search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    லாவா
    X
    லாவா

    புதிய ஸ்மார்ட்போன்களின் இந்திய வெளியீட்டு தேதியை அறிவித்த லாவா மொபைல்ஸ்

    லாவா நிறுவனத்தின் மேட் இன் இந்தியா ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    லாவா மொபைல்ஸ் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போன் மாடல்கள் ஜனவரி 7 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படுவதாக அறிவித்து இருக்கிறது. இந்த அறிவிப்பு லாவா மொபைல்ஸ் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியாகி இருக்கிறது.

    இந்திய பயனர்களிடையே சீன தயாரிப்புகளுக்கு எதிர்ப்பு மனநிலை நிலவுவதை பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில், லாவா மொபைல்ஸ் மேட் இன் இந்தியா ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்கிறது. இவை ஸ்மார்ட்போன் சந்தையில் திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் என லாவா தெரிவித்து உள்ளது.

     லாவா

    எனினும், புதிய ஸ்மார்ட்போன்கள் பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. முன்னதாக வெளியான தகவல்களில் லாவா நிறுவனம் மொத்தம் நான்கு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்பட்டது. இவற்றின் விலை ரூ. 5 ஆயிரத்தில் துவங்கி ரூ. 20 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

    புதிய லாவா ஸ்மார்ட்போன்களின் ஹார்டுவேர் அம்சங்கள் பற்றி அதிக விவரங்கள் வெளியாகவில்லை. இந்திய சந்தையில் சியோமி, விவோ, ஒப்போ போன்ற நிறுவனங்களுக்கு போட்டியாக மைக்ரோமேக்ஸ் சமீபத்தில் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது.

    அந்த வகையில் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தை தொடர்ந்து லாவா நிறுவனமும் புது ஸ்மார்ட்போன்களை மேட் இன் இந்தியா பிராண்டிங்கில் அறிமுகம் செய்ய இருக்கிறது. 

    Next Story
    ×