என் மலர்
அறிந்து கொள்ளுங்கள்
- புதிய மாடல்கள் ஐபோன் 14,1 மற்றும் ஐபோன் 14, 9 என்று குறிப்பிடப்பட்டு இருக்கின்றன.
- ஐபோன் 15 சீரிஸ் மாடல்களில் இருந்து ஆப்பிள் யு.எஸ்.பி. டைப் சி போர்ட் வழங்கும் என்று தகவல்.
ஐபோன் 15 சீரிஸ் மாடல்களில் இருந்தே, ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் மாடல்களில் லைட்னிங் போர்ட்-ஐ சார்ஜிங் செய்வதற்கு வழங்கி வருகிறது. இந்த நிலை, விரைவில் மாறிவிடும் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ஐபோன் 15 சீரிஸ் மாடல்களில் இருந்து ஆப்பிள் யு.எஸ்.பி. டைப் சி போர்ட் வழங்க இருப்பதாக கூறப்படுகிறது.
எனினும், கடந்த ஆண்டு ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்த ஐபோன்களிலும் யு.எஸ்.பி. டைப் சி போர்ட் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஐபோன் 15 மாடல்கள் மட்டுமின்றி, பல்வேறு பழைய ஐபோன் மாடல்களிலும் யு.எஸ்.பி. டைப் சி போர்ட் வழங்கப்பட இருப்பதாக ஆப்பிள் டெவலப்பர் மற்றும் எழுத்தாளரான ஆரோன் தெரிவித்து இருக்கிறார்.

டி.வி. ஒ.எஸ். பீட்டா வெர்ஷன்களில் ஆரோன் இரண்டு ஐபோன் மாடல்களை கண்டறிந்து இருக்கிறார். இவை ஏற்கனவே இடம்பெற்று இருந்த நான்கு ஐபோன் 15 சீரிஸ் மாடல்களை விட வித்தியாசமாக இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். புதிய மாடல்கள் ஐபோன் 14,1 மற்றும் ஐபோன் 14, 9 என்று குறிப்பிடப்பட்டு இருப்பதாகவும், இவை ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 பிளஸ் மாடல்களின் யு.எஸ்.பி. டைப் சி வெர்ஷனாக இருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
தற்போதைய சூழலில் ஆப்பிள் நிறுவனம் பழைய ஐபோன்களை ரிமேக் செய்து யு.எஸ்.பி. டைப் சி போர்ட் வழங்குமா என்றால், அதற்கு அதிக சாத்தியம் இல்லை என்றே கூற வேண்டும். எனினும், ஐரோப்பிய யூனியனின் சமீபத்திய விதிகளின் படி, அங்கு விற்பனை செய்யப்படும் மாடல்களில் யு.எஸ்.பி. டைப் சி போர்ட் வழங்குவது கட்டாயம் ஆகும். அந்த வகையில், இந்த பகுதிகளில் விற்பனைக்கும் வரும் மொபைல் போன்களில் யு.எஸ்.பி. டைப் சி போர்ட் வழங்குவது கட்டாயம் என்று 2020-ம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது.
தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் உண்மையாகும் பட்சத்தில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் மாடல்களில் யு.எஸ்.பி. டைப் சி போர்ட் வழங்க ஒரே காரணம் ஐரோப்பிய யூனியன் விதித்து இருக்கும் புதிய விதிகளை பின்பற்றுவதற்காகவே இருக்க வேண்டும்.
- ஐபோன் 15 சீரிசில் மொத்தமாக நான்கு மாடல்கள் இடம்பெற்று இருக்கும் என்று தெரிகிறது.
- ஐபோன் 15 சீரிசில் டைனமிக் ஐலேன்ட் அம்சம், மெல்லிய டிசைன், பெரிய டிஸ்ப்ளே வழங்கப்படலாம்.
இந்தியாவில் புதிய ஐபோன்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கில், ஆப்பிள் இன்க் நிறுவனம் ஐபோன் 15 மாடல்களை தமிழ் நாட்டில் உற்பத்தி செய்ய துவங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஃபாக்ஸ்கான் டெக்னாலஜி குழும ஆலையில் முற்றிலும் புதிய ஐபோன் மாடல்களின் உற்பத்தி நடைபெற இருக்கிறது.
தற்போது உற்பத்திக்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றன. சீனாவில் உள்ள ஆலையில் இருந்து வினியோகம் துவங்கிய பிறகு தான், தமிழகத்தில் இருந்து புதிய யூனிட்கள் அனுப்பப்பட உள்ளன. புதிய ஐபோன் மாடல்கள் செப்டம்பர் 12 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. இது கடந்த மூன்று ஆண்டுகளில் மிகப்பெரும் அப்டேட் ஆக பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் உற்பத்தி செய்யும் போது, அவற்றுக்கான உபகரணங்கள் பெருமளவில் இறக்குமதி செய்யப்பட வேண்டிய சூழல் ஏற்படும். இதற்காக சென்னையில் உள்ள உற்பத்தி ஆலை தயார்நிலையில் உள்ளது. ஐபோன் 15 சீரிசில், ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ், ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ பிளஸ் என நான்கு மாடல்கள் இடம்பெற்று இருக்கும் என்று தெரிகிறது.
புதிய ஐபோன் 15 சீரிசில் டைனமிக் ஐலேன்ட் அம்சம், மெல்லிய டிசைன், பெரிய டிஸ்ப்ளே வழங்கப்படும் என்று தெரிகிறது. ஐபோன் 15 ப்ரோ சீரிசில் ஏ17 பயோனிக் சிப்செட், ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 பிளஸ் மாடல்களில் ஏ16 பயோனிக் சிப்செட் வழங்கப்பட்டு இருக்கும் என்று கூறப்படுகிறது. ஐபோன் 15 ப்ரோ மாடல்களில் குறைந்தபட்ச ஸ்டோரேஜ் 256 ஜிபி-யாக உயர்த்தப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
- லின்டா யாக்கரினோ வீடியோ கால் வசதி பற்றிய தகவலை தெரிவித்தார்.
- X டிசைனர் ஆன்ட்ரியா கான்வே இதனை டுவிட் மூலம் உறுதிப்படுத்தினார்.
X (முன்பு டுவிட்டர்) தளத்தில் மிகப்பெரும் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியதில் இருந்து ஏராளமான மாற்றங்களை தளத்தில் மேற்கொண்டு வருவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார். இவ்வாறு செய்வதில் இருந்து தற்போதைக்கு எலான் மஸ்க் பிரேக் எடுக்க மாட்டார் என்றே தெரிகிறது.
அந்த வகையில், X தளத்தில் வீடியோ கால் வசதி விரைவில் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. டுவிட்டர் தளத்தில் மெசேஜிங் தவிர்த்து, ஹோம் ஃபீட் பிரிவில் தான் அதிக கவனம் செலுத்தி வந்தது. இதன் காரணமாக டுவிட்டர் தளத்தில் மிகவும் அரிதான நடவடிக்கையாக மெசேஜிங் வசதி வழங்கப்பட்டது. தற்போது, X தளத்தில் புதிதாக வீடியோ கால் பேசுவதற்கான வசதி வழங்கப்பட இருக்கிறது.

சமீபத்திய பேட்டி ஒன்றில் X தலைமை செயல் அதிகாரியான லின்டா யாக்கரினோ வீடியோ கால் வசதி பற்றிய தகவலை தெரிவித்தார். "நீண்ட வீடியோ மற்றும் செய்தி கட்டுரைகள் பிரபலமாக மாறி வரும் நிலையில், உங்களுக்கு பிடித்த கிரியேட்டர்களுக்கு சந்தாதாரர் ஆகிடுங்கள், அவர்கள் தற்போது இதில் இருந்து வருவாய் ஈட்டி வருகின்றனர். நீங்கள் வீடியோவை பாருங்கள், விரைவில் உங்களது மொபைல் நம்பரை கொடுக்காமல், வீடியோ கால் மேற்கொள்ள முடியும்," என்று யாக்கரினோ தெரிவித்தார்.
இதே தகவலை X டிசைனர் ஆன்ட்ரியா கான்வே டுவிட் மூலம் உறுதிப்படுத்தினார். இதில் X யு.ஐ.-இல் வீடியோ காலிங் செய்வதற்கான படம் இடம்பெற்று இருக்கிறது. அதில் யு.ஐ. வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட தளங்களில் காலங்காலமாக இருப்பதை போன்றே காட்சியளிக்கிறது. X தளத்தில் இடம்பெற்று இருக்கும் புதிய கால் ஐகானை க்ளிக் செய்து ஆடியோ அல்லது வீடியோ கால் மேற்கொள்ள முடியும்.
தற்போது X தளத்தில் ஆடியோ காலிங் செய்வதற்கான வசதியும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் வீடியோ கால் போன்றே ஆடியோ கால் வசதியும் முதல் முறையாக வழங்கப்பட இருக்கிறது. வீடியோ காலிங் யு.ஐ.-இல் மைக்ரோபோனில் மியூட்/அன்-மியூட், லவுட் ஸ்பீக்கர், டர்ன் ஆஃப் வீடியோ மற்றும் என்ட் தி கால் என நான்கு ஆப்ஷன்கள் இடம்பெற்றுள்ளன. புதிய அம்சம் பற்றி X சார்பில் இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் வழங்கப்படவில்லை.
- வோடபோன் ஐடியா தனது பயனர்களுக்கு அசத்தலான சலுகைகள் அறிவித்து இருக்கிறது.
- சுதந்திர தினத்தை ஒட்டி இந்த சலுகைகள் குறுகிய காலக்கட்டத்திற்கு மட்டுமே வழங்கப்படுகிறது.
வோடபோன் ஐடியா (வி) நிறுவனம் தனது பிரீபெயிட் பயனர்களுக்கு புதிய சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இந்தியாவின் 77-வது சுதந்திர தினத்தை ஒட்டி புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. இவை ஆகஸ்ட் 12-ம் தேதி துவங்கி ஆகஸ்ட் 18-ம் தேதி வரை வழங்கப்பட இருக்கிறது. மேலும் இவை வி அதிகாரப்பூர்வ செயலியில் மட்டுமே வழங்கப்படுகிறது.
வி சுதந்திர தின சலுகை விவரங்கள்:
ரூ. 199 மற்றும் அதற்கும் அதிக தொகை கொண்ட ரிசார்ஜ்களுக்கு அதிகபட்சம் 50 ஜிபி வரையிலான டேட்டா.
ரூ. 50, ரூ. 75, ரூ. 1449 மற்றும் ரூ. 3 ஆயிரத்து 099 ரிசார்ஜ்களுக்கு உடனடி தள்ளுபடி.
வி செயலியில் "ஸ்பின் தி வீல்" பரிசு போட்டி நடைபெறுகிறது. இதில் பயனர்களுக்கு ரிசார்ஜ் சலுகைகள் அல்லது டேட்டா பேக், சோனிலிவ் சந்தா மற்றும் பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன.
இந்த சலுகைகள் அனைத்தும் ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோனுக்கான வி செயலியில் பிரத்யேகமாக வழங்கப்படுகிறது.
- வாட்ஸ்அப் செயலியில் புதிய அம்சம் காரணமாக, இனி அவ்வாறு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
- புதிய அம்சம் வாட்ஸ்அப் ஆன்ட்ராய்டு பீட்டா 2.23.17.7 மற்றும் 2.23.17.8 வெர்ஷன்களில் கிடைக்கிறது.
வாட்ஸ்அப் நிறுவனம் தனது செயலியில் பயனர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்து காத்திருந்த புதிய அம்சத்திற்கான சோதனையை துவங்கி இருக்கிறது. அதன்படி பயனர்கள் விரைவில், ஒரே சாதனத்தில் பல்வேறு அக்கவுன்ட்கள் இடையே ஸ்விட்ச் செய்து வாட்ஸ்அப் பயன்படுத்த முடியும். தற்போது பல்வேறு வாட்ஸ்அப் அக்கவுன்ட் வைத்திருப்போருக்கு இது பயன்தரும் அம்சமாக இருக்கும்.
புதிய அம்சம் மல்டி-அக்கவுன்ட் என்று அழைக்கப்படுகிறது. இதை கொண்டு பயனர்கள் எளிதில் தங்களது அக்கவுன்ட்கள் இடையே மாற்றிக் கொள்ளலாம். இதனால் குளோன் செய்வது போன்ற மூன்றாம் தரப்பு சேவைகளை பயன்படுத்த வேண்டிய நிலையை இனிமேல் நாட வேண்டிய அவசியம் இல்லை. இந்த அம்சம் பற்றிய தகவலை Wabetainfo வெளியிட்டு உள்ளது.

அதன்படி இந்த அம்சம் முதற்கட்டமாக வாட்ஸ்அப் ஆன்ட்ராய்டு பீட்டா 2.23.17.7 மற்றும் 2.23.17.8 போன்ற வெர்ஷன்களில் கிடைக்கிறது. பீட்டா டெஸ்டர்கள் மல்டி அக்கவுன்ட் அம்சத்தை தங்களது வாட்ஸ்அப் செட்டிங்கில் உள்ள கியூ.ஆர். கோடுக்கு அருகில் இருக்கும் ஐகானை க்ளிக் செய்ய வேண்டும்.
இவ்வாறு செய்த பிறகு, அவர்களுக்கு அம்சம் வழங்கப்பட்டு இருந்தால், அவர்களால் மற்றொரு அக்கவுன்டை சேர்க்க முடியும். மேலும் அந்த அக்கவுன்ட்-இன் மொபைல் நம்பர் மற்றும் பாஸ்வேர்டை பதிவிட வேண்டும்.
மற்றொரு அக்கவுன்டிற்கு மாற்றிக் கொள்ள வேண்டுமெனில் அதே ஐகானை மீண்டும் க்ளிக் செய்து அந்த அக்கவுன்டிற்கு மாற்றிக் கொள்ளலாம். ஒவ்வொரு அக்கவுன்ட்-இலும் சொந்த சாட்கள், நோட்டிஃபிகேஷன் மற்றும் செட்டிங்கள் வழங்கப்படுகிறது.
தற்போது இந்த அம்சம் பீட்டா வெர்ஷனில் மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த அம்சம் எப்போது அனைவருக்குமான ஸ்டேபில் வெர்ஷனில் வழங்கப்படும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
Photo Courtesy: WaBetaInfo
- ஜியோ போன் 5ஜி மாடலின் புகைப்படங்கள் ஏற்கனவே இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன.
- ஜியோவின் 5ஜி மொபைல் மிக குறைந்த விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் இந்த ஆண்டு ஆகஸ்ட் 28-ம் தேதி தனது வருடாந்திர பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2023 ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் புதிய ஜியோ போன் 5ஜி மாடலை அறிமுகம் செய்யும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. முன்னதாக இந்த மொபைல் பற்றிய விவரங்கள் பலமுறை இணையத்தில் லீக் ஆகி உள்ளன.
அந்த வரிசையில், இரண்டு புதிய மொபைல் போன்களின் விவரங்கள் இந்தியாவின் பி.ஐ.எஸ். வலைதளத்தில் லீக் ஆகி இருக்கின்றன. இதுபற்றிய தகவல்களை டிப்ஸ்டரான முகுல் ஷர்மா தனது X (முன்பு டுவிட்டர்) அக்கவுன்டில் பகிர்ந்து இருக்கிறார். அதன்படி புதிய ஜியோ போன் மாடல்கள் நொய்டாவில் உற்பத்தி செய்யப்பட உள்ளன.

கோப்புப் படம்
இரண்டு ஜியோ போன் மாடல்களும் JBV161W1 மற்றும் JBV162W1 எனும் மாடல் நம்பர்களை கொண்டிருக்கின்றன. அந்த வகையில், ஜியோ போன் 5ஜி மாடலின் புகைப்படங்கள் முன்னதாக இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன. இந்த மாடல் இம்மாத இறுதியில் அறிமுகம் செய்யப்படும் என்றும் இது அந்நிறுவனத்தின் குறைந்த விலை 5ஜி போனாக இருக்கும் என்று தெரிகிறது.
இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஜியோபோன் 5ஜி மாடலில் 6.5 இன்ச் HD+ 90Hz LCD பேனல், 4 ஜிபி ரேம், ஸ்னாப்டிராகன் 480 பிராசஸர், 13MP பிரைமரி கேமரா, 2MP லென்ஸ், 8MP செல்ஃபி கேமரா, 5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் சார்ஜிங் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. கடந்த மாதம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜியோ பாரத் 4ஜி ஃபீச்சர் போன் மாடலை அறிமுகம் செய்தது.
- ரிலையன்ஸ் ஜியோ வருடாந்திர பிரீபெயிட் சலுகை சுதந்திர தினத்தை ஒட்டி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
- ஜியோவின் புதிய வருடாந்திர சலுகையில் பயனர்களுக்கு தினமும் 2.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சுதந்திர தினத்தை ஒட்டி புதிய வருடாந்திர ரிசார்ஜ் சலுகையை அறிவித்து இருக்கிறது. புதிய வருடாந்திர பிரீபெயிட் ரிசார்ஜ் சலுகையின் விலை சற்று அதிகமாகவே நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
2023 சுதந்திர தின சிறப்பு சலுகைகளின் பலன்கள் கடந்த ஆண்டு சுதந்திர தினத்திற்கு அறிவிக்கப்பட்ட சலுகை பலன்களை விட வித்தியாசமாக உள்ளது. ஜியோ சுதந்திர தின சலுகையின் விலை ரூ. 2 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இந்த சலுகை 365 நாட்களுக்கான வேலிடிட்டி வழங்குகிறது. இதில் பயனர்களுக்கு தினமும் 2.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுகின்றன. இத்துடன் ஜியோசினிமா, ஜியோடிவி மற்றும் ஜியோகிளவுட் போன்ற சேவைகளுக்கான சந்தா வழங்கப்படுகிறது.

ரூ. 2 ஆயிரத்து 999 ஜியோ சலுகை பலன்கள்:
ஸ்விக்கியில் ரூ. 249 மதிப்பிலான ஆர்டர்களுக்கு ரூ. 100 தள்ளுபடி
யாத்ராவில் மேற்கொள்ளப்படும் விமான டிக்கெட் முன்பதிவுகளுக்கு ரூ. 1500 வரை தள்ளுபடி
யாத்ராவில் தங்கும் விடுதி முன்பதிவுகளுக்கு 15 சதவீதம், அதிகபட்சம் ரூ. 4 ஆயிரம் வரை தள்ளுபடி
ஏஜியோ தளத்தில் ரூ. 999 மதிப்புள்ள தேர்வு செய்யப்பட்ட பொருட்களுக்கு ரூ. 200 தள்ளுபடி
ரூ. 999-க்கும் அதிக தொகை கொண்ட நெட்மெட்ஸ் ஆர்டர்களுக்கு 20 சதவீதம் வரை தள்ளுபடி
ரிலையன்ஸ் டிஜிட்டலில் தேர்வு செய்யப்பட்ட ஆடியோ பொருட்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
- இந்தியாவில் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடல்களின் விற்பனை 85 சதவீதம் வரை அதிகரிப்பு.
- இந்திய சந்தையில் தொடர்ந்து புதிய இயர்பட்ஸ் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.
இந்திய சந்தையில் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடல்களின் விற்பனை கடந்த ஆண்டில் மட்டும் 85 சதவீதம் வருடாந்திர வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது இருமடங்கு அதிகம் ஆகும். உள்ளூர் உற்பத்தி, மிகக் குறைந்த விலை மற்றும் அதிக சலுகைகள் உள்ளிட்டவை விற்பனை வளர்ச்சிக்கு காரணமாக கூறப்படுகிறது.
கவுன்டர்பாயின்ட் ஆய்வு நிறுவன அறிக்கையின் படி கடந்த ஆண்டு மட்டும் இந்தியாவில் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடல்களின் விற்பனை கிட்டத்தட்ட 85 சதவீதம் வரை அதிகரித்து இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த ஆண்டு இது மேலும் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. விற்பனை வளர்ச்சி ஒருபுறம் இருந்தாலும், மின்தசாதன அக்சஸரீக்களை விற்பனை செய்யும் பிரான்டுகள் தொடர்ந்து புதிய இயர்பட்ஸ் மாடல்களை அறிமுகம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளன.
இவை ரூ. 200-இல் துவங்கி அதிகபட்சம் ரூ. 20 ஆயிரம் மற்றும் அதற்கும் அதிக விலையில் கிடைக்கின்றன. பல்வேறு விலை பிரிவுகளில் கிடைக்கும் நிலையில், இந்திய சந்தையில் கிடைக்கும் ட்ரூ வயர்லெஸ் இயர்ட்ஸ் மாடல்களில் ரூ. 2 ஆயிரம் பட்ஜெட்டில் கிடைக்கும் டாப் 5 இயர்பட்ஸ் எவை என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

ரியல்மி பட்ஸ் Q2 நியோ:
38 கிராம் எடை கொண்டிருக்கும் ரியல்மி பட்ஸ் Q2 நியோ மாடலில் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி, ப்ளூடூத் 5.0., ஸ்வெட் ப்ரூஃப், மடிக்கக்கூடிய டிசைன், 20 மணி நேரத்திற்கு பிளேடைம், 10 மீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் கொண்டிருக்கிறது. இந்திய சந்தையில் இதன் விலை ரூ. 1599 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

ஒப்போ என்கோ பட்ஸ் 2:
ப்ளூடூத் 5.2 கனெக்டிவிட்டி, ஸ்வெட் ப்ரூஃப், நாய்ஸ் கேன்சலேஷன், இன்லைன் கன்ட்ரோல்கள், 28 மணி நேரத்திற்கு டாக்டைம் மற்றும் 10 மில்லிமீட்டர் டிரைவர்களை கொண்டிருக்கும் என்கோ பட்ஸ் 2 விலை ரூ. 1799 ஆகும்.

போட் இம்மார்டல் 131:
40 மணி நேரத்திற்கு டாக்டைம் வழங்கும் பேட்டரி கொண்டிருக்கும் போட் இம்மார்டல் 131 மாடலில் ஸ்வெட் ப்ரூஃப், இன்லைன் கண்ட்ரோல், ப்ளூடூத் 5.3, மூன்று வித இயர்டிப்கள் வழங்கப்பட்டு உள்ளன. இந்தியாவில் இதன் விலை ரூ. 1699 ஆகும்.

ரியல்மி பட்ஸ் ஏர் 3 நியோ:
நாய்ஸ் கேன்சலேஷன் வசதி கொண்டிருக்கும் பட்ஸ் ஏர் 3 நியோ 38 கிராம் எடை கொண்டிருக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் ப்ளூடூத் 5.2 கனெக்டிவிட்டி, 30 மணி நேரத்திற்கு டாக்டைம் வழங்கும் பேட்டரி, ஸ்வெட் ப்ரூஃப், இன்லைன் கண்ட்ரோல் போன்ற வசதிகள் உள்ளன. இதன் விலை ரூ. 1799 ஆகும்.

போட் ஏர்டோப்ஸ் 411 ANC:
10 மில்லிமீட்டர் டிரைவர்களை கொண்டிருக்கும் போட் ஏர்டோப்ஸ் 411 மாடலில் ப்ளூடூத் 5.2 கனெக்டிவிட்டி, 10 மீட்டர் ரேன்ஜ், நாய்ஸ் கேன்சலேஷன் வசதி, ஸ்வெட் ப்ரூஃப், இன்லைன் கண்ட்ரோல்கள், 17.5 மணி நேரத்திற்கு டாக்டைம் வழங்குகிறது. இதன் விலை ரூ. 1949 ஆகும்.
- வாட்ஸ்அப் செயலியில் 2016 முதல் வீடியோ கால் அம்சம் வழங்கப்பட்டு வருகிறது.
- வாட்ஸ்அப்-இன் புதிய அம்சத்தை மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பர்க் அறிவித்து இருக்கிறார்.
வாட்ஸ்அப் செயலியில் வீடியோ கால் பேசும் போது, உங்களது சாதனத்தின் ஸ்கிரீனை மற்றவருடன் பகிர்ந்து கொள்ளும் வசதி வழங்கப்பட்டு வருகிறது. இந்த அம்சத்தினை மெட்டா நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார்.
அதன்படி பயனர்கள் வீடியோ கால் பேசும் போது ஷேர் ஐகானை க்ளிக் செய்து குறிப்பிட்ட செயலியோ அல்லது சாதனத்தின் முழு ஸ்கிரீனையோ ஷேர் செய்து கொள்ளலாம். ஷேர் செய்ய துவங்கியதும், உங்களது ஸ்கிரீனில் இடம்பெற்று இருக்கும் தகவல்கள் அனைத்தும் பகிரப்பட்டு, ஷேர் செய்வோருடன் பகிரப்படும். இதனை எப்போது வேண்டுமானாலும் நிறுத்திக் கொள்வதற்கான வசதியும் வழங்கப்படுகிறது.

ஸ்மார்ட்போன்களில் சிறப்பான வியூவிங் மற்றும் ஷேரிங் அனுபவத்தை பெறுவதற்கு வீடியோ கால் பேசும் போது மொபைலை லேன்ட்-ஸ்கேப் மோடில் வைத்துக் கொள்வது நல்லது. 2016-ம் ஆண்டு வாட்ஸ்அப் செயலியில் வீடியோ கால் செய்வதற்கான வசதி வழங்கப்பட்ட நிலையில், தற்போது தான் ஸ்கிரீன் ஷேரிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
முன்னதாக மே மாத வாக்கில் ஆண்ட்ராய்டு பீட்டா வெர்ஷனில் ஸ்கிரீன் ஷேரிங் அம்சத்திற்கான டெஸ்டிங் செய்ய துவங்கியது. வின்டோஸ் பீட்டா வெர்ஷனில் இந்த அம்சத்திற்கான டெஸ்டிங் ஜூன் மாத வாக்கில் துவங்கியது. தற்போது வாட்ஸ்அப் செயலியின் ஸ்டேபில் வெர்ஷனில் இந்த அம்சம் அனைவருக்கும் வழங்கப்பட்டு வருகிறது.
- ஐபோன் மாடல்களில் தொடர்ந்து சிம் கார்டு டிரே வழங்கப்படுகிறது.
- புதிய ஐபோன் 15 ப்ரோ தோற்றத்தில் ஐபோன் 14 ப்ரோ போன்றே காட்சியளிக்கிறது.
ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபோன் மாடல்களை அடுத்த மாதம் அறிமுகம் செய்ய இருக்கிறது. செப்டம்பர் 12 அல்லது 13-ம் புதிய ஐபோன்களின் அறிமுக விழா நடைபெறும் என்று தெரிகிறது. புதிய ஐபோன் 15 சீரிஸ் பற்றி ஏற்கனவே பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், இவற்றின் லைவ் படங்கள் தற்போது லீக் ஆகி இருக்கின்றன.
அதன்படி புதிய படங்களில் ஐபோன் 15 ப்ரோ பேக் டிசைன், பக்கவாட்டு மற்றும் கீழ்புறத்தில் உள்ள பேனல்கள் தெளிவாக காட்சியளிக்கின்றன. அதில் புதிய ஐபோன் மாடலில் யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்கப்பட்டு இருப்பதை பார்க்க முடிகிறது. ஏற்கனவே வெளியான தகவல்களிலும் ஐபோன் 15 சீரிஸ் துவங்கி அனைத்து ஐபோன்களிலும் யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்கப்படும் என்று கூறப்பட்டது.

அமெரிக்கா தவிர்த்து மற்ற நாடுகளில் விற்பனைக்கு வரும் ஐபோன் மாடல்களில் தொடர்ந்து சிம் கார்டு டிரே வழங்கப்படுகிறது. அமெரிக்க சந்தையில் மட்டும் ஐபோன் மாடல்கள் இசிம் வசதியுடன் விற்பனை செய்யப்படுகிறது. இத்துடன் மியூட் ஸ்விட்ச்-க்கு மாற்றாக ஆக்ஷன் பட்டன் மற்றும் கஸ்டமைஸ் செய்து கொள்ளும் அம்சங்கள் வழங்கப்படுகிறது.
இவைதவிர புதிய ஐபோன் 15 ப்ரோ தோற்றத்தில் ஐபோன் 14 ப்ரோ போன்றே காட்சியளிக்கிறது. அதன்படி கேமரா மாட்யுல், ஸ்பீக்கர் கிரில் உள்ளிட்டவை தற்போதைய மாடலில் உள்ளதை போன்றே காட்சியளிக்கிறது. முன்புறம் டைனமிக் ஐலேண்ட் வழங்கப்படுகிறது. தற்போது வெளியாகி இருக்கும் படங்கள் உண்மையில் ஐபோன் இன்றி அதன் டம்மி யூனிட் ஆக இருக்கவும் வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
Photo Courtesy: Ice Universe
- ஐபாட்-ஐ விற்பனை செய்ய 61.98 சதவீதம் பங்குதாரர்கள் ஒப்புதல் அளித்தனர்.
- ஒரிஜினல் ஐபாட் மாடலை ஸ்டீவ் ஜாப்ஸ் அறிமுகம் செய்தார்.
ஆப்பிள் நிறுவனத்தின் பல்வேறு சாதனங்கள் தொழில்நுட்ப துறையை திரும்பி பார்க்க செய்திருக்கின்றன. சமீபத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் ஒரிஜினல் ஐபாட் மாடல் அதிக விலைக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டு உள்ளது. 2001-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐபாட் மாடல் திறக்கப்படாத நிலையில் ஏலத்திற்கு விற்பனைக்கு வந்தது.
இதனை ரேலி என்ற நிறுவனம் விற்பனை செய்திருக்கிறது. ஏலத்தில் பங்கேற்றவர் திறக்கப்படாத நிலையில் இருந்த ஒரிஜினல் ஐபாட் மாடலை 29 ஆயிரம் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 24 லட்சம் கொடுத்து வாங்கி இருக்கிறார். ரேலி என்ற தளம் பயனர்கள் மதிப்பு மிக்க பொருட்களை வாங்க வழி செய்கிறது. 2021-ம் ஆண்டு இந்த ஐபாட் மாடல் 5 ஆயிரம் பங்குகளாக பிரிக்கப்பட்டு ஒரு பங்கின் விலை 5 டாலர்கள் என்று நிர்ணயம் செய்யப்பட்டது.

தற்போது இந்த ஐபாட்-ஐ விற்பனை செய்ய 61.98 சதவீதம் பங்குதாரர்கள் ஒப்புதல் அளித்தனர். இத்தனை விலை கொடுத்து ஒரிஜினல் ஐபாட் மாடலை யார் ஏலத்தில் வாங்கினார்கள் என்ற விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. அறிமுகத்தின் போது இந்த ஐபாட் மாடல் போர்டபில் மியூசிக் பிளேயர்கள் பிரிவில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியது.
ஒரிஜினல் ஐபாட் மாடலை ஸ்டீவ் ஜாப்ஸ் அறிமுகம் செய்தார். மெல்லிய டிசைன், பல்வேறு புதுமை மிக்க அம்சங்கள் (அன்றைய தேதிக்கு) உள்ளிட்டவை இசை பிரியர்களை பெரிதும் கவர்ந்தது. அன்று இதன் விலை 399 டாலர்கள் என்று நிர்ணயம் செய்யப்பட்டது. அறிமுகம் செய்யப்பட்டதும், அதிகம் பேர் வாங்கியதால் பிரபலமான சாதனமாக இது மாறியது.
- ஐபோன் 15 சீரிசில்- ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ், ஐபோன் 15 ப்ரோ, ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடல்கள் இடம்பெற்று இருக்கலாம்.
- இந்த தேதியிலேயே ஐபோன் 15 சிரிஸ் மாடல்கள் அறிமுகம் செய்யப்படலாம்.
ஆப்பிள் நிறுவனம் செப்டம்பர் மாதத்தில் புதிய ஐபோன் 15 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பது அனைவரும் அறிந்ததே. எனினும், அந்நிறுவனம் சார்பில் இதுபற்றி இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. ஐபோன் 15 சீரிஸ் மாடல்கள், அவற்றின் அம்சங்கள் மற்றும் ரெண்டர்கள் என ஏராளமான தகவல்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வந்துள்ளன.
அந்த வகையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஐபோன் 15 சீரிஸ் மாடல்களின் வெளியீட்டு தேதி பற்றிய தகவல்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. அதன்படி அமெரிக்க மொபைல் நெட்வொர்க் நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை செப்டம்பர் 13-ம் தேதி விடுமுறை எடுக்க கேட்டுக் கொண்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் இதே நாளில் முக்கிய ஸ்மார்ட்போன் பற்றிய அறிவிப்பு வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கோப்புப் படம்
அந்த தேதியில் எந்த மாடல் அறிமுகம் செய்யப்படும் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. எனினும், ஆப்பிள் ஒவ்வொரு ஆண்டும் இதே காலக்கட்டத்தில் தனது புதிய ஐபோன் மாடல்களை அறிமுகம் செய்வதை வழக்கமாக கொண்டிருக்கிறது. அந்த வகையில், இந்த தேதியிலேயே ஐபோன் 15 சிரிஸ் மாடல்கள் அறிமுகம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கும் ஐபோன் 15 சீரிசில்- ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ், ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் என நான்கு மாடல்கள் இடம்பெற்று இருக்கும் என்று தெரிகிறது. நான்கு மாடல்களும் அதன் முந்தைய வெர்ஷனில் இருந்ததை விட டிசைன் மாற்றங்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.






