search icon
என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    நீண்ட நாள் காத்திருப்பு - இந்தியாவில் மீண்டும் வெளியானது பி.ஜி.எம்.ஐ.!
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    நீண்ட நாள் காத்திருப்பு - இந்தியாவில் மீண்டும் வெளியானது பி.ஜி.எம்.ஐ.!

    • இந்தியாவில் தடை செய்யப்பட்டு இருந்த பி.ஜி.எம்.ஐ. கேமிற்கு கடந்த வாரம் அனுமதி அளிக்கப்பட்டது.
    • மே 27 ஆம் தேதி முதல், கூகுள் பிளே ஸ்டோரில் பி.ஜி.எம்.ஐ. கேம் டவுன்லோடு செய்ய கிடைக்கிறது.

    பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் இந்தியா (பி.ஜி.எம்.ஐ.) கேம் இந்திய சந்தையில் விளையாட கிடைக்கிறது. இந்தியாவில் இந்த கேமினை மீண்டும் வெளியிட பல்வேறு நிபந்தனைகளுடன் மத்திய அரசு கடந்த வாரம் அனுமதி அளித்து இருந்தது. அந்த வரிசையில், கடந்த 27 ஆம் தேதி கூகுள் பிளே ஸ்டோரில் பட்டியலிடப்பட்ட பி.ஜி.எம்.ஐ. கேம் டவுன்லோடு மற்றும் இன்ஸ்டால் செய்ய கிடைத்தது.

    எனினும், கேமினை விளையாட முடியாத நிலை இருந்து வந்தது. பி.ஜி.எம்.ஐ. கேம் இன்று (மே 29) முதல் விளையாட கிடைக்கும் என்று தகவல்கள் வெளியாகி வந்தன. அதன் படி, இணையத்தில் வெளியான தகவல்களை உண்மையாக்கும் வகையில், தற்போது கேமினை அனைவரும் விளையாட முடியும்.

    பி.ஜி.எம்.ஐ. கேமில் புதிதாக சேர்க்கப்பட்டு இருப்பவை என்ன?

    - இந்தியாவில் மீண்டும் வெளியாவதை கொண்டாடும் வகையில், பி.ஜி.எம்.ஐ. பயனர்களுக்கு நான்கு இலவச மற்றும் நிரந்தர ரிவார்டு அவுட்ஃபிட்கள் (outfit) வழங்கப்படுகின்றன.

    - அதிக ஆயுதங்கள் மற்றும் பொருட்கள், எலிவேட்டர்கள், ஹட்ஸ் ஆன் ஃபயர், டேக்டிக்கல் கிராஸ்போக்கள் மற்றும் ஜிப்லைன்களை கொண்ட புதிய மேப் பி.ஜி.எம்.ஐ. கேமில் தற்போது வழங்கப்படுகிறது. இந்த மேப் நுசா (Nusa) என்று அழைக்கப்படுகிறது.

    - நுசா மேப்-இல் டேக்டிக்கல் கிராஸ்போ மற்றும் SN200 ஷாட்கன், குவாட் 2 இருக்கை கொண்ட வாகனம் உள்ளது.

    - மிக விரைவில் உயிரிழப்போருக்காக 'சூப்பர் ரிகால்' (Super Recall) எனும் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    - புதிய பி.ஜி.எம்.ஐ. கேமிலும், முன்பை போன்றே இன்-கேம் இவென்ட்கள் (Event) உள்ளன.

    - 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் இந்த கேமினை நாள் ஒன்றுக்கு மூன்று மணி நேரங்களும், 18 வயதுக்கும் மேற்பட்டோர் ஆறு மணி நேரங்களுக்கு மட்டுமே விளையாட முடியும்.

    - மைனர்களுக்காக பி.ஜி.எம்.ஐ. கேமில் பேரண்டல் கண்ட்ரோல் மற்றும் பணம் செலுத்துவதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

    பி.ஜி.எம்.ஐ. கேமினை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த பயனர்கள், தற்போது கேமினை விளையாட முடியும். இதற்கு உங்களின் ஆண்ட்ராய்டு சாதனத்தில் கூகுள் பிளே ஸ்டோர் சென்று பி.ஜி.எம்.ஐ. கேமினை டவுன்லோடு மற்றும் இன்ஸ்டால் செய்தாலே போதும்.

    Next Story
    ×