search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ரெட்மி  டீசர்
    X
    ரெட்மி டீசர்

    ரெட்மி 9 பிரைம் இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு

    சியோமியின் ரெட்மி 9 பிரைம் ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    சியோமியின் ரெட்மி பிராண்டு இந்தியாவில் ரெட்மி 9 பிரைம் ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 4 ஆம் தேதி அறிமுகம் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிவித்துள்ளது. 

    முன்னதாக புதிய ரெட்மி பிராண்டு ஸ்மார்ட்போன் மாடல்களுக்கான டீசர்களை வெளியிடப்பட்டு இருந்தது. அந்த வரிசையில், தற்சமயம் புதிய ஸ்மார்ட்போனின் பெயர் அறிவிக்கப்பட்டு உள்ளது. ரெட்மி 9 சீரிஸ் மாடல்களில் மூன்று ஸ்மார்ட்போன்கள் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுது. 

    இவற்றில் ரெட்மி 9 பிரைம் இந்திய வெளியீடு உறுதியாகி விட்டது. இத்துடன் எந்தெந்த மாடல்கள் அறிமுகமாகும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. 

     ரெட்மி  டீசர்

    இதுவரை வெளியாகி உள்ள தகவல்களின் படி புதிய ரெட்மி ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் எல்சிடி வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர் வழங்கப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 5 எம்பி மேக்ரோ சென்சார் மற்றும் 2 எம்பி டெப்த் சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. இதன் பின்புறம் டெக்ஸ்ச்சர் ஃபினிஷ் செய்யப்பட்டு உள்ளது. இத்துடன் கைரேகை சென்சார், 5020 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படுகிறது. 
    Next Story
    ×