search icon
என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    இணையத்தில் லீக் ஆன ஐகூ 11 அம்சங்கள்
    X

    இணையத்தில் லீக் ஆன ஐகூ 11 அம்சங்கள்

    • ஐகூ நிறுவனம் அடுத்த தலைமுறை பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • புதிய ஐகூ 11 சீரிசில் மொத்தம் இரு மாடல்கள் அறிமுகம் செய்யப்படும் என இதுவரை வெளியான தகவல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    ஐகூ நிறுவனம் புதிய பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. புது ஸ்மார்ட்போன்கள் ஐகூ 11 சீரிஸ் ஆகும். இவற்றில் ஐகூ 11 மற்றும் ஐகூ 11 ப்ரோ என இரு மாடல்கள் இடம்பெற்று இருக்கும் என கூறப்படுகிறது. இரு ஸ்மார்ட்போன்களும் அடுத்த ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம். முன்னதாக ஐகூ 11 ப்ரோ அம்சங்கள் இணையத்தில் லீக் ஆகி இருந்தது.

    இந்த நிலையில், ஐகூ 11 அம்சங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. அதன் படி புதிய ஐகூ 11 மாடலில் 6.78 இன்ச் E6 AMOLED பேனல், 144Hz ரிப்ரெஷ் ரேட், 2K ரெசல்யூஷன், குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் வழங்கப்பட இருக்கிறது. இது தற்போதைய ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸரை விட மேம்பட்ட திறன் கொண்டிருக்கிறது. இந்த சிப்செட் உடன் 8 ஜிபி மற்றும் 12 ஜிபி என இருவித ரேம் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது.

    மெமரியை பொருத்தவரை 128 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி ஆப்ஷன்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் 50MP பிரைமரி கேமரா, 13MP அல்ட்ரா வைடு லென்ஸ், 12MP டெலிபோட்டோ கேமரா, 16MP செல்பி கேமரா வழங்கப்படுகிறது. புதிய ஐகூ 11 ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

    இத்துடன் 120 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. புதிய ஐகூ 11 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 சார்ந்து உருவாக்கப்பட்ட ஒரிஜின் ஒஎஸ் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் கேமரா ஹார்டுவேரில் மாற்றங்கள் செய்யப்படாது என்ற போதிலும், இவற்றின் செயல்திறன் மேம்பட்டு இருக்கும் என தெரிகிறது.

    Next Story
    ×