என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    • ஐபோன் 15 சீரிசில்- ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ், ஐபோன் 15 ப்ரோ, ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடல்கள் இடம்பெற்று இருக்கலாம்.
    • இந்த தேதியிலேயே ஐபோன் 15 சிரிஸ் மாடல்கள் அறிமுகம் செய்யப்படலாம்.

    ஆப்பிள் நிறுவனம் செப்டம்பர் மாதத்தில் புதிய ஐபோன் 15 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பது அனைவரும் அறிந்ததே. எனினும், அந்நிறுவனம் சார்பில் இதுபற்றி இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. ஐபோன் 15 சீரிஸ் மாடல்கள், அவற்றின் அம்சங்கள் மற்றும் ரெண்டர்கள் என ஏராளமான தகவல்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வந்துள்ளன.

    அந்த வகையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஐபோன் 15 சீரிஸ் மாடல்களின் வெளியீட்டு தேதி பற்றிய தகவல்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. அதன்படி அமெரிக்க மொபைல் நெட்வொர்க் நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை செப்டம்பர் 13-ம் தேதி விடுமுறை எடுக்க கேட்டுக் கொண்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் இதே நாளில் முக்கிய ஸ்மார்ட்போன் பற்றிய அறிவிப்பு வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    கோப்புப் படம்

    கோப்புப் படம்

     

    அந்த தேதியில் எந்த மாடல் அறிமுகம் செய்யப்படும் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. எனினும், ஆப்பிள் ஒவ்வொரு ஆண்டும் இதே காலக்கட்டத்தில் தனது புதிய ஐபோன் மாடல்களை அறிமுகம் செய்வதை வழக்கமாக கொண்டிருக்கிறது. அந்த வகையில், இந்த தேதியிலேயே ஐபோன் 15 சிரிஸ் மாடல்கள் அறிமுகம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

    இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கும் ஐபோன் 15 சீரிசில்- ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ், ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் என நான்கு மாடல்கள் இடம்பெற்று இருக்கும் என்று தெரிகிறது. நான்கு மாடல்களும் அதன் முந்தைய வெர்ஷனில் இருந்ததை விட டிசைன் மாற்றங்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    • சாம்சங் மைக்ரோ எல்இடி டிவி பயனர்களுக்கு பிரீமியம் அனுபவத்தை வழங்குகிறது.
    • மைக்ரோ எல்இடி டிவியுடன் சோலார் செல் ரிமோட் வழங்கப்படுகிறது.

    சாம்சங் நிறுவனத்தின் முற்றிலும் புதிய மைக்ரோ எல்இடி டிவி மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக தொலைகாட்சி சந்தையில் முன்னணி நிறுவனமாக சாம்சங் விளங்கி வருகிறது. பிரீமியம் பிரிவில் நிலைநிறுத்தப்பட்டு இருக்கும் புதிய மைக்ரோ எல்இடி டிவி முற்றிலும் அடுத்த தலைமுறை தொழில்நுட்பத்தை கொண்டிருக்கிறது.

    மெல்லிய டிசைன் கொண்டிருக்கும் சாம்சங் மைக்ரோ எல்இடி டிவி பயனர்களுக்கு பிரீமியம் அனுபவத்தை வழங்குகிறது. வழக்கமான ஒஎல்டி பிக்சல்களை விட பத்தில் ஒருமடங்கு வரை அளவில் சிறியதாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. இவற்றின் அளவு 24.8 மில்லியன் மைக்ரோமீட்டர் ஆகும். இதில் உள்ள மைக்ரோ எல்இடி-க்கள் சஃபயர் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

     

    புதிய சாம்சங் டிவியில் மைக்ரோ எல்இடி, மைக்ரோ கான்டிராஸ்ட், மைக்ரோ கலர், மைக்ரோ HDR மற்றும் மைக்ரோ AI பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கின்றன. இவை சிறப்பான காட்சி அனுபவத்தை வழங்குகிறது. இத்துடன் அரினா சவுன்ட் அம்சம் டிவியில் 3D சவுன்ட் அனுபவத்தை வழங்குகிறது. இத்துடன் OTS ப்ரோ, டால்பி அட்மோஸ் மற்றும் Q சிம்பனி போன்ற அம்சங்கள் வழங்கப்படுகின்றன.

    இதில் உள்ள மல்டி-வியூ அம்சம் அதிகபட்சம் நான்கு வெவ்வேறு தரவுகளை பார்க்க வழி செய்கிறது. மைக்ரோ எல்இடி டிவியுடன் சோலார் செல் ரிமோட் வழங்கப்படுகிறது. இதில் உள்ள ரிமோட்-இல் பேட்டரி போட வேண்டிய அவசியம் இல்லை. இந்திய சந்தையில் சாம்சங் மைக்ரோ எல்இடி டிவியின் விலை ரூ. 1 கோடியே 14 லட்சத்து 99 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    • புதிய வெர்ஷன் டெக்னோ ஸ்பார்க் 10 ப்ரோ மேஜிக் மஜென்டா எடிஷன் என்று அழைக்கப்படுகிறது.
    • டெக்னோ ஸ்பார்க் 10C மற்றும் ஸ்பார்க் 10 போன்ற மாடல்கள் ஆரஞ்சு நிறத்தில் கிடைக்கின்றன.

    டெக்னோ நிறுவனத்தின் பிரபலமான ஸ்பார்க் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன் முற்றிலும் புதிய வெர்ஷனில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய வெர்ஷன் டெக்னோ ஸ்பார்க் 10 ப்ரோ மேஜிக் மஜென்டா எடிஷன் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஸ்பெஷல் எடிஷன் மாடலில் உள்ள "லுமினஸ் இகோ-லெதர் தொழில்நுட்பம்," வழங்கப்பட்டு இருக்கிறது.

    முழுக்க முழுக்க சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படுத்தாத பொருட்களால் உருவாக்கப்பட்டு இருக்கும், புதிய தொழில்நுட்பம் ஸ்மார்ட்போனின் நிறத்தை மாற்றும் திறன் கொண்டிருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன் மஜென்டா நிறத்தில் கிடைக்கும் நிலையில், ஸ்பார்க் 10C மற்றும் ஸ்பார்க் 10 போன்ற மாடல்கள் ஆரஞ்சு நிறத்தில் கிடைக்கின்றன.

     

    லுமினஸ் கலர் சேஞ்சிங் தொழில்நுட்பம் கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன் இது ஆகும். லுமினஸ் இகோ லெதர் தொழில்நுட்பம், சாதனத்திற்குள் வெளிச்சத்தை உறிந்து கொண்டு விவிட் மஜென்டா நிறத்தை ஃபுளுரோசென்ட் குளோ நிறத்திற்கு மாற்றுகிறது. அந்த வகையில் ஸ்மார்ட்போன் மீது வெளிச்சம் படும் போது, நிறம் மாறுவதை உணர முடியும்.

    புதிய டெக்னோ ஸ்பார்க் 10 ப்ரோ மேஜிக் மஜென்டா எடிஷன் பிரைட் மற்றும் லைவ்லி பின்க் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இளம் தலைமுறையினரின் கற்பனை திறன் மற்றும் தனித்துவத்தை வெளிப்படுத்தும் வகையில், இந்த நிறங்கள் இளைஞர்களை பெருமளவில் கவரும் என்று டெக்னோ பிரான்டு எதிர்பார்க்கிறது.

     

    டெக்னோ ஸ்பார்க் 10 ப்ரோ அம்சங்கள்:

    6.8 இன்ச், 1080x2460 பிக்சல் ரெசல்யூஷன் டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட்

    மீடியாடெக் ஹீலியோ ஜி88 பிராசஸர்

    16 ஜிபி ரேம்

    256 ஜிபி மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    50MP பிரைமரி கேமரா

    32MP செல்பி கேமரா

    ஆன்ட்ராய்டு 13 சார்ந்த ஹை ஒஎஸ் 12.6

    4ஜி, ப்ளூடூத், வைபை

    5000 எம்ஏஹெச் பேட்டரி

    18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி

    • டுவிட்டர் தளத்தில் டீபால்ட், டிம் மற்றும் லைட்ஸ் அவுட் என மூன்றுவித டிஸ்ப்ளே ஆப்ஷன்கள் உள்ளன.
    • மிகப்பெரிய மாற்றத்தை தொடர்ந்து டார்க் மோட் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    டுவிட்டர் தளத்தில் மாற்றங்கள் செய்வதை எலான் மஸ்க் தற்போதைக்கு நிறுத்த மாட்டார் என்றே தெரிகிறது. தற்போது X என்று மாறி இருக்கும் டுவிட்டர் சமூக வலைதளத்தில் டார்க் மோட் வசதி வழங்கப்பட இருக்கிறது. இதில் புதிய மாற்றம் என்னவெனில், டார்க் மோடில் இருந்து தளத்தை டீஃபால்ட் மோடில் இயக்குவதற்கான வசதி வழங்கப்படாது என்பது தான்.

    டுவிட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கியதில் இருந்து தளத்தில் மேற்கொண்ட மிகப்பெரிய மாற்றத்தை தொடர்ந்து டார்க் மோட் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. புதிய அம்சம் பற்றிய தகவலை, டுவிட்டர் பயனர் கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும் போது எலான் மஸ்க் தெரிவித்தார். தற்போது டுவிட்டர் தளத்தில் டீபால்ட், டிம் மற்றும் லைட்ஸ் அவுட் என மூன்றுவித டிஸ்ப்ளே ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.

     

    இவற்றில் முதல் ஆப்ஷன், வழக்கமான வெள்ளை நிற பேக்கிரவுன்டை வழங்குகிறது. டிம் ஆப்ஷன் டுவிட்டர் தளத்தை சுற்றி இருள் சூழ்ந்ததை போன்று காட்சியளிக்கும் சாம்பல் நிறம் கொண்டிருக்கிறது. லைட்ஸ் அவுட் ஆப்ஷனில் திரை முழுக்க கருப்பு நிற பேக்கிரவுன்ட் வழங்கப்படுகிறது. புதிய மாற்றம் அமலுக்கு வரும் வரையில், இந்த மூன்று ஆப்ஷன்கள் தொடர்ந்து வழங்கப்படும்.

    டுவிட்டர் தளத்தில் எழுத்துக்களின் அளவை மாற்றுவது, நிறத்தை மாற்றுவது போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன. அதன்படி எழுத்துக்களை எல்லோ, பின்க், பர்பில், ஆரஞ்சு மற்றும் கிரீன் போன்ற நிறங்களில் மாற்றிக் கொள்ள முடியும். தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கும் டார்க் மோட் மட்டும் பயன்படுத்த வேண்டிய அம்சம் எப்போது செயல்பாட்டுக்கு வரும் என்பது பற்றி எந்த தகவலும் இல்லை.

    • டுவிட்டர் வலைதளத்தில் கிரியேட்டர்கள் வருவாய் ஈட்டுவதற்கு புதிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
    • உலகளவில் டுவிட்டர் வருவாய் பங்கீட்டு திட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டு இருக்கிறது.

    எலான் மஸ்கின் X, முன்பு டுவிட்டர் என்று அழைக்கப்பட்டு வந்த சமூக வலைதளத்தில் பயனர்கள் வருவாய் ஈட்டுவதற்கான புதிய திட்டம் துவங்கப்பட்டு இருக்கிறது. இந்த திட்டம் டுவிட்டர் அல்லது X புளூ சந்தா வைத்திருப்போருக்கு உலகளவில் வழங்கப்படுகிறது. இந்தியாவிலும் பயனர்கள் இந்த திட்டத்தின் கீழ் வருவாய் ஈட்ட முடியும்.

    அந்த வகையில், புதிய X தளத்தில் வருவாய் ஈட்டுவதற்கு என்னென்ன செய்ய வேண்டும். இதற்கு கிரியேட்டர்கள் மற்றும் பயனர்கள் வைத்திருக்க வேண்டியவை பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

    1 - பயனர்கள் X புளூ சந்தா வைத்திருப்பது அவசியம் ஆகும். இதோடு கடந்த 15 மாதங்களில், பதிவுகளுக்கு குறைந்தபட்சம் 15 மில்லியன் இம்ப்ரஷன்கள் வந்திருப்பது அவசியம் ஆகும். குறைந்தபட்சமாக 500 ஃபாளோவர்கள் இருக்க வேண்டியதும் அவசியம் ஆகும்.

     

    2 - அனைத்து X புளூ மற்றும் வெரிபைடு நிறுவன சந்தா வைத்திருப்போருக்கு இந்த வழிமுறைகள் அனைத்தும் மிகவும் எளிமையாக்கப்பட்டு உள்ளன. வருவாய் ஈட்டுவதற்கு தேவையானவற்றை பூர்த்தி செய்துவிட்டால், இந்த திட்டத்தில் இணைந்து கொண்டு, வருவாய் 50 டாலர்களை கடந்தபிறகு அவற்றை பெற்றுக் கொள்ள முடியும்.

    3 - எதன் அடிப்படையில் வருவாய் பங்கீடு வழங்கப்படுகிறது என்பது பற்றி X தரப்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கும் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்திருப்போருக்கு ஜூலை 31-ம் தேதியிட்ட வாரத்தில் இருந்து வருவாய் வழங்கும் பணிகள் துவங்கப்படுகிறது.

     

    4 - இந்த திட்டம் மிகவும் வெளிப்படையான ஒன்று என்றும், இதில் அனைத்து X புளூ மற்றும் வெரிபைடு நிறுவன வாடிக்கையாளர்கள் பங்கேற்று பயன்பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. பயனர்கள் மற்றும் கிரியேட்டர்கள் விளம்பர வருவாய் பங்கீடு மற்றும் கிரியேட்டர் சந்தா முறைகளை (Ads Revenue Sharing and Creator Subscriptions) செட்டப் செய்து கொள்ள வேண்டும்.

    5 - புதிய வருவாய் ஈட்டும் திட்டத்தின் கீழ் பணத்தை பெறுவதற்கு ஸ்டிரைப் அக்கவுன்ட் வைத்திருப்பதும் அவசியம் ஆகும். பயனர்கள் இந்த திட்டத்தில் இருந்து வெளியேற்றப்படுவதை தவிர்க்க, இந்த திட்டத்திற்கான விதிகளை முழுமையாக அறிந்து வைத்துக் கொள்வது நல்லது. 

    • புதிய லோகோ காலப்போக்கில் மாற்றம் செய்யப்படும் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
    • முன்னதாக டுவிட்டர் நிறுவன லோகோ நீல பறவையில் இருந்து X ஆக மாற்றப்பட்டது.

    உலகின் முன்னணி சமூக வலைதளமாக டுவிட்டர் உள்ளது. எலான் மஸ்க் டுவிட்டரை விலைக்கு வாங்கியதில் இருந்து, தளத்தில் ஏராளமான மாற்றங்களை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன் டுவிட்டர் லோகோ மாற்றப்பட்டது. 

    இதன் தொடர்ச்சியாக, டுவிட்டர் தளத்தை ரிபிரான்டு செய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. டுவிட்டர் தளத்தில் அந்நிறுவன அதிகாரப்பூர்வ ஹேன்டில் @X என்று மாற்றப்பட்டுள்ளது. முந்தைய @Twitter ஹேன்டில் தற்போது @X என்ற ஹேன்டிலுக்கு மாற்றி அனுப்பப்படுகிறது.

     

    மற்ற டுவிட்டர் ஹேன்டில்களிலும் மாற்றங்கள் செய்யப்படுகின்றன. அதன்படி டுவிட்டர் என்ற பெயருக்கு மாற்றாக X என்ற வார்த்தை இடம்பெற்று இருக்கிறது. கடந்த செவ்வாய் கிழமை அன்று டுவிட்டர் நிறுவனம் தனது புதிய X லோகோவாவில் சற்று பிரமான்ட கோடுகளை சேர்த்தது. பிறகு அது நீக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து புதிய லோகோ காலப்போக்கில் மாற்றம் செய்யப்படும் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

    இதுதவிர டுவிட்டர்சப்போர்ட், டுவிட்டர்டெவ், டுவிட்டர்ஏபிஐ உள்ளிட்டவை @Xசப்போர்ட், @Xடெவலப்பர்ஸ், @API என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்தின் ப்ரோபைல் படங்கள் X லோகோ மாற்றப்பட்டு இருக்கிறது. டுவிட்டரின் சந்தா முறை சேவையான டுவிட்டர்புளூ, @Xபுளூ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

    • சமீபத்திய டீசரில் போவா 5 ப்ரோ எல்இடி லைட்டிங் எப்படி காட்சியளிக்கும் என்று தெரியவந்தது.
    • இன்பினிக்ஸ் மாடலின் எல்இடி லைட் நத்திங் போன் 2 மாடலில் உள்ளதை போன்றே காட்சியளிக்கிறது.

    டெக்னோ நிறுவனம் புதிய போவா 5 ப்ரோ ஸ்மார்ட்போனிற்கான டீசர்களை வெளியிட்டு வருகிறது. விரைவில் இந்த ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதன் பின்புறம் எல்இடி லைட்கள் அடங்கிய டிசைன் கொண்டிருக்கிறது. ஒட்டுமொத்தத்தில் இதன் கான்செப்ட் நத்திங் போன் 2 போன்றே இருந்தாலும், தோற்றத்தில் சற்று வித்தியாசமாக காட்சியளிக்கிறது.

    டெக்னோ நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட டீசரில் புதிய போவா 5 ப்ரோ மாடலுக்கான எல்இடி லைட்டிங் சிஸ்டம் எப்படி காட்சியளிக்கும் என்று தெரியவந்துள்ளது. அதில் போவா 5 ப்ரோ மாடலில் அழைப்புகள் வரும் போது, மூன்று எல்இடி ஸ்ட்ரிப்கள் ஒரே புள்ளியில் இணையும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

    டிசைன் அடிப்படையில் இது நத்திங் போன் 2 மாடலின் அச்சு அசலான காப்பி இல்லை என்ற போதிலும், கான்செப்ட் நத்திங் நிறுவனம் அறிமுகம் செய்தது தான். மேலும் டெக்னோவின் இந்த செயலுக்கு நத்திங் டுவிட்டரில் பதிலடி கொடுத்திருக்கிறது. டெக்னோ வெளியிட்ட டீசர் அடங்கிய டுவிட்டர் பதிவை ரிடுவீட் தெய்த நத்திங், "அடுத்த முறை எங்களின் வீட்டு பாடத்தை காப்பி அடுக்க விரும்பினால், எங்களிடம் கேளுங்கள்," என்று கூறி இருக்கிறது.

    டெக்னோ மட்டுமின்றி இன்பினிக்ஸ் நிறுவனமும் நத்திங் போன்ற டிசைன் கொண்ட ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இன்பினிக்ஸ் ஸ்மார்ட்போனின் எல்இடி லைட்களும் போன் 2 மாடலில் உள்ளதை போன்றே காட்சியளிக்கிறது. இதோடு நிறங்களும் நத்திங் போன் 2 போன்று பிளாக், வைட் ஆப்ஷன்களை கொண்டிருக்கிறது.

    இன்பினிக்ஸ் செயல்பாட்டுக்கு பதில் அளித்த நத்திங் நிறுவனர் கார்ல் பெய், "வழக்கறிஞர்களை தயார்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது," என்று தெரிவித்து இருந்தார். நத்திங் நிறுவனம் இந்த பிரச்சினையை உண்மையில் சட்டரீதியாக அணுக முடிவு செய்துவிட்டதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

    • புதிய X சேவையில் பேமன்ட் மற்றும் பேங்கிங் சார்ந்த அம்சங்கள் வழங்கப்படுகிறது.
    • மெட்டா நிறுவனம் சமீபத்தில் தான் திரெட்ஸ் பெயரில் புதிய செயலியை வெளியிட்டது.

    டுவிட்டர் லோகோவை நீல பறவையில் இருந்து X ஆக மாற்றுவதற்கான காரணத்தை எலான் மஸ்க் வெளிப்படையாக அறிவித்து இருக்கிறார். அதன்படி டுவிட்டர் சேவையை தகவல் பரிமாற்றம் மற்றும் வர்த்தக பரிமாற்றங்களை மேற்கொள்வது என பரவலான தளமாக மாற்ற எலான் மஸ்க் முடிவு செய்து இருக்கிறார். இதையே அவர் எல்லாவற்றுக்குமான செயலி என்று ஏற்கனவே தெரிவித்து இருந்தார்.

    "நிறுவனம் பெயரை மாற்றிக் கொண்டு, அதே பணிகளை மீண்டும் தொடரும் செயல் இது கிடையாது. 140 வார்த்தைகளில் தகவல் பரிமாற்றம் செய்த காலத்தில் டுவிட்டர் என்ற பெயர் அர்த்தமுள்ளதாக இருந்து வந்தது," என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

     

    புதிய X சேவையில் பேமன்ட் மற்றும் பேங்கிங் சார்ந்த அம்சங்கள் வழங்கப்படும் என்று டுவிட்டர் நிறுவன தலைமை செயல் அதிகாரி லின்டா யாக்கரினோ தெரிவித்து இருக்கிறார். எலான் மஸ்க் டுவிட்டரில் மேற்கொண்ட நடவடிக்கைகள் அனைத்தையும் கடந்து, விளம்பரதாரர்கள் மற்றும் பயனர்கள் நம்பிக்கையை மீட்டெடுக்கும் பொறுப்பை லின்டா யாக்கரினோ ஏற்றிருக்கிறார்.

    டுவிட்டரின் விளம்பர வருவாய் பாதியாக குறைந்து இருப்பதாக எலான் மஸ்க் சமீபத்தில் தெரிவித்து இருந்தார். டுவிட்டரின் நேரடி போட்டியாளரான மெட்டா பிளாட்பார்ம்ஸ் இன்க் நிறுவனம் சமீபத்தில் தான் திரெட்ஸ் பெயரில் புதிய செயலியை வெளியிட்டு இருக்கிறது. வெளியானதில் இருந்து அதிக பிரபலமாக இருந்துவந்த திரெட்ஸ் ஆப் டவுன்லோட்களில் பல சாதனைகளை படைத்தது.

    இந்த நிலையில், டுவிட்டர் தளத்தை ரிபிரான்டு செய்யும் நடவடிக்கை காரணமாக, டுவிட்டர் தளம் மீதான கவனம் தற்போது  அதிகரித்து இருக்கிறது. எனினும், இந்த நடவடிக்கை காரணமாக டுவிட்டர் நிறுவனத்தின் பிரான்டு மதிப்பில் பல பில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    ஏராளமான சீனர்கள் பயன்படுத்தி வரும் விசாட் ஆப் பற்றி எலான் மஸ்க் பேசி இருக்கிறார். டென்சென்ட் ஹோல்டிங்ஸ் லிமிடெட் உருவாக்கி இருக்கும் விசாட் ஆப் மெசேஜிங், ஆன்லைன் நிதி சேவைகள் மற்றும் நுகர்வோர் கடன் என எல்லாவற்றுக்குமான செயலியாக இருந்து வருகிறது. எனினும், எலான் மஸ்க் X செயலியை எப்படி உருவாக்க நினைத்திருக்கிறார் என்பது பற்றி எந்த தகவலும் இல்லை.

    • டுவிட்டர் தளம் X என்ற பெயரில் ரீ பிராண்டு செய்யப்படுகிறது
    • X எல்லாவற்றுக்குமான செயலியாக இருக்கும் என்றார்.

    உலகின் முன்னணி சமூக வலைதளம் டுவிட்டரில் மாற்றம் செய்வதாக வெளியாகும் எலான் மஸ்க் அறிவிப்புகள் தற்போது அனைருக்கும் பழகி போன ஒன்றாகிவிட்டது. டுவிட்டரை விலைக்கு வாங்கியதில் இருந்து டுவிட்டர் தளத்தில் எலான் மஸ்க் ஏராளமான மாற்றங்களை மேற்கொண்டு வருவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

    அந்த வரிசையில், தற்போது டுவிட்டர் தளம் விரைவில் ரீ பிராண்டு செய்யப்படுவதாக எலான் மஸ்க் அறிவித்து இருக்கிறார். அதன்படி டுவிட்டர் தளம் X என்ற பெயரில் ரீ பிராண்டு செய்யப்படுகிறது. இது எல்லாவற்றுக்குமான செயலியாக இருக்கும் என்று எலான் மஸ்க் அறிவித்து இருக்கிறார்.

    இந்நிலையில், டுவிட்டரின் புதிய லோகோவாக X மாற்றம் செய்யப்பட்டுள்ளது என எலான் மஸ்க் அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    • டுவிட்டரில் புதிய மாற்றம் விரைவில் அமலுக்கு வர இருக்கிறது.
    • டுவிட்டர் தளத்துக்கான புதிய லோகோ இப்படித் தான் காட்சியளிக்கும் என்று எலான் மஸ்க் அறிவிப்பு.

    உலகின் முன்னணி சமூக வலைதளம் டுவிட்டரில் மாற்றம் செய்வதாக வெளியாகும் எலான் மஸ்க் அறிவிப்புகள் தற்போது அனைருக்கும் பழகி போன ஒன்றாகிவிட்டது. டுவிட்டரை விலைக்கு வாங்கியதில் இருந்து டுவிட்டர் தளத்தில் எலான் மஸ்க் ஏராளமான மாற்றங்களை மேற்கொண்டு வருவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

    அந்த வரிசையில், தற்போது டுவிட்டர் தளம் விரைவில் ரிபிரான்டு செய்யப்படுவதாக எலான் மஸ்க் அறிவித்து இருக்கிறார். அதன்படி டுவிட்டர் தளம் X என்ற பெயரில் ரிபிரான்டு செய்யப்படுகிறது. இது எல்லாவற்றுக்குமான செயலியாக இருக்கும் என்று எலான் மஸ்க் அறிவித்து இருக்கிறார். புதிய மாற்றம் விரைவில் அமலுக்கு வர இருப்பதை அடுத்து, பயனர்கள் புதிய லோகோவுக்கு தயாராகும் படி எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

     

    இதைத் தொடர்ந்து X.com என்ற வலைதள முகவரியை க்ளிக் செய்தால், தற்போது டுவிட்டர் தளம் தான் திறக்கிறது. twitter.com வலைதள முகவரியும் x.com என்று மாற்றப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இதோடு டுவிட்டர் தளத்துக்கான புதிய லோகோ இப்படித் தான் காட்சியளிக்கும் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். மற்றொரு டுவிட்டர் பதிவில் எலான் மஸ்க் புதிய டுவிட்டர் லோகோவை வெளியிட்டுள்ளார்.

    எலான் மஸ்க் மட்டுமின்றி டுவிட்டர் நிறுவன தலைமை செயல் அதிகாரியான லிண்டா யாக்கரினோவும், X பற்றிய தகவல்களை தனது டுவிட்டரில் பகிர்ந்து வருகிறார். மேலும் X லோகோவை அதிகாரப்பூர்வமாக பகிர்ந்து இருக்கிறார். இது குறித்த டுவிட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது..,

    "வாழ்க்கையோ அல்லது வியாபாரமோ, பெரிய மாற்றத்தை ஏற்படுத்த இரண்டாவது வாய்ப்பு கிடைப்பது மிகவும் அரிதான காரியம் ஆகும். ஒருமுறை டுவிட்டர் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி, தகவல் பரிமாற்ற முறையை அடியோடு மாற்றியது. தற்போது X இதனை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து செல்லும். கடந்த 8 மாதங்களாக X வடிவம் பெற்று வருகிறது, ஆனால் இது வெறும் துவக்கம் மட்டும் தான்," என்று தெரிவித்தார்.

    இதோடு X எல்லாவற்றுக்குமான செயலியாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார். X-ஐ உலகிற்கு கொண்டுவருவதற்கான பணிகளில் டுவிட்டர் பணியாற்றி வருகிறது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

    • வோடபோன் ஐடியா நிறுவனம் அதிக பலன்களை வழங்கும் புதிய சேவையை அறிவித்து இருக்கிறது.
    • புதிய சேவையில் நான்கு சலுகைகள் பல்வேறு விலை பிரிவுகளில் அறிவிக்கப்பட்டு உள்ளன.

    வோடபோன் ஐடியா நிறுவனம் இந்திய பயனர்களுக்கு வி ஒன் சலுகையை அறிவித்து இருக்கிறது. இந்த சலுகை பேக்கேஜ் போன்று சேவையை பெற விரும்புவோருக்காக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதில் பைபர் கனெக்ஷன், இலவச ரவுட்டர், இன்ஸ்டாலேஷன், பிரீபெயிட் மொபைல் மற்றும் ஒடிடி ஆப்ஸ் போன்ற சேவைகள் வழங்கப்படுகின்றன.

    தற்போது ரூ. 2 ஆயிரத்து 192 துவக்க விலையில் நான்கு சலுகைகள் இடம்பெற்றுள்ளன. தற்போதைக்கு இதில் கஸ்டமைசேஷன் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இவற்றில் டேட்டா ரோல்-ஓவர் மற்றும் பின்ஜ் ஆல்நைட் இன்டர்நெட் வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. இதில் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 6 மணி வரை இலவச இண்டர்நெட் சேவையை பயன்படுத்த முடியும்.

     

    வி ஒன் ரூ. 2 ஆயிரத்து 192 சலுகை பலன்கள்:

    - அன்லிமிடெட் வாய்ஸ் காலிங், தினமும் 2 ஜிபி டேட்டா, தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கும் பிரீபெயிட் சிம்

    - 40Mbps வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா வழங்கும் பைபர் பிராட்பேன்ட் சேவை

    - 90 நாட்களுக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல்

    - 90 நாட்களுக்கு சோனிலைவ் மொபைல், வி மூவிஸ் மற்றும் டிவி விஐபி, ஹங்காமா மியூசிக்

    - 90 நாட்களுக்கு ஜீ5 சந்தா

    - இந்த சலுகையின் வேலிடிட்டி 93 நாட்கள் ஆகும்

    வி ஒன் ரூ. 3 ஆயிரத்து 109 பலன்கள்:

    - அன்லிமிடெட் வாய்ஸ் காலிங், தினமும் 2 ஜிபி டேட்டா, தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கும் பிரீபெயிட் சிம்

    - 100Mbps வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா வழங்கும் பைபர் பிராட்பேன்ட் சேவை

    - 90 நாட்களுக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல்

    - 90 நாட்களுக்கு சோனிலைவ் மொபைல், வி மூவிஸ் மற்றும் டிவி விஐபி, ஹங்காமா மியூசிக்

    - 90 நாட்களுக்கு ஜீ5 சந்தா

    - இந்த சலுகையின் வேலிடிட்டி 93 நாட்கள் ஆகும்

     

    வி ஒன் ரூ. 8 ஆயிரத்து 390 பலன்கள்:

    - அன்லிமிடெட் வாய்ஸ் காலிங், தினமும் 2 ஜிபி டேட்டா, தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கும் பிரீபெயிட் சிம்

    - 40Mbps வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா வழங்கும் பைபர் பிராட்பேன்ட் சேவை

    - ஒரு வருடத்திற்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல்

    - ஒரு வருடத்திற்கு சோனிலைவ் மொபைல், வி மூவிஸ் மற்றும் டிவி விஐபி

    - இந்த சலுகையின் வேலிடிட்டி 368 நாட்கள் ஆகும்

    வி ஒன் ரூ. 12 ஆயிரத்து 155 பலன்கள்:

    - அன்லிமிடெட் வாய்ஸ் காலிங், தினமும் 2 ஜிபி டேட்டா, தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கும் பிரீபெயிட் சிம்

    - 100Mbps வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா வழங்கும் பைபர் பிராட்பேன்ட் சேவை

    - ஒரு வருடத்திற்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல்

    - ஒரு வருடத்திற்கு சோனிலைவ் மொபைல், வி மூவிஸ் மற்றும் டிவி விஐபி

    - ஒரு வருடத்திற்கு ஜீ5 சந்தா

    - இந்த சலுகையின் வேலிடிட்டி 368 நாட்கள் ஆகும்

    • வாட்ஸ்அப் பீட்டா பயனர்கள் தங்களின் செயலியை அப்டேட் செய்து இந்த அம்சத்தை பயன்படுத்தலாம்.
    • புதிய க்ரூப் வீடியோ கால் அம்சம் வாட்ஸ்அப் செயலியின் பீட்டா வெர்ஷனில் வழங்கப்பட்டு இருக்கிறது.

    வாட்ஸ்அப் செயலியில் க்ரூப் வீடியோ கால்களில் அதிகபட்சம் 32 பேருடன் பேச முடியும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனாலும் பயனர்களால் அதிகபட்சம் 7 பேருடன் மட்டுமே க்ரூப் வீடியோ கால் பேச முடிந்தது. தற்போது 32 பேருடன் வீடியோ காலில் பேசுவதற்கு, வீடியோகால் ஏற்கனவே துவங்கி இருப்பது அவசியம் ஆகும்.

    தற்போது வாட்ஸ்அப்-இல் வெளியாகி இருக்கும் அப்டேட் மூலம் பயனர்கள் க்ரூப் வீடியோ கால்-ஐ மேற்கொள்ளும் போதே அதிகபட்சம் 15 பேருடன் உரையாட முடியும். இதற்கான அப்டேட் வாட்ஸ்அப் ஆன்ட்ராய்டு பீட்டா 2.23.15.14, 2.23.15.10, 2.23.15.11 மற்றும் 2.23.15.13 வெர்ஷன்களில் கிடைப்பதாக கூறப்படுகிறது.

     

    Photo Courtesy WaBetaInfo

    Photo Courtesy WaBetaInfo

    வாட்ஸ்அப் பீட்டா பயனர்கள் தங்களின் செயலியை அப்டேட் செய்து இந்த அம்சத்தை பயன்படுத்த துவங்கலாம். பீட்டா வெர்ஷனில் இருப்பதால், இந்த அம்சம் அனைவருக்கும் கிடைக்க மேலும் சில காலம் ஆகும். வாட்ஸ்அப்-இல் க்ரூப் வீடியோ கால் மேற்கொள்வதற்கான வழிமுறை மிகவும் எளிமையானது தான். வாட்ஸ்அப் செயலியில் கால்ஸ் டேப்-ஐ க்ளிக் செய்து, க்ரியேட் கால் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.

    இனி க்ரூப் வீடியோ கால் ஆப்ஷனில் கான்டாக்ட் லிஸ்ட்-இல் இருப்பவர்களை தேர்வு செய்ய வேண்டும் தற்போது உங்களால் அதிகபட்சம் ஏழு பேரை, கால் துவங்கும் முன் சேர்க்க முடியும். கால் துவங்கியதும், அதிகபட்சம் 32 பேரை இணைத்துக் கொள்ள முடியும். புதிய அப்டேட் மூலம் இந்த எண்ணிக்கை 15 ஆக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

    ×