என் மலர்
தொழில்நுட்பம்

விவோ ஸ்மார்ட்போன்
இரண்டு மாதங்களில் 11 புது ஸ்மார்ட்போன்களை வெளியிட விவோ திட்டம்
விவோ நிறுவனம் இந்திய சந்தையில் ஏப்ரல் மாதத்திற்குள் 11 புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
விவோ நிறுவனம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் 11 புதிய ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முந்தைய தகவல்களில் விவோ எக்ஸ்50 ப்ரோ பிளஸ் மற்றும் எக்ஸ்60 சீரிஸ் விரைவில் வெளியாகலாம் என கூறப்பட்டு இருந்தது.
இந்நிலையில், இரண்டு விவோ பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்களுடன் குறைந்த விலை ஸ்மார்ட்போன்களும் அறிமுகம் செய்யப்படலாம் என தற்போதைய தகவல்களில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. பிளாக்ஷிப் மாடல்களுடன் விவோ வி21 சீரிஸ், விவோ எஸ்9 5ஜி உள்ளிட்டவையும் அறிமுகம் செய்யப்படலாம்.

விவோ வி21 சீரிஸ் மற்றும் விவோ எஸ்9 5ஜி ஸ்மார்ட்போன்கள் முதலில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. இதில் விவோ எஸ்9 5ஜி ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 1100 பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. விவோ 21 ப்ரோ ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 765ஜி பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
இவைதவிர விவோ வி21, விவோ 21இ உள்ளிட்டவை 4ஜி மாடல்களாக இருக்கும் என்றும் இவற்றின் விலை 5ஜி மாடல்களை விட குறைவாக நிர்ணயம் செய்யப்படும். இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களில் விவோ வி21இ, வி21 ப்ரோ, எஸ்9 5ஜி, எக்ஸ்50 ப்ரோ பிளஸ், எக்ஸ்60 மற்றும் எக்ஸ்60 ப்ரோ போன்ற மாடல்கள் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம்.
Next Story






