search icon
என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    இனி இப்படியும் மெசேஜ் செய்யலாம்.. வாட்ஸ்அப்-இல் புது அப்டேட்
    X

    இனி இப்படியும் மெசேஜ் செய்யலாம்.. வாட்ஸ்அப்-இல் புது அப்டேட்

    • செயலியை மாற்றிக் கொள்வதற்கு வாட்ஸ்அப் செயலிக்கு ஆறு மாதம் கால அவகாசம்.
    • இதன் மூலம் தகவல் தொடர்புக்கான இடைவெளி குறையும்.

    வாட்ஸ்அப் செயலியில் புதிய ஐரோப்பிய யூனியன் விதிகளுக்கு ஏற்ற வகையில், புதிய வசதிகளை வழங்கி வருகிறது. இது குறித்த புதிய தகவல் Wabetainfo வலைதளத்தில் வெளியாகி உள்ளது. சமீபத்தில் தான் வாட்ஸ்அப் செயலியில் மல்டி-அக்கவுண்ட் அம்சம் ஆண்ட்ராய்டு பீட்டா பயனர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

    ஐரோப்பிய யூனியன் டிஜிட்டல் மார்கெட்ஸ் சட்டத்தை இயற்றி இருக்கிறது. இந்த சட்டம் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு கடுமையான விதிகளை பிறப்பித்து இருக்கிறது. இதில் பயனர்கள் இதர செயலிகளுடன் தகவல் பரிமாற்றம் செய்வதற்கான வசதியை வழங்குவதும் இடம்பெற்று இருக்கிறது.

    முன்னணி தொழில்நுட்ப தளம் என்ற அடிப்படையில், வாட்ஸ்அப் செயலியும் டிஜிட்டல் மார்கெட்ஸ் சட்டத்திற்கு உட்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இதன் காரணமாக புதிய விதிகளுக்கு ஏற்ப செயலியை மாற்றுவதற்கான பணிகளில் வாட்ஸ்அப் ஈடுபட்டு வருகிறது. இது தொடர்பான விதிகள் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.23.19.8 அப்டேட்டில் இடம்பெற்று இருக்கிறது.

    புதிய விதிகளுக்கு ஏற்ப செயலியை மாற்றிக் கொள்வதற்கு வாட்ஸ்அப் செயலிக்கு ஆறு மாதம் கால அவகாசம் வழங்கப்படுகிறது. புதிய அம்சம் கொண்டு வேறு குறுந்தகவல் செயலியை பயன்படுத்துவோரும், வாட்ஸ்அப் பயனர்களை தொடர்பு கொண்டு குறுந்தகவல் அனுப்ப முடியும். இதன் மூலம் தகவல் தொடர்புக்கான இடைவெளி குறைந்துவிடும், ஆனாலும் என்க்ரிப்ஷன் தொழில்நுட்பத்தில் சந்தேகத்தை எழுப்பும்.

    இந்த அம்சம் எவ்வாறு இயங்கும், இது தொடர்பாக ஏற்பட்டு இருக்கும் தொழில்நுட்ப விவரங்கள் மர்மமாகவே உள்ளன. எனினும், வாட்ஸ்அப் நிறுவனம் மற்ற தளங்கள் இடையேயான தகவல் பரிமாற்றத்தை ஏற்படுத்தும் சிஸ்டம்களில் முழுமையான என்ட்-டு-என்ட் என்க்ரிப்ஷன் வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும். அல்லது பயனர்கள் 7-வது விதியின் கீழ் இந்த ஆப்ஷனில் இருந்து வெளியேறும் வசதியும் வழங்கப்படும் என்று தெரிகிறது.

    மூன்றாம் தரப்பு செயலிகளுடன் தகவல் பரிமாற்றம் செய்வதற்கான வசதியை வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த வசதி செயலியின் எதிர்கால வெர்ஷனில் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

    Next Story
    ×