டா எவ்வித கட்டுபாடு மற்றும் வேலிடிட்டிக்கான கால அளவின்றி வழங்கியது.
விவோ நிறுவனம் இந்திய சந்தையில் ஏப்ரல் மாதத்திற்குள் 11 புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
விவோ நிறுவனம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் 11 புதிய ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முந்தைய தகவல்களில் விவோ எக்ஸ்50 ப்ரோ பிளஸ் மற்றும் எக்ஸ்60 சீரிஸ் விரைவில் வெளியாகலாம் என கூறப்பட்டு இருந்தது.
இந்நிலையில், இரண்டு விவோ பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்களுடன் குறைந்த விலை ஸ்மார்ட்போன்களும் அறிமுகம் செய்யப்படலாம் என தற்போதைய தகவல்களில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. பிளாக்ஷிப் மாடல்களுடன் விவோ வி21 சீரிஸ், விவோ எஸ்9 5ஜி உள்ளிட்டவையும் அறிமுகம் செய்யப்படலாம்.

விவோ வி21 சீரிஸ் மற்றும் விவோ எஸ்9 5ஜி ஸ்மார்ட்போன்கள் முதலில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. இதில் விவோ எஸ்9 5ஜி ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 1100 பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. விவோ 21 ப்ரோ ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 765ஜி பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
இவைதவிர விவோ வி21, விவோ 21இ உள்ளிட்டவை 4ஜி மாடல்களாக இருக்கும் என்றும் இவற்றின் விலை 5ஜி மாடல்களை விட குறைவாக நிர்ணயம் செய்யப்படும். இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களில் விவோ வி21இ, வி21 ப்ரோ, எஸ்9 5ஜி, எக்ஸ்50 ப்ரோ பிளஸ், எக்ஸ்60 மற்றும் எக்ஸ்60 ப்ரோ போன்ற மாடல்கள் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம்.
ரியல்மி நிறுவனத்தின் புது வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடல் விரைவில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
ரியல்மி நிறுவனம் விரைவில் ரியல்மி பட்ஸ் ஏர் 2 மாடலை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை உணர்த்தும் வகையில் ரியல்மி இந்தியா தலைவர் மாதவ் சேத் டீசர் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். புதிய இயர்பட்ஸ் ரியல்மி பட்ஸ் ஏர் மாடலின் மேம்பட்ட வெர்ஷனாக இருக்கும்.
முன்னதாக ரியல்மி பட்ஸ் ஏர் 2 மாடல் 2021 முதல் காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், மாதவ் சேத் தற்சமயம் வெளியிட்டு இருக்கும் டீசர் வீடியோவில் புதிய இயர்பட்ஸ் எப்படி காட்சியளிக்கும் என தெரியவந்துள்ளது.

45 நொடிகள் ஓடும் வீடியோவில் பிளாக் ஓவல் வடிவ கேஸ் ஒன்று இடம்பெற்று இருக்கிறது. இந்த இயர்பட்ஸ் பார்க்க பட்ஸ் ஏர் ப்ரோ மாடலின் குறைந்த விலை வெர்ஷனாக இருக்கும் என தெரிகிறது. புதிய பட்ஸ் ஏர் 2 பற்றி ரியல்மி தலைமை செயல் அதிகாரி எந்த தகவலையும் வழங்கவில்லை.
எனினும், புதிய இயர்பட்ஸ் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி கொண்டிருக்கும் என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறார். இ்துடன் டிரான்ஸ்பேரன்சி மோட் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அம்சம் வெளிப்புறம் இருக்கும் சத்தத்தை கேட்டுக் கொண்டே இசையையும் அனுபவிக்க வழி செய்கிறது. புதிய ரியல்மி பட்ஸ் ஏர் 2 மாடலின் வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சியோமி ரெட்மி நோட் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
சியோமியின் ரெட்மி பிராண்டு தனது ரெட்மி நோட் 10 சீரிஸ் இந்திய சந்தையில் மார்ச் 4 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என அறிவித்து இருக்கிறது. முந்தைய தகவல்களின் படி புதிய ஸ்மார்ட்போனின் கேமரா அதிகளவு அப்டேட் செய்யப்பட்டு இருக்கும் என தெரிகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன்களில் அதிக ரிப்ரெஷ் ரேட் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

சிறப்பம்சங்களை பொருத்தவரை ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன் 120 ஹெர்ட்ஸ் FHD+LCD ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 732ஜி பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் 64 எம்பி பிரைமரி சென்சாருடன் குவாட் கேமரா சிஸ்டம், 5000 எம்ஏஹெச் பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம்.
ரெட்மி நோட் 10 ப்ரோ 5ஜி மாடலில் அதிகபட்சம் 8 ஜிபி ரேம் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. முந்தைய நோட் 9 சீரிஸ் போன்றே ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் மாடல் அறிமுகம் செய்யப்படுமா என்பது தற்சமயம் கேள்விக்குறியாகவே இருக்கிறது.
சைபர்பண்க் 2077 மற்றும் தி விட்ச்சர் 3 கேம்களின் பயனர் விவரங்கள் டார்க் வெப் தளத்தில் விற்பனை செய்யப்பட்டன.
சர்வதேச கேமிங் சந்தையில் அதிக பிரபலமான சைபர்பண்க் 2077 மற்றும் தி விட்ச்சர் 3 போன்ற கேம்களை உருவாக்கிய பிராஜக்ட் ரெட் நிறுவனத்தின் டேட்டாக்கள் திருடப்பட்டு டார்க் வெப் எனும் இணையதளத்தில் ஏலம் நடத்தி விற்பனை செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கேம் உருவாக்கிய நிறுவனத்தின் ரெட் என்ஜின், சைபர்பண்க் 2077, தி விட்ச்சர் 3 மற்றும் இதர கேம்களின் டேட்டாவை ஹேக்கர்கள் திருடி விற்று இருக்கின்றனர். முன்னதாக பிராஜக்ட் ரெட் நிறுவனத்தின் பிரபல கேம்களின் சோர்ஸ் கோட் விவரங்கள் தங்களிடம் இருப்பதாக ஹேக்கர்கள் அனுப்பிய தகவலை அந்நிறுவனம் தனது ட்விட்டர் அக்கவுண்ட்டில் பதிவிட்டு இருந்தது.
ஹேக்கர்களுக்கு பணம் கொடுக்கவோ, சமரசம் செய்யவோ முயற்சிக்க மாட்டோம் என பிராஜ்க்ட் ரெட் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், டார்க் வெப் தளத்தில் விவரங்களை ஹேக்கர்கள் ஏலம் நடத்தி விற்று இருப்பதாக பாதுகாப்பு ஆய்வாளர் தெரிவித்து இருக்கிறார்.
இதுகுறித்து வெளியான தகவல்களில், பிராஜக்ட் ரெட் நிறுவனத்தின் டேட்டா, டார்க் வெப் தளத்தில் பத்து லட்சம் டாலர்கள் எனும் துவக்க விலையில் ஏலம் விடப்பட்டது. இறுதியில் 70 லட்சம் டாலர்களுக்கு ஏலம் முடிக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஹார்டுவேர் கீபோர்டு கொண்ட பிளாக்பெரி 5ஜி ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
ஆன்வார்டு மொபிலிட்டி நிறுவனம் இந்த ஆண்டு பிளாக்பெரி பிராண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய போவதாக கடந்த ஆண்டே அறிவித்து இருந்தது. இந்த நிலையில், அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி பீட்டர் பிரான்க்ளின் புது பிளாக்பெரி மாடல் வெளியீட்டை உறுதிப்படுத்தி இருக்கிறார்.
மேலும் புதிய பிளாக்பெரி ஸ்மார்ட்போன் அந்நிறுவனத்தின் பாரம்பரியம் மிக்க ஹார்டுவேர் கீபோர்டு மற்றும் 5ஜி கனெக்டிவிட்டி கொண்டிருக்கும் என அவர் தெரிவித்தார். பிளாக்பெரியின் முதல் 5ஜி ஸ்மார்ட்போனினை உருவாக்க ஆன்வார்டு மொபிலிட்டி நிறுவனம் பாக்ஸ்கானுடன் இணைந்து பணியாற்றி வருகின்றன.
முதற்கட்டமாக 5ஜி பிளாக்பெரி ஸ்மார்ட்போன் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் அறிமுகம் செய்யப்பட்டு, பின் ஆசிய சந்தைக்கு கொண்டு வரப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. புதிய 5ஜி ஸ்மார்ட்போனின் வெளியீடு பற்றி ஆன்வார்டு மொபிலிட்டி இதுவரை உறுதியான விவரங்களை வழங்கவில்லை.

அந்த வகையில் இதன் வெளியீடு பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. புதிய 5ஜி ஸ்மார்ட்போன் பிளாக்பெரியின் புகழ்பெற்ற பாதுகாப்பு அம்சத்தை உறுதிப்படுத்தும் வகையில் இருக்கும். பிளாக்பெரி 5ஜி ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.
ஆன்வார்டு மொபிலிட்டி 2008 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட அமெரிக்க நிறுவனம் ஆகும். இது தலைசிறந்த பாதுகாப்பு கொண்ட மொபைல் மென்பொருள் உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதன் தலைமை செயல் அதிகாரியான பிரான்க்ளின் முன்னதாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணியாற்றி இருக்கிறார்.






