search icon
என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    16 இன்ச் ஐபேட் உருவாக்கும் ஆப்பிள்
    X

    16 இன்ச் ஐபேட் உருவாக்கும் ஆப்பிள்

    • ஆப்பிள் நிறுவனம் உருவாக்கி வரும் புது ஐபேட் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
    • சமீபத்தில் தான் ஆப்பிள் புதிய ஐபேட் ப்ரோ மற்றும் ஐபேட் மாடல்களை அறிமுகம் செய்து இருந்தது.

    ஆப்பிள் நிறுவனம் 16 இன்ச் அளவில் பெரிய ஐபேட் மாடலை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. புது ஐபேட் மாடல் அடுத்த ஆண்டின் நான்காவது காலாண்டு வாக்கில் அறிமுகாகும் என தெரிகிறது. இது தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் 12.9 இன்ச் ஐபேட் ப்ரோ மாடலை விட அளவில் பெரியதாக இருக்கும். புதிய டேப்லெட் மாடல் ஐபேட் மற்றும் மேக்புக் மாடல்களிடையே நிலைநிறுத்தப்படும்.

    சமீபத்தில் தான் ஐபேட் (10th Gen), M2 பிராசஸர் கொண்ட ஐபேட் ப்ரோ மாடல்களை ஆப்பிள் அறிமுகம் செய்து இருந்தது. புதிய ஐபேட் மாடல் அடுத்த ஆண்டின் நான்காவது காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய தகவல்களின் படி 16 இன்ச் ஐபேட் மாடல் அறிமுகமாகும் பட்சத்தில் ஆப்பிள் இதுவரை உற்பத்தி செய்ததில் பெரிய டேப்லெட் மாடலாக இது அமையும். கிராபிக் டிசைனர்கள் மற்றும் கலைஞர்களுக்கு பயனுள்ள சாதனமாக 16 இன்ச் ஐபேட் இருக்கும்.

    புதிய 16 இன்ச் ஐபேட் மாடலை ஆப்பிள் எவ்வாறு தனது சாதனங்களுடன் நிலைநிறுத்தும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. புதிய மாடல் ஐபேட் ப்ரோ என்று அழைக்கப்படுமா அல்லது ஐபேட் என்றே அழைக்கப்படுமா என்பதும் மர்மமாகவே இருக்கிறது. ஆப்பிள் உருவாக்கும் பெரிய ஐபேட் மாடல் டேப்லெட் மற்றும் லேப்டாப் மாடல்கள் இடையே உள்ள இடைவெளியை மேலும் சிறியதாக்கும்.

    Next Story
    ×