என் மலர்
தொழில்நுட்பம்
சியோமி நிறுவனம் தனது எம்ஐ 10ஐ ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதியை அறிவித்து இருக்கிறது.
சியோமி நிறுவனம் தனது எம்ஐ 10ஐ ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஜனவரி 5 ஆம் தேதி அறிமுகம் ஆகும் என அறிவித்து உள்ளது. இது சியோமி கடந்த மாதம் சீன சந்தையில் அறிமுகம் செய்த ரெட்மி நோட் 9 ப்ரோ 5ஜி மாடல் ஆகும்.
சமீபத்தில் இந்த ஸ்மார்ட்போன் விவரங்கள் கீக்பென்ச் தளத்தில் வெளியானதோடு, பிஐஎஸ் சான்று பெற்று இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 6.67 இன்ச் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 750ஜி பிராசஸர், 108 எம்பி பிரைமரி கேமரா சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளது.

சியோமி எம்ஐ 10ஐ சிறப்பம்சங்கள்
- 6.67 இன்ச் 1080×2400 பிக்சல் FHD+ 20:9 LCD ஸ்கிரீன்
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 750ஜி பிராசஸர்
- அட்ரினோ 619 GPU
- 6 ஜிபி / 8 ஜிபி LPDDR4X ரேம்
- 128 ஜிபி (UFS 2.2) மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 10 மற்றும் எம்ஐயுஐ 12
- ஹைப்ரிட் டூயல் சிம்
- 108 எம்பி பிரைமரி கேமரா, 0.7μm, f/1.75, LED பிளாஷ்
- 8 எம்பி 120° அல்ட்ரா வைடு சென்சார்
- 2 எம்பி டெப்த் கேமரா
- 2 எம்பி மேக்ரோ கேமரா
- 16 எம்பி செல்பி கேமரா
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- 3.5mm ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஹை-ரெஸ் ஆடியோ
- ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் (P2i coating)
- 5ஜி SA/ NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1
- யுஎஸ்பி டைப் சி
- 4820mAh பேட்டரி
- 33 வாட் பாஸ்ட் சார்ஜிங்
அமேசான் நிறுவன ஊழியர்கள் ரூ. 1 கோடி மதிப்புள்ள மொபைல் போன்களை திருடி வசமாக சிக்கியயுள்ளனர்.
அமேசான் நிறுவனத்தின் குருகிராம் கிடங்கில் இருந்து மொபைல் போன்களை திருடிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். கிடங்கில் கொரோனாவைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கிடங்கில் பாதுகாப்பு குறைக்கப்பட்டதை ஊழியர்கள் பயன்படுத்திக் கொண்டதாக காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
குருகிராம் கிடங்கில் இருந்து ஊழியர்கள் மொத்தம் 78 மொபைல் போன்களை திருடி உள்ளனர். இவற்றின் மதிப்பு ரூ. 1 கோடி ஆகும். வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்ய ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு இருந்த அனுமதியை தவறாக பயன்படுத்தி திருட்டு சம்பவம் அரங்கேற்றப்பட்டு இருக்கிறது.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ. 50 லட்சம் மதிப்புள்ள 38 ஸ்மார்ட்போன்கள் மீட்கப்பட்டு உள்ளன. மீதமுள்ள 40 போன்கள் தொடர்ந்து மாயமாக உள்ளது. கைதான ஊழியர்கள் நாள் ஒன்றுக்கு ஒரு ஐபோன் என இரண்டு மாதங்கள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
இந்த சம்பவம் ஆகஸ்ட் 28 ஆம் தேதி வெளிச்சத்திற்கு வந்தது. பின் அமேசான் நடத்திய ஆய்வில் இரு ஊழியர்கள் மொபைல் போன்களை திருடி சென்று விற்றதை ஒப்புக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
புதுவித வடிவமைப்பு கொண்ட ஒன்பிளஸ் 8டி கான்செப்ட் போன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஒன்பிளஸ் 8டி கான்செப்ட் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த கான்செப்ட் போனின் பேக் பேனல் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. மேலும், இதில் ரியாக்டிவ் சென்சிங் எனும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.
இது எம்எம்வேவ் சென்சிங் தொழில்நுட்பத்தின் உதவியுடன் பேக் பேனல் நிறத்தை டார்க் புளூ-வில் இருந்து சில்வர் நிறத்திற்கு தானாக மாற்றும். ஸ்மார்ட்போனில் நோட்டிபிகேஷன் வரும் போது இந்த அம்சம் இயங்குகிறது. இத்துடன் பிரீத்திங் மாணிட்டர் எனும் அம்சத்தை ஒன்பிளஸ் அறிவித்து உள்ளது.

இந்த அம்சமும் 5ஜி-யின் அங்கமான எம்எம்வேவ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பயனர் மூச்சுவிடுவதை டிராக் செய்து பேக் பேனல் நிறத்தை அதற்கு ஏற்ற வகையில் மாற்றுகிறது. புதிய கான்செப்ட் போன் ஒன்பிளஸ் 8டி மாடலை விட அதிக வித்தியாசங்கள் இன்றி உருவாக்கப்பட்டு உள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ22 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ22 5ஜி ஸ்மார்ட்போன் 2021 ஆண்டின் இரண்டாவது அரையாண்டு காலக்கட்டத்தில் அறிமுகம் ஆகலாம் என தகவல் வெளியாகி உள்ளது. முதற்கட்டமாக இந்த ஸ்மார்ட்போன் இந்தியா மற்றும் இதர தென் கிழக்கு ஆசிய நாடுகளில் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
கேலக்ஸி ஏ22 5ஜி ஸ்மார்ட்போன், சாம்சங் நிறுவனம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அறிமுகம் செய்த கேலக்ஸி ஏ21 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். கேலக்ஸி ஏ22 5ஜி தவிர சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ32 5ஜி ஸ்மார்ட்போனையும் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய தகவல்களின் படி கேலக்ஸி ஏ22 5ஜி ஸ்மார்ட்போனின் விலை இந்திய மதிப்பில் ரூ. 15 ஆயிரம் பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது. கேலக்ஸி ஏ22 5ஜி ஸ்மார்ட்போன் ஹூவாய், ஒப்போ, விவோ மற்றும் சியோமி நிறுவன மாடல்களுக்கு போட்டியாக அமையலாம்.
சிறப்பம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி ஏ22 5ஜி ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர், மூன்று பிரைமரி கேமரா வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
அசத்தல் அம்சங்கள் நிறைந்த ஐகூ 7 ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
ஐகூ 7 ஸ்மார்ட்போன் விரைவில் வெளியாகும் என அந்நிறுவனம் அறிவித்து உள்ளது. டீசரில் ஸ்மார்ட்போனின் சரியான வெளியீட்டு தேதி குறிப்பிடப்படவில்லை.
எனினும், டீசர்களின்படி இந்த ஸ்மார்ட்போன் மூன்று கேமரா சென்சார், பின்புறம் பிரத்யேக பினிஷ் கொண்டிருக்கும் என தெரிகிறது. இத்துடன் ஐகூ7 பிஎம்டபிள்யூ ஸ்பெஷல் எடிஷன் மாடலும் அறிமுகம் செய்யப்படலாம் என தெரியவந்து இருக்கிறது.
இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஐகூ 7 ஸ்மார்ட்போனில் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படும் என கூறப்படுகிறது. புதிய ஐகூ 7 ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட ஐகூ 5 மாடலுக்கு மாற்றாக மேம்பட்ட அம்சங்களுடன் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முந்தைய ஐகூ 5 சீரிஸ் ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர் வழங்கப்பட்டு இருந்தது. அந்த வகையில் புதிய ஐகூ 7 மாடலில் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. மேலும் ஐகூ 7 மாடலுடன் ஐகூ 7 ப்ரோ ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது.
ஆப்பிள் நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனையை அதிகப்படுத்த அசத்தல் திட்டம் தீட்டியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆப்பிள் நிறுவனம் 2021 ஆண்டு இந்திய சந்தையில் விற்பனையை அதிகப்படுத்தும் நோக்கில் அசத்தல் திட்டம் தீட்டி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 2020 ஆண்டு இந்திய சந்தையில் ஆப்பிள் நிறுவனம் வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது.
ஐபோன் 11 மற்றும் ஐபோன் 12 மாடல்கள் அதிக பிரபலமாக இருந்ததோடு ஐபோன் XR போன்ற மாடல்களின் விலை குறைப்பு காரணமாக அதிகளவு விற்பனையாகி இருந்தது.
முன்னணி ஆய்வு நிறுவனமான இந்திய டேட்டா கார்ப்பரேஷன் வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி அக்டோபர் மாதத்தில் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரூ. 35 ஆயிரம் முதல் ரூ. 51 ஆயிரம் விலை கொண்ட ஸ்மார்ட்போன்கள் விற்பனை பலமடங்கு அதிகரித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இதற்கு ஐபோன் XR மற்றும் ஐபோன் 11 மாடல்களுக்கு அதிரடி விலை குறைப்பு மற்றும் சலுகைகள் வழங்கப்பட்டது முக்கிய காரணமாக கூறப்படுகிறது. மேலும் அக்டோபர் மாதத்தில் பிரீமியம் சந்தை 16 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது. இதில் ஆப்பிள் நிறுவனம் இந்தியாவின் 50 இல் 49 நகரங்களில் முன்னிலை வகித்து இருக்கிறது.
இந்திய சந்தையில் ஆப்பிள் நிறுவனத்தின் அசுர வளர்ச்சிக்கு ஐபோன் 11 மற்றும் 12 வெளியீடு, ஐபோன் எஸ்இ2 வெளியீடு மற்றும் கடந்த ஆண்டு அறிமுகமான ஐபோன்களுக்கு அறிவிக்கப்பட்ட விலை குறைப்பு உள்ளிட்டவை முக்கிய காரணம் என கூறப்படுகிறது.
அந்த வகையில் 2021 ஆண்டு ஆப்பிள் நிறுவனம் ஆப்பிள் பிரியர்கள் மட்டுமின்றி மிட்-பிரீமியம் வாடிக்கையாளர்களை குறி வைத்து புது சலுகைகள் மற்றும் அறிவிப்புகளை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய மோட்டோ ஜி பிளே 2021 ஸ்மார்ட்போன் விவரங்கள் கூகுள் பிளே கன்சோலில் லீக் ஆகி உள்ளது.
மோட்டோரோலா மோட்டோ ஜி பிளே 2021 ஸ்மார்ட்போன் கூகுள் பிளே கன்சோலில் பட்டியலிடப்பட்டு உள்ளது. இதில் ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள் மற்றும் சிறப்பம்சங்கள் தெரியவந்துள்ளது.
கூகுள் பிளே கன்சோல் தளத்தின் படி மோட்டோ ஜி பிளே 2021 ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 450 பிராசஸர், அட்ரினோ 610 ஜிபியு, 6.5 இன்ச் 720x1600 பிக்சல் டிஸ்ப்ளே, 3 ஜிபி ரேம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டு உள்ளது. முன்புறம் நாட்ச் டிசைன் செல்பி கேமரா, பெசல்கள் காணப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போனின் பவர் மற்றும் வால்யூம் பட்டன்கள் வலதுபுறத்தில் காணப்படுகிறது. தற்சமயம் பட்டியலிடப்பட்டு இருப்பது கோப்புப்படமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. அந்த வகையில் மோட்டோ ஜி பிளே 2021 உண்மை தோற்றத்தில் வேறுபாடு இருக்கலாம்.
முன்னதாக மோட்டோ ஜி பிளே 2021 விவரங்கள் அடங்கிய ஸ்மார்ட்போன் கீக்பென்ச் தளத்தில் பட்டியலிடப்பட்டு இருந்தது. அந்த ஸ்மார்ட்போனிலும் ஸ்னாப்டிராகன் 460 பிராசஸர், 3 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருந்தது. இது சிங்கில் கோர் சோதனையில் 253 புள்ளிகளையும், மல்டி கோரில் 1233 புள்ளிகளை பெற்று இருந்தது.
வோடபோன் ஐடியா நிறுவனம் ரூ. 399 விலையில் புதிய சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
வோடபோன் ஐடியா நிறுவனம் ரூ. 399 விலையில் பிரத்யேக டிஜிட்டல் சலுகையை அறிவித்து இருக்கிறது. இந்த சலுகை வலைதளத்தில் புதிய சிம் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இது பிரீபெயிட் மற்றும் போஸ்ட்பெயிட் இணைப்புகளுக்கு பொருந்தும்.
ரூ. 399 விலை பிரீபெயிட் சலுகையில் டேட்டா, எஸ்எம்எஸ் மற்றும் ரூ. 297 சலுகையை விட அதிக வேலிடிட்டி வழங்கப்படுகிறது. மேலும் வி திரைப்படங்கள் மற்றும் டிவி சேவை உள்ளிட்டவை கூடுதலாக வழங்கப்படுகின்றன. போஸ்ட்பெயிட் சலுகையில் 150 ஜிபி டேட்டா, ரோல் ஓவர் வசதி, எஸ்எம்எஸ் உள்ளிட்ட பலன்கள் கிடைக்கிறது.
வி வலைதளத்தில் புதிய சிம் வாங்குவோர் ரூ. 399 சலுகையை தேர்வு செய்யலாம். இது பிரீபெயிட் மற்றும் போஸ்ட்பெயிட் கனெக்ஷன்களில் வழங்கப்படுகிறது. ரூ. 399 பிரீபெயிட் சலுகையில் தினமும் 1.5 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை 56 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
போஸ்ட்பெயிட் ரூ. 399 சலுகையில் 40 ஜிபி டேட்டா, மாதம் 100 எஸ்எம்எஸ், ஆறு மாதங்களுக்கு 150 ஜிபி டேட்டா, 200 ஜிபி ரோல் ஒவர், வி திரைப்படங்கள் மற்றும் தொலைகாட்சி சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
அமேஸ்பிட் ஜிடிஎஸ் 2 ஸ்மார்ட்வாட்ச் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஹூவாமி நிறுவனம் தனது ஜிடிஎஸ் 2 ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் டிசம்பர் 21 ஆம் தேதியாவில் அறிமுகமாகும் என அறிவித்து இருக்கிறது. அமேஸ்பிட் ஜிடிஎஸ் 2 ஸ்மார்ட்வாட்ச் 1.65 இன்ச் AMOLED ஸ்கிரீன், ஹெச்டி ரெசல்யூஷன், அலுமினியம் பாடி, 3டி கார்னிங் கொரில்லா கிளாஸ், ஸ்கிராட்ச் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது.
மேலும் இதில் 50-க்கும் அதிக வாட்ச் பேஸ்கள், spo2 மாணிட்டரிங், ஜிபிஎஸ் வசதி, 90-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள் வழங்கப்பட்டு உள்ளன. இதுதவிர புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலில் பல்வேறு அசத்தலான அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.

அமேஸ்பிட் ஜிடிஎஸ் 2 சிறப்பம்சங்கள்
- 1.65 இன்ச் 348X442 பிக்சல் AMOLED 341PPI ஸ்கிரீன்
- 3D கிளாஸ்
- ஆண்ட்ராய்டு 5.0 அல்லது ஐஒஎஸ் iOS 10.0 மற்றும் அதற்கும் பின் வெளியான ஒஎஸ் வசதி
- 90-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள்
- ஆக்டிவிட்டி டிராக்கிங், ஸ்டெப் கவுண்ட்
- ஹூவாமி உருவாக்கிய பயோ டிராக்கர்
- அலுமினியம் அலாய் + பிளாஸ்டிக் பாடி
- வாட்டர் ரெசிஸ்டண்ட் (5ATM / 50 Meters)
- ப்ளூடூத் 5.0 LE, வைபை, ஜிபிஎஸ்
- 3 ஜிபி மெமரி
- மைக்ரோபோன்
- 246mAh பேட்டரி
அமேஸ்பிட் ஜிடிஎஸ் 2 ஸ்மார்ட்வாட்ச் மிட்நைட் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 12,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை அமேசான் தளத்தில் டிசம்பர் 21 ஆம் தேதி துவங்குகிறது.
வாட்ஸ்அப் வெப் தளத்தில் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் வசதி வழங்கப்படுகிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
வாட்ஸ்அப் வெப் பயனர்களுக்கு வாய்ஸ் மற்றும் வீடியோ கால் வசதி வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இதன் மூலம் பயனர்கள் டெஸ்க்டாப் மூலமாக வாட்ஸ்அப் அழைப்புகளை மேற்கொள்ளலாம். இதுவரை வாட்ஸ்அப் கால் வசதி மொபைல் சாதனங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.
தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி வாட்ஸ்அப் அழைப்புகள் டெஸ்க்டாப் வெர்ஷனிலும் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. தற்சமயம் இந்த அம்சம் பீட்டா பதிப்பில் வழங்கப்படுகிறது. இந்த அப்டேட் விரைவில் அனைவருக்கும் வழங்கப்படலாம்.
வாட்ஸ்அப் வெப் தளத்தில் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் சேவை வழங்கப்பட்டாலும், முதற்கட்டமாக இது தேர்வு செய்யப்பட்ட சிலருக்கு மட்டுமே வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.
இதே அம்சம் பீட்டா பதிப்பில் சோதனை செய்யப்படுகிறது. அந்த வகையில், இந்த அம்சம் செயலியின் ஸ்டேபில் வெர்ஷனுக்கு விரைவில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கலாம்.
டிமென்சிட்டி 720 பிராசஸர் கொண்ட ஒப்போ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
ஒப்போ நிறுவனம் ஏ53 5ஜி ஸ்மார்ட்போனினை சீன சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் FHD+LCD டிஸ்ப்ளே, 8 எம்பி செல்பி கேமரா, மீடியாடெக் டிமென்சிட்டி 720 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.
புகைப்படங்களை எடுக்க 16 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா, 2 எம்பி போர்டிரெயிட் சென்சார் வழங்கப்பட்டு உள்ளது.

ஒப்போ ஏ53 5ஜி சிறப்பம்சங்கள்
- 6.5 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+ 90Hz LCD ஸ்கிரீன்
- ஆக்டாகோர் மீடியாடெக் டிமென்சிட்டி 720 பிராசஸர்
- மாலி-G57 MC3 GPU
- 4 ஜிபி / 6 ஜிபி LPDDR4x ரேம்
- 128 ஜிபி (UFS 2.1) மெமரி
- டூயல் சிம்
- கலர் ஒஎஸ் 7.2 சார்ந்த ஆண்ட்ராய்டு 10
- 16 எம்பி பிரைமரி கேமரா, f/2.2, PDAF, LED பிளாஷ்
- 2 எம்பி டெப்த் கேமரா
- 2 எம்பி மேக்ரோ கேமரா, f/2.4
- 8 எம்பி செல்பி கேமரா, f/2.0
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ
- 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 802.11 ac, ப்ளூடூத் 5.1
- யுஎஸ்பி டைப் சி
- 4040mAh பேட்டரி
- 18 வாட் சார்ஜிங்
ஒப்போ ஏ53 5ஜி ஸ்மார்ட்போன் பிளாக், பர்ப்பிள் மற்றும் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை 1299 யுவான் இந்திய மதிப்பில் ரூ. 14,610 என்றும் 6 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை இதுவரை அறிவிக்கப்படவில்லை.
பப்ஜி மொபைல் கேம் இந்திய வெளியீட்டில் திடீர் திருப்பம் ஏற்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
இந்தியாவில் பப்ஜி கேம் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் மீண்டும் பப்ஜி கேம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த வகையில் பப்ஜி மொபைல் கேமிற்கான டீசர் வெளியிடப்பட்டது. எனினும், இந்த கேமின் சரியான வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பப்ஜி மொபைல் கேம் மீண்டும் இந்தியாவில் வெளியாகுமா என நவம்பர் 30ஆம் தேதி மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திடம் கேள்வி எழுப்பப்பட்டு இருந்தது.
இதற்கு பதில் அளித்த மத்திய அமைச்சகம் இந்தியாவில் பப்ஜி மொபைல் கேம் மீண்டும் வெளியிடப்படுவதற்கான அனுமதி இதுவரை வழங்கப்படவில்லை என தெரிவித்துள்ளது. பப்ஜி மொபைல் தாய் நிறுவனம் சீனாவின் டென்சன்ட் நிறுவனத்துடனான தனது ஒப்பந்தத்தை முடித்துக் கொண்டது.
தற்போது பப்ஜி மொபைல் கேம் மீண்டும் புது அம்சங்களுடன் இந்தியாவில் வெளியிடப்படும் என்று பப்ஜி நிறுவனம் தெரிவித்து இருந்தது.






