என் மலர்
தொழில்நுட்பம்
லாவா நிறுவனத்தின் மேட் இன் இந்தியா ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
லாவா மொபைல்ஸ் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போன் மாடல்கள் ஜனவரி 7 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படுவதாக அறிவித்து இருக்கிறது. இந்த அறிவிப்பு லாவா மொபைல்ஸ் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியாகி இருக்கிறது.
இந்திய பயனர்களிடையே சீன தயாரிப்புகளுக்கு எதிர்ப்பு மனநிலை நிலவுவதை பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில், லாவா மொபைல்ஸ் மேட் இன் இந்தியா ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்கிறது. இவை ஸ்மார்ட்போன் சந்தையில் திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் என லாவா தெரிவித்து உள்ளது.

எனினும், புதிய ஸ்மார்ட்போன்கள் பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. முன்னதாக வெளியான தகவல்களில் லாவா நிறுவனம் மொத்தம் நான்கு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்பட்டது. இவற்றின் விலை ரூ. 5 ஆயிரத்தில் துவங்கி ரூ. 20 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
புதிய லாவா ஸ்மார்ட்போன்களின் ஹார்டுவேர் அம்சங்கள் பற்றி அதிக விவரங்கள் வெளியாகவில்லை. இந்திய சந்தையில் சியோமி, விவோ, ஒப்போ போன்ற நிறுவனங்களுக்கு போட்டியாக மைக்ரோமேக்ஸ் சமீபத்தில் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது.
அந்த வகையில் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தை தொடர்ந்து லாவா நிறுவனமும் புது ஸ்மார்ட்போன்களை மேட் இன் இந்தியா பிராண்டிங்கில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய 12.9 இன்ச் ஐபேட் ப்ரோ மாடல் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஆப்பிள் நிறுவனம் 12.9 இன்ச் ஐபேட் ப்ரோ மாடல் வெளியீட்டு விவரங்கள் பல முறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. அந்த வகையில் புதியஆப்பிள் ஐபேட் ப்ரோ மாடல் மினி எல்இடி டிஸ்ப்ளே வழங்கப்படும் என கூறப்படுகிறது. மேலும் புதிய ஐபேட் தற்போதைய மாடலில் உள்ளதை விட பல மாற்றங்களை கொண்டிருக்கும் என தெரிகிறது.
புதிய 12.9 இன்ச் ஐபேட் ப்ரோ மாடல் 2021 ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே வெளியான தகவல்களிலும் புதிய ஐபேட் ப்ரோ மாடல் இதே காலக்கட்டத்தில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்டு இருந்தது.

முந்தைய தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் தனது அடுத்த தலைமுறை ஐபேட் ப்ரோ மாடல்களில் 5ஜி எம்எம்வேவ் தொழில்நுட்பத்தை வழங்க இருப்பதாக கூறப்பட்டது. இந்த தொழில்நுட்பம் அதிவேக இணைய இணைப்புகளை வழங்கும் திறன் கொண்டது.
அதன்படி 2021 ஐபேட் ப்ரோ மாடல்களில் எம்எம்வேவ் வசதி கொண்ட 5ஜி நெட்வொர்க் திறன் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதுதவிர அடுத்த தலைமுறை ஐபேட் ப்ரோ மாடல்களில் OLED ரக டிஸ்ப்ளே வழங்கப்பட இருப்பதாக கூறப்பட்டது.
இந்திய டெலிகாம் சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் வி நிறுவனங்களை ஏர்டெல் முந்தி அசத்தி இருக்கிறது.
இந்திய டெலிகாம் சந்தையில் அக்டோபர் மாதத்தில் புதிய வாடிக்கையாளர்களை இணைப்பதில் ஏர்டெல் நிறுவனம் அசத்தி இருக்கிறது. மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் இந்த தகவல் வெளியாகி உள்ளது.
2020 அக்டோபர் மாத அடிப்படையில் ஏர்டெல் நிறுவனம் 36.7 லட்சம் வயர்லெஸ் சந்தாதாரர்களை இணைத்துள்ளது. இதே காலக்கட்டத்தில் ரிலையன்ஸ் ஜியோ 14.5 லட்சம் வாடிக்கையாளர்களை இணைத்து இருக்கிறது. அக்டோபர் மாத நிலவரப்படி ஏர்டெல் நிறுவனம் சுமார் 33.02 கோடி வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 2020 அக்டோபர் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் 40.63 கோடியாக உள்ளது. ஏர்டெல் மற்றும் ஜியோ போன்று இல்லாமல் வி நிறுவன வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அக்டோபர் மாதத்தில் கணிசமான அளவு குறைந்து இருக்கிறது.
ரியல்மி நிறுவனத்தின் புதிய கியூ2 ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
ரியல்மி கியூ2 ஸ்மார்ட்போன் விவரங்கள் பிஐஎஸ் வலைதளத்தில் லீக் ஆகி இருக்கிறது. இந்த ரியல்மி ஸ்மார்ட்போன் RMX2117 எனும் மாடல் நம்பர் கொண்டு உருவாகி வருகிறது. பிஐஎஸ் வலைதளத்தில் இடம்பெற்று இருப்பதால், விரைவில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் ரியல்மி கியூ2 ப்ரோ மாடலுடன் அக்டோபர் மாதத்தில் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்படி ரியல்மி கியூ2 ஸ்மார்ட்போன் 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, மீடியாடெக் டிமென்சிட்டி 800யு பிராசஸர், 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, மெமரியை நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி மேக்ரோ லென்ஸ் மற்றும் 16 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. கனெக்டிவிட்டிக்கு 5ஜி, 4ஜி வோல்ட்இ, டூயல் பேண்ட் வைபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப் சி வழங்கப்பட்டு உள்ளது.
இத்துடன் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 30 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. சீன சந்தையில் ரியல்மி கியூ2 மாடல் விலை 1299 RMB இந்திய மதிப்பில் ரூ. 14 ஆயிரத்தில் துவங்குகிறது.
ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்களில் வழங்கி இருக்கும் ரகசிய அம்சம் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
ஆப்பிள் ஐஒஎஸ் தளம் ஐபோன் பயன்படுத்துவோருக்கு ரிமைண்டர், நோட்ஸ் மற்றும் காலண்டர் என சில பொதுவான அம்சங்களை வழங்கி வருகிறது. இவை அனைத்திற்கும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் அதிகப்படியான மூன்றாம் தரப்பு செயலிகள் கிடைக்கின்றன.
பெரும்பாலான ஐபோன் பயனர்கள் தங்களது மாடலில் உள்ள மறைக்கப்பட்டு இருக்கும் ரகசிய அம்சங்களை இயக்க தவறிவிடுகின்றனர். அந்த வகையில் ஐபோன் கால்குலேட்டர் செயலியில் மறைக்கப்பட்ட அம்சம் உள்ளதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி கால்குலேட்டர் செயலியில் அறிவியல் கால்குலேட்டர் மோட் மறைக்கப்பட்டு ரகசியமாக வழங்கப்படுகிறது. எனினும், கால்குலேட்டர் செயலிக்கு சென்று பயனர்கள் இதனை ஆக்டிவேட் செய்ய வேண்டும். ஐபோனில் கால்குலேட்டர் செயலியை திறந்ததும், போனினை கிடைமட்ட வடிவில் வைக்க வேண்டும்.
இவ்வாறு செய்யும் போது சாதாரண கால்குலேட்டர் செயலி அறிவியல் அம்சங்கள் நிறைந்த கால்குலேட்டராக மாறிவிடும். ஒருவேளை ஐபோனில் டில்ட் அம்சத்தை ஆஃப் செய்து இருப்பவர்கள், அதனை கண்ட்ரோல் சென்ட்டரில் இருந்து Portrait Orientation Lock அம்சத்தை ஆஃப் செய்ய வேண்டும்.
சியோமி நிறுவனம் மூன்றுவித மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சியோமி நிறுவனம் மூன்று மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இவை மூன்றும் வெவ்வேறு வடிவமைப்புகளை கொண்டிருக்கும் என்றும் இவை அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யலாம் என்றும் கூறப்படுகிறது.
இதுகுறித்து டிஸ்ப்ளே வடிவமைப்பு வல்லுநரான ரோஸ் யங் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் சியோமி நிறுவனத்தின் மூன்று மாடல்கள் - வெளிப்புறம் மடிக்கும் தன்மை, உள்புறம் மடிக்கும் தன்மை மற்றும் கிளாம்ஷெல் வடிவமைப்பு கொண்டிருக்கும் என குறிப்பிட்டு இருக்கிறார்.

இதில் வெளிப்புறம் மடிக்கும் தன்மை கொண்ட மாடல் ஹூவாய் மேட் எக்ஸ் போன்று காட்சியளிக்கும் என்றும் இந்த ஸ்மார்ட்போன் 8 இன்ச் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
முன்னதாக ரோஸ் யங் ஒப்போ, விவோ மற்றும் சியோமி நிறுவனங்கள் ஒன்றிணைந்து நான்கு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை 2021 ஆண்டு வெளியிடும் என ஏற்கனவே தெரிவித்து இருந்தார்.
சமீபத்தில் சியோமி நிறுவனம் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனிற்கான காப்புரிமை கோரி விண்ணப்பித்து இருந்தது. இது குவாட் கேமரா செட்டப் மற்றும் சுழலும் தன்மை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி பட்ஸ் ப்ரோ மாடல் விலை விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி பட்ஸ் ப்ரோ மாடல் விலை விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அதன்படி புதிய சாம்சங் கேலக்ஸி பட்ஸ் ப்ரோ விலை 199 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 14,600 வரை நிர்ணயம் செய்யலாம் என கூறப்படுகிறது.
இது உண்மையாகும் பட்சத்தில் இது சாம்சங் நிறுவனத்தின் விலை உயர்ந்த வயர்லெஸ் இயர்போனாக இருக்கும். புதிய கேலக்ஸி பட்ஸ் ப்ரோ மாடல் ஆப்பிள் ஏர்பாட்ஸ் ப்ரோ மற்றும் சோனி WF-1000XM3 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது.

முன்னதாக சாம்சங் நிறுவனம் கேலக்ஸி பட்ஸ் லைவ் எனும் பெயரில் புதிய இயர்போன் மாடலை அறிமுகம் செய்தது. சாம்சங் கேலக்ஸி பட்ஸ் லைவ் விலை சர்வதேச சந்தையில் 169 டாலர்கள் என்றும் இந்தியாவில் இது ரூ. 14,900 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.
அந்த வகையில் புதிய கேலக்ஸி பட்ஸ் ப்ரோ விலை இந்திய சந்தையில் ரூ. 20 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. தற்சமயம் சோனி WF-1000XM3 மாடல் ரூ. 19,990 என்றும் ஆப்பிள் ஏர்பாட்ஸ் ப்ரோ மாடல் விலை ரூ. 19,990 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றன.
பிஎஸ்என்எல் நிறுவனம் குறைந்த விலை பிரீபெயிட் சலுகையை அறிவித்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
பிஎஸ்என்எல் ரூ. 199 பிரீபெயிட் சலுகை இந்தியாவில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த சலுகையில் பயனர்களுக்கு 2 ஜிபி டேட்டா, தினமும் 100 எஸ்எம்எஸ், 250 நிமிடங்கள் வாய்ஸ் கால் உள்ளிட்டவை 30 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.
புதிய சலுகை தவிர பிஎஸ்என்எல் ரூ. 998 விலை சலுகை பலன்களை மாற்றுவதாக அறிவித்து உள்ளது. அதன்படி பிஎஸ்என்எல் ரூ. 998 சலுகையில் தினமும் 3 ஜிபி டேட்டா, வழங்கப்படுகிறது. முன்னதாக இந்த சலுகையில் தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கப்பட்டு இருந்தது.

பிஎஸ்என்எல் ரூ. 998 விலை சலுகை 240 நாட்கள் வேலிடிட்டி கொண்டது ஆகும். இந்த சலுகை மாற்றம் பிஎஸ்என்எல் கேரளா வட்டாரத்திற்கான ட்விட்டர்பக்கத்திலும், ரூ. 199 பிஎஸ்என்எல் சலுகை அறிவிப்பு ராஜஸ்தான் வட்டாரத்திற்கான ட்விட்டர் பக்கத்திலும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
அந்த வகையில் புதிய பிஎஸ்என்எல் ரூ. 199 சலுகை மற்றும் ரூ. 998 சலுகை மாற்றம் அந்தந்த வட்டாரங்களில் முதற்கட்டமாக வழங்கப்படுகிறது. விரைவில் இவை நாடு முழுக்க அனைத்து வட்டாரங்களிலும் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஒன்பிளஸ் 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுடன் புது வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஸ்மார்ட்போன் சந்தையில் ஒன்பிளஸ் 9 சீரிஸ் பிளாக்ஷிப் மாடல்கள் தற்சமயம் அதிகம் எதிர்பார்க்கப்படுகின்றன. புதிய ஒன்பிளஸ் 9 சீரிஸ் புதிதாக பேஸ் மாடல் மற்றும் ப்ரோ வேரியண்ட் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. தற்போதைய தகவல்களில் ஒன்பிளஸ் 9 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என தெரிகிறது.
புதிய ஒன்பிளஸ் 9 லைட் ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. ஒன்பிளஸ் 9 மற்றும் ஒன்பிளஸ் 9 ப்ரோ ஸ்மார்ட்போன்களில் ஸ்னாப்டிராகன் 888 5ஜி பிராசஸர் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

ஒன்பிளஸ் 9 சீரிஸ் மாடல்களில் ஒன்பிளஸ் 9 லைட் பல்வேறு அம்சங்கள் ஒரே மாதிரி கொண்டிருக்கும் என தெரிகிறது. அதன்படி அனைத்து புதிய ஸ்மார்ட்போன்களில் ஒரே மாதிரியான கேமரா செட்டப், டிஸ்ப்ளே செட்டிங், மென்பொருள் அனுபவம் கொண்டிருக்கும்.
சர்வதேச சந்தையில் ஒன்பிளஸ் 9 லைட் மாடல் விலை 600 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 44,100 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது. ஒன்பிளஸ் 9 லைட் ஸ்மார்ட்போன் சாம்சங் கேலக்ஸி எஸ்20 எப்இ மாடலுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது.
விவோ நிறுவனத்தின் வி20 2021 ஸ்மார்ட்போன் ரூ. 24,990 விலையில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
விவோ நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வி20 2021 ஸ்மார்ட்போன் இந்திய விலை அறிவிக்கப்பட்டது. இதன் விற்பனை அமேசான் தளத்தில் நடைபெறுகிறது. தோற்றத்தில் இந்த ஸ்மார்ட்போன் ஏற்கனவே அக்டோபர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட விவோ வி20 போன்றே காட்சியளிக்கிறது.
எனினும், புதிய விவோ வி20 2021 மாடலில் ஸ்னாப்டிராகன் 730ஜி பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. இதுதவிர இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
அந்த வகையில் விவோ வி20 2021 ஸ்மார்ட்போனில் 6.44 இன்ச் FHD பிளஸ் 1080x2400 பிக்சல் AMOLED டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 730ஜி பிராசஸர், 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

புகைப்படங்களை எடுக்க 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி இரண்டாவது கேமரா, 2 எம்பி மோனோ சென்சார், 44 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் பன்டச் ஒஎஸ் 11 சார்ந்த ஆண்ட்ராய்டு 10, டூயல் சிம் ஸ்லாட், இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது.
4000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படும் விவோ வி20 2021 பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது. இத்துடன் 4ஜி எல்டிஇ, வைபை, ப்ளூடூத், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப் சி கனெக்டிவிட்டி வழங்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில் புதிய விவோ வி20 2021 ஸ்மார்ட்போனின் விலை ரூ. 24,990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மிட்நைட் ஜாஸ் மற்றும் சன்செட் மெலடி நிறங்களில் கிடைக்கிறது.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய பிளாக்ஷிப் சீரிஸ் ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போன்கள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. இந்நிலையில், புதிய ஒன்பிளஸ் 9 சீரிஸ் விவரங்கள் கடந்த சில மாதங்களாக இணையத்தில் வெளியாகி வருகின்றன.
அந்த வரிசையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி புதிய ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போன் 50 எம்பி அல்ட்ரா விஷன் வைடு ஆங்கில் கேமரா கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் 20 எம்பி சினி கேமரா, அல்ட்ரா வைடு லென்ஸ் மற்றும் 12 எம்பி டெலிபோட்டோ கேமரா வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

ஒன்பிளஸ் 9 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்
இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போனில் 6.55 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் 1080x2400 பிக்சல் ஹோல் பன்ச் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர், 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்துடன் ஆக்சிஜன் ஒஎஸ் சார்ந்த ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ், 50 எம்பி அல்ட்ரா விஷன் வைடு ஆங்கில் லென்ஸ், 20 எம்பி சினி கேமரா, அல்ட்ரா வைடு லென்ஸ், 12 எம்பி டெலிபோட்டோ கேமரா, கைரேகை சென்சார், 4500 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம்.
டெக்னோ நிறுவனத்தின் புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
டிரான்சிஷன் இந்தியா நிறுவனம் டெக்னோ ஸ்பார்க் 6 கோ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 6.52 இன்ச் ஹெச்டி பிளஸ் 1600x720 பிக்சல் HD+ 20:9, 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே, ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஏ25 பிராசஸர், IMG பவர்விஆர் GE8320 GPU கிராபிக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது.
இத்துடன் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி, டூயல் சிம் ஸ்லாட், வழங்கப்பட்டு இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, ஏஐ லென்ஸ், 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்படுகிறது.

ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஹைஒஎஸ் 6.2 கொண்டிருக்கும் டெக்னோ ஸ்பார்க் 6 கோ ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார், கிரேடியன்ட் டிசைன் கொண்டிருக்கிறது. மேலும் 3.5mm ஆடியோ ஜாக், டிடிஎஸ் ஹெச்டி சரவுண்ட் சவுண்ட், 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, மைக்ரோ யுஎஸ்பி போர்ட் மற்றும் 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது.
டெக்னோ ஸ்பார்க் 6 கோ ஸ்மார்ட்போன் மிஸ்ட்ரி வைட், ஐஸ் ஜடைட் மற்றும் அக்வா புளூ நிறங்களில் கிடைக்கிறது. இந்தயாவில் இதன் விலை ரூ. 8499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.






