என் மலர்
புதிய கேஜெட்டுகள்
மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய பட்ஜெட் ரக சவுண்ட்பார் மற்றும் ஹோம் தியேட்டர் மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன.
மோட்டோரோலா நிறுவனம் இந்திய சந்தையில் புதிய சவுண்ட்பார் மற்றும் ஹோம் தியேட்டர் மாடல்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்து உள்ளது.
மோட்டோரோலாவின் புதிய 2.1 சேனல் சவுண்ட்பார், கன்வெர்டிபிள் சவுண்ட்பார் மற்றும் 4.1 சேனல் ஹோம் தியேட்டர் மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன. இவை அனைத்திலும் ஹெச்டிஎம்ஐ ஏஆர்சி, சப்வூஃபர் மற்றும் பெரிய ரிமோட் கண்ட்ரோல் வழங்கப்பட்டு இருக்கிறது.

மோட்டோரோலா ஆம்ஃபிசவுண்ட் எக்ஸ் 2.1 சேனல் 120 வாட் சவுண்ட்பார் சிறப்பம்சங்கள்
- 120 வாட் பவர் அவுட்புட்
- 6.5 இன்ச் சப்வூஃபர் டிரைவர், சவுண்ட்பார் டிரைவர் 2.24 இன்ச் x 4
- சப்வூஃபர் - உட் மற்றும் ஏபிஎஸ் பிளாஸ்டிக்
- சவுண்ட்பார் - மெட்டல் மற்றும் கிளாஸ் டாப் மற்றும் மெட்டல் கிரில் சேசிஸ்
- ஃபிரீக்வன்சி ரெஸ்பான்ஸ் 120 ஹெர்ட்ஸ்
- ப்ளூடூத் 5
- யுஎஸ்பி போர்ட், ஆப்டிக்கல், ஏயுஎக்ஸ்
- ஹெச்டிஎம்ஐ ஏஆச்ரி மற்றும் ஆப்டிக்கல் ஸ்டிரீம் ஆடியோ
மோட்டோரோலா ஆம்ஃபிசவுண்ட் எக்ஸ் 4.1 சேனல் 120 வாட் ஹோம் தியேட்டர் சிறப்பம்சங்கள்
- 120 வாட் பவர் அவுட்புட்
- 8 இன்ச் சப்வூஃபர் டிரைவர், சேட்டிலைட் டிரைவர் 2 இன்ச் x 4
- சப்வூஃபர் - உட் மற்றும் ஏபிஎஸ் பிளாஸ்டிக்
- சேட்டிலைட்கள் - ஏபிஎஸ் பிளாஸ்டிக் மற்றும் மெட்டல் கிரில் சேசிஸ்
- ஃபிரீக்வன்சி ரெஸ்பான்ஸ் 120 ஹெர்ட்ஸ்
- ப்ளூடூத் 5, எஃப்எம் ரேடியோ
- யுஎஸ்பி போர்ட், ஆப்டிக்கல், ஏயுஎக்ஸ், மெமரி கார்டு ஸ்லாட்
- ஹெச்டிஎம்ஐ ஏஆச்ரி மற்றும் ஆப்டிக்கல் ஸ்டிரீம் ஆடியோ
மோட்டோரோலா ஆம்ஃபிசவுண்ட் எக்ஸ் 2.1 சேனல் 70 வாட் கன்வெர்டிபில் சவுண்ட்பார் சிறப்பம்சங்கள்
- 70 வாட் பவர் அவுட்புட்
- 6.5 இன்ச் சப்வூஃபர் டிரைவர், சேட்டிலைட் டிரைவர் 2 இன்ச் x 4
- சப்வூஃபர் - உட் மற்றும் ஏபிஎஸ் பிளாஸ்டிக்
- சேட்டிலைட் - ஏபிஎஸ் பிளாஸ்டிக் மற்றும் மெட்டல் கிரில் சேசிஸ்
- சவுண்ட்பாரை தனி ஸ்பீக்கராக பயன்படுத்தும் வசதி
- ஃபிரீக்வன்சி ரெஸ்பான்ஸ் 120 ஹெர்ட்ஸ்
- ப்ளூடூத் 5, எஃப்எம் ரேடியோ, மெமரி கார்டு ஸ்லாட்
- யுஎஸ்பி போர்ட், ஆப்டிக்கல், ஏயுஎக்ஸ்
- ஹெச்டிஎம்ஐ ஏஆச்ரி மற்றும் ஆப்டிக்கல் ஸ்டிரீம் ஆடியோ
மோட்டோரோலா ஆம்ஃபிசவுண்ட் எக்ஸ் 2.1 சேனல் 120 வாட் சவுண்ட்பார் மற்றும் 4.1 சேனல் 120 வாட் ஹோம் தியேட்டர் மாடல் விலை ரூ. 8999 என்றும் 2.1 சேனல் 70 வாட் கன்வெர்டிபில் சவுண்ட்பார் விலை ரூ. 6999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஸ்மார்ட்போனில் 6.9 இன்ச் எஃப்ஹெச்டி+ AMOLED பிளஸ் இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 865 பிளஸ் / எக்சைனோஸ் 990 பிராசஸர், குவால்காம் ஸ்னாப்டிராகன் எக்ஸ்55 / எக்சைனோஸ் மோடெம் 5123, 8 ஜிபி ரேம் வழங்கப்பட்டு உள்ளது.
இத்துடன் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன் யுஐ மற்றும் சாம்சங் பிக்ஸ்பி, சாம்சங் ஹெல்த் மற்றும் சாம்சங் பே வசதிகள் வழங்கப்பட்டு உள்ளன. இதில் புகைப்படங்களை எடுக்க 12 எம்பி பிரைமரி கேமரா, 12 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 64 எம்பி டெலிபோட்டோ கேமரா, 10 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி நோட் 20 சிறப்பம்சங்கள்
- 6.7 இன்ச் குவாட் ஹெச்டி பிளஸ் 2400×1080 பிக்சல் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
- ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865+ 7என்எம் பிராசஸர்
- அட்ரினோ 650 ஜிபியு
- ஆக்டாகோர் சாம்சங் எக்சைனோஸ் 990 பிராசஸர்
- ஏஆர்எம் மாலி-ஜி77எம்பி11 ஜிபியு
- எல்டிஇ - 8ஜிபி LPDDR5 ரேம், 256 ஜிபி (UFS 3.1) மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- 5ஜி – 8ஜிபி LPDDR5 ரேம், 128 ஜிபி/256ஜிபி/512ஜிபி (UFS 3.1) மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன்யுஐ
- ஹைப்ரிட் டூயல் சிம்
- 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.8, PDAF, OIS
- 64 எம்பி டெலிபோட்டோ லென்ஸ், f/2.0, PDAF, OIS
- 12 எம்பி 120° அல்ட்ரா வைடு சென்சார், f/2.2
- 10 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2
- வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP68)
- ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ்
- அல்ட்ராசோனிக் கைரேகை சென்சார்
- ப்ளூடூத் சார்ந்த எஸ் பென்
- 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யுஎஸ்பி டைப் சி
- 4300 எம்ஏஹெச் பேட்டரி
- 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
- வயர்லெஸ் பவர் ஷேர்
சாம்சங் கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போன் மிஸ்டிக் பிரான்ஸ், மிஸ்டிக் கிரீன் மற்றும் மிஸ்டிக் கிரே நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 849 யூரோக்கள் இந்திய மதிப்பில் ரூ. 83515 என துவங்கி டாப் என்ட் மாடல் விலை 949 யூரோக்கள் இந்திய மதிப்பில் ரூ. 93350 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் கொண்ட புதிய நோக்கியா சி3 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா சி3 ஸ்மார்ட்போனினை பட்ஜெட் பிரிவில் சீன சந்தையில் அறிமுகம் செய்து உள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் 5.99 இன்ச் ஹெச்டி பிளஸ் ஸ்கிரீன், 1.6 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் பிராசஸர், ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் 8 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. பின்புறம் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் நோக்கியா சி3 ஸ்மார்ட்போன் 3040 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கிறது. இத்துடன் எக்ஸ்பிரஸ் பட்டன் வழங்கப்பட்டுள்ளது. இதை க்ளிக் செய்து கூகுள் அசிஸ்டண்ட் அல்லது இதர செயலிகளை இயக்க முடியும்.

நோக்கியா சி3 சிறப்பம்சங்கள்
- 5.99 இன்ச் 1440×720 பிக்சல் ஹெச்டி+ 18:9 டிஸ்ப்ளே
- 1.6 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் பிராசஸர்
- ஐஎம்ஜி8322 ஜிபியு
- 3 ஜிபி ரேம்
- 32 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 10
- டூயல் சிம் ஸ்லாட்
- 8 எம்பி பிரைமரி கேமரா, f/2.0, எல்இடி ஃபிளாஷ்
- 5 எம்பி செல்ஃபி கேமரா, f/2.4
- கைரேகை சென்சார்
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 4.2
- மைக்ரோ யுஎஸ்பி போர்ட்
- 3040 எம்ஏஹெச் பேட்டரி
நோக்கியா சி3 ஸ்மார்ட்போன் நார்டிக் புளூ மற்றும் கோல்டு சேண்ட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 100 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 7530 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
ஸ்னாப்டிராகன் 765ஜி பிராசஸர், 64எம்பி மூன்று பிரைமரி கேமரா சென்சாருடன் விவோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
விவோ நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி விவோ எஸ்7 ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து உள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் 6.44 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் AMOLED ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 765ஜி பிராசஸர், 8 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 2 எம்பி மோனோ லென்ஸ் வழங்கப்பட்டு உள்ளது. முன்புறம் 44 எம்பி செல்ஃபி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் ஏஜி கிளாஸ் பிளாக், இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 4000 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.

விவோ எஸ்7 சிறப்பம்சங்கள்
- 6.44 இன்ச்1080x2400 பிக்சல் FHD+ 20:9 AMOLED டிஸ்ப்ளே
- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 765ஜி பிராசஸர்
- அட்ரினோ 620 GPU
- 8 ஜிபி LPDDR4X ரேம்
- 128 ஜிபி / 256 ஜிபி (UFS 2.1) மெமரி
- ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஃபன்டச் ஒஎஸ் 10.5
- டூயல் சிம்
- 64 எம்பி பிரைமரி கேமரா, 0.8μm, f/1.89
- 8 எம்பி 119° அல்ட்ரா வைடு கேமரா, f/2.2
- 2 எம்பி மோனோ கேமரா, f/2.4
- 44 எம்பி ஆட்டோபோக்கஸ் செல்ஃபி கேமரா, f/2.0
- 8 எம்பி 105° அல்ட்ரா வைடு கேமரா, f/2.28
- இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- யுஎஸ்பி டைப்-சி ஆடியோ
- 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1
- யுஎஸ்பி டைப்-சி
- 4000 எம்ஏஹெச் பேட்டரி
- 33வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
விவோ எஸ்7 ஸ்மார்ட்போன் கிரேடியன்ட் புளூ, ஜாஸ் பிளாக் மற்றும் மூன்லைட் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் விலை 2798 யுவான், இந்திய மதிப்பில் ரூ. 30150 என்றும், 8 ஜிபி + 256 ஜிபி மெமரி மாடல் விலை 3098 யுவான், இந்திய மதிப்பில் ரூ. 33380 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் இந்திய வெளியீடு பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.
பிலிப்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய வயர்லெஸ் இயர்பட், நெக்பேண்ட் ஹெட்செட் மற்றும் சவுண்ட்பார் போன்ற சாதனங்களை அறிமுகம் செய்து உள்ளது.
பிலிப்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிதாக ஆடியோ சாதனங்களை அறிமுகம் செய்து உள்ளது. இவற்றின் விற்பனை அமேசான் பிரைம் டே சிறப்பு சலுகையின் போது துவங்குகிறது. அமேசானில் பிரைம் டே சிறப்பு விற்பனை ஆகஸ்ட் 6 ஆம் தேதி துவங்க இருக்கிறது.
பிலிப்ஸ் டிஏடி4205பிகே ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ், டிஏஎன்2215பிகே வயர்லெஸ் நெக்பேண்ட், ஹெச்டிஎல்4080 வயர்லெஸ் சவுண்ட்பார் மற்றும் ஹெச்டிஎல்1045 சவுண்ட்பார் உள்ளிட்டவை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன.
இதில் டிஏடி4205பிகே ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடல் மைலர் மெட்டீரியல் டிரைவர்களை கொண்டுள்ளது. இவை அதிக துல்லியமான ஆடியோ அனுபவத்தை வழங்குகின்றன. இதில் மென்மையான ரப்பரைஸ்டு விங் டிப்கள் வழங்கப்பட்டு உள்ளன.

இவை காதுகளில் கச்சிதமாக பொருந்தி கொள்கின்றன. மேலும் இவை ஐபிஎக்ஸ்5 சான்று மற்றும் 20 மணி நேர பேட்டரி பேக்கப் வழங்குகின்றன. புதிய பிலிப்ஸ் டிஏஎன்2215பிகே வயர்லெஸ் நெக்பேண்ட் ஐபிஎக்ஸ்4 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி மற்றும் 9 எம்எம் டிரைவர்களை கொண்டுள்ளது.
இது 11 மணி நேர பேட்டரி பேக் கொண்டது ஆகும். ஹெச்டிஎல்1045 சவுண்ட்பார் மாடலில் ஹெச்டிஎம்ஐ ஏஆர்சி, 4கே ஆடியோ, ப்ளூடூத், ஆப்டிக்கல் ஆடியோ மற்றும் யுஎஸ்பி கொண்டுள்ளது.
இந்திய சந்தையில் பிலிப்ஸ் டிஏடி4205பிகே விலை ரூ. 6999 என்றும் டிஏஎன்2215பிகே மாடல் விலை ரூ. 3999, ஹெச்டிஎல்4080 சவுண்ட்பார் விலை ரூ. 16990 என்றும் ஹெச்டிஎல்1045 மாடல் விலை ரூ. 9990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் செயலியில் 138 புதிய எமோஜிக்கள் சேர்க்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.
வாட்ஸ்அப் செயலியில் புதிதாக 138 எமோஜிக்கள் சோதனை செய்யப்பட்டு வருகிறது. புதிய மாற்றம் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு வெர்ஷன் 2.20.197.6 பீட்டாவில் சோதனை செயய்ப்படுகிறது.
முன்னதாக வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் வெர்ஷன்களில் அனிமேட்டெட் ஸ்டிக்கர் அம்சம் வழங்கப்பட்டது. அனிமேட்டெட் ஸ்டிக்கர்கள் முந்தைய வழக்கமான ஸ்டிக்கர்களுடன் சேர்த்தே வழங்கப்படுகின்றன. இவை தகவல் பரிமாற்றத்தை மேம்படுத்தி வழங்குகின்றன.

வாட்ஸ்அப் செயலியில் தகவல் பரிமாற்றத்திற்கு ஸ்டிக்கர் மற்றும் எமோஜிக்கள் மிக முக்கிய அம்சங்களாக விளங்கி வருகின்றன. இவற்றை பயன்படுத்தி பயனர்கள் தங்களது மனநிலையை வெளிப்படுத்தி வருகின்றனர். இது பொழுதுபோக்கிற்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஏற்கனவே ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளதை விட புதிய எமோஜிக்கள் வித்தியாசமானதாக இருக்கிறது. இதனை முதல் முறை பார்க்கும் போதே கண்டுபிடித்துவிட முடியும். இவற்றில் புதிய நிறங்கள், ஆடைகள், தலை முடி மற்றும் ஸ்கின் டோன் உள்ளிட்டவை புதுமையாக சேர்க்கப்படுகின்றன.
ஐடெல் பிராண்டின் புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் குறைந்த விலையில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
ஐடெல் நிறுவனம் தனது முதல் ட்ரூ வயர்லெஸ் ஸ்டீரியோ இயர்போன் மாடலினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து உள்ளது. புதிய இயர்போன்களில் பெரிய சவுண்ட் டிரைவர்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இரண்டு இயர்பட்களிலும் சென்சார்கள் வழங்கப்பட்டு இருப்பதால் தலைசிறந்த ஆடியோ அனுபவம் கிடைக்கும்.
ஐடெல் ஐடிடபிள்யூ 60 இயர்போன்களில் யுஎஸ்பி டைப் சி சார்ஜிங் வசதி மற்றும் ப்ளூடூத் 5வசதி வழங்கப்பட்டு உள்ளன. இவற்றில் 13எம்எம் சவுண்ட் டிரைவர்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இவை தலைசிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்குகின்றன. காதுகளில் கச்சிதமாக பொருந்தி கொள்ளும் வடிவமைப்பு கொண்டிருக்கிறது.

இத்துடன் 360 டிகிரி ஆடியோ அனுபவம் வழங்குகிறது. இரு இயர்பட்களிலும் மேம்பட்ட சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை அழைப்புகளை ஏற்பது மற்றும் இசையை அட்ஜஸ்ட் செய்யும் வசதியை வழங்குகின்றன. இவற்றில் 35 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கின்றன.
இவற்றை ஒரு முறை சார்ஜ் செய்தால் 2.5 மணி நேர மியூசிக் பிளேடைம் மற்றும் 3 மணி நேர டாக்டைம் வழங்குகிறது. ஐடெல் ஐடிடபிள்யூ 60 இயர்போன்களுடன் 500 எம்ஏஹெச் பேட்டரி கொண்ட சார்ஜிங் கேஸ் வழங்கப்பட்டு உள்ளது. இதை கொண்டு ஆறு முறை இயர்பட்களை சார்ஜ் செய்ய முடியும் என ஐடெல் தெரிவித்து உள்ளது.
ஐடெல் ஐடிடபிள்யூ 60 ட்ரூ வயர்லெஸ் இயர்போன்களின் விலை ரூ. 1688 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளன. இந்த இயர்போன் ஆஃப்லைன் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.
ஹானர் பிராண்டின் இரண்டு புதிய ஸ்மார்ட்போன் மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
ஹூவாயின் ஹானர் பிராண்டு இந்திய சந்தையில் ஹானர் 9எஸ் மற்றும் ஹானர் 9ஏ ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது. இரு ஸ்மார்ட்போன்களிலும் மீடியாடெக் ஹீலியோ பி22 பிராசஸர், ஆண்ட்ராய்டு 10 மற்றும் மேஜிக் யுஐ 3 மற்றும் ஹூவாயின் ஆப் கேலரி ஸ்டோர் மற்றும் பெட்டல் சர்ச் வழங்கப்பட்டு உள்ளது.
ஹானர் 9எஸ் மாடலில் 5.45 இன்ச் ஹெச்டி பிளஸ் ஸ்கிரீன், ஒற்றை பிரைமரி கேமரா மற்றும் 3020 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது. ஹானர் 9ஏ மாடலில் 6.3 இன்ச் ஸ்கிரீன், மூன்று பிரைமரி கேமராக்கள், பின்புறம் கைரேகை சென்சார் மற்றும் 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.

ஹானர் 9எஸ் சிறப்பம்சங்கள்
- 5.45 இன்ச் 1440×720 பிக்சல் 18:9 ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே
- ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ பி22 பிராசஸர்
- ஐஎம்ஜி பவர்விஆர் ஜிஇ8320 ஜிபியு
- 2 ஜிபி ரேம்
- 32 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 10 மற்றும் மேஜிக் யுஐ 3.1
- டூயல் சிம் ஸ்லாட்
- 8 எம்பி கேமரா, f/2.0, எல்இடி ஃபிளாஷ்
- 5 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- மைக்ரோ யுஎஸ்பி போர்ட்
- 3020 எம்ஏஹெச் பேட்டரி
ஹானர் 9ஏ சிறப்பம்சங்கள்
- 6.3 இன்ச் 1600×720 பிக்சல் ஹெச்டி பிளஸ் 20:9 டியூடிராப் டிஸ்ப்ளே
- ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ பி22 பிராசஸர்
- ஐஎம்ஜி பவர்விஆர் ஜிஇ8320 ஜிபியு
- 3 ஜிபி ரேம்
- 64 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 10 மற்றும் மேஜிக் யுஐ 3.1
- டூயல் சிம்
- 13 எம்பி பிரைமரி கேமரா, f/1.8, எல்இடி ஃபிளாஷ்
- 5 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, f/2.2
- 2 எம்பி டெப்த் கேமரா, f/2.4
- 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
- கைரேகை சென்சார்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- மைக்ரோ யுஎஸ்பி போர்ட்
- 5000 எம்ஏஹெச் பேட்டரி
ஹானர் 9எஸ் ஸ்மார்ட்போன் புளூ மற்றும் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 6499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ஆகஸ்ட் 6 ஆம் தேதி ப்ளிப்கார்ட் தளத்தில் நடைபெற இருக்கிறது. ஹானர் 9ஏ மாடல் மிட்நைட் பிளாக் மற்றும் ஃபேண்டம் புளூ நிறங்களில் கிடைக்கிறது.
இந்தியாவில் இதன் விலை ரூ. 9999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவில் இதன் விற்பனை அமேசான் தளத்தில் ஆகஸ்ட் 6 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
ரிலையன்ஸ் ஜியோவின் புதிய ஜியோபோன் ரூ. 500 பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ. 999 விலையில் எல்டிஇ வசதி கொண்ட ஜியோபோன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இதைத் தொடர்ந்து ஜியோபோன் 2 மாடல் வெளியிடப்பட்டது. எனினும், இதைவிட முதல் தலைமுறை ஜியோபோன் அதிக விற்பனையாகி வருகிறது.
இந்நிலையில், ரிலையன்ஸ் டியோ தனது மொபைல் போனின் விலையை மேலும் குறைவாக நிர்ணயம் செய்வது குறித்து திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜியோபோன் 5 பெயரில் புதிய மொபைல் போன் வெளியாகும் என கூறப்படுகிறது. புதிய ஜியோபோன் ஃபீச்சர் போன் தான் என்றும் இது முந்தைய ஜியோபோனின் லைட் வெர்ஷன் என கூறப்படுகிறது.
லைட் வெர்ஷன் என்பதால் புதிய ஜியோபோன் விலையும் குறைவாகவே நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய ஜியோபோன் துவக்க விலை ரூ. 399 என கூறப்பட்டு உள்ளது.

இந்த தகவல் உண்மையாகும் பட்சத்தில் புதிய ஜியோபோன் 5 சந்தையில் கிடைக்கும் மிகவும் குறைந்த விலை மொபைல் போன் என்ற பெருமையை பெறும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. புதிய ஜியோபோன் கைஒஎஸ் பிளாட்ஃபார்ம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
இத்துடன் இந்த மொபைலில் வாட்ஸ்அப், பேஸ்புக் மற்றும் கூகுள் போன்ற செயலிகள் பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டு இருக்கும் என எதிர்பார்க்கலாம். முந்தைய மாடல்களில் இருந்ததை போன்றே புதிய ஜியோபோனிலும் வோல்ட்இ அழைப்புகளை மேற்கொள்ள முடியும் என தெரிகிறது.
சியோமியின் ரெட்மி 9 பிரைம் ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
சியோமியின் ரெட்மி பிராண்டு இந்தியாவில் ரெட்மி 9 பிரைம் ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 4 ஆம் தேதி அறிமுகம் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிவித்துள்ளது.
முன்னதாக புதிய ரெட்மி பிராண்டு ஸ்மார்ட்போன் மாடல்களுக்கான டீசர்களை வெளியிடப்பட்டு இருந்தது. அந்த வரிசையில், தற்சமயம் புதிய ஸ்மார்ட்போனின் பெயர் அறிவிக்கப்பட்டு உள்ளது. ரெட்மி 9 சீரிஸ் மாடல்களில் மூன்று ஸ்மார்ட்போன்கள் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுது.
இவற்றில் ரெட்மி 9 பிரைம் இந்திய வெளியீடு உறுதியாகி விட்டது. இத்துடன் எந்தெந்த மாடல்கள் அறிமுகமாகும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

இதுவரை வெளியாகி உள்ள தகவல்களின் படி புதிய ரெட்மி ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் எல்சிடி வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர் வழங்கப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 5 எம்பி மேக்ரோ சென்சார் மற்றும் 2 எம்பி டெப்த் சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. இதன் பின்புறம் டெக்ஸ்ச்சர் ஃபினிஷ் செய்யப்பட்டு உள்ளது. இத்துடன் கைரேகை சென்சார், 5020 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படுகிறது.
ஹானர் பிராண்டின் புதிய ஹானர் 9ஏ ஸ்மார்ட்போன் விவரங்கள் வெளியீட்டிற்கு முன் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.
ஹானர் பிராண்டு ஹானர் 9ஏ, ஹானர் 9எஸ் மற்றும் ஹானர் மேஜிக்புக் 15 லேப்டாப் மாடல்களை இந்திய சந்தையில் நாளை (ஜூலை 31) அறிமுகம் செய்ய இருக்கிறது. இவை இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ரஷ்ய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
நாளை வெளியாக இருக்கும் நிலையில், ஹானர் 9ஏ ஸ்மார்ட்போன் அமேசான் வலைதளத்தில் பட்டியலிடப்பட்டு உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவும் துவங்கப்பட்டு இருக்கிறது.
இந்தியாவில் ஹானர் 9ஏ 3 ஜிபி + 64 ஜிபி மெமரி மாடல் ஃபேண்டம் புளூ நிறத்தில் கிடைக்கிறது. அமேசானில் இதன் விலை ரூ. 11,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

ஹானர் 9ஏ சிறப்பம்சங்கள்
- 6.3 இன்ச் 1600×720 பிக்சல் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே
- ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ பி22 பிராசஸர்
- ஐஎம்ஜி பவர் விஆர் ஜிஇ8320 ஜிபியு
- 3 ஜிபி ரேம்
- 64 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்டராய்டு 10 மற்றும் மேஜிக் யுஐ 3.0.1
- டூயல் சிம் ஸ்லாட்
- 13 எம்பி பிரைமரி கேமரா, f/1.8 aperture, எல்இடி ஃபிளாஷ்
- 5 ம்பி அல்ட்ரா வைடு கேமரா, f/2.2
- 2 எம்பி டெப்த் சென்சார், f/2.4
- 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- மைக்ரோ யுஎஸ்பி போர்ட்
- 5000 எம்ஏஹெச் பேட்டரி
மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய ரேசர் 2 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.
மோட்டோரோலா நிறுவனத்தின் 2020 ரேசர் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது. ஒடிசி எனும் குறியீட்டு பெயரில் உருவாகி இருக்கும் மோட்டோ ரேசர் 2 தோற்றத்தில் முந்தைய மாடல் போன்றே காட்சியளிக்கிறது.
மோட்டோரோலாவின் முதல் தலைமுறை மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடலான ரேசர் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. வடிவமைப்பில் கோளாறுகள் நிறைந்து இருந்ததே இதற்கு காரணமாக கூறப்பட்டது. இந்நிலையில், இதே வடிவமைப்பில் மாற்றங்கள் செய்து புதிய ரேசர் 2 மாடலை வெளியிட மோட்டோரோலா திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

புதிய மோட்டோரோலா ரேசர் மாடல் எக்ஸ்டி2071-4 எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. மேலும் இதில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 765 பிராசஸர், 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, 2845 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் ஸ்னாப்டிராகன் எக்ஸ்52 மோடெம் மூலம் 5ஜி கனெக்டிவிட்டி வழங்கப்படுகிறது.
முந்தைய மாடலின் கேமரா சிறப்பானதாக இல்லை என குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில், புதிய ரேசர் 2 மாடலில் 48 எம்பி பிரைமரி கேமரா, 20 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10 ஒஸ் வழங்கப்படும் என்றும் முந்தைய மாடலில் உள்ளதை போன்றே குவிக் வியூ டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது.






