என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    ரியல்மி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்தியாவில் தனது ரியல்மி சி15 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து உள்ளது.

    ரியல்மி நிறுவனம் இந்தியாவில் ரியல்மி சி15 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் மினி டிராப் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர், அதிகபட்சம் 4 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 10 மற்றும் ரியல்மி யுஐ வழங்கப்பட்டு உள்ளது.

    இத்துடன் 13 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்பி மோனோ மற்றும் 2 எம்பி ரெட்ரோ கேமரா, 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. இதன் பின்புறம் கைரேகை சென்சார், 6000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

     ரியல்மி சி15

    ரியல்மி சி15 சிறப்பம்சங்கள்

    - 6.52 இன்ச் 1600x720 பிக்சல் ஹெச்டி பிளஸ் மினி டிராப் டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பிளஸ் 
    - 2.3 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர்
    - ஐஎம்ஜி பவர்விஆர் ஜிஇ8320 ஜிபியு
    - 3 ஜிபி LPDDR4x ரேம், 32 ஜிபி (eMMC 5.1) மெமபி 
    - 4 ஜிபி LPDDR4x ரேம், 64 ஜிபி (eMMC 5.1) மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம் ஸ்லாட்
    - ரியல்மி யுஐ சார்ந்த ஆண்ட்ராய்டு 10
    - 13 எம்பி பிரைமரி கேமரா, f/2.2, எல்இடி ஃபிளாஷ், PDAF
    - 8 எம்பி 119° அல்ட்ரா வைடு கேமரா, f/2.25
    - 2 எம்பி ரெட்ரோ சென்சார்
    - 2 எம்பி மோனோ கேமரா, f/2.4
    - 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
    - ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்
    - 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ
    - கைரேகை சென்சார் 
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    - மைக்ரோ யுஎஸ்பி
    - 6000 எம்ஏஹெச் பேட்டரி
    - 18 வாட் சார்ஜிங்

    ரியல்மி சி15 ஸ்மார்ட்போன் பவர் புளூ மற்றும் பவர் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 9,999 என்றும் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 10,999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் ரியல்மி வலைதளங்களில் ஆகஸ்ட் 27 ஆம் தேதி துவங்குகிறது.
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி வாட்ச் 3 மற்றும் கேலக்ஸி பட்ஸ் லைவ் மாடல்கள் பிரீமியம் விலையில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன.


    சாம்சங் நிறுவனம் கேலக்ஸி வாட்ச் 3 மற்றும் கேலக்ஸி பட்ஸ் லைவ் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து உள்ளது. இரு சாதனங்களும் கேலக்ஸி அன்பேக்டு 2020 நிகழ்வில் கேலக்ஸி நோட் 20 சீரிஸ் மாடல்களுடன் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    கேலக்ஸி பட்ஸ் லைவ் ட்ரூ வயர்லெஸ் இயர்போன் மாடலில் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன், ப்ளூடூத் 5 மற்றும் ஐபிஎக்ஸ்2 ஸ்வெட் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 29 மணி நேர பேட்டரி பேக்கப் மற்றும் கியூஐ வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

     கேலக்ஸி வாட்ச் 3

    கேலக்ஸி வாட்ச் 3 மாடலில் எம்ஐஎல்-எஸ்டிடி-810ஜி சான்று, ஐபி68 தர வாட்டர் ரெசிஸ்டண்ட், எல்டிஇ போன்ற வசதிகள் வழங்கப்பட்டு உள்ளன. இவைதவிர இதில் டைசன் சார்ந்த வியரபிள் ஒஎஸ் 5.5 மற்றும் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, ஜெஸ்ட்யூர் கண்ட்ரோல் மற்றும் பிக்ஸ்பி வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கின்றன.

    இந்தியாவில் கேலக்ஸி வாட்ச் 3 மாடல் 41எம்எம் மற்றும் 45எம்எம் என இருவித அளவுகளில் கிடைக்கிறது. இதன் 41எம்எம் ப்ளூடூத் மற்றும் எல்டிஇ வெர்ஷன்களின் விலை முறையே ரூ. 29,990 என்றும் ரூ. 34,990 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றன. இதே போன்று 45 எம்எம் ப்ளூடூத் மற்றும் எல்டிஇ மாடல்கள் விலை முறையே ரூ. 32,990 என்றும் ரூ. 38,990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளன.

    கேலக்ஸி பட்ஸ் லைவ் மாடல் மிஸ்டிக் பிரான்ஸ், மிஸ்டிக் பிளாக் மற்றும் மிஸ்டிக் வைட் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 14990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 
    ரியல்மி நிறுவனத்தின் புதிய பட்ஸ் கிளாசிக் மாடல் இயர்போனின் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    ரியல்மி இந்தியா தலைமை செயல் அதிகாரி மாதவ் சேத் ரியல்மி பட்சின் அடுத்த வெர்ஷன் ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகம் செய்யப்படும் என கடந்த மாதம் அறிவித்து இருந்தார். அந்த வரிசையில், ரியல்மி பட்ஸ் கிளாசிக் இந்திய வெளியீடு உறுதியாகி இருக்கிறது.

    அதன்படி புதிய ரியல்மி பட்ஸ் கிளாசிக் இந்தியாவில் நாளை (ஆகஸ்ட் 18) அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய இயர்போன் மட்டுமின்றி ரியல்மி நிறுவனம் ரியல்மி சி12 மற்றும் சி15 போன்ற ஸ்மார்ட்போன்களையும் இந்தியாவில் நாளை அறிமுகம் செய்ய இருக்கிறது. 

     ரியல்மி பட்ஸ் கிளாசிக்

    புதிய இயர்போன் ஹால்ஃப் இன்-இயர் வடிவமைப்பு கொண்டிருக்கிறது. மேலும் இந்த இயர்போன் 14.2 எம்எம் டிரைவர்களை கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் அழைப்புகள் மற்றும் மியூசிக் கண்ட்ரோல்களை இயக்க ஒற்றை பட்டன் வழங்கப்படுகிறது.

    ரியல்மி பட்ஸ் கிளாசிக் மாடல் பிளாக் மற்றும் வைட் என இரண்டு வித நிறங்களில் கிடைக்கிறது. இதன் வடிவமைப்பு பயனர்கள் காதுகளில் கச்சிதமாக பொருந்திக் கொள்ளும் வகையில் நேர்த்தியாக உருவாக்கப்பட்டு உள்ளது என ரியல்மி இந்தியா தெரிவித்து இருக்கிறது. 

    புதிய ரியல்மி பட்ஸ் கிளாசிக் தற்சமயம் கிடைக்கும் ரியல்மி பட்ஸ் மாடல்களை விட விலை குறைவாக நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது. இதன் விற்பனை அமேசான் மற்றும் ரியல்மி இந்தியா ஆன்லைன் ஸ்டோர்களில் நடைபெற இருக்கிறது.
    ஐகூ பிராண்டின் புதிய ஸ்மார்ட்போன் ஐகூ 5 எனும் பெயரில் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாக இருக்கிறது.

    ஐகூ நிறுவனம் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் களமிறங்கியது. இந்தியாவில் ஐகூ நிறுவனத்தின் ஐகூ 3 மற்றும் ஐகூ 3 5ஜி ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இந்நிலையில், ஆறு மாதங்கள் கழித்து ஐகூ தனது புதிய ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. 

    ஐகூ இந்தியா அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் புதிய ஸ்மார்ட்போனின் டீசர் வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி ஐகூ நிறுவனம் தனது ஐகூ 5 ஸ்மார்ட்போன் மாடலை விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது. முந்தைய ஐகூ 3 போன்றே ஐகூ 5 மாடலிலும் தலைசிறந்த அம்சங்கள் வழங்கப்படலாம் என தெரிகிறது.

     ஐகூ 5

    இதனிடையே ஐகூ நிறுவனம் தனது ஐகூ 5 ஸ்மார்ட்போனினை ஆகஸ்ட் 17 ஆம் தேதி சீன சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. மேலும் புதிய ஐகூ 5 ஸ்மார்ட்போனின் அம்சங்களும் தெரியவந்து இருக்கிறது. 

    அதன்படி புதிய ஸ்மார்ட்போனில் வளைந்த டிஸ்ப்ளே, ஒற்றை பன்ச் ஹோல், குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர், யுஎஃப்எஸ் 3.1 ஸ்டோரேஜ் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இதில் வழங்கப்பட இருக்கும் பேட்டரி பற்றி எவ்வித தகவலும் இல்லை எனினும், இதில் 120 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என தெரிகிறது.
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்20 லைட் ஸ்மார்ட்போன் விவரங்கள் கீக்பென்ச் வலைதளத்தில் லீக் ஆகி உள்ளது.


    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்20 லைட் ஸ்மார்ட்போன் விவரங்கள் கீக்பென்ச் வலைதளத்தில் லீக் ஆகி இருக்கின்றன. அதன்படி புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் எக்சைனோஸ் 990 பிராசஸர் கொண்டிருக்கிறது. முந்தைய தகவல்களில் இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்பட்டு இருந்தது.

    கீக்பென்ச் தளத்தில் சாம்சங் எஸ்எம்-ஜி780எஃப் எனும் மாடல் நம்பர் கொண்ட மாடல் இந்திய வேரியண்ட் என கூறப்படுகிறது. புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் கீக்பென்ச் தளத்தில் சிங்கில் மற்றும் மல்டி-கோர் டெஸ்டிங்களில் முறையே 588 மற்றும் 2448 புள்ளிகளை பெற்று இருக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 8 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் வழங்கப்படுகிறது.

     கேலக்ஸி எஸ்20 லைட்

    சிறப்பம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி எஸ்20 லைட் மாடலில் 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, ஐபி68 தர சான்று, குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர், 6 ஜிபி ரேம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பெயருக்கு ஏற்றார் போல் இந்த மாடல் விலை சற்றே குறைவாக நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது.

    நிறங்களை பொருத்தவரை புதிய கேலக்ஸி எஸ்20 லைட் மாடல் கிரீன், ஆரஞ்சு, ரெட் மற்றும் வைட் நிறங்களில் விற்பனை செய்யப்படும் என கூறப்படுகிறது. இதே நிறங்கள் அனைத்து சந்தையிலும் விற்பனைக்கு வருமா அல்லது வேறுபடுமா என்பது தற்சமயம் கேள்விக்குறியாக இருக்கிறது. 
    மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனான சர்பேஸ் டுயோ வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.

    மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடலான சர்பேஸ் டுயோ செப்டம்பர் 10 ஆம் தேதி அறிமுகமாக இருக்கிறது. புதிய சர்பேஸ் டுயோ இரண்டு ஸ்கிரீன் கொண்ட ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் ஆகும். சர்பேஸ் டுயோ ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்டது.

     மைக்ரோசாப்ட் சர்பேஸ் டுயோ

    மைக்ரோசாப்ட் சர்பேஸ் டுயோ சிறப்பம்சங்கள்

    - இரு 5.6 இன்ச் OLED 1350x1800 பிக்சல் டிஸ்ப்ளே
    - ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர்
    - 6 ஜிபி ரேம்
    - அதிகபட்சம் 256 ஜிபி மெமரி
    - 11 எம்பி பிரைமரி கேமரா
    - 3577 எம்ஏஹெச் பேட்டரி
    - 4ஜி எல்டிஇ, வைபை, ப்ளூடூத்
    - யுஎஸ்பி டைப் சி
    - பிரத்யேக ஸ்டைலஸ்

    மைக்ரோசாப்ட் சர்பேஸ் டுயோ விலை 1399 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 1,04,600 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை அமெரிக்காவில் செப்டம்பர் 10 ஆம் தேதி துவங்குகிறது. 
    ரியல்மி நிறுவனத்தின் புதிய ரியல்மி சி12 மற்றும் சி15 ஸ்மார்ட்போன்களின் இந்திய வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.

    ரியல்மி நிறுவனம் தனது ரியல்மி சி12 மற்றும் சி15 ஸ்மார்ட்போன் மாடல்கள் இந்தியாவில் ஆகஸ்ட் 18 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தெரிவித்து இருக்கிறது.

    புதிய ரியல்மி சி12 ஸ்மார்ட்போன் அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த சி11 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடல் ஆகும். ரியல்மி சி15 ஸ்மார்ட்போன் சமீபத்தில் இந்தோனேசியா சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இரு ஸ்மார்ட்போன்களிலும் பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு உள்ளது. 

     ரியல்மி சி சீரிஸ்

    ரியல்மி சி15 சிறப்பம்சங்கள்

    - 6.52 இன்ச் 1600x720 பிக்சல் ஹெச்டி பிளஸ் மினி டிராப் டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பிளஸ் 
    - 2.3 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர்
    - ஐஎம்ஜி பவர்விஆர் ஜிஇ8320 ஜிபியு
    - 3 ஜிபி / 4 ஜிபி LPDDR4x ரேம், 64 ஜிபி (eMMC 5.1) மெமரி
    - 4 ஜிபி LPDDR4x ரேம், 128 ஜிபி (eMMC 5.1) மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம் ஸ்லாட்
    - ரியல்மி யுஐ சார்ந்த ஆண்ட்ராய்டு 10
    - 13 எம்பி பிரைமரி கேமரா, f/2.2, எல்இடி ஃபிளாஷ், PDAF
    - 8 எம்பி 119° அல்ட்ரா வைடு கேமரா, f/2.25
    - 2 எம்பி ரெட்ரோ சென்சார்
    - 2 எம்பி மோனோ கேமரா, f/2.4
    - 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
    - ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்
    - 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ
    - கைரேகை சென்சார் 
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    - மைக்ரோ யுஎஸ்பி
    - 6000 எம்ஏஹெச் பேட்டரி
    - 18 வாட் சார்ஜிங்

    ரியல்மி சி12 மற்றும் சி15 ஸ்மார்ட்போன்கள் ப்ளிப்கார்ட் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கின்றன. இதன் விலை விவரங்கள் விரைவில் வெளியாகலாம்.
    ஐகூ பிராண்டின் புதிய ஐகூ 5 ப்ரோ பிஎம்டபிள்யூ எடிஷன் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    பிஎம்டபிள்யூ எம் மோட்டார்ஸ்போர்ட் உடன் கூட்டணி அமைத்து இருப்பதாக ஐகூ பிராண்டு சமீபத்தில் அறிவித்தது. அந்த வரசையில் ஐகூ 5 ப்ரோ பிஎம்டபிள்யூ எடிஷன் ஸ்மார்ட்போன் டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது. 

    புதிய ஐகூ 5 ப்ரோ பிஎம்டபிள்யூ எடிஷன் கெவ்லர் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. இதில் 3 பிரைமரி கேமராக்கள் வழங்கப்படுகிறது. மூன்று சென்சார்களில் ஒன்று பெரிஸ்கோப் கேமரா ஆகும். இந்த கேமரா 5எக்ஸ் ஆப்டிக்கல் ஜூம் மற்றும் 60 எக்ஸ் டிஜிட்டல் ஜூம் வழங்கும் திறன் கொண்டது.

    ஐகூ 5 ப்ரோ பிஎம்டபிள்யூ எடிஷன் டீசர்

    ஐகூ நிறுவனம் அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட சக்திவாய்ந்த சாதனங்களை உற்பத்தி செய்து வழங்குவதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போனில் 120 ஹெர்ட்ஸ் AMOLED ஸ்கிரீன், குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 5ஜி மொபைல் பிராசஸர், UFS 3.1 ஸ்டோரேஜ் மற்றும் LPDDR5 ரேம் வழங்கப்பட இருக்கிறது.

    இத்துடன் ஐகூ 5 சீரிஸ் ஸ்டான்டர்டு வெர்ஷனில் 55 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும், டாப் எண்ட் மாடலில் 120 வாட் அல்ட்ரா ஃபிளாஷ் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் வழங்கப்பட உள்ளது. இது ஸ்மார்ட்போனினை 15 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்யும் திறன் கொண்டது ஆகும்.
    லாவா நிறுவனம் இந்திய சந்தையில் இசட்61 ப்ரோ, ஏ5 மற்றும் ஏ9 மாடல்களின் லிமிட்டெட் எடிஷனை அறிமுகம் செய்து உள்ளது.


    லாவா இசட்61 ப்ரோ, லாவா ஏ5 மற்றும் லாவா ஏ9 மாடல்களின் ProudlyIndian எடிஷன் மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன. புதிய ProudlyIndian எடிஷன் மாடல்கள் 74 வது இந்திய சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன.

    புதிய லிமிட்டெட் எடிஷன் மாடல்களின் பின்புறம் ProudlyIndian லோகோ மற்றும் இந்தியாவின் தேசிய கொடி அச்சிடப்பட்டு உள்ளது. லாவா இசட்61 ப்ரோ ஸ்மார்ட்போன் ஜூலை மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடல் ஷேம்பெயின் கோல்டு நிறத்தில் கிடைக்கிறது.

    லாவா லிமிட்டெட் எடிஷன் மொபைல் போன்

    லாவா நிறுவனத்தின் புதிய லிமிட்டெட் எடிஷன் ProudlyIndian மொபைல்போன் மாடல்கள் விரைவில் ஆஃப்லைன் விற்பனை மையங்கள் மற்றும் ஆன்லைன் வலைதளங்களில் விற்பனைக்கு வரும் என லாவா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. 

    இந்தியாவில் லாவா இசட்61 ப்ரோ 2 ஜிபி + 16 ஜிபி மெமரி கொண்ட ProudlyIndian மாடல் விலை ரூ. 5777 என்றும் லாவா ஏ5 மற்றும் லாவா ஏ9  ProudlyIndian எடிஷன் விலை முறையே ரூ. 1333 மற்றும் ரூ. 1574 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளன.
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 20 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 20 மற்றும் கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டு விவரம் அமேசானில் தெரியவந்துள்ளது. அதன் படி புதிய கேலக்ஸி நோட் 20 சீரிஸ் ஆகஸ்ட் 28 ஆம் தேதி வெளியாகும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 

    முன்னதாக கேலக்ஸி நோட் 20 மற்றும் கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா 5ஜி மாடல்களின் முன்பதிவு துவங்கப்பட்டது. முன்னதாக இவை 2020 கேலக்ஸி அன்பேக்டு விழாவில் அறிமுகம் செய்யப்பட்டன. சாம்சங் கேலக்ஸி நோட் 20 மாடல் துவக்க விலை ரூ. 77999 முதல் துவங்குகிறது. 

     கேலக்ஸி நோட் 20

    சாம்சங் கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா 5ஜி 256 ஜிபி மாடல் விலை ரூ. 104999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இரு ஸ்மார்ட்போன்களும் ஆகஸ்ட் 28 ஆம் தேதி அமேசானில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

    - கேக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போனினை முன்பதிவு செய்வோருக்கு ரூ. 7 ஆயிரம் மதிப்புள்ள பலன்களும், கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா 5ஜி மாடலை முன்பதிவு செய்வோருக்கு ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள பலன்களும் வழங்கப்படுகிறது. இவ்வாறு முன்பதிவு செய்வோர் ஸ்மார்ட்போன்களை செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் வாங்கவிட வேண்டும்.

    பலன்களை வாடிக்கையாளர்கள் சாம்சங் ஷாப் செயலியில் கேலக்ஸி பட்ஸ் பிளஸ், கேலக்ஸி பட்ஸ் லைவ், கேலக்ஸி வாட்ச், கேலக்ஸி டேப் உள்ளிட்டவற்றை வாங்க பயன்படுத்திக் கொள்ள முடியும். 

    - இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தி கேலக்ஸி நோட் 20 மாடலுக்கு ரூ. 6 ஆயிரம் கேஷ்பேக், கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா 5ஜி மாடலை வாங்குவோருக்கு ரூ. 9 ஆயிரம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
    கூகுள் நிறுவனத்தின் பிக்சல் ஃபோல்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

    கூகுள் நிறுவனம் மடிக்கக்கூடிய பிக்சல் ஸ்மார்ட்போனினை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக ஏற்கனவே பலமுறை தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. எனினும், இதனை உறுதிப்படுத்தும் வகையில் எந்த தகவலும் கிடைக்கவில்லை. 

    முன்னதாக மடிக்கக்கூடிய பிக்சல் ஸ்மார்ட்போனின் ப்ரோடோடைப் உருவாக்கப்பட்டு வருவதாக கூகுள் மேலாளர் மேரியா கியூரோஸ் தெரிவித்து இருந்தார். எனினும், இந்த மாடலின் சரியான பயன்பாடு பற்றி தெளிவற்ற சூழல் நிலவுவதாக கூகுள் தெரிவித்து இருந்தது.

    தற்சமயம் இணையத்தில் லீக் ஆகி இருக்கும் தகவல்களில் மடிக்கக்கூடிய பிக்சல் மாடல் பற்றிய விவரங்கள் இடம்பெற்றுள்ளன. எனினும், இந்த மாடல் வெளியாக ஒரு ஆண்டு காத்திருக்க வேண்டும் என தெரிகிறது. ரேவென் மற்றும் ஒரியோள் எனும் குறியீட்டு பெயர்களில் பிக்சல் 6 வேரியண்ட்கள் உருவாகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

    ஆண்ட்ராய்டு மடிக்கக்கூடிய சாதனம்

    இவற்றுடன் பார்பெட் மற்றும் பாஸ்போர்ட் என்ற பெயர்களிலும் புதிய பிக்சல் ஸ்மார்ட்போன்கள் உருவாகி வருகின்றன. இதில் பார்பெட் பெயரில் உருவாகும் மாடல் பிக்சல் 5ஏ என்றும் பாஸ்போர்ட் பெயரில் உருவாகும் மாடல் மடிக்கக்கூடிய பிக்சல் ஸ்மார்ட்போன் என கூறப்படுகிறது.  

    புதிய பிக்சல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு இறுதியில் அறிமுகமாக இருக்கும் மைக்ரோசாப்ட் சர்பேஸ் டுயோ மற்றும் இதர மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக அமையும். 

    பிக்சல் 6, பிக்சல் ஃபோல்டு ஸ்மார்ட்போன்கள் 2021 ஆண்டின் இறுதி காலாண்டு வாக்கில் அறிமுகமாகும் என்றும் பிக்சல் 5ஏ ஸ்மார்ட்போன் 2021 ஆண்டின் இரண்டாவது காலாண்டில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    நாய்ஸ் பிராண்டின் புதிய கலர்ஃபிட் நேவ் ஸ்மார்ட்வாட்ச் மாடல் இந்திய சந்தையில் குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.


    அணியக்கூடிய சாதனங்கள் மற்றும் ஆடியோ சாதனங்களை விற்பனை செய்வதில் பிரபல நிறுவனமான நாய்ஸ் இந்தியாவில் புதிதாக கலர்ஃபிட் நேவ் என்ற பெயரில் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஸ்மார்ட்வாட்ச் பில்ட்-இன் ஜிபிஎஸ் வசதி கொண்ட நாய்ஸ் நிறுவனத்தின் முதல் மாடலாக இருக்கிறது. 

    புதிய கலர்ஃபிட் நேவ் ஸ்மார்ட்வாட்ச் 1.4 இன்ச் 320x320 பிக்சல் எல்சிடி ஸ்கிரீன், பில்ட் இன் ஜிபிஎஸ், கஸ்டமைஸ் செய்யக்கூடிய கிளவுட் சார்ந்த வாட்ச் ஃபேஸ் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. 

     நாய்ஸ் கல்ஃபிட் நேவ்

    நாய்ஸ் கலர்ஃபிட் நேவ் ஸ்மார்ட்வாட்ச்

    - 1.4 இன்ச் 320×320 பிக்சல் எல்சிடி ஸ்கிரீன்
    - ப்ளூடூத் 4.2
    - கிளவுட் சார்ந்து இயங்கும் கஸ்டமைஸ் செய்யக்கூடிய வாட்ச் ஃபேஸ்கள்
    - குறைந்த எடை, இம்கேட்-ரெசிஸ்டண்ட், பாலிகார்போனேட் ஷெல் மற்றும் சிலிகான் ஸ்டிராப்
    - 10 ஸ்போர்ட்ஸ் மோட்கள்
    - 6-ஆக்சிஸ் அக்செல்லோமீட்டர், இன்-பில்ட் ஜிபிஎஸ், ஸ்லீப் டிராக்கிங்
    - வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட்
    - 24×7 இதய துடிப்பு சென்சார்
    - அழைப்புகள், டெக்ஸ்ட், ஆப் மற்றும் சமூக வலைதள நோட்டிஃபிகேஷன்கள்
    - 180 எம்ஏஹெச் பேட்டரி

    நாய்ஸ் கலர்ஃபிட் நேவ் ஸ்மார்ட்வாட்ச் விலை ரூ. 4499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. எனினும், அமேசான் பிரைம் டே விற்பனையின் போது இந்த ஸ்மார்ட்வாட்ச் ரூ. 3999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
    ×