என் மலர்
அறிந்து கொள்ளுங்கள்
- காணாமல் போன மொபைல் போனின் IMEI நம்பர் மற்றும் காவல் துறை அறிக்கைகளை தளத்தில் சமர்பிக்க வேண்டும்.
- தகவல் உறுதிப்படுத்தப்பட்டு, டெலிகாம் சேவை நிறுவனங்கள் மற்றும் சட்டத்துறை நிறுவனங்களுடன் பகிரப்படும்.
மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் சார்பில் சஞ்சர் சாதி (Sanchar Saathi) எனும் முனையம் துவங்கப்பட்டு இருக்கிறது. இதை கொண்டு பயனர்கள் தங்களது மொபைல் போன்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள முடியும். மத்திய தகவல் தொடர்பு, ரெயில்வே மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை மந்திரி அஸ்வினி வைஷ்னவ் இந்த முனையத்தை துவங்கி வைத்தார்.
இதில் பயனர்கள் பதிவு செய்யப்பட்ட இணைப்புகளை சரிபார்ப்பது, தேவையற்ற அல்லது சந்தேகத்திற்குரிய இணைப்புகளை சரிபார்ப்பது, தொலைந்து போன மொபைல் போன்களை பிலாக் செய்வது, IMEI நம்பர்களின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்துவது போன்ற சேவைகளை பெற முடியும்.

சஞ்சர் சாதி முனையத்தின் மிக முக்கிய அங்கம் தான் மத்திய உபகரணங்கள் அடையாள பதிவு (CEIR). இதில் காணாமல் போன மொபைல் போனின் IMEI நம்பர் மற்றும் காவல் துறை வழங்கிய அறிக்கைகளை தளத்தில் சமர்பிக்க வேண்டும். இந்த தளத்தில் பதிவிடப்படும் தகவல் உறுதிப்படுத்தப்பட்டு, டெலிகாம் சேவை நிறுவனங்கள் மற்றும் சட்டத்துறை நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படும்.
இந்த தகவல்கள் முழுமையாக ஆய்வு செய்தபின், திருடப்பட்ட மொபைல் போன்கள் இந்திய நெட்வொர்க்குகளில் இயங்க முடியாத அளவுக்கு மாற்றப்பட்டு விடும். சட்டத் துறை நிறுவனங்கள் திருடப்பட்ட சாதனத்தை டிராக் செய்யும். திருடப்பட்ட சாதனம் மீட்கப்பட்டதும், பயனர்கள் சஞ்சர் சாதி முனையத்தில் வைத்து, அதனை அன்லக் செய்துவிடும்.

திருடப்பட்ட மொபைல் போன்கள் மட்டுமின்றி, தவறான அல்லது ஃபோர்ஜ் செய்யப்பட்ட IMEI கொண்ட சாதனங்கள் பயன்படுத்தப்படுவதை இந்த சிஸ்டம் தடுத்துவிடும். இத்துடன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் "Know Your Mobile" அம்சம் கொண்டு IMEI நம்பர் மூலம் மொபைல் சாதனங்களின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த முடியும்.
திருடுபோன மொபைல் போனை டிராக் அல்லது பிலாக் செய்வது எப்படி?
- சஞ்சர் சாதி CEIR வலைதளம் செல்ல வேண்டும்.
- இனி Block Stolen/Lost Mobile ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
- உங்களின் பெயர், மொபைல் நம்பர், IMEI நம்பர் மற்றும் சாதனத்தின் விவரங்களை பதிவிட வேண்டும். மொபைல் வாங்கியதற்கான இன்வாய்ஸ்-ஐ அப்லோடு செய்ய வேண்டும்.
- நகரம், மாவட்டம், மாநிலம் மற்றும் சாதனம் தொலைந்து போன தேதி உள்ளிட்ட விவரங்களை பதிவிட வேண்டும்.
- மொபைல் நம்பர் ஒடிபி மூலம் விவரங்களை உறுதிப்படுத்த வேண்டும்.
- இனி Submit பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.
- முதற்கட்டமாக டோக்கன் மற்றும் ஸ்மார்ட் கார்டுகளே டிக்கெட்களாக வினியோகம் செய்யப்பட்டு வந்தன.
- பயனர்கள் டெபிட், கிரெடிட் கார்டுகள் அல்லது கூகுள் பே சேவைகளை பயன்படுத்தி பணம் செலுத்தலாம்.
சென்னை மெட்ரோ ரெயில் (சிஎம்ஆர்எல்) சேவையை பயன்படுத்துவோர் இன்று (மே 17) முதல் ரெயில் டிக்கெட்களை வாட்ஸ்அப் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டது. நேஷனல் காமன் மொபிலிட்டி கார்டு அறிமுகம் செய்த இரண்டு மாதங்கள் கழித்து வாட்ஸ்அப் மூலம் இ-டிக்கெட்களை வினியோகம் செய்யும் பணிகளை சிஎம்ஆர்எல் துவங்கி இருக்கிறது.
பயனர்கள் வாட்ஸ்அப் மூலம் சென்னை மெட்ரோ ரெயில் டிக்கெட் எடுக்க மெட்ரோ ரெயில் நிலையங்களில் உள்ள வாட்ஸ்அப் எண்ணிற்கு மெசேஞ்ச் அனுப்ப வேண்டும். இவ்வாறு செய்ததும், அந்த எண்ணில் இருந்து மெட்ரோ ரெயில் நிலைய விவரங்கள் பட்டியலிடப்பட்டு இருக்கும். அதில் செல்ல வேண்டிய ரெயில் நிலையத்தை தேர்வு செய்ய வேண்டும்.

இனி, டிக்கெட்டுக்கான பணம் செலுத்தும் ஆப்ஷன்கள் திரையில் தோன்றும். அதன்படி பயனர்கள் டெபிட், கிரெடிட் கார்டுகள் அல்லது கூகுள் பே போன்ற சேவைகளை பயன்படுத்தி பணம் செலுத்தலாம். புதிய வசதி மூலம் பயனர்கள் அவசர கால பயணத்திற்கோ அல்லது, எப்போதாவது பயணம் செய்பவருக்கு பயனுள்ளதாக இருக்கும்.
மெட்ரோ ரெயில் சேவைகள் ஆரம்பிக்கப்பட்ட சமயத்தில், முதற்கட்டமாக டோக்கன் மற்றும் ஸ்மார்ட் கார்டுகளே டிக்கெட்களாக வினியோகம் செய்யப்பட்டு வந்தன. பின் டோக்கன்கள் வரிசையில், ஸ்மார்ட் கார்டுகளின் பயன்பாடு அதிகரித்தது. இதைத் தொடர்ந்து கியூஆர் கோடு முறையில் டிக்கெட் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த வரிசையில் தான் தற்போது வாட்ஸ்அப் சார்ந்த இ டிக்கெட்கள் வினியோகம் செய்யப்படுகின்றன. "கியூஆர் கோடு டிக்கெட்களை தவிர வாட்ஸ்அப் சார்ந்த இ டிக்கெட்கள் அவசர கதியில் மெட்ரோ சேவையை பயன்படுத்துவோருக்கும், வரிசையில் நின்று டிக்கெட் வாங்க நேரமில்லாத பயணிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும். பயண அட்டையை ரிசார்ஜ் செய்ய நேரமில்லாதவர்களும் அவசரத்திற்கு இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்," என்று மெட்ரோ ரெயில் அதிகாரி தெரிவித்துள்ளார்.
- இணைய சேவைகள், மனித வளம் மற்றும் சப்போர்ட் பிரிவுகளில் பணியாற்றி வந்தவர்கள் வேலை இழந்துள்ளனர்.
- பணிநீக்க நடவடிக்கையின் கீழ் 18 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்ய இருப்பதாக ஆண்டி ஜேசி அறிவித்து இருந்தார்.
அமேசான் ஊழியர்கள் இந்த ஆண்டு துவக்கம் முதலே கடினமான சூழலை எதிர்கொண்டு வருகின்றனர். கடுமையான பொருளாதார சூழல் காரணமாக அமேசான் நிறுவனம் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகிறது. உலகளவில் பல்வேறு ஊழியர்கள் வேலையிழந்த நிலையில், இந்தியாவில் உள்ள அமேசான் ஊழியர்களும் பணிநீக்க நடவடிக்கையில் சிக்கித் தவிக்கின்றனர்.
இந்தியாவில் எத்தனை ஊழியர்களை அமேசான் பணிநீக்கம் செய்தது என்பது பற்றி எவ்வித தகவலும் இல்லை. எனினும், இதுகுறித்து தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் அமேசான் நிறுவனம் இந்தியாவில் 500 ஊழியர்களை பணிநீக்கம் செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இணைய சேவைகள், மனித வளம் மற்றும் சப்போர்ட் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி வந்தவர்கள் இந்தியாவில் வேலையிழந்துள்ளனர்.

ஒவ்வொரு பிரிவில் இருந்தும் எத்தனை ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர் என்பது பற்றி எவ்வித தகவலும் இல்லை. அமேசான் தலைமை செயல் அதிகாரி ஆண்டி ஜேசியின் ஆரம்பக்கட்ட பணிநீக்க திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் பணிநீக்க நடவடிக்கையின் கீழ் 18 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்ய இருப்பதாக ஆண்டி ஜேசி அறிவித்து இருந்தார்.
பின் மார்ச் மாதத்தில் அமேசான் நிறுவனத்தின் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி வந்த 9 ஆயிரம் பேர் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்று ஆண்டு ஜேசி அறிவித்தார். சீரற்ற பொருளாதார நிலை காரணமாகவே பணிநீக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
- லிண்டா யாக்கரினோவை டுவிட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக வரவேற்பதில் மிகவும் மகிழ்ச்சி.
- லிண்டா யாக்கரினோ என்பிசியுனிவர்சல் நிறுவனத்தின் விளம்பர பிரிவு தலைவராக பணியாற்றி வந்தார்.
டுவிட்டர் நிறுவன தலைவர் எலான் மஸ்க் தனது சமூக வலைதள நிறுவனத்திற்கு புதிய தலைமை செயல் அதிகாரியை நியமனம் செய்து விட்டதாக அறிவித்து இருந்தார். மேலும் புதிய சிஇஒ பெண் என்று மட்டும் கூறி, அவர் யார் என்பது பற்றி எந்த தகவலும் வழங்கவில்லை.
இதைத் தொடர்ந்து, டுவிட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரி லிண்டா யாக்கரினோ என்று கூறி ஏராளமான தகவல்கள் வெளியாகி வந்தன. அந்த வரிசையில், இணையத்தில் வெளியான தகவல்களை உண்மையாக்கும் விதமாக டுவிட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரி லிண்டா யாக்கரினோ என்று எலான் மஸ்க் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார்.
"லிண்டா யாக்கரினோவை டுவிட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக வரவேற்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். லிண்டா யாக்கரினோ வியாபார பணிகளில் கவனம் செலுத்துவார். நான் பிராடக்ட் டிசைன் மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் பிரிவில் கவனம் செலுத்த இருக்கிறேன்."
"இந்த தளத்தை X-ஆக, எல்லாவற்றுக்குமான செயலியாக மாற்றும் நோக்கில் லிண்டாவுடன் இணைந்து பணியாற்ற இருப்பதில் ஆர்வமாக இருக்கிறேன்," என்று எலான் மஸ்க் டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
லிண்டா யாக்கரினோ என்பிசியுனிவர்சல் நிறுவனத்தின் விளம்பர பிரிவு தலைவராக பணியாற்றி வந்தார். என்பிசியுனிவர்சல் நிறுவனத்தில் இருந்து லிண்டா வெளியேறுவதாக அந்நிறுவனம் இன்று காலை அறிவித்து இருந்தது. எனினும், இதற்கு முன்பிருந்தே லிண்டா டுவிட்டர் நிறுவனத்தில் இணைவது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.
- கூகுள் நிறுவனம் நேற்று நடத்திய I/O 2023 நிகழ்வில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டது.
- கூகுள் நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் இதே நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது.
கூகுள் நிறுவனத்தின் I/O 2023 நிகழ்வில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அறிவிப்புகளில் ஒன்று ஆண்ட்ராய்டு 14 ஒஎஸ். ஆனால் இதை பற்றி கூகுள் பெரிதாக எதையும் கூறவில்லை. மாறாக புதிய ஒஎஸ் இந்த ஆண்டின் பிற்பகுதியில் வெளியாகும் என்று மட்டும் அறிவித்தது. இதோடு ஆண்ட்ராய்டு 14 வெர்ஷனில் வழங்கப்பட இருக்கும் சில அம்சங்கள் பற்றி அறிவித்தது. புதிய ஆண்ட்ராய்டு வெர்ஷனுக்கான டெவலப்பர் பிரீவியூ கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது.
பின் ஏப்ரல் மாதம் இந்த ஒஎஸ்-இன் முதல் பீட்டா வெர்ஷன் வெளியிடப்பட்டது. தற்போது தகுதியுடைய ஸ்மார்ட்போன்களில் இதனை பயனர்கள் டவுன்லோடு செய்துகொள்ளலாம். அந்த வகையில் ஆண்ட்ராய்டு 14 வெர்ஷனில் வழங்கப்பட இருக்கும் சில அம்சங்கள் பற்றி தொடர்ந்து பார்ப்போம். மேலும் எந்தெந்த ஸ்மார்ட்போன்களில் இது வழங்கப்படும் என்றும் பார்ப்போம்.

ஆண்ட்ராய்டு 14 அம்சங்கள்:
மேஜிக் கம்போஸ்: மெசேஞஸ் பை கூகுள் செயலியில் வழங்கப்படும் புதிய அம்சம் இது. இதனை பயன்படுத்தி பயனர்கள், தங்களது உரையாடல்களை அழகாக்க முடியும். பயனர் அனுப்பும் குறுந்தகவல்களுக்கு ஏற்ற பதில்களை இந்த அம்சம் பரிந்துரை செய்யும். மேலும் மேஜிக் போன்று அவற்றை மாற்றவும் செய்யும்.
ஃபைண்ட் மை டிவைஸ்: ஆண்ட்ராய்டு 14 வெர்ஷனில் ஃபைண்ட் மை டிவைஸ் அப்டேட் செய்யப்படும் என்று கூகுள் அறிவித்துள்ளது. இதை கொண்டு ஹெட்போன்கள், டேப்லட்கள் மற்றும் பல்வேறு சாதனங்களை கண்டறிய வைக்க முடிவு செய்துள்ளது. இதை கொண்டு பயனர்கள் பல்வேறு சாதனங்களை டிராக் செய்வதோடு, அவற்றை பாதுகாப்பாகவும் வைத்துக் கொள்ள உதவும். வேறு யாரும் டிராக் செய்தாலும், எச்சரிக்கை விடுக்கும் வகையில் இந்த அம்சம் அப்டேட் செய்யப்படுகிறது.
லாக் ஸ்கிரீன் கஸ்டமைசேஷன்: ஆண்ட்ராய்டு 14 வெர்ஷனில் பயனர்கள் தங்களது லாக் ஸ்கிரீனை புதிய ஷாட்கட்கள் மற்றும் அழகாக வடிவமைக்கப்பட்ட கடிகாரங்களை கொண்டு கஸ்டமைஸ் செய்து கொள்ளலாம். இதன் மூலம் பயனர்கள் தங்களின் கைப்பேசியை சுவாரஸ்யமானதாக மாற்றலாம். இத்துடன் பயனர்கள் மோனோக்ரோமடிக் கலர் பயன்படுத்தி பார்க்கலாம். இதனை விரும்புவோர் போனின் இண்டர்ஃபேஸ் முழுக்க செட் செய்துகொள்ளலாம்.
எமோஜி: எமோஜி வால்பேப்பர் கொண்டு அதிகபட்சம் 14 வித்தியாசமான எமோஜி, ஏராளமான பேட்டன்கள் மற்றும் நிறங்களை தேர்வு செய்து கொள்ளலாம். இதன் மூலம் தனித்துவம் மிக்க வால்பேப்பரை ஹோம் மற்றும் லாக் ஸ்கிரீனில் செட் செய்து கொள்ளலாம். இதில் பயன்படுத்தப்படும் எமோஜிக்களை தொடும் போது அவை பாவணைகளை வெளிப்படுத்தும்.
சினிமேடிக் வால்பேப்பர்கள்: சினிமேடிக் வால்பேப்பர் அம்சம் கொண்டு பயனர்கள் எவ்வித போட்டோக்களையும் 3டி படமாக மாற்றி, மோஷன் எஃபெக்ட்களை வழங்க முடியும். பின் இவற்றை பேக்கிரவுண்டாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஸ்பார்கில் ஐகான் பட்டனை க்ளிக் செய்து பாரலாக்ஸ் எஃபெக்ட்-ஐ புகைப்படங்களுக்கு கொடுக்கலாம்.
ஆண்ட்ராய்டு 14 பீட்டா பில்டுகளை பெற இருக்கும் ஸ்மார்ட்போன்கள்:
சியோமி 12T, சியோமி 13, சியோமி 13 ப்ரோ, சியோமி பேட் 6
விவோ X90 ப்ரோ
டெக்னோ கேமான் 20 சீரிஸ்
ரியல்மி
ஒப்போ ஃபைண்ட் N2 ஃப்ளிப்
ஒன்பிளஸ் 11
நத்திங் போன் 1
லெனோவோ டேப் எக்ஸ்ட்ரீம்
ஐகூ 11
- இந்த விவகாரம் தொடர்பாக ஸ்கிரீன்ஷாட்களையும் அவர் ஆதாரமாக வெளியிட்டிருந்தார்.
- இதைத் தொடர்ந்து டுவிட்டர் தலைவர் எலான் மஸ்க், 'யாரையும் நம்பாதீர்கள்' என்று டுவிட் செய்திருந்தார்.
வாட்ஸ்அப் செயலி பயனர்களின் ஸ்மார்ட்போன் மைக்ரோபோனினை இயக்கியதாக எழுந்த சர்ச்சையில் அரசு விசாரணை நடத்தும் என்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப மந்திரி ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். பயனர் தனியுரிமை விவகாரத்தில் இதுபோன்ற செயலை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று அவர் மேலும் தெரிவித்தார். தனியுரிமை மீறப்பட்ட விவகாரத்தை அரசு முழுமையாக ஆய்வு செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.
"தனியுரிமை விவகாரத்தில் இது ஏற்றுக் கொள்ள முடியாத விதிமீறல் ஆகும். டிஜிட்டல் தனியுரிமை தரவு பாதுகாப்பு மசோதா தயாரிக்கப்பட்டு வரும் போதிலும், இந்த விவகாரம் தொடர்பாக விரைந்து ஆய்வு செய்து விதிமீறல் உறுதியாகும்பட்சத்தில் தக்க நடவடிக்கை எடுப்போம்," என்று மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர் டுவிட்டர் பிதிவில் தெரிவித்து இருக்கிறார்.

முன்னதாக வாட்ஸ்அப் நிறுவனம் பயனர் அனுமதியின்றி அவர்களது ஸ்மார்ட்போனின் மைக்ரோபோனை இயக்கியதாக டுவிட்டர் பொறியாளர் ஒருத்தர் குற்றம்சாட்டி இருந்தார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக ஸ்கிரீன்ஷாட்களையும் அவர் ஆதாரமாக வெளியிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து டுவிட்டர் தலைவர் எலான் மஸ்க், 'யாரையும் நம்பாதீர்கள்' என்று டுவிட் செய்திருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக பதில் அளித்த வாட்ஸ்அப், "பிக்சல் போன் மற்றும் வாட்ஸ்அப் இடையே குறைபாடு இருப்பதை சுட்டிக் காட்டி குற்றச்சாட்டு தெரிவித்த டுவிட்டர் பொறியாளருடன் கடந்த 24 மணி நேரமாக பேசி வருகிறோம். இது ஆண்ட்ராய்டு பிழையாக இருக்கும் என்று நம்புகிறோம். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த கூகுளை கேட்டுக் கொண்டிருக்கிறோம்," என்று தெரிவித்தது.
இது தொடர்பாக தொடர்ந்து விளக்கம் அளித்த வாட்ஸ்அப், "அனுமதி அளிக்கப்பட்டால், பயனர் அழைப்புகளை மேற்கொள்ளும் போது, வாய்ஸ் நோட் அல்லது வீடியோ பதிவிடும் போது மட்டுமே வாட்ஸ்அப் சம்பந்தப்பட்ட ஸ்மார்ட்போனின் மைக்ரோபோனை இயக்கும். அப்போதும் கூட இந்த தகவல் பரிமாற்றங்கள் முழுமையாக என்க்ரிப்ட் செய்யப்பட்டு விடும். இதனால் வாட்ஸ்அப் சார்பில் கூட யாராலும் அவற்றை கேட்கவே முடியாது," என்று தெரிவித்து இருக்கிறது.
- ரியல்மி 11 ப்ரோ பிளஸ் மாடலில் 200MP சாம்சங் கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.
- ரியல்மி 11 சீரிஸ் மாடல்களில் அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 1 டிபி வரையிலான மெமர உள்ளது.
ரியல்மி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரியல்மி 11 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ரியல்மி 11, ரியல்மி 11 ப்ரோ மற்றும் ரியல்மி 11 ப்ரோ பிளஸ் என்று மூன்று ஸ்மார்ட்போன்கள் இதில் உள்ளன.
இவற்றில் ரியல்மி 11 ப்ரோ மற்றும் ரியல்மி 11 ப்ரோ பிளஸ் மாடல்களில் டிமென்சிட்டி 7050 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 1 டிபி வரையிலான மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 6.7 இன்ச் FHD+ 120Hz AMOLED டிஸ்ப்ளே மற்றும் COP அல்ட்ரா தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. ரியல்மி 11 ப்ரோ பிளஸ் மாடலில் 200MP பிரைமரி கேமரா உள்ளது.
ரியல்மி 11 ப்ரோ மற்றும் 11 ப்ரோ பிளஸ் மாடல்களில் 5000 எம்ஏஹெச் பேட்டரி உள்ளது. இத்துடன் முறையே 67 வாட் மற்றும் 100 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

ரியல்மி 11 ப்ரோ மற்றும் 11 ப்ரோ பிளஸ் அம்சங்கள்:
6.7 இன்ச் 2412x1080 பிக்சல் FUll HD+ வளைந்த AMOLED ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட்
ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 7050 பிராசஸர்
மாலி G68 MC4 GPU
8 ஜிபி, 12 ஜிபி ரேம்
256 ஜிபி, 512 ஜிபி, 1 டிபி மெமரி
டூயல் சிம் ஸ்லாட்
ஆண்ட்ராய்டு 13 மற்றும் ரியல்மி யுஐ 4.0
ரியல்மி 11 ப்ரோ - 108MP பிரைமரி கேமரா, OIS
2MP மேக்ரோ லென்ஸ், எல்இடி ஃபிளாஷ்
ரியல்மி 11ப்ரோ பிளஸ் - 200MP பிரைமரி கேமரா
8MP அல்ட்ரா வைடு கேமரா
2MP மேக்ரோ கேமரா, எல்இடி ஃபிளாஷ்
ரியல்மி 11 ப்ரோ - 16MP செல்ஃபி கேமரா
ரியல்மி 11 ப்ரோ பிளஸ் - 32MP செல்ஃபி கேமரா
இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
யுஎஸ்பி டைப் சி ஆடியோ, டால்பி அட்மோஸ், ஹை-ரெஸ் ஆடியோ
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
யுஎஸ்பி டைப் சி
5000 எம்ஏஹெச் பேட்டரி
ரியல்மி 11 ப்ரோ 67 வாட் சார்ஜிங்
ரியல்மி 11 ப்ரோ பிளஸ் 100 வாட் சார்ஜிங்
விலை விவரங்கள்:
ரியல்மி 11 ப்ரோ மாடலின் விலை 1799 யுவான்கள், இந்திய மதிப்பில் ரூ. 21 ஆயிரத்து 310 என்று துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை 2299 யுவான்கள், இந்திய மதிப்பில் ரூ. 27 ஆயிரத்து 245 ஆகும். ரியல்மி 11 ப்ரோ பிளஸ் மாடலின் விலை 2 ஆயிரத்து 099 யுவான்கள், இந்திய மதிப்பில் ரூ. 24 ஆயிரத்து 875 என்று துவங்கி, இதன் டாப் எண்ட் மாடல் விலை 2 ஆயிரத்து 799 யுவான்கள், இந்திய மதிப்பில் ரூ. 33 ஆயிரத்து 170 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
- நிர்வாகம் மற்றும் சப்போர்ட் குழுக்களை சேர்ந்தவர்கள் பணிநீக்கம் செய்யப்படுகின்றனர்.
- பிப்ரவரி மாதத்தில் லின்க்டுஇன் நிறுவனம் பணிநீக்க நடவடிக்கையை மேற்கொண்டது.
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் லின்க்டுஇன் தளம் மக்கள் வேலை தேட உதவி வருகிறது. மற்றவர்களுக்கு வேலை வாங்கிக் கொடுக்க உதவும் லின்க்டுஇன் நிறுவனத்தில் பணியாற்றி வரும் 700 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுகின்றனர்.
இந்த முறை விற்பனை, நிர்வாகம் மற்றும் சப்போர்ட் குழுக்களை சேர்ந்தவர்கள் பணிநீக்கம் செய்யப்படுகின்றனர். முன்னதாக பிப்ரவரி மாதத்தில் லின்க்டுஇன் நிறுவனம் பணிநீக்க நடவடிக்கையை மேற்கொண்டது. இதில் பணியமர்த்தும் குழுவை சேர்ந்தவர்களே அதிகளவில் பாதிக்கப்பட்டனர்.

லின்க்டுஇன் நிறுவனத்தில் சுமார் 20 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். கடந்த இரண்டு காலாண்டுகளாக வருவாய் அதிகரித்து வரும் நிலையிலும், லின்க்டுஇன் நிறுவனம் பணிநீக்க நடவடிக்கையில் மும்முரம் காட்டி வருகிறது.
பணிநீக்க நடவடிக்கை மூலம் நிறுவனத்தின் நிர்வாக சீர்திருத்தம் செய்து, ஊழியர்கள் படிநிலையை குறைத்து அதிவேகமாக முடிவுகளை எடுக்க உதவும் என்று லின்க்டுஇன் தலைமை செயல் அதிகாரி ரியான் ரோஸ்லன்ஸ்கி தனது ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் தெரிவித்து இருக்கிறார், என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
லின்க்டுஇன் நிறுவனத்தில் புதிதாக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும், பணிநீக்க நடவடிக்கை மூலம் பாதிக்கப்படுவோர் விண்ணப்பிக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
- வி நிறுவனம் தொடர்ச்சியாக தனது சலுகைகளை மாற்றியமைத்து வருகிறது.
- வி நிறுவனத்தின் 5ஜி சேவை வெளியீடு தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
இந்திய சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் போன்ற நிறுவனங்களிடம் கடுமையான போட்டியை எதிர்கொள்ளும் வி நிறுவனத்தின் பயனர்கள் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. தொடர் நஷ்டம் காரணமாகவும், பயனர்கள் எண்ணிக்கை குறைவதாலும் வி நிறுவனத்தின் 5ஜி வெளியீடு தாமதமாகி வருகிறது.
எனினும், வி நிறுவனம் தொடர்ச்சியாக புதிய சலுகைகளை அறிவித்தும், அவ்வப்போது சிறப்பான சலுகைகளையும் அறிவித்து வருகிறது. அந்த வரிசையில் தேர்வு செய்யப்பட்ட பிரீபெயிட் சலுகைகளை பயனர்கள் வி செயலி மூலம் ரிசார்ஜ் செய்தால் கூடுதல் கட்டணம் இன்றி இலவச டேட்டா வழங்கப்படுகிறது.
முன்னதாக இதே போன்ற சலுகையை வி நிறுவனம் குறுகிய காலக்கட்டத்திற்கு வழங்கி வந்தது. இந்த சலுகையின் கீழ் பயனர்கள் வி செயலி மூலம் பிரீபெயிட் ரிசார்ஜ் செய்தால் அதிகபட்சம் 5ஜிபி வரை கூடுதல் டேட்டா பெற முடியும். பயனர்கள் ரூ. 299 அல்லது இதைவிட அதிக தொகைக்கு ரிசார்ஜ் செய்யும் போது கூடுதல் டேட்டாவை பெற்றுக் கொள்ள முடியும். இதற்கான வேலிடிட்டி மூன்று நாட்கள் ஆகும்.
- நத்திங் நிறுவனம் தனது புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
- புதிய நத்திங் போன் 2 மாடலில் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் வழங்கப்படுகிறது.
நத்திங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் போன் 2 மாடல் இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன் அமெரிக்க சந்தையில் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்பட இருப்பது ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த வகையில், தற்போது இதன் இந்திய வெளியீடு உறுதியாகி இருக்கிறது.
கடந்த ஆண்டு இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட நத்திங் போன் 1 மாடலின் மேம்பட்ட வெர்ஷனாக புதிய போன் 2 அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய நத்திங் போன் 2 மாடலில் தலைசிறந்த அம்சங்கள் மற்றும் அதிகளவு அப்டேட்கள் செய்யப்பட்டு இருக்கும் என்று தெரிகிறது. இந்திய சந்தையில் நத்திங் போன் 2 மாடல் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட உள்ளது.

புதிய நத்திங் போன் 2 மாடல் பிரீமியம் பிரிவில் களமிறங்க இருக்கிறது. இதில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 சீரிஸ் பிராசஸர் வழங்கப்பட இருக்கிறது. அந்த வகையில், இந்த மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் வழங்கப்படலாம். சமீபத்தில் தான் இந்த ஸ்மார்ட்போனின் சர்வதேச வெளியீட்டுக்கான டீசர் வெளியிடப்பட்டு இருந்தது.
அதன்படி சர்வதேச வெளியீட்டின் போதே இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கலாம். இந்த மாடலிலும் முந்தைய போன் 1 மாடலில் வழங்கப்பட்டு இருந்ததை போன்று பிரத்யேக எல்இடி க்லிம்ஃப் டிசைன், சிவப்பு நிற எல்இடி இண்டிகேட்டர் உள்ளிட்டவை வழங்கப்படும் என்றே தெரிகிறது.
- தேர்வு செய்யப்பட்ட பீட்டா டெஸ்டர்களுக்கு மட்டும் புதிய நேவிகேஷன் பார் அம்சம் வழங்கப்பட்டுள்ளது.
- புதிய அம்சத்தின் படி இந்த ஐகான்களை க்ளிக் செய்து சம்பந்தப்பட்ட ஆப்ஷனை இயக்க முடியும்.
வாட்ஸ்அப் தளத்தின் ஆண்ட்ராய்டு பீட்டா வெர்ஷனில் நேவிகேஷன் பார் போன்ற அம்சம் சோதனை செய்யப்பட்டு வருகிறது. முன்னதாக ஐஒஎஸ் வெர்ஷனில் வழங்கப்பட்டு இருந்த நேவிகேஷன் பார் அம்சம் தற்போது ஆண்ட்ராய்டிலும் வழங்கப்பட இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது. முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்ட பீட்டா டெஸ்டர்களுக்கு மட்டும் புதிய நேவிகேஷன் பார் அம்சம் வழங்கப்பட்டுள்ளது.
இது பற்றி WABetaInfo வெளியிட்டு இருக்கும் தகவல்களில் தேர்வு செய்யப்பட்ட பீட்டா டெஸ்டர்களுக்கு செயலியின் கீழ்புறம் நேவிகேஷன் பார் வழங்கப்பட்டுள்ளது. வரும் மாதங்களில் இந்த அம்சம் மேலும் அதிக டெஸ்டர்களுக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

வாட்ஸ்அப் ஐஒஎஸ் வெர்ஷனின் கீழ்புறம் உள்ள நேவிகேஷன் பார் கொண்டு செயலியின் பல்வேறு ஆப்ஷன்களை எளிதில் இயக்கிவிட முடியும். தற்போது வாட்ஸ்அப் நிறுவனம் செயலியின் ஆண்ட்ராய்டு வெர்ஷனை ரிடிசைன் செய்து - புதிதாக நேவிகேஷன் பார் போன்ற அம்சத்தினை வழங்க இருக்கிறது.
புதிய அம்சம் குறித்து வெளியாகி இருக்கும் ஸ்கிரீன்ஷாட்களின் படி, புதிய இண்டர்ஃபேஸ் கீழ்புறத்தில் பல்வேறு டேப்கள் இடம்பெற்றுள்ளன. இதில் சாட், கம்யுனிடிஸ், கால்ஸ் மற்றும் ஸ்டேட்டஸ் போன்ற ஆப்ஷன்கள் உள்ளன. புதிய அம்சத்தின் படி இந்த ஐகான்களை க்ளிக் செய்து சம்பந்தப்பட்ட ஆப்ஷனை இயக்க முடியும்.
தற்போது இந்த அம்சத்திற்கான சோதனை துவங்கி இருக்கிறது. அந்த வகையில், இந்த அம்சம் முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்ட சில பீட்டா டெஸ்டர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். எதிர்காலத்தில் மேலும் அதிக பீட்டா டெஸ்டர்களுக்கு இந்த அம்சம் வழங்கப்படும். வாட்ஸ்அப்-இன் ஸ்டேபில் வெர்ஷனில் இந்த அம்சம் எப்போது வழங்கப்படும் என்பது பற்றி எவ்வித தகவலும் இல்லை.
Photo Courtesy: WABetaInfo
- ஐபோன்களின் வேகத்தை ஆப்பிள் நிறுவனம் வேண்டுமென்றே குறைத்தது.
- குறைபாடு கொண்ட யூனிட்களில் ஆப்பிள் நிறுவனம் பேட்டரிகளை இலவசமாக மாற்றிக் கொடுக்கிறது.
ஆப்பிள் ஐபோன் திராட்லிங் பிரச்சினை தற்போதைக்கு முடிவதாக தெரியவில்லை. ஆப்பிள் நிறுவனம் 2 பில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 16 ஆயிரத்து 358 கோடி) இழப்பீடு வழங்க இங்கிலாந்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. முன்னதாக பழைய ஐபோன்களின் வேகத்தை ஆப்பிள் நிறுவனம் வேண்டுமென்றே குறைத்ததை ஒப்புக் கொண்டு அதற்கு இழப்பீடு வழங்குவதாக தெரிவித்து இருந்தது.
இந்த சம்பவங்கள் நடந்து சிலகாலம் ஆகிவிட்ட நிலையில், ஆப்பிள் நிறுவனம் மீண்டும் இதேபோன்ற சிக்கலில் சிக்கியுள்ளது. இந்தமுறை ஆப்பிள் நிறுவனம் ஐபோன்களில் பாழாகிப் போன பேட்டரிகளை மறைத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பான வழக்கை ஜஸ்டின் குட்மன் என்ற நபர் இங்கிலாந்து நீதிமன்றத்தில் தொடர்ந்து இருக்கிறார்.

ஆப்பிள் நிறுவனம் பேட்டரிகளில் உள்ள குறையை மறைத்து, மென்பொருள் அப்டேட்களின் மூலம் ஐபோன் வேகத்தை குறைத்து இருக்கிறது. இந்த குற்றச்சாட்டை மறுத்து இருக்கும் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 6s மாடல்களின் குறைந்த எண்ணிக்கையிலான யூனிட்ககளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
குறைபாடு கொண்ட யூனிட்களில் ஆப்பிள் நிறுவனம் பேட்டரிகளை இலவசமாக மாற்றிக் கொடுக்கிறது. இந்த முறையும் ஐபோன்களை திராட்டில் செய்வதை ஒப்புக் கொண்ட ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 6 மாடல்களின் செயல்திறனை பத்து சதவீதம் வரை குறைத்ததாக தெரிவித்து இருக்கிறது.






