என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    • ஐகூ நிறுவனம் அடுத்த தலைமுறை பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • புதிய ஐகூ 11 சீரிசில் மொத்தம் இரு மாடல்கள் அறிமுகம் செய்யப்படும் என இதுவரை வெளியான தகவல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    ஐகூ நிறுவனம் புதிய பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. புது ஸ்மார்ட்போன்கள் ஐகூ 11 சீரிஸ் ஆகும். இவற்றில் ஐகூ 11 மற்றும் ஐகூ 11 ப்ரோ என இரு மாடல்கள் இடம்பெற்று இருக்கும் என கூறப்படுகிறது. இரு ஸ்மார்ட்போன்களும் அடுத்த ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம். முன்னதாக ஐகூ 11 ப்ரோ அம்சங்கள் இணையத்தில் லீக் ஆகி இருந்தது.

    இந்த நிலையில், ஐகூ 11 அம்சங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. அதன் படி புதிய ஐகூ 11 மாடலில் 6.78 இன்ச் E6 AMOLED பேனல், 144Hz ரிப்ரெஷ் ரேட், 2K ரெசல்யூஷன், குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் வழங்கப்பட இருக்கிறது. இது தற்போதைய ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸரை விட மேம்பட்ட திறன் கொண்டிருக்கிறது. இந்த சிப்செட் உடன் 8 ஜிபி மற்றும் 12 ஜிபி என இருவித ரேம் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது.

    மெமரியை பொருத்தவரை 128 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி ஆப்ஷன்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் 50MP பிரைமரி கேமரா, 13MP அல்ட்ரா வைடு லென்ஸ், 12MP டெலிபோட்டோ கேமரா, 16MP செல்பி கேமரா வழங்கப்படுகிறது. புதிய ஐகூ 11 ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

    இத்துடன் 120 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. புதிய ஐகூ 11 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 சார்ந்து உருவாக்கப்பட்ட ஒரிஜின் ஒஎஸ் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் கேமரா ஹார்டுவேரில் மாற்றங்கள் செய்யப்படாது என்ற போதிலும், இவற்றின் செயல்திறன் மேம்பட்டு இருக்கும் என தெரிகிறது.

    • ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்திய சந்தையில் 5ஜி சேவைகளை வெளியிடும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • முன்னதாக நாட்டின் நான்கு நகரங்களில் ஜியோ 5ஜி பீட்டா டிரையல் துவங்கி நடைபெற்று வந்தது.

    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சென்னையில் 5ஜி சேவைகளை வெளியிட்டு உள்ளது. முன்னதாக மும்பை, டெல்லி, கொல்கத்தா மற்றும் வாரனாசி என நான்கு நகரங்களில் 5ஜி பீட்டா டிரையல் துவங்கப்பட்டது. தற்போது இன்வைட் செய்யப்பட்ட ஜியோ பயனர்கள் சென்னையில் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை அனுபவிக்க முடியும்.

    இத்துடன் 5ஜி சார்ந்து இயங்கும் வைபை சேவைகளும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சேவைகள் நத்வாரா மற்றும் ராஜஸ்தானில் துவங்கப்பட்டு இருக்கிறது. இந்த சேவைகள் கல்வி நிறுவனங்கள், ஆன்மீக தளங்கள், ரெயில்வே நிலையங்கள், பேருந்து நிலையங்கள், வர்த்தக மையங்கள் என மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் சீராக கிடைக்கும்.

    ஜியோ வெல்கம் சலுகையின் கீழ் பயனர்கள் இந்த சேவையை தற்போது இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். 5ஜி வைபை சேவைகள் ஜியோ சேவையை பயன்படுத்தாத பயனர்களுக்கும் கிடைக்கும். இதன் மூலம் அதிவேக இணைய சேவையை பயன்படுத்திய பிறகு ஜியோ சேவையில் இணைந்து கொள்ளலாம் என ரிலையன்ஸ் ஜியோ தெரிவித்து இருக்கிறது.

    "ஏற்கனவே குறிப்பிட்டதை போன்று 5ஜி சேவை தேர்வு செய்யப்பட்ட சிலருக்கோ அல்லது பெரும் நகரங்களில் வசிப்போருக்கு மட்டும் பிரத்யேகமானதாக இருக்கக் கூடாது. இந்த சேவை ஒவ்வொரு குடிமகனுக்கும், ஒவ்வொரு வீடு மற்றும் வியாபாரத்திலும் இந்தியா முழுக்க கிடைக்க வேண்டும். ஒவ்வொரு இந்தியருக்கும் ஜியோட்ரூ5ஜி வழங்குவதற்கான பயணம் தான் இது," என ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் லிமிடெட் நிறுவன தலைவர் ஆகாஷ் எம் அம்பானி தெரிவித்தார்.

    • ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் செப்டம்பர் மாதம் வரையிலான காலாண்டின் வருவாய் அறிக்கையை வெளியிட்டு உள்ளது.
    • இந்திய டெலிகாம் சந்தையில் ஜியோ 5ஜி சேவைகளை வெளியிடும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

    இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோவின் வருடாந்திர லாபம் 28 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. செப்டம்பர் மாதம் வரையிலான காலாண்டில் ஜியோ நிறுவனம் ரூ. 4 ஆயிரத்து 518 கோடி லாபம் ஈட்டியது. புதிய வாடிக்கையாளர்கள் இணைந்தது மற்றும் வாடிக்கையாளரிடம் இருந்து கிடைக்கும் சராசரி வருவாய் அதிகரித்து உள்ளிட்டவை லாபம் அதிகரிக்க காரணங்களாக கூறப்படுகிறது.

    கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் ஜியோ லாபம் ரூ. 3 ஆயிரத்து 528 கோடியாக இருந்தது. ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் மூலம் கிடைக்கும் லாபம் 20.2 சதவீதம் அதிகரித்து ரூ. 22 ஆயிரத்து 521 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டு இது ரூ. 18 ஆயிரத்து 735 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

    நாடு முழுக்க 5ஜி சேவைகளை வெளியிடும் பணிகளில் ரிலையன்ஸ் ஜியோ மும்முரம் காட்டி வரும் நிலையில், இரண்டாவது காலாண்டு வருவாய் அறிக்கை வெளியிடப்பட்டு இருக்கிறது. புதிய தலைமுறை தொழில்நுட்பம் அதிவேக இணைய வசதி, சீரான இணைப்பு கொண்டிருக்கும். உலகளவில் இரண்டாவது பெரிய ஸ்மார்ட்போன் சந்தையாக இந்தியா விளங்குகிறது. முதலிடத்தில் சீனா இருக்கிறது.

    ஜியோ பிளாட்பார்ம்ஸ் லாபம் 27 சதவீதம் அதிகரித்து ரூ. 4 ஆயிரத்து 729 கோடியாக அதிகரித்து இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலாண்டு வாக்கில் ஜியோ பிளாட்பார்ம்ஸ் லாபம் ரூ. 3 ஆயிரத்து 728 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஜியோ பிளாட்பார்ம்ஸ் வருவாய் 22.7 சதவீதம் வளர்ச்சி பெற்று ரூ. 24 ஆயிரத்து 275 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டு இது ரூ. 19 ஆயிரத்து 777 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் முதல் லேப்டாப் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
    • முன்னதாக இந்த லேப்டாப் விற்பனை அரசு ஊழியர்களுக்காக மட்டும் GeM வலைதளத்தில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

    இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ, தனது முதல் லேப்டாப் மாடல் விற்பனையை துவங்கி இருக்கிறது. 4ஜி கனெக்டிவிட்டி கொண்ட ஜியோபுக் லேப்டாப்பை தற்போது அனைவரும் வாங்கிட முடியும். இந்தியாவில் ஜியோபோன் பெற்ற வெற்றி ஜியோபுக் லேப்டாப்பிலும் பிரதிபலிக்கச் செய்யும் வகையில் இதன் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    புதிய ஜியோபுக் மாடலில் 11.6 இன்ச் 1366x768 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட HD டிஸ்ப்ளே வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் குவால்காம் நிறுவனத்தின் 64 பிட், 2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த சிபியு உடன் 2 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த லேப்டாப்பில் கூலிங் ஃபேன் எதுவும் பொருத்தப்படவில்லை. இதன் அதிகபட்ச மெமரி 128 ஜிபி ஆகும்.

    இந்த லேப்டாப் 32 ஜிபி மெமரியுடன் கிடைக்கிறது. இத்துடன் ஜியோ ஒஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இது ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் என தெரிகிறது. புதிய ஜியோபுக் மாடலை பல்வேறு இந்திய மொழிகளில் இயக்க முடியும். இத்துடன் ஏராளமான ஜியோ செயலிகள் மற்றும் மைக்ரோசாப்ட் 365 சேவைகள் இந்த லேப்டாப்பில் பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டு உள்ளது.

    இந்திய சந்தையில் புதிய ஜியோபுக் லேப்டாப் ரிலையன்ஸ் டிஜிட்டல் வலைதளத்தில் ரூ. 15 ஆயிரத்து 799 எனும் விலையில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. இந்த தளத்தில் எத்தனை யூனிட்களுக்கான ஸ்டாக் இருப்பில் உள்ளது என்ற விவரங்கள் மர்மமாகவே உள்ளது. மேலும் இந்த லேப்டாப் விற்பனை எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.

    • ஆப்பிள் நிறுவனம் முற்றிலும் புதிய ஐபோன் SE மாடலை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
    • புதிய ஐபோன் SE பற்றிய விவரங்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகின்றன.

    ஆப்பிள் நிறுவனம் முற்றிலும் புதிய ஐபேட் ப்ரோ, ஐபேட் (10th Gen) போன்ற சாதனங்களை சமீபத்தில் அறிமுகம செய்தது. இதைத் தொடர்ந்து ஆப்பிள் புதிய ஐபோன் SE மாடலை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. புது ஐபோன் SE மாடல் அறிமுகம் பற்றியும், அதில் வழங்கப்பட இருக்கும் அம்சங்கள் பற்றியும் ஏற்கனவே பலமுறை தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

    இந்த நிலையில், புதிய ஐபோன் SE மாடல் டிசைன் பற்றிய விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி புதிய ஐபோன் SE 4 மாடல் தோற்றத்தின் அடிப்படையில் பிரீமியம் மிட்-ரேன்ஜ் பிரிவில் கடும் போட்டியை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. புதிய ஐபோன் SE 4 டிசைன் பற்றிய புது தகவல்கள் மற்றும் ரெண்டர்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. அதில் புது ஐபோன் முந்தைய மாடலுடன் ஒப்பிடும் போது அதிக மாற்றங்களை கொண்டிகருக்கும் என தெரியவந்துள்ளது.

    ஐபோன் SE 4 மாடல்: ஸ்டார்லைட், மிட்நைட் மற்றும் பிராடக்ட் ரெட் என மூன்று விதமான நிறங்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. குறிப்பாக புதிய ஐபோன் SE மாடல் தோற்றத்தில் ஐபோன் XR போன்று காட்சியளிக்கிறது. இதுதவிர புதிய ஐபோன் SE மாடலில் 6.1 இன்ச் நாட்ச் வைத்த டிஸ்ப்ளே, ஒற்றை பிரைமரி கேமரா, பேஸ் ஐடி உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    இந்திய சந்தையில் புதிய ஐபோன் SE சீரிஸ் அமோக வரவேற்பை பெற்று இருக்கிறது. சமீபத்தில் ஐபோன் SE 3 விலை இந்தியாவில் சமீபத்தில் உயர்த்தப்பட்டது. அதன்படி ஐபோன் SE 3 விலை முன்பை விட ரூ. 6 ஆயிரம் அதிகரிக்கப்பட்டு தற்போது ரூ. 49 ஆயிரத்து 990 என மாறி இருக்கிறது. புதிய ஐபோன் SE 4 விலை பிரீமியம் மிட்-ரேன்ஜ் பிரிவில் அறிமுகம் செய்யப்படும்.

    Photo Courtesy: Jon Prosser x Ian Zelbo

    • மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய கான்செப்ட் போன் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது.
    • முன்னதாக எல்ஜி நிறுவனம் செய்ய நினைத்ததை மோட்டோரோலா தற்போது சாத்தியப்படுத்தி இருக்கிறது.

    எல்ஜி நிறுவனம் உலகின் முதல் ரோலபில் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வந்தது. எனினும், தொடர் இழப்பு காரணமாக ஸ்மார்ட்போன் சந்தையில் இருந்து கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் எல்ஜி விலகிக் கொள்வதாக அறிவித்தது. கடந்த மாதம் 6.8 இன்ச் ஸ்கிரீனில் இருந்து 7.4 இன்ச் அளவுக்கு நீளும் வகையில் உருவாக்கப்பட்ட சாதனத்தின் வீடியோவை கொரிய நபர் ஒருவர் யூடியூபில் வெளியிட்டு இருந்தார்.

    சாம்சங் நிறுவனமும் ரோலபில் ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த நிலையில், மோட்டோரோலா நிறுவனம் தனது ரோலபில் போன் கான்செப்ட்-ஐ அறிமுகம் செய்து இருக்கிறது. "லெனோவோ டெக் வொர்ல்டு" நிகழ்வில் மோட்டோரோலா இந்த சாதனத்தை அறிமுகம் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ரோலபில் கான்செப்ட் போன் 4 இன்ச்-இல் இருந்து 6.5 இன்ச் வரை நீளும் ஸ்கிரீன் கொண்டிருக்கிறது.

    மோட்டோரோலா அறிமுகம் செய்து இருக்கும் ரோலபில் கான்செப்ட் ஏற்கனவே மற்ற நிறுவனங்கள் அறிமுகம் செய்த ரோலபில் மாடல்களை விட வித்தியாசமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. வழக்கமான ரோலபில் ஸ்மார்ட்போன்களின் ரோலபில் ஸ்கிரீன் அகல வாக்கில் நீண்டு டேப்லெட் அளவு டிஸ்ப்ளே போன்று மாறும் வகையில் உருவாக்கப்பட்டு இருந்தது. எனினும், மோட்டோரோலா கான்செப்ட் ரோலபில் போன் சிறிய ஸ்கிரீன் கொண்ட சாதனமாக இருந்து நீள வாக்கில் நீண்டு சற்றே பெரிய டிஸ்ப்ளேவாக மாறுகிறது.

    இந்த ரோலபில் போன் பொது மக்கள் கைகளுக்கு கிடைக்க மேலும் பல ஆண்டுகள் ஆகும் என டிஸ்ப்ளே செயின் கண்சல்டண்ட் தலைமை செயல் அதிகாரி ரோஸ் யங் தெரிவித்து உள்ளனர். எனினும், தற்போது விற்பனைக்கு கிடைக்கும் கேலக்ஸி Z போல்டு 4 மாடலுடன் ஒப்பிடும் போது புதிய ரோலபில் கான்செப்ட் அனைவருக்கும் பிடித்தமானதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

    முன்னதாக மோட்டோரோலா நிறுவனம் தனது மூன்றாம் தலைமுறை ரேசர் கிளாம்ஷெல் ரக மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. எனினும், இந்த மாடல் சீன சந்தையில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. விரைவில் இந்த மாடல் ஐரோப்பிய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. புதிய ரேசர் போல்டபில் போன் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் கொண்டிருக்கிறது.

    • இன்ஸ்டாகிராம் செயலியில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட புது அம்சம் தற்போது இந்தியாவில் வழங்கப்படுகிறது.
    • புது அம்சம் பற்றிய தகவல்கள் இன்ஸ்டாகிராம் அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் இடம்பெற்று இருக்கிறது.

    மெட்டா நிறுவனத்தின் கீழ் இயங்கும் இன்ஸ்டாகிராம் இந்தியாவில் தனது Age Verification எனும் வயதை உறுதிப்படுத்தும் அம்சத்தை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த அம்சம் பயனர்களின் வயது 18 அல்லது அதற்கும் அதிகமாக உள்ளதா என்பதை சரிபார்க்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. தளத்தில் அனைவரின் பாதுகாப்பை உறுதி செய்வதை இன்ஸ்டாகிராம் குறிக்கோளாக வைத்துள்ளது. அந்த வகையில் புது அம்சமும் இதை பரைசாற்றும் வகையிலேயே வழங்கப்பட்டு இருக்கிறது.

    முன்னதாக இந்த ஆண்டு துவக்கத்தில் இந்த அம்சம் அமெரிக்காவில் உள்ள பயனர்களிடம் சோதனை செய்யப்பட்டது. தற்போது இந்த அம்சம் இந்தியா மற்றும் பிரேசில் நாடுகளில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இறுதியில் வயதை உறுதிப்படுத்தும் அம்சம் பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய யூனியனில் வழங்கப்படும் என இன்ஸ்டாகிராம் தனது அதிகாரப்பூர்வ வலைதளத்தில் குறிப்பிட்டு உள்ளது.

    தளத்தில் சில அம்சங்களை மேம்படுத்தும் வகையில், சோஷியல் வவுச்சிங் நீக்கப்படுகிறது. இதுவரை இன்ஸ்டாகிராம் பயனரின் வயதை அறிய மூன்று வழிமுறைகள் வழங்கப்பட்டு இருந்தது. அதில் ஒன்று புகைப்பட சான்றை பதிவேற்றம் செய்வது, நண்பர்களிடம் வயதை உறுதிப்படுத்த கேட்பது மற்றும் செல்பி வீடியோ பதிவு செய்வது உள்ளிட்டவை அடங்கும். தற்போது சோஷியல் வவுச்சிங் நீக்கப்பட்டதால், இரு ஆப்ஷன்களை கொண்டு தான் பயனர் வயதை உறுதிப்படுத்த முடியும்.

    பயனரின் வயது 18 அல்லது அதற்கும் அதிகமானது என்பதை உறுதிப்படுத்த புகைப்பட சான்று அல்லது செல்பி வீடியோ எடுக்க வேண்டும். இதற்காக மெட்டா நிறுவனம் பிரிட்டனை சேர்ந்த யோடி எனும் டிஜிட்டல் சான்று உறுதிப்படுத்தும் சேவை வழங்கும் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. இந்த கூட்டணி மூலம் பயனரின் சான்றுகளை வீடியோ செல்பி வாயிலாக உறுதிப்படுத்த முடியும்.

    • ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்தியாவில் 5ஜி சேவையை வெளியிட நோக்கியா நிறுவனத்துடன் கூட்டணி அமைக்கிறது.
    • இதற்காக நோக்கியா மற்றும் ரிலையன்ஸ் ஜியோ இடையே பல ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது.

    ஆகஸ்ட் மாத வாக்கில் நடத்தப்பட்ட ரிலையன்ஸ் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் சர்வதேச அளவில் நெட்வொர்க் தொழில்நுட்பம் வழங்கும் நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்து இருப்பதாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிவித்து இருந்தது. தற்போது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திற்கு 5ஜி ரேடியோ அக்சஸ் நெட்வொர்க் உபகரணங்களை பல ஆண்டுகள் வழங்குவதற்கான உரிமத்தை வென்று இருப்பதாக நோக்கியா நிறுவனம் அறிவித்து இருக்கிறது.

    இதை அடுத்து இரு நிறுவனங்கள் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. ஒப்பந்தத்தின் படி நோக்கியா நிறுவனம் பேஸ் ஸ்டேஷன்கள், அதிக திறன் கொண்ட 5ஜி MIMO ஆண்டெனா, பல்வேறு ஸ்பெக்ட்ரம் பேண்ட்களை சப்போர்ட் செய்யும் ரிமோட் ரேடியோ ஹெட்கள், நெட்வொர்க் மென்பொருள் உள்ளிட்டவைகளுக்கான உபகரணங்களை நோக்கியா வினியோகம் செய்ய இருக்கிறது.

    ரிலையன்ஸ் ஜியோ மட்டுமின்றி ஏர்டெல் நிறுவனத்திற்கும் நோக்கியா தனது ஜி உபகரணங்களை வழங்க இருக்கிறது. முன்னதாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது 5ஜி சேவைகளின் பீட்டா சோதனையை- மும்பை, டெல்லி, கொல்கத்தா மற்றும் வாரனாசி என நான்கு நகரங்களில் துவங்கி இருக்கிறது. வரும் வாரங்களில் இந்த சேவை மேலும் அதிக நகரங்களுக்கு நீட்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    டிசம்பர் 2023-க்குள் நாட்டின் ஒவ்வொரு நகரங்களிலும் 5ஜி சேவையை வழங்க இலக்கு நிர்ணயம் செய்து இருப்பதாக ரிலையன்ஸ் குழும ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் முகேஷ் அம்பானி தெரிவித்து இருந்தார். ரிலையன்ஸ் ஜியோ 5ஜி ஸ்டாண்ட்-அலோன் நெட்வொர்க்-ஐ வழங்க திட்டமிட்டு இருப்பதாக நோக்கியா தெரிவித்து இருக்கிறது. இதன் மூலம் ரிலையன்ஸ் ஜியோ மேம்பட்ட 5ஜி சேவைகளை வழங்க முடியும்.

    • சாம்சங் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
    • புது சாம்சங் ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் விற்பனைக்கு பட்டியலிடப்பட்டு இருக்கிறது.

    சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் புது ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் விற்பனைக்கு பட்டியலிடப்பட்டு உள்ளது. இகு சாம்சங் நிறுவனம் கடந்த ஆண்டு அக்டோபர் மாத வாக்கில் அறிமுகம் செய்த கேலக்ஸி M31 பிரைம் எடிஷன் ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷன் அறிமுகமாகி இருக்கிறது.

    பெருக்கு ஏற்றார் போல் கேலக்ஸி M32 பிரைம் எடிஷன் அம்சங்கள் கேலக்ஸி M32 ஸ்மார்ட்போனில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது. எனினும், இத்துடன் மூன்று மாதங்களுக்கான பிரைம் சந்தா வழங்கப்படுகிறது. அமேசான் வலைதள விவரங்களின் படி கேலக்ஸி M32 பிரைம் எடிஷன் ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மற்றும் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    இவற்றின் விலை முறையே ரூ. 11 ஆயிரத்து 499 மற்றும் ரூ. 13 ஆயிரத்து 499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பிரைம் பிளாக் மற்றும் புளூ என இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது. அறிமுக சலுகையாக சாம்சங் கேலக்ஸி M32 பிரைம் எடிஷன் வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது ரூ. 1,500 வரை தள்ளுபடி பெறலாம். இதன் மூலம் கேலக்ஸி M32 பிரைம் எடிஷன் விலை ரூ. 9 ஆயிரத்து 999 என மாறி விடும்.

    சாம்சங் கேலக்ஸி M32 பிரைம் எடிஷன் அம்சங்கள்:

    6.4 இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட்

    கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு

    மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர்

    4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி

    6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ் சார்ந்த ஒன் யுஐ 4.1

    64MP பிரைமரி கேமரா

    8MP அல்ட்ரா வைடு கேமரா

    2MP மேக்ரோ லென்ஸ்

    2MP டெப்த் சென்சார்

    20MP செல்பி கேமரா

    6000 எம்ஏஹெச் பேட்டரி

    18 வாட் பாஸ்ட் சார்ஜிங்

    • ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்களுடன் சார்ஜர் வழங்குவதை நிறுத்தி சில ஆண்டுகள் கழிந்து விட்டது.
    • பிரேசில் நாட்டில் ஆப்பிள் நிறுவனத்திற்கு எதிரான வழக்கு நடைபெற்று வந்த நிலையில், தற்போது வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    ஐபோன்களுடன் சார்ஜர் வழங்காமல் விற்பனை செய்த விவகாரத்தில் ஆப்பிள் நிறுவனத்திற்கு பிரேசில் நாட்டு நித்ததுறை சார்பில் 2.34 மில்லியன் டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டது. கடந்த மாதம் இந்த சம்பவம் அரங்கேறிய நிலையில், சார்ஜர்கள் இன்றி ஐபோன் விற்பனையை நடத்தக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், ஆப்பிள் நிறுவனத்திற்கு மற்றொரு பெரும் தொகை அபராதமாக விதிக்கப்பட்டு இருக்கிறது.

    இது குறித்து வெளியாகி இருக்கும் தகவல்களின் படி பிரேசில் நாட்டின் சௌ பௌலோ நீதிமன்றம் ஆப்பிள் நிறுவனத்திற்கு 100 மில்லியன் ரியாக்கள், இந்திய மதிப்பில் ரூ. 1,56,59,47,700 அபராதம் விதித்துள்ளது. மேலும் பிரேசில் நாட்டில் விற்பனை செய்யப்படும் ஐபோன்களுடன் கட்டாயம் சார்ஜர் வழங்க வேண்டும் என உத்தரவிட்டு இருக்கிறது.

    பிரேசில் நாட்டில் ஐபோன் 12 மற்றும் ஐபோன் 13 வாங்கிய அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் சார்ஜர் வழங்கப்பட வேண்டும் என ஆப்பிள் நிறுவனத்திற்கு நீதிபதி கரமுரு அபோன்சோ பிரான்சிஸ்கோ உத்தரவிட்டுள்ளார். இந்த தீர்ப்பு இறுதியானது இல்லை என்பதால், இதில் மேல்முறையீடு செய்ய முடியும்.

    2020 ஆண்டு வாக்கில் ஐபோன் 12 வெளியீட்டில் இருந்து ஐபோன்களுடன் சார்ஜர் வழங்குவதை ஆப்பிள் நிறுத்திவிட்டது. ஆப்பிள் நடவடிக்கையை தொடர்ந்து சாம்சங் மற்றும் கூகுள் நிறுவனங்களும் இதே போன்று பிரீமியம் ஸ்மார்ட்போன் மாடல்களுடன் சார்ஜர் வழங்குவதை நிறுத்தி உள்ளன.

    • வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்படும் புது அம்சம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
    • புது அம்சம் செயலியின் பீட்டா வெர்ஷனில் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

    வாட்ஸ்அப் செயலியில் ஏற்கனவே அனுப்பிய குறுந்தகவல்களை எடிட் செய்யும் வசதி வழங்கப்பட இருக்கிறது. இதற்கான சோதனை வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனில் நடைபெற்று வருகிறது. அதன்படி எடிட் செய்யப்படும் மெசேஜ்களில் எடிட் செய்யப்பட்டதை குறிக்கும் லேபல் இடம்பெற்று இருக்கிறது. மேலும் குறுந்தகவலை அனுப்பிய 15 நிமிடங்கள் வரை எடிட் செய்ய முடியும்.

    "எடிட் மெசேஜ்" அம்சம் கொண்டு அனுப்பிய குறுந்தகவலை குறிப்பிட்ட காலக்கட்டம் வரை எடிட் செய்ய முடியும். இந்த அம்சம் "டெலிட் மெசேஜ்" அம்சத்திற்கு மாற்றாக உருவாக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. மேலும் இந்த அம்சத்தை பயன்படுத்தி எடிட் செய்யப்படும் குறுந்தகவலில் எடிட் செய்யப்பட்டதை குறிக்கும் லேபல் இடம்பெற்று இருக்கிறது.

    இந்த அம்சம் தற்போது உருவாக்கும் பணிகளில் இருப்பதால் செயலியின் ஸ்டேபில் வெர்ஷனில் எப்போது வழங்கப்படும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. முன்னதாக வாட்ஸ்அப் செயலியின் பிஸ்னஸ் வெர்ஷனில் தேர்வு செய்யப்பட்ட பயனர்களுக்கு மட்டும் சந்தா முறையை வழங்க துவங்கியது. இந்த அம்சம் வாட்ஸ்அப் பிஸ்னஸ் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் வெர்ஷனில் வழங்கப்பட்டு வருகிறது.

    Photo Courtesy: WABetaInfo

    • ப்ளிப்கார்ட் வலைதளத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு சலுகை விற்பனை நடைபெற்று வருகிறது.
    • சிறப்பு விற்பனையில் ஏராளமான சாதனங்களுக்கு அசத்தல் சலுகை மற்றும் பலன்கள் வழங்கப்படுகிறது.

    ப்ளிப்கார்ட் வலைதளத்தில் பிக் தீபாவளி சிறப்பு விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த விற்பனையில் ஸ்மார்ட்போன், மின்னணு சாதனங்கள் என ஏராளமான பொருட்களுக்கு சிறப்பு சலுகை மற்றும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதில் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்துவோருக்கு 10 சதவீதம் வரை உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் எக்சேன்ஜ் சலுகையும் வழங்கப்படுகிறது.

    ஐபோன் 14 சீரிஸ் வெளியீட்டை தொடர்ந்து ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 13 விலையை குறைத்தது. ஆப்பிள் இந்தியா ஸ்டோர் வலைதளத்தின் படி ஐபோன் 13 விலை தற்போது ரூ. 69 ஆயிரத்து 990 என துவங்குகிறது. இந்த நிலையில், ஐபோன் 13 விலை மூன்றாம் தரப்பு விற்பனையாளர்களிடம் மேலும் குறைந்துள்ளது. அந்த வகையில் ப்ளிப்கார்ட் தளத்தில் ஐபோன் 13 விலை ரூ. 10 ஆயிரம் குறைக்கப்பட்டு இருக்கிறது.

    இதன் காரணமாக ஐபோன் 13 விலை தற்போது ரூ. 59 ஆயிரத்து 990 என துவங்குகிறது. இத்துடன் பாரத ஸ்டேட் வங்கி கார்டுகளுக்கு ரூ. 1250 உடனடி தள்ளுபடி, ரூ. 16 ஆயிரத்து 900 வரை எக்சேன்ஜ் சலுகை வழங்கப்படுகிறது. இதன் காரணமாக ஐபோன் 13 விலை ப்ளிப்கார்ட் தளத்தில் ரூ. 42 ஆயிரம் பட்ஜெட்டில் கிடைக்கிறது. இந்த விலை தள்ளுபடி மற்றும் எக்சேன்ஜ் சலுகைகளை சேர்த்த பின் கணக்கிடப்பட்டுள்ளது.

    இந்தியாவில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் 14 சீரிஸ் விலை ரூ. 79 ஆயிரத்து 990 என துவங்குகிறது. இதில் 6.1 இன்ச் லிக்விட் ரெட்டினா டிஸ்ப்ளே, ஏ15 பயோனிக் சிப்செட், ஐஒஎஸ் 16, இரண்டு கேமரா சென்சார்கள், பெரிய நாட்ச் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

    ×