என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    சியோமியின் ரெட்மி 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    சியோமியின் ரெட்மி பிராண்டு புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் வெளியீடு ஆகஸ்ட் 4 ஆம் தேதி அமேசானில் நடைபெறும் என தெரிவித்து இருக்கிறது. மேலும் புதிய ஸ்மார்ட்போன் டீசர்களும் வெளியாகி இருக்கின்றன. அதன்படி புதிய ஸ்மார்ட்போன் ரெட்மி 9 சீரிஸ் என கூறப்படுகிறது.

    ரெட்மி 9 மாடலில் 6.53 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் எல்சிடி வாட்டர் டிராப் நாட்ச், மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர், 13 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 5 எம்பி மேக்ரோ சென்சார் மற்றும் 2 எம்பி டெப்த் சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

    இத்துடன் 8 எம்பி செல்ஃபி கேமரா, பின்புறம் கைரேகை சென்சார், 5020 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வழங்கப்படுகிறது.  

     ரெட்மி டீசர்

    ரெட்மி 9ஏ மற்றும் 9சி மாடல்களில் 6.53 இன்ச் எல்சிடி டாட் டிராப் நாட்ச் ஸ்கிரீன், 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. ரெட்மி 9சி மாடலில் 2.3 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர், ரெட்மி 9ஏ மாடலில் 2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி25 பிராசஸர் வழங்கப்பட்டு உள்ளது.

    ரெட்மி 9சி மாடலில் 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி மேக்ரோ, 2 எம்பி டெப்த் சென்சார், பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு உள்ளது. ரெட்மி 9ஏ மாடலில் 13 எம்பி பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இரு மாடல்களிலும் 5 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்தியாவில் ரெட்மி 9, ரெட்மி 9ஏ, ரெட்மி 9சி என மூன்று மாடல்களில் எவை அறிமுகமாகும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதுபற்றிய விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
    நோக்கியா 9.3 பியூர்வியூ மற்றும் நோக்கியா 7.3 அறிமுக விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.


    ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் இந்த ஆண்டு இறுதியில் மூன்று புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இவை நோக்கியா 9.3 பியூர்வியூ, நோக்கியா 7.3 மற்றும் நோக்கியா 6.3 ஆகும். மூன்று புதிய மாடல்களும் மூன்றாவது காலாண்டின் இறுதியிலோ அல்லது நான்காவது காலாண்டின் துவக்கத்திலோ அறிமுகம் செய்யப்படலாம். 

    முந்தைய தகவல்களில் இந்த ஸ்மார்ட்போன்கள் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்பட்டது. எனினும், இந்த காலக்கெடுவில் தாமதம் ஆகும் பட்சத்தில் நான்காவது காலாண்டில் இவை அறிமுகம் ஆகும் என எதிர்பார்க்கலாம்.

     நோக்கியா 9.3 பியூர்வியூ ரென்டர்

    கொரோனாவைரஸ் பாதிப்பு நோக்கியா உற்பத்தி பணிகளில் எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொருத்தே புதிய மாடல்கள் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. 2020 சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழா ரத்து செய்யப்பட்டது முதல் நோக்கியா ஸ்மார்ட்போன் அறிமுகமாகி நீண்ட காலம் ஆகிவிட்டது.  

    நோக்கியா 9.3 பியூர்வியூ மாடலில் 108 எம்பி பிரைமரி கேமரா சேர்த்து மொத்தமாக ஐந்து கேமரா சென்சார்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    நோக்கியா 7.3 மாடலை பொருத்தவரை செய்ஸ் ஆப்டிக்ஸ் நான்கு கேமரா சென்சார்கள் வழங்கப்படும் என்றும் இவற்றின் பிரைமரி சென்சார் 48 அல்லது 64 எம்பி சென்சார் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. நோக்கியா 6.3 மாடலில் ஸ்னாப்டிராகன் 730 பிராசஸர், குவாட் கேமரா சென்சார்களின் பிரைமரி சென்சார் 24 எம்பி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
    டெக்னோ பிராண்டின் புதிய ஹைபாட்ஸ் ஹெச்2 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.


    டிரான்சிஷன் இந்தியா நிறுவனம் டெக்னோ ஹைபாட்ஸ் ஹெச்2 இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய இயர்பட்ஸ் மாடலில் ப்ளூடூத் 5.0 கனெக்டிவிட்டி, 120 எம்எஸ் லோ லேடென்சி மோட், என்விரான்மென்ட்டல் நாய்ஸ் கேன்சலேஷன் தொழில்நுட்பம், ஸ்மார்ட் டச் கண்ட்ரோல் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.

    இத்துடன் ஐபிஎக்ஸ்4 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, ஸ்மார்ட் பாப்-அப் இன்டர்ஃபேஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இது சமீபத்திய டெக்னோ ஸ்மார்ட்போன்களுடன் இணைந்ததும் பாப்-அப் கனெக்ஸ்ரீன் இன்டர்பேஸ் வழங்குகிறது. புதிய ஹைபாட்ஸ் ஹெச்2 ஒருமுறை சார்ஜ் செய்தால் 6 மணி நேர பிளேபேக், சார்ஜிங் கேசுடன் 24 மணி நேர பேக்கப் வழங்குகிறது.

     டெக்னோ ஹைபாட்ஸ் ஹெச்2

    டெக்னோ ஹைபாட்ஸ் ஹெச்2 சிறப்பம்சங்கள்

    - ப்ளூடூத் 5
    - டச் கண்ட்ரோல்
    - 120 எம்எஸ் லோ-லேடென்சி மோட்
    - வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி
    - கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் சிரி வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி 
    - 6 மணி நேர பிளேபேக்
    - சார்ஜிங் கேசுடன் 24 மணி நேர பேக்கப்

    டெக்னோ ஹைபாட்ஸ் ஹெச்2 பிளாக் மற்றும் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 1999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ஜூலை 27 ஆம் தேதி அமேசான் மற்றும் டெக்னோ ஆஃப்லைன் விற்பனை மையங்களில் நடைபெற இருக்கிறது.
    மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சீரிஸ் எக்ஸ் கேம்கள் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன.


    மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் எக்ஸ்பாக்ஸ் கேம்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இவற்றில் பல்வேறு கேம்கள் எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எக்ஸ் கன்சோலுக்கென அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. இவற்றில் பத்து கேம்கள் உலகளவிலும், 22 எக்ஸ்பாக்ஸ் பிரத்யேக கேம்களும் அடங்கும்.

    ஹாலோ இன்ஃபனைட்

    தற்சமயம் அறிவிக்கப்பட்டு இருக்கும் எக்ஸ்பாக்ஸ் கேம்கள் வெளியாகும் போதே எக்ஸ்பாக்ஸ் கேம் பாஸ் பனர்களுக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. புதிய கேம்கள் தவிர ஏற்கனவே வெளியான கேம்களின் ஆப்டிமைஸ் செய்யப்பட்ட வெர்ஷன்களும் அறிவிக்கப்பட்டு உள்ளன. 

    புதிய கேம்கள் மற்றும் எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எக்ஸ் கன்சோலுக்கென ஆப்டிமைஸ் செய்யப்பட்ட கேம்கள் பெரும்பாலும் இந்த ஆண்டு பண்டிகை காலக்கட்டத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 
    ஹூவாய் நிறுவனத்தின் ஃபிரீப்ட்ஸ் 3ஐ ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
     

    ஹூவாய் நிறுவனம் ஃபிரீபட்ஸ் 3ஐ ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து உள்ளது. புதிய ஃபிரீபட்ஸ் 3ஐ இயர்பட்ஸ் அமேசான் பிரைம் டே சலுகையின் போது விற்பனை செய்யப்பட இருக்கிறது. 

    புதிய 3ஐ மாடல் ஏற்கனவே ஹூவாய் அறிமுகம் செய்த ஹூவாய் ஃபிரீபட்ஸ் 3 வேரியண்ட்டின் விலை குறைந்த எடிஷன் ஆகும். குறைந்த விலை என்ற போதும் புதிய இயர்பட்சில் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன், சிறப்பான பேட்டரி பேக்கர், டச் கண்ட்ரோல் மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.

    இத்துடன் மூன்று மைக் செட்டப் வழங்கப்பட்டுள்ளதால், நாய்ஸ் கேன்சலேஷன் அம்சம் சிறப்பான அனுபவத்தை வழங்கும். 

     ஹூவாய் ஃபிரீபட்ஸ் 3ஐ

    ஹூவாய் ஃபிரீபட்ஸ் 3ஐ சிறப்பம்சங்கள்

    - ப்ளூடூத் 5
    - 10 எம்எம் டைனமிக் டிரைவர்கள்
    - ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன், ஆம்பியன்ட் நாய்ஸ் கேன்சலேஷன்
    - 190 எம்எஸ் லோ லேடென்சி 
    - பாப் அப் பேர் வசதி
    - இயர்பட் ஒவ்வொன்றிலும் 37 எம்ஏஹெச் பேட்டரி
    - சார்ஜிங் கேசில் 410 எம்ஏஹெச் பேட்டரி
    - யுஎஸ்பி டைப் சி
    - ஒருமுறை சார்ஜ் செய்தால் 3.5 மணி நேர பிளேபேக்
    - சார்ஜிங் கேஸ் சேர்த்தால் 14.5 மணி நேர பேக்கப்

    ஹூவாய் ஃபிரீபட்ஸ் 3ஐ செராமிக் வைட் மற்றும் கார்பன் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 9990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இதன் விற்பனை ஆகஸ்ட் 6 ஆம் தேதி அமேசானில் நடைபெற இருக்கிறது. ஆகஸ்ட் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் ஹூவாய் ஃபிரீபட்ஸ் 3ஐ வாங்குவோருக்கு ஹூவாய் பேண்ட் 4 இலவசமாக வழங்கப்படுகிறது.

    லெனோவோ நிறுவனம் லீஜியன் பிராண்டிங்கில் தனது முதல் கேமிங் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து உள்ளது.


    லெனோவோ நிறுவனம் லீஜியன் போன் டூயெல் ஸ்மார்ட்போனினை சீன சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போனில் 6.65 இன்ச் AMOLED 144 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 865 பிளஸ் பிராசஸர், அதிகபட்சம் 16 ஜிபி ரேம் வழங்கப்பட்டு உள்ளது. 

    இத்துடன் டூயல் லிக்விட் கூலிங் சொல்யூஷன் வழங்கப்பட்டு உள்ளது. லீஜியன் போன் டூயெல் மாடலில் ஜிஏஇ கேம் அக்செலரேஷன் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 64 எம்பி பிரைமரி கேமரா, 16 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, பக்கவாட்டில் கைரேகை சென்சார், 20 எம்பி பாப் அப் கேமரா பக்கவாட்டில் பொருத்தப்பட்டு உள்ளது.

    லெனோவோ லீஜியன் போன் டூயெல்

    லெனோவோ லீஜியன் டூயெல் சிறப்பம்சங்கள்

    - 6.65 இன்ச் 2340×1080 பிக்சல் FHD+ 144Hz AMOLED HDR டிஸ்ப்ளே
    - ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 865 பிளஸ் பிராசஸர்
    - அட்ரினோ 650 GPU
    - 8 ஜிபி / 12 ஜிபி / 16 ஜிபி LPDDR5 ரேம்
    - 128 ஜிபி / 256 ஜிபி / 512 ஜிபி (UFS 3.1) மெமரி
    - ஆண்ட்ராய்டு 10 மற்றும் ZUI 12/ லீஜியன் ஒஎஸ்
    - டூயல் சிம்
    - 64 எம்பி பிரைமரி கேமரா, 0.8μm, f/1.89
    - 16 எம்பி 120° அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, f/2.2, டூயல் எல்இடி ஃபிளாஷ்
    - 20 எம்பி பாப் அப் செல்ஃபி கேமரா, f/2.2
    - யுஎஸ்பி டைப் சி
    - இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - யுஎஸ்பி டைப் சி
    - 5000 எம்ஏஹெச் பேட்டரி
    - 45 வாட் / 65 வாட் / 90 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    லெனோவோ லீஜியன் போன் டூயெல் மாடல் துவக்க விலை 3499 யுவான், இந்திய மதிப்பில் ரூ. 37320 என்றும், டாப் எண்ட் மாடல் விலை 5999 யுவான் இந்திய மதிப்பில் ரூ. 63975 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 
    அசுஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரோக் போன் 3 கேமிங் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

    அசுஸ் நிறுவனம் தனது ரோக் போன் 3 கேமிங் ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் 6.59 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் AMOLED ஹெச்டிஆர் 144 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 865 பிளஸ் பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது.

    இதில் புது வடிவமைப்பு கொண்ட காப்பர் 3டி வேப்பர் சேம்பர், பெரிய கிராஃபைட் பிலிம் வழங்கப்பட்டுள்ளது. இது ரோக் போன் 2 மாடலில் உள்ளதை விட ஆறு மடங்கு சிறப்பானதாக இருக்கிறது. இத்துடன் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 64 எம்பி பிரைமரி கேமரா, 13 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 5 எம்பி மேக்ரோ கேமரா, 24 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு உள்ளது.

    அசுஸ் ரோக் போன் 3

    அசுஸ் ரோக் போன் 3 சிறப்பம்சங்கள்

    - 6.59 இன்ச் 2340×1080 பிக்சல் FHD+ 144Hz OLED டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 6
    - 3.1 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 865 பிளஸ் பிராசஸர்
    - அட்ரினோ 650 GPU
    - 8 ஜிபி LPDDR5 ரேம், 128 ஜிபி (UFS 3.1) மெமரி
    - 12 ஜிபி LPDDR5 ரேம், 256 ஜிபி (UFS 3.1) மெமரி
    - 12 ஜிபி / 16 ஜிபி LPDDR5 ரேம், 512 ஜிபி (UFS 3.1) மெமரி
    - ஆண்ட்ராய்டு 10 மற்றும் ரோக் யுஐ
    - டூயல் சிம்
    - 64 எம்பி பிரைமரி கேமரா, 0.8μm, f/1.8
    - 13 எம்பி 125˚ அல்ட்ரா வைடு கேமரா, f/2.4
    - 5 எம்பி மேக்ரோ சென்சார், f/2.0
    - 24 எம்பி செல்ஃபி கேமரா, 0.9µm, f/2.0
    - யுஎஸ்பி டைப்-சி
    - இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 6000 எம்ஏஹெச் பேட்டரி
    - 10 வோல்ட் 3ஏ 30வாட் ஹைப்பர்சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங்

    அசுஸ் ரோக் போன் 3 மாடல் விலை 

    அசுஸ் ரோக் போன் 3 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் ரூ. 49,999
    அசுஸ் ரோக் போன் 3 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் ரூ. 57,999
    அசுஸ் ரோக் போன் 3 12 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி மாடல் 999 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ.86290
    அசுஸ் ரோக் போன் 3 16 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி மாடல் 1099 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ.94930
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ01 கோர் ஸ்மார்ட்போன் குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.
     

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ01 கோர் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. என்ட்ரி லெவல் ஆண்ட்ராய்டு கோ எடிஷனான புதிய ஸ்மார்ட்போன் தற்சமயம் இந்தோனேசிய சந்தையில் அறிமுகமாகி இருக்கிறது. 

    புதிய சாம்சங் ஸ்மார்ட்போனில் 5.3 இன்ச் எல்சிடி ஸ்கிரீன், ஹெச்டி பிளஸ் ரெசல்யூஷன், 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் பிராசஸர், 16 ஜிபி, 32 ஜிபி இன்டெர்னல் மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. புகைப்படங்களை எடுக்க 8 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், 5 எம்பி செல்ஃபி கேமரா மற்றும் 3000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது.

    சாம்சங் கேலக்ஸி ஏ01 கோர்

    சாம்சங் கேலக்ஸி ஏ01 கோர் சிறப்பம்சங்கள்

    - 5.3  இன்ச் ஹெச்டி பிளஸ் 720x1480 பிக்சல் டிஎப்டி எல்சிடி டிஸ்ப்ளே
    - 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
    - 1 ஜிபி ரேம்
    - 16 ஜிபி / 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - 8 எம்பி பிரைமரி கேமரா, f/2.2
    - 5 எம்பி செல்ஃபி கேமரா, f/2.4
    - 3000 எம்ஏஹெச் பேட்டரி
    - மைக்ரோ யுஎஸ்பி போர்ட்
    - வைபை, ப்ளூடூத் 5
    - 3.5 எம்எம் ஆடியோ ஜாக்

    சாம்சங் கேலக்ஸி ஏ01 கோர் ஸ்மார்ட்போன் இந்தோனேசிய விலை ஐடிஆர் 1099000, இந்திய மதிப்பில் ரூ. 5500 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கேலக்ஸி ஏ01 கோர் ஸ்மார்ட்போன் புளூ, பிளாக் மற்றும் ரெட் நிற வேரியண்ட்களில் கிடைக்கிறது.
    சாம்சங் நிறுவனம் தனது 2020 கேலக்ஸி அன்பேக்டு விழாவில் ஐந்து புதிய சாதனங்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    சாம்சங் நிறுவனத்தின் மொபைல் பிரிவு தலைமை செயல் அதிகாரி டே மூன் ரோ கேலக்ஸி அன்பேக்டு விழாவில் ஐந்து புதிய சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தெரிவித்து இருக்கிறார். இவ்விழா ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற இருக்கிறது. 

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி கேலக்ஸி அன்பேக்டு விழாவில் சாம்சங் கேலக்ஸி நோட் 20 சீரிஸ் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. வழக்கமாக கேலக்ஸி அன்பேக்டு விழாவில் சாம்சங் தனது நோட் சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளது.

    இத்துடன் கேலக்ஸி ஃபோல்டு 2 ஸ்மார்ட்போனும் இதே விழாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய கேலக்ஸி ஃபோல்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் விவரங்கள் தொடர்ச்சியாக இணையத்தில் வெளியாகி வருகிறது. அவற்றில் புதிய மாடலும் முந்தை வெர்ஷன் போன்றே காட்சியளிக்கும் என கூறப்படுகிறது. 

    கேலக்ஸி நோட் 20 லீக்

    எனினும், இதன் ஹார்டுவேரில் மாற்றம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவை தவிர கேலக்ஸி டேப் எஸ்7 மாடலும் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. இந்த சாதனமும் முந்தைய டேப் எஸ்6 போன்றே காட்சியளிக்கும் என்றும் ஹார்டுவேர் மற்றும் சாஃப்ட்வேரில் மாற்றங்கள் செய்யப்படும் என கூறப்படுகிறது.   

    ஸ்மார்ட்போன், டேப்லெட் வரிசையில் கேலக்ஸி வாட்ச் 3 மற்றும் புதிய கேலக்ஸி பட்ஸ் மாடலும் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது. முந்தைய தகவல்களின் படி புதிய இயர்போன் கேலக்ஸி பட்ஸ் லைவ் பெயரில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    லெனோவோ நிறுவனத்தின் புதிய லீஜியன் ஸ்மார்ட்போன் முப்பது நிமிடங்களில் பேட்டரியை முழுமையாக சார்ஜ் ஏற்றிக் கொள்ளும் என தகவல் வெளியாகி உள்ளது.


    லெனோவோ லீஜியன் கேமிங் ஸ்மார்ட்போன் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், இந்த ஸ்மார்ட்போனின் விவரங்கள் அடிக்கடி இணையத்தில் லீக் ஆகி வருகிறது. லெனோவோ லீஜியன் ஸ்மார்ட்போனுடன் அசுஸ் ரோக் போன் 3 மாடலும் அறிமுகமாக இருக்கிறது. இரு ஸ்மார்ட்போன்களுக்கும் சந்தையில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

    இந்நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் லெனோவோ லீஜியன் ஸ்மார்ட்போனில் 90 வாட் ட்வின் டர்போ சார்ஜிங் தொழில்நுட்பம் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த தொழில்நுட்பம் ஸ்மார்ட்போன் பேட்டரியை முப்பது நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்துவிடும் என தெரிகிறது.

     லெனோவோ லீஜியன்

    புதிய லெனோவோ லீஜியன் ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட இருக்கிறது. அந்த வகையில் முப்பது நிமிடங்களில் முழு சார்ஜ் ஆவது சிறப்பான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. லெனோவோ லீஜியன் பேட்டரி இருபாகங்களாக பிரிக்கப்பட்டு, இரண்டும் ஒரே சமயத்தில் சார்ஜ் ஆகும் திறன் வழங்கப்பட்டு உள்ளது.

    புதிய 90 வாட் சார்ஜிங் தொழில்நுட்பம் மூலம் ஸ்மார்ட்போன் பேட்டரிக்கு சீராக மின்திறன் செல்கிறதா என்பதை உறுதி செய்ய 16 பாதுகாப்பு சோதனைகள் பின்பற்றப்பட்டு இருப்பதாக லெனோவோ டீசரில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. கடந்த ஆண்டு வெளியான அசுஸ் ரோக் போன் 2 மாடலில் உள்ளதை போன்று புதிய ஸ்மார்ட்போனிலும் இரண்டு யுஎஸ்பி டைப் சி போர்ட்கள் வழங்கப்படுகின்றன.
    ரியல்மி பிராண்டின் புதிய வயர்லெஸ் சார்ஜர் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


    ரியல்மி பிராண்டின் புதிய என்ட்ரி லெவல் சி11 ஸ்மார்ட்போன் மற்றும் 10000 எம்ஏஹெச் பவர் பேங்க் கடந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்டன. முன்னதாக இந்த இரண்டு சாதனங்களும் ரியல்மி சப்போர்ட் வலைதள பக்கத்தில் பட்டியலிடப்பட்டு இருந்த தகவல்கள் வெளியாகி இருந்தன.

    இந்நிலையில், ரியல்மி சப்போர்ட் வலைதள பக்கத்தில் மற்றொரு புதிய சாதனம் - ரியல்மி 10 வாட் வயர்லெஸ் சார்ஜர் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. அந்த வகையில், புதிய ரியல்மி வயர்லெஸ் சார்ஜர் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

     வயர்லெஸ் சார்ஜர்

    ரியல்மி இந்தியா சப்போர்ட் வலைதளத்தில் 10 வாட் வயர்லெஸ் சார்ஜர் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. எனினும், இதன் வெளியீட்டு தேதி பற்றிய விவரங்கள் ரகசியமாக உள்ளன. எனினும், இந்திய வலைதளத்தில் பட்டியலிடப்பட்டு இருப்பதால், விரைவில் இது அறிமுகமாகும் என கூறப்படுகிறது. 

    முன்னதாக ரியல்மி பட்ஸ் ஏர் அறிமுகம் ஆகும் போது, ரியல்மி நிறுவனம் 10 வாட் வயர்லெஸ் சார்ஜர் பற்றிய டீசரை வெளியிட்டது. மேலும் ரியல்மி தலைமை செயல் அதிகாரி மாதவ் சேத் புதிய வயர்லெஸ் சார்ஜர் விரைவில் ரியல்மி வலைதளத்தில் கிடைக்கும் என தெரிவித்து இருந்தார்.
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.
     

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. ப்ளூடூத் எஸ்ஐஜி வலைதளத்தில் லீக் ஆன விவரங்களின் படி புதிய சாம்சங் ஸ்மார்ட்போனில் ப்ளூடூத் 5.0 வசதி வழங்கப்பட இருப்பது தெரியவந்துள்ளது. 

    மேலும் இந்த ஸ்மார்ட்போன் வெளியீடு உற்பத்தியில் ஏற்பட்ட தாமதம் காரணமாக செப்டம்பர் மாதத்திற்கு தள்ளிவைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இத்துடன் சாம்சங் கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போன் கீக்பென்ச் வலைதளத்திலும் லீக் ஆகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர் கொண்டிருக்கும் என்றும் இத்துடன் 8 ஜிபி ரேம் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

     கேலக்ஸி எம்51

    ப்ளூடூத் எஸ்ஐஜி வலைதளத்தில் சாம்சங் கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போன் SM-M515F_DSN எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனிற்கான ப்ளூடூத் சான்று விண்ணப்பம் மே மாதத்தில் சமர்பிக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. ப்ளூடூத் மட்டுமின்றி ஸ்மார்ட்போனின் இதர விவரங்களும் தெரியவந்துள்ளது. 

    அதன்படி இந்த ஸ்மார்ட்போன் 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர், ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் வழங்கப்படுகிறது. இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி இந்த ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட சாம்சங் கேலக்ஸி எம்40 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் என தெரிகிறது. 

    இவைதவிர புதிய சாம்சங் கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஃபிளாட் டிஸ்ப்ளே, 128 ஜிபி மெமரி மற்றும் அதிக திறன் கொண்ட பேட்டரி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ×