என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிஎம்ஆர்எல்"

    • ஒரே நாளில் 3,81,476 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.
    • சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றி.

    கடந்த ஜனவரி மாதம் 93.28 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ ரெயில்களில் பயணித்துள்ளனர் என்றும் அதிகபட்சமாக ஜன.9ம் தேதியில் மட்டும் 3.81 லட்சம் பேர் மெட்ரோ போக்குவரத்தை பயன்படுத்தியுள்ளனர் என்று மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    2026 ஜனவரி மாதத்தில் 93.28 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்

    சென்னை மெட்ரோ ரெரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ ரெரயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பக தன்மையான பாதுகாப்பான வசதியை வழங்கி வருகிறது. அந்த வகையில் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 93,28,937 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணித்துள்ளதாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    அதிகபட்சமாக 09.01.2026 அன்று 3,81,476 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.

    2026, ஜனவரி மாதத்தில் மட்டும் சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 46,52,834 பயணிகள், பயண அட்டைகளை (Travel Card Ticketing System) பயன்படுத்தி 43,107 பயணிகள், க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 46,32,996 பயணிகள் (Single journey Paper QR /Token 19,60,685; Online QR – 1,26,665; Static QR 2,27,737; Whatsapp - 4,55,401; Paytm 3,35,852; ONDC – 10,38,782; PhonePe – 2,76,216; CMRL Mobile App 60,240; Chennai One App – 1,43,620; Event QR - 7,798) பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், Digital SVP, க்யுஆர் குறியீடு (OR Code) பயணச்சீட்டு, Whatsapp - (+91 83000 86000), Paytm App, PhonePe மற்றும் சிங்கார சென்னை அட்டை போன்ற பயணச்சீட்டுகளை பயன்படுத்தி மெட்ரோ ரெயில்களில் பயணிப்பவர்களுக்கு 20% கட்டணத் தள்ளுபடியை வழங்குகிறது. மெட்ரோ ரெயில் நிலையங்களில் உள்ள பயணச்சீட்டு கவுண்டர்களில் வாங்கப்படும் ஒற்றைப் பயணத்துக்கான காகித QR பயணச்சீட்டுகளுக்கு (Single Journey Paper QR tickets) இந்தத் தள்ளுபடி கிடையாது.

    மெட்ரோ ரெயில்கள் மற்றும் மெட்ரோ ரெயில் நிலையங்களை பராமரிப்பதில் மிகுந்த ஒத்துழைப்பு நல்கிவரும் அனைத்து பயணிகளுக்கும் சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றி.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • முதற்கட்டமாக டோக்கன் மற்றும் ஸ்மார்ட் கார்டுகளே டிக்கெட்களாக வினியோகம் செய்யப்பட்டு வந்தன.
    • பயனர்கள் டெபிட், கிரெடிட் கார்டுகள் அல்லது கூகுள் பே சேவைகளை பயன்படுத்தி பணம் செலுத்தலாம்.

    சென்னை மெட்ரோ ரெயில் (சிஎம்ஆர்எல்) சேவையை பயன்படுத்துவோர் இன்று (மே 17) முதல் ரெயில் டிக்கெட்களை வாட்ஸ்அப் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டது. நேஷனல் காமன் மொபிலிட்டி கார்டு அறிமுகம் செய்த இரண்டு மாதங்கள் கழித்து வாட்ஸ்அப் மூலம் இ-டிக்கெட்களை வினியோகம் செய்யும் பணிகளை சிஎம்ஆர்எல் துவங்கி இருக்கிறது.

    பயனர்கள் வாட்ஸ்அப் மூலம் சென்னை மெட்ரோ ரெயில் டிக்கெட் எடுக்க மெட்ரோ ரெயில் நிலையங்களில் உள்ள வாட்ஸ்அப் எண்ணிற்கு மெசேஞ்ச் அனுப்ப வேண்டும். இவ்வாறு செய்ததும், அந்த எண்ணில் இருந்து மெட்ரோ ரெயில் நிலைய விவரங்கள் பட்டியலிடப்பட்டு இருக்கும். அதில் செல்ல வேண்டிய ரெயில் நிலையத்தை தேர்வு செய்ய வேண்டும்.

     

    இனி, டிக்கெட்டுக்கான பணம் செலுத்தும் ஆப்ஷன்கள் திரையில் தோன்றும். அதன்படி பயனர்கள் டெபிட், கிரெடிட் கார்டுகள் அல்லது கூகுள் பே போன்ற சேவைகளை பயன்படுத்தி பணம் செலுத்தலாம். புதிய வசதி மூலம் பயனர்கள் அவசர கால பயணத்திற்கோ அல்லது, எப்போதாவது பயணம் செய்பவருக்கு பயனுள்ளதாக இருக்கும்.

    மெட்ரோ ரெயில் சேவைகள் ஆரம்பிக்கப்பட்ட சமயத்தில், முதற்கட்டமாக டோக்கன் மற்றும் ஸ்மார்ட் கார்டுகளே டிக்கெட்களாக வினியோகம் செய்யப்பட்டு வந்தன. பின் டோக்கன்கள் வரிசையில், ஸ்மார்ட் கார்டுகளின் பயன்பாடு அதிகரித்தது. இதைத் தொடர்ந்து கியூஆர் கோடு முறையில் டிக்கெட் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த வரிசையில் தான் தற்போது வாட்ஸ்அப் சார்ந்த இ டிக்கெட்கள் வினியோகம் செய்யப்படுகின்றன. "கியூஆர் கோடு டிக்கெட்களை தவிர வாட்ஸ்அப் சார்ந்த இ டிக்கெட்கள் அவசர கதியில் மெட்ரோ சேவையை பயன்படுத்துவோருக்கும், வரிசையில் நின்று டிக்கெட் வாங்க நேரமில்லாத பயணிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும். பயண அட்டையை ரிசார்ஜ் செய்ய நேரமில்லாதவர்களும் அவசரத்திற்கு இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்," என்று மெட்ரோ ரெயில் அதிகாரி தெரிவித்துள்ளார்.

    ×