search icon
என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    மோசடி செய்ய 28 ஆயிரம் மொபைல் போன் நம்பர்கள் - தட்டித்தூக்கி அதிரடி காட்டிய போலீஸ்!
    X

    மோசடி செய்ய 28 ஆயிரம் மொபைல் போன் நம்பர்கள் - தட்டித்தூக்கி அதிரடி காட்டிய போலீஸ்!

    • டிஜிட்டல் பண பரிவர்த்தனை மற்றும் இணையவழி சேவைகள் அதிகரித்ததில் இருந்து சைபர்குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
    • சைபர் குற்றங்களை தடுக்கவும், மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் அரசாங்கம் மற்றும் காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

    சைபர் குற்ற செயல்களுக்காக பயன்படுத்தப்பட்டு வந்த சுமார் 28 ஆயிரம் மொபைல் நம்பர்களை கண்டறிந்துள்ளதாக ஹரியானா காவல் துறையை சேர்ந்த மூத்த அதிகாரி தெரிவித்து இருக்கிறார். சைபர்கிரைம் உதவி எண் 1930 மற்றும் சைபர் குற்றங்கள் பற்றி தகவல் தெரிவிக்கும் அதிகாரப்பூர்வ வலைதளம் மூலம் 27 ஆயிரத்து 824 மொபைல் போன் நம்பர்கள் கண்டறியப்பட்டதாக கூடுதல் காவல் துறை தலைவர் ஒ பி சிங் தெரிவித்து இருக்கிறார்.

    கண்டறியப்பட்டு இருக்கும் மொபைல் போன் நம்பர்களின் சேவைகள் விரைவில் துண்டிக்கப்பட்டு விடும் என காவல் துறை அதிகாரி தெரிவித்து இருக்கிறார். இந்த நம்பர்கள் சைபர்சேப் போர்டலில் பதிவேற்றம் செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் இந்திய சைபர் கிரைம் மையம் சார்பில் இந்த பாதுகாப்பு தளம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    குருகிராமில் இருந்து 7 ஆயிரத்து 142, பரிதாபாத்தில் இருந்து 3 ஆயிரத்து 896 நம்பர்களும், பஞ்ச்குலாவில் இருந்து 1420. சோனிபட்டில் இருந்து 1408, ரோடக்கில் இருந்து 1045, ஹிசரில் இருந்து 1,228, அம்பாலாவில் இருந்து 1,101 மொபைல் போன் நம்பர்கள் கண்டறியப்பட்டன என்று ஒ பி சிங் தெரிவித்துள்ளார். மொபைல் போன் நம்பர்கள் தவறாக பயன்படுத்தப்படுவதாக மாவட்ட சைபர்கிரைம் அலுவலகங்களுக்கு தகவல் கொடுக்குப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை 1930 உதவி எண், 29 சைபர் காவல் நிலையங்கள், 309 சைபர் உதவி மையங்களில் இருந்து 47 ஆயிரத்திற்கும் அதிகமான குற்றச்சாட்டுகள் பெறப்பட்டுள்ளன. இதுவரை ரூ. 15 கோடிக்கும் அதிகமான பணத்தை காவல் துறை மீட்டுள்ளது என ஒ பி சிங் மேலும் தெரிவித்தார். இந்தியாவில் அக்டோபர் மாதம் தேசிய சைபர் செக்யுரிட்டி மாதமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    Next Story
    ×