என் மலர்tooltip icon

    தொழில்நுட்பச் செய்திகள்

    ரெட்மி பிராண்டின் ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனின் புது வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    ரெட்மி பிராண்டின் ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் புது வேரியண்ட் இந்தியாவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படட்டது. ரெட்மி 9 பவர் புது வேரியண்ட் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது.

    இந்திய சந்தையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த வரிசையில் இதன் புது வேரியண்ட் அறிமுகமாகி உள்ளது.

    சிறப்பம்சங்களை பொருத்தவரை ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் 2340×1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3, ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர், அட்ரினோ 610 GPU வழங்கப்பட்டு இருக்கிறது. 

     ரெட்மி 9 பவர்

    இந்த ஸ்மார்ட்போனில் புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு சென்சார், 2 எம்பி மேக்ரோ கேமரா, 2 எம்பி டெப்த் சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. முன்புறம் 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. 

    இத்துடன் ஆண்ட்ராய்டு 10 மற்றும் MIUI 12 யுஐ, கைரேகை சென்சார், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், 6000 mAh பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, 3.5 எம்எம் ஆடியோஜாக், எப்எம் ரேடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர், ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் (P2i coating), டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5 மற்றும் யுஎஸ்பி டைப் சி வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்தியாவில் ரெட்மி 9 பவர் 4 ஜிபி + 64 ஜிபி மற்றும் 4 ஜிபி + 128 ஜிபி மெமரி வேரியண்ட் விலை முறையே ரூ. 10,999 மற்றும் ரூ. 11,999 என நிர்ணயம் செய்யப்பட்டது. புதிய 6 ஜிபி + 128 ஜிபி மெமரி வேரியண்ட் விலை ரூ. 12,999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
    ஆப்பிள் நிறுவனம் 6ஜி வயர்லெஸ் தொழில்நுட்பத்தை உருவாக்க பொறியாளர்களை பணியமர்த்தும் பணிகளை துவங்கி உள்ளது.


    ஆப்பிள் நிறுவனம் 6  ஆம் தலைமுறை செல்லுலார் கனெக்டிவிட்டி அதாவது 6ஜி தொழில்நுட்பத்தில் பணியாற்ற பொறியாளர்களை பணியமர்த்தும் பணிகளை துவங்கி உள்ளது. இதற்கான அறிவிப்பை ஆப்பிள் தனது வலைதளத்தின் வேலைவாய்ப்பு பகுதியில் வெளியிட்டு இருக்கிறது.

    வயர்லெஸ் சிஸ்டம் ஆய்வு பொறியாளர்கள் ஆப்பிள் நிறுவனத்தின் சிலிகான் வேலி மற்றும் சான் டெய்கோ அலுவலகங்களில் பணியாற்றுவர். எதிர்கால ஆப்பிள் சாதனங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் அடுத்த தலைமுறை வயர்லெஸ் தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பு எனும் தலைப்பில் ஆப்பிள் புதிய பணி பற்றி விவரிக்கிறது.

     6ஜி

    இந்த பிரிவில் பணியாற்றுவோர் 6ஜி வயர்லெஸ் தகவல் பரிமாற்ற முறைகளுக்கான ரேடியோ நெட்வொர்க்குகளை வடிவமைப்பார்கள் என ஆப்பிள் தெரிவித்து உள்ளது. 6ஜி தொழில்நுட்பம் இன்றைய தேதியில் தொலைதூர கனவு ஆகும். தற்சமயம் 5ஜி தொழில்நுட்பம் மெல்ல பயன்பாட்டுக்கு வரத் துவங்கி இருக்கிறது.

    எனினும், 4ஜி எல்டிஇ உலகின் பல்வேறு நாடுகளில் அதிகம் பயன்படுத்தப்படும் மொபைல் நெட்வொர்க் ஆக இருக்கிறது. ஆப்பிள் நிறுவனம் 6ஜி தொழில்நுட்பத்தை வழங்குவோரில் முன்னணியில் இருக்க திட்டமிட்டு உள்ளது. ஆப்பிள் நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த அனைத்து ஐபோன் 12 சீரிஸ் மாடல்களும் 5ஜி வசதி கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
    வாட்ஸ்அப் நிறுவனம் மேம்பட்ட பிரைவசி பாலிசிக்கான அப்டேட்டை விரைவில் வெளியிட இருப்பதாக தெரிவித்து உள்ளது.


    வாட்ஸ்அப் நிறுவனம் வரும் வாரங்களில் மேம்படுத்தப்பட்ட பிரைவசி பாலிசியை மீண்டும் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சில வாரங்களுக்கு முன் வாட்ஸ்அப் வெளியிட்ட புது அப்டேட்டிற்கு உலகளாவிய பயனர்கள் பெரும் எதிர்ப்பை தெரிவிதித்தனர். 

    பின் புது அப்டேட் பற்றி வாட்ஸ்அப் நீண்ட விளக்கம் அளித்தது. மேலும் புதிய மாற்றங்களுக்கு பயனர்கள் ஒப்புதல் வழங்க மே 15, 2021 எனும் புதிய காலக்கெடுவை பிறப்பித்தது. இத்துடன் வாட்ஸ்அப் தனது பயனரின் தனிப்பட்ட குறுந்தகவல், குழுக்களில் பகிரப்படும் குறுந்தகவல் உள்ளிட்டவைகளை பார்க்க முடியாது என தெரிவித்தது. 

     கோப்புப்படம்

    மேலும் பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்அப் பிஸ்னஸ் அம்சத்தை கையாண்டு, வியாபாரங்கள் புது சேவைகள் மற்றும் அம்சங்களை இயக்க வழி செய்வதாக வாட்ஸ்அப் தெரிவித்தது. முன்னதாக ஜனவரி மாதத்தில் பயனர்கள் மேம்பட்ட பிரைவசி பாலிசியை ஏற்றுக் கொண்டால் மட்டுமே செயலியை தொடர்ந்து பயன்படுத்த முடியும் என தெரிவித்தது.

    இதைத் தொடர்ந்து பலர் வாட்ஸ்அப் செயலியை அன்-இன்ஸ்டால் செய்து டெலிகிராம் மற்றும் சிக்னல் போன்ற செயலிகளை பயன்படுத்த துவங்கினர். பின் வாட்ஸ்அப் சர்ச்சைக்குள்ளான பிரைவசி பாலிசி பற்றிய விளக்கத்தை உலகம் முழுக்க விளம்பரங்கள் வாயிலாக பயனர்களுக்கு தெரிவித்து வருகிறது.
    லெனோவோ நிறுவனம் இந்திய சந்தையில் குறைந்த விலை ஸ்மார்ட் கடிகாரத்தை அறிமுகம் செய்து இருக்கிறது.


    லெனோவோ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் கடிகாரம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட் கடிகாரத்தில் கூகுள் அசிஸ்டண்ட் சேவையின் வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு உள்ளது. மேலும் இது இந்தி மொழியில் கமாண்ட்களை வழங்கும் லெனோவோவின் முதல் ஸ்மார்ட் சாதனம் ஆகும்.

    புதிய லெனோவோ ஸ்மார்ட் கிளாக் எசென்ஷியல் 4 இன்ச் LED டிஸ்ப்ளே, ஸ்மார்ட் அலாரம் வசதி, பார்-பீல்டு மைக்ரோபோன் உள்ளிட்ட வசதிகளை கொண்டுள்ளது. இத்துடன் 4 ஜிபி ரேம், 512 எம்பி ரோம், பிளே / அலாரம் பட்டன் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

     லெனோவோ ஸ்மார்ட் கிளாக் எசென்ஷியல்

    லெனோவோ ஸ்மார்ட் கடிகாரம் சிறப்பம்சங்கள்

    - 4 இன்ச் LED டிஸ்ப்ளே
    - அம்லாஜிக் ஏ11மஎக்ஸ் பிராசஸர்
    - 3 வாட் ஸ்பீக்கர்
    - 2 மைக்ரோபோன் அரே
    - 4 ஜிபி ரேம்
    - 512 எம்பி ரோம்
    - மைக்ரோபோன் மியூட் டாகிள்
    - பிளே பட்டன், அலாரம் படட்டன்
    - 2.4ஜி / 5ஜி டூயல் பேண்ட், IEEE 802.11 ac, ப்ளூடூத் 5

    புதிய லெனோவோ ஸ்மார்ட் கடிகாரம் சாப்ட் டச் கிரே நிறத்தில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 4,499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
    ஆப்பிள் நிறுவனம் தனது ஐபேட் மாடல்களின் உற்பத்தி பணிகளை இந்தியாவில் துவங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


    ஆப்பிள் நிறுவனம் ஐபோன்களை தொடர்ந்து ஐபேட் உற்பத்தியை இந்தியாவில் துவங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதன் மூலம் இந்தியாவில் இருந்து கணினி பாகங்கள் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் மத்திய அரசு திட்டத்தில் ஆப்பிள் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது.

    மத்திய அரசு டேப்லெட், லேப்டாப் மற்றும் சர்வெர்களை உள்நாட்டில் உற்பத்தி செய்வோருக்கு சிறப்பு சலுகை அறிவிக்க  திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

    புதிய திட்டம் மத்திய அரசு கடந்த ஆண்டு அறிவித்த ஸ்மார்ட்போன் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் திட்டத்தின் அடிப்படையில் இருக்கும். இது எலெக்டிரானிக் பொருட்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும். இதன் மூலம் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும்.

     ஐபேட்

    ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் 2017 ஆம் ஆண்டு முதல் ஐபோன்களை உற்பத்தி செய்து வருகிறது. தற்சமயம் பாக்ஸ்கான், விஸ்ட்ரன் மற்றும் பெகட்ரான் போன்ற நிறுவனங்களை சார்ந்து இந்திய உற்பத்தியை மேற்கொள்கிறது. இதற்கென ஆப்பிள் நிறுவனம் ஐபோன் உற்பத்திக்கென இந்தியாவில் 90 கோடி டாலர்களை ஐந்து ஆண்டுகளில் முதலீடு செய்ய இருக்கிறது.

    அதன்படி இந்தியாவில் ஐபோன்களை தொடர்ந்து ஐபேட் உற்பத்தியை துவங்கலாம் என கூறப்படுகிறது. தற்போதைய தகவல்களின் படி இந்தியாவில் ஐபேட் உற்பத்தியை ஆப்பிள் துவங்குமா என்பது தற்சமயம் கேள்விக்குறியாகவே உள்ளது. 
    ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஒன்பிளஸ் 9 அம்சங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.


    ஒன்பிளஸ் நிறுவனத்தின் அடுத்த பிளாக்ஷிப் சீரிஸ் ஆன ஒன்பிளஸ் 9 மாடல்களின் விவரங்கள் அடிக்கடி இணையத்தில் வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில் தற்சமயம் ஒன்பிளஸ் 9 விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. 

    அதன்படி புதிய ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போன் 6.55 இன்ச் FHD+ டிஸ்ப்ளே, 1080x2400 பிக்சல் ரெசல்யூஷன், 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், பன்ச்-ஹோல் கட்-அவுட் உள்ளிட்டவை வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர், 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்படலாம்.

     ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்

    புதிய ஒன்பிளஸ் 9 மாடலில் 4500 எம்ஏஹெச் பேட்டரி, 65 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, ஆக்சிஜன் ஒஎஸ் சார்ந்த ஆண்ட்ராய்டு 11 வழங்கப்படும் என கூறப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க 12 எம்பி பிரைமரி கேமரா, 4 இல் 1 பிக்சல் பின்னிங் மூலம் 48 எம்பி ரெசல்யூஷன் வழங்கும் என கூறப்படுகிறது. 

    இந்த ஸ்மார்ட்போனின் இதர சென்சார்கள் பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. புதிய ஒன்பிளஸ் 9 சீரிஸ் ஸ்மார்ட்போன் மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதற்கான டீசர்கள் விரைவில் வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது.

    போக்கோ இந்தியா நிறுவனம் புதிய பிராண்டு லோகோவை அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    போக்கோ இந்தியா நிறுவனம் புதிய பிராண்ட் லோகோ மற்றும் மஸ்கோட் ஆகியவற்றை அறிமுகம் செய்தது. புது பிராண்ட் லோகோ குழப்பத்தை குறிக்கும் சின்னத்தை சார்ந்து உருவாக்கப்பட்டு உள்ளது. இது ஒவ்வொரு விஷயத்திலும் முற்றிலும் வித்தியாசமான மாற்றை தேடும் நபரை குறிக்கும் என போக்கோ இந்தியா தெரிவித்து இருக்கிறது. 

    லோகோவுடன் அறிமுகம் செய்யப்பட்ட மஸ்கோட் பற்றியும் போக்கோ விளக்கம் அளித்து இருக்கிறது. 2018 ஆம் ஆண்டு போக்கோ சியோமியின் துணை பிராண்டாக அறிமுகமானது. பின் கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் போக்கோ தனி பிராண்டாக மாறியது.

     போக்கோ மஸ்கோட்

    சியோமி நிறுவனம் அதிக ஸ்மார்ட்போன்கள் மற்றும் பிளாக்ஷிப் மாடல்களை ஒவ்வொரு ஆண்டும் அறிமுகம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளது. போக்கோ நிறுவனம் குறைந்த எண்ணிக்கையில் சாதனங்களை அறிமுகம் செய்து வருகிறது. சமீபத்தில் போக்கோ எம்3 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யதது.

    இதுதவிர போக்கோ பாப் பட்ஸ் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலுக்கான டீசரை வெளியிட்டு உள்ளது. மேலும் போக்கோ எப்2 ஸ்மார்ட்போனினை விரைவில் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ஆப்பிள் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஐபோனிற்கு எல்ஜி நிறுவனம் டிஸ்ப்ளே வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


    ஸ்மார்ட்போன் சந்தையில் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் தொடர்ந்து மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகின்றன. இந்த நிலையில், ஆப்பிள் நிறுவனமும் மடிக்கக்கடிய ஐபோன் மாடலை உருவாக்கி வருவதாக நீண்ட காலமாக தகவல் வெளியாகி வருகிறது.

    அந்த வரிசையில் தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் மடிக்கக்கூடிய ஐபோனிற்கு எல்ஜி டிஸ்ப்ளேவை பயன்படுத்த இருப்பதாக கூறப்படுகிறது. ப்ளிப் டிசைன் கொண்ட ஐபோன் மாடலுக்கான டிஸ்ப்ளேவை எல்ஜி வினியோகம் செய்யலாம் என தெரிகிறது.

     ஐபோன்

    எல்ஜி டிஸ்ப்ளே நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்திற்கு மடிக்கக்கூடிய OLED டிஸ்ப்ளே பேனலை உருவாக்க தேவையான உதவிகளை செய்யலாம் என்றும் கூறப்படுகிறது. எனினும், மடிக்கக்கூடிய டிஸ்ப்ளே பேனல்களை எல்ஜி டிஸ்ப்ளே வினியோகம் செய்யுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

    எல்ஜி தவிர சாம்சங் டிஸ்ப்ளே நிறுவனமும் ஆப்பிள் நிறுவனத்திற்கு மடிக்கக்கூடிய OLED டிஸ்ப்ளே பேனல்களை வினியோகம் செய்து வருகிறது. முந்தைய தகவல்களில் சாம்சங் நிறுவனம் அதிகப்படியான மடிக்கக்கூடிய டிஸ்ப்ளேக்களை ஆப்பிள் நிறுவனத்திற்கு சோதனை பணிகளுக்காக வழங்க இருப்பதாக கூறப்பட்டது.
    மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் ரூ. 8 ஆயிரம் பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்பட்டது.


    மோட்டோரோலா நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி மோட்டோ இ7 பவர் ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் மேக்ஸ்விஷன் டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி25 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி, 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி மேக்ரோ சென்சார், 5 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. ஐபி52 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கும் மோட்டோ இ7 பவர் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 10 வாட் சார்ஜிங் கொண்டுள்ளது.

     மோட்டோ இ7 பவர்

    மோட்டோ இ7 பவர் சிறப்பம்சங்கள்

    - 6.5 இன்ச் 1600×720 பிக்சல் HD+ மேக்ஸ்விஷன் டிஸ்ப்ளே
    - 2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி25 பிராசஸர்
    - IMG PowerVR GE8320 GPU
    - 4 ஜிபி LPDDR4x ரேம்
    - 64 ஜிபி (eMCP) மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - 13 எம்பி பிரைமரி கேமரா, f/2.2, LED பிளாஷ்
    - 2 எம்பி மேக்ரோ கேமரா
    - 5 எம்பி செல்பி கேமரா, f/2.2
    - ஆண்ட்ராய்டு 10
    - ஹைப்ரிட் டூயல் சிம் 
    - 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ 
    - பின்புறம் கைரேகை சென்சார்
    - வாட்டர் ரெசிஸ்டண்ட் (IP52)
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    - யுஎஸ்பி டைப் சி
    - 5,000 எம்ஏஹெச் பேட்டரி
    - 10 வாட் சார்ஜிங் 

    மோட்டோ இ7 பவர் ஸ்மார்ட்போன் டஹிட்டி புளூ மற்றும் கோரல் ரெட் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 8299 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை பிப்ரவரி 26 ஆம் தேதி துவங்குகிறது.
    மைக்ரோசாப்ட் நிறுவனம் அசத்தல் அம்சங்களுடன் எக்ஸ்பாக்ஸ் வயர்லெஸ் ஹெட்செட் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.


    மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வயர்லெஸ் ஹெட்செட் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த வயர்லெஸ் ஹெட்செட் எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எக்ஸ், சீரிஸ் எஸ், எக்ஸ்பாக்ஸ் ஒன் மற்றும் இதர விண்டோஸ் 10 சாதனங்களுடன் இணைந்து செயல்படுகிறது.

    புதிய எக்ஸ்பாக்ஸ் வயர்லெஸ் ஹெட்செட் பிளெயின் பிளாக் பினிஷ் நிறத்தில், கேமிங் சார்ந்த அம்சங்களை கொண்டுள்ளது. இது 40எம்எம் டிரைவர்கள், பேப்பர் கம்போசிட் டையபிராம் மற்றும் நியோடிமியம் மேக்னெட் கொண்டு உருவாக்கப்பட்டு உள்ளது. இது 20Hz முதல் 20000Hz ரெஸ்பான்ஸ் ரேன்ஜ் கொண்டிருக்கிறது.

    இந்த ஹெட்செட் பவர்/பேர் பட்டன், மியூட் பட்டன், இடது மற்றும் வலதுபுற இயர்கப் மீது டையல்கள் வழங்கப்பட்டுள்ளன. வலதுபுற டையல் வால்யூம் கண்ட்ரோலர்களாக இயங்குகின்றன. இதில் உள்ள மைக் ட்விஸ்ட் செய்யக்கூடிய பூம் வடிவமைப்பு கொண்டுள்ளது. இதனால் பயன்படுத்தாத நேரத்தில் அதனை ஓரமாக வைத்துக் கொள்ளலாம்.

     எக்ஸ்பாக்ஸ் வயர்லெஸ் ஹெட்செட்

    புதிய எக்ஸ்பாக்ஸ் வயர்லெஸ் ஹெட்செட் ப்ளூடூத் 4.2 மூலம் விண்டோஸ் 10 சாதனங்களுடன் இணைந்து கொள்கிறது. இவைதவிர யுஎஸ்பி டைப் சி கேபில் அல்லது எக்ஸ்பாக்ஸ் வயர்லெஸ் அடாப்டர் கொண்டும் பயன்படுத்தலாம். யுஎஸ்பி டைப் சி போர்ட் கொண்டு ஹெட்செட் சார்ஜ் செய்துகொள்ளலாம்.

    எக்ஸ்பாக்ஸ் வயர்லெஸ் ஹெட்செட் 15 மணி நேர பேக்கப் வழங்கும் பேட்டரி கொண்டுள்ளது. இதனை 30 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் நான்கு மணி நேரத்திற்கான பேக்கப் பெற முடியும். முழுமையாக சார்ஜ் செய்ய மூன்று மணி நேரங்கள் ஆகும். இதன் விலை 99 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 7300 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
    ஒப்போ நிறுவனம் புதுவித செல்பி கேமரா அமைப்பை பயன்படுத்துவதற்கான காப்புரிமையை பெற்று இருக்கிறது.


    ஒப்போ நிறுவனம் வித்தியாசமான ஸ்மார்ட்போன் டிசைன் மற்றும் அம்சங்களை உருவாக்குவதற்கான பணிகளில் துவக்கம் முதலே ஈடுபட்டு வருகிறது. முன்னதாக ஒப்போ நிறுவனம் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை உருவாக்க ஒப்போ காப்புரிமைகளை பெற்று இருந்தது. 

    தற்சமயம் ஸ்லைடிங் செல்பி கேமராவிற்கான காப்புரிமையை ஒப்போ பெற்று இருக்கிறது. புதுவித செல்பி கேமராவிற்கான காப்புரிமையை பெற ஒப்போ நிறுவனம் சர்வதேச காப்புரிமை அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தது. 33 பக்கங்கள் அடங்கிய விண்ணப்பத்தில் செல்பி கேமரா தொழில்நுட்பம் எவ்வாறு இயங்கும் என்பதை ஒப்போ விளக்கி உள்ளது. 

     ஒப்போ ஸ்மார்ட்போன்

    அதன்படி ஸ்லைடிங் செல்பி கேமரா கொண்டு வெவ்வேறு கோணங்களில் புகைப்படங்களை எடுக்க முடியும் என ஒப்போ தெரிவித்து இருக்கிறது. காப்புரிமை விவரங்களின்படி இந்த அம்சம் கொண்ட ஸ்மார்ட்போனில் சிறிய மோட்டார் பொருத்தப்படும் இது கேமராவை ஒரு இடத்தில் இருந்து ஸ்லைடு செய்யும். 

    இந்த மோட்டார், தற்போதைய பாப்-ரக செல்பி கேமராக்களை போன்றே, பயனர் ஸ்மார்ட்போனில் செல்பி கேமரா அம்சத்தை இயக்கினால் மட்டுமே செயல்படும் வகையில் உருவாக்கப்படுகிறது. தற்சமயம் காப்புரிமை நிலையில் இருக்கும் புது அம்சம் வர்த்தக ரீதியிலான ஸ்மார்ட்போன்களில் வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
    ரியல்மி நிறுவனத்தின் புதிய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    ரியல்மி நிறுவனம் தனது ரியல்மி ஜிடி ஸ்மார்ட்போனை மார்ச் 4 ஆம் தேதி சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்வதாக அறிவித்து உள்ளது. இது அந்நிறுவனம் ரேஸ் எனும் குறியீட்டு பெயரில் உருவாக்கி வந்த ஸ்மார்ட்போன் ஆகும். புதிய ரியல்மி ஜிடி ஸ்மார்ட்போன் அந்நிறுவனத்தின் புதிய பிளாக்ஷிப் மாடல் ஆகும். 

    புதிய ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் கொண்டிருக்கும் என ரியல்மி அறிவித்து இருக்கிறது. புதிய ரியல்மி ஜிடி ஸ்மார்ட்போன் இளம் தலைமுறையின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையிலான அனுபவத்தை வழங்கும் என்றும் தெரிவித்து உள்ளது.

     ரியல்மி ஜிடி

    ரியல்மி ஜிடி மாடல் ஜிடி ஸ்போர்ட்ஸ் கார்களை தழுவிய கான்செப்ட் கொண்டுள்ளது. ஸ்போர்ட்ஸ் கார்கள் அதிவேகமாக நீண்ட தூரம் பயணிக்கும் வகையில் அதிக செயல்திறன் மற்றும் நம்பத்தகுந்த அம்சங்களை வழங்கும். ரியல்மி ஜிடி பிளாக்ஷிப் மாடல் இளம் பயனர்களை கவரும் அம்சங்களை கொண்டிருக்கிறது. 

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின்படி ரியல்மி ஜிடி ஸ்மார்ட்போன் அதிக ரிப்ரெஷ் ரேட் கொண்ட பன்ச் ஹோல் AMOLED டிஸ்ப்ளே, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், பின்புறம் ஜிடி பிராண்டிங் கொண்டிருக்கும் என கூறப்பட்டு உள்ளது. இத்துடன் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, ரியல்மி யுஐ 2.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ், 64 எம்பி மூன்று பிரைமரி கேமரா வழங்கப்படலாம்.
    ×