என் மலர்
புதிய கேஜெட்டுகள்
லெனோவோ நிறுவனம் சக்திவாய்ந்த ரைசன் பிராசஸர் கொண்ட லீஜியன் 5, ஐடியாபேட் கேமிங் 3 லேப்டாப்களை அறிமுகம் செய்து உள்ளது.
ரைசன் 4000 சீரிஸ் பிராசஸர்கள் கொண்ட கேமிங் லேப்டாப்களை பல்வேறு நிறுவனங்களும் அறிமுகம் செய்து வருகின்றன. அந்த வரிசையில் தற்சமயம் லெனோவோ இணைந்துள்ளது. லெனோவோ நிறுவனம் லீஜியன் 5 17 இன்ச், 15 இன்ச், ஐடியாபேட் கேமிங் 3 லேப்டாப்களை புதிய ஏஎம்டி வேரியண்ட்களில் அறிமுகம் செய்துள்ளது.
லெனோவோ லீஜியன் கேமிங் லேப்டாப்கள் லீஜியன் 5 மற்றும் லீஜியன் 5பி என இரண்டு மாடல்களில் கிடைக்கிறது. லெனோவோ லீஜியன் 5 - 15.6 இன்ச் மற்றும் 17.3 என இருவித அளவுகளில் கிடைக்கிறது. இவற்றுடன் ஏஎம்டி ரைசன் 7 4800 ஹெச் சீரிஸ் மொபைல் பிராசஸர், என்விடியா ஜீஃபோர்ஸ் ஆர்டிஎக்ஸ் 2060 ஜிபியு, அதிகபட்சம் 16 ஜிபி 3200 மெகாஹெர்ட்ஸ் டிடிஆர்4 மெமரி, 1 டிபி பிசிஐஇ எஸ்எஸ்டி அம்சங்களுடன் கான்ஃபிகர் செய்ய முடியும்.
ஸ்கிரீன் ஆப்ஷன்களை பொருத்தவரை 144 ஹெர்ட்ஸ் 1080 பிக்சல் பேனல் மற்றும் டால்பி விஷன் சப்போர்ட் கொண்டிருக்கிறது. இத்துடன் லீஜியன் கோல்டுஃபிரண்ட் 2.0 தெர்மல் சொல்யூஷன், வைட் பேக்லிட் லீஜியன் ட்ரூஸ்டிரைக் கீபோர்டு, அதிகபட்சம் 7.5 மணி நேர பேக்கப் வழங்குகிறது.

லெனோவோ லீஜியன் 5பி மாடலில் ஏஎம்டி ரைசன் 7 4800 ஹெச் சீரிஸ் மொபைல் பிராசஸர், என்விடியா ஜீஃபோர்ஸ் ஆர்டிஎக்ஸ் 2060 ஜிபியு, அதிகபட்சம் 32 ஜிபி 3200 மெகாஹெர்ட்ஸ் டிடிஆர்4 மெமரி, அதிகபட்சம் 1 டிபி பிசிஐஇ எஸ்எஸ்டி உடன் கான்ஃபிகர் செய்து கொள்ள முடியும்.
இந்த லேப்டாப்களில் டூயல் பர்ன் சப்போர்ட், லெனோவோ கியூ கண்ட்ரோல் 3.0 வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 144 ஹெர்ட்ஸ் 5எம்எஸ் ரெஸ்பான்ஸ் டைம், ஃபுல் ஹெச்டி பேனல், டால்பி அட்மோஸ் மற்றும் 4 சோன் ஆர்ஜிபி சிஸ்டம் பேக்லைட்டிங் வழங்கப்பட்டு இருக்கிறது.
லெனோவோ ஐடியாபேட் கேமிங் 3 ஏஎம்டி ரைசன் 7 4800 ஹெச் சீரிஸ் மொபைல் பிராசஸர், என்விடியா ஜீஃபோர்ஸ் ஜிடிஎக்ஸ் 1650 டிஐ ஜிபியு வழங்கப்படுகிறது. இத்தடன் மேம்பட்ட தெர்மல் டிசைன், லெனோவோ கியூ கண்ட்ரோல் 3.0, 120 ஹெர்ட்ஸ் ரிஃப்ரெஷ் ரேட், ஃபுல் ஹெச்டி பேனல், அதிகபட்சம் 32 ஜிபி டிடிஆர்4 ரேம், 1 டிபி பிசிஐஇ எஸ்எஸ்டி வழங்கப்படுகிறது.
17 இன்ச் லெனோவோ லீஜியன் 5 லேப்டாப் செப்டம்பர் மாதம் கிடைக்கும் என்றும் இதன் விலை 1089.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 81730 என்றும் 15 இன்ச் லெனோவோ லீஜியன் 5 லேப்டாப் விலை 759.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 56985 என்றும் 15 இன்ச் ஐடியாபேட் கேமிங் 3 லேப்டாப் விலை 659.99 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 49487 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
ரியல்மி பிராண்டின் ரியல்மி 6 ஸ்மார்ட்போனின் புது வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
இந்திய சந்தையில் ரியல்மி பிராண்டின் ரியல்மி 6 ஸ்மார்ட்போன் மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. ரூ. 12999 துவக்க விலையில் அறிமுகமாகி பின் பலமுறை விலை உயர்த்தப்பட்டு ரியல்மி 6 ஸ்மார்ட்போனின் துவக்க விலை ரூ. 14999 என மாறி உள்ளது.
இதுவரை ரியல்மி 6 ஸ்மார்ட்போன் மூன்று வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்சமயம் ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. ரியல்மி 6 6 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 15999 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் கொமெட் புளூ மற்றும் கொமெட் வைட் நிறங்களில் கிடைக்கிறது. ரியல்மி 6 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 14999 என்றும், 6 ஜிபி ரேம், 128 ஜிபி விலை ரூ. 16999 என்றும் 8 ஜிபி ரேம், 128 ஜிபி விலை ரூ. 17999 என விலை நிர்ணயம் செயய்ப்பட்டு உள்ளது.

ரியல்மி 6 ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் எல்.சி.டி. ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ ஜி90டி பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.
புகைப்படங்களை எடுக்க 64 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. 119° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்.பி. மோனோ சென்சார், 2 எம்.பி. மேக்ரோ சென்சார் வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் 16 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட்போனின் பக்காவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ள ரியல்மி 6 ப்ரோ மாடலில் கிரேடியன்ட் பாலிகார்போனேட் பேக் கொண்டிருக்கிறது. இதில் பிரத்யேக டூயல் சிம் மற்றும் மைக்ரோ எஸ்.டி. கார்டு ஸ்லாட்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் 4300 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 30 வாட் VOOC ஃபிளாஷ் சார்ஜ் வழங்கப்பட்டுள்ளது.
ஐகூ பிராண்டின் புதிய ஐகூ யு1 ஸ்மார்ட்போன் மூன்று பிரைமரி கேமரா, ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸருடன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
ஐகூ யு1 ஸ்மார்ட்போன் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் 1080x2340 பிக்சல் டிஸ்ப்ளே, ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர், அட்ரினோ 618 ஜிபியு, 6 ஜிபி மற்றும் 8 ஜிபி ரேம் வழங்கப்பட்டு உள்ளது.
புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் சென்சார், 2 எம்பி மேக்ரோ லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 8 எம்பி செல்ஃபி கேமரா பன்ச் ஹோல் கட்அவுட்டில் பொருத்தப்பட்டுள்ளது. ஐகூ யு1 ஸ்மார்ட்போன் அதிகபட்சம் 128 ஜிபி இன்டெர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் கொண்டிருக்கிறது.
மைக்ரோ யுஎஸ்பி சார்ஜிங் கொண்டிருக்கும் ஐகூ யு1 ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 4500 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங், ஒடிஜி ரிவர்ஸ் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

ஐகூ யு1 சிறப்பம்சங்கள்
- 6.53 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் 1080x2340 பிக்சல் டிஸ்ப்ளே
- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர்
- அட்ரினோ 618 ஜிபியு
- 6 ஜிபி / 8 ஜிபி ரேம்
- 64 ஜிபி / 128 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- 48 எம்பி பிரைமரி கேமரா
- 2 எம்பி டெப்த் சென்சார்
- 2 எம்பி மேக்ரோ லென்ஸ்
- 8 எம்பி செல்ஃபி கேமரா
- கைரேகை சென்சார்
- 4500 எம்ஏஹெச் பேட்டரி
- 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங், ஒடிஜி ரிவர்ஸ் சார்ஜிங் வசதி
ஐகூ யு1 ஸ்மார்ட்போன் பிளாக், புளூ மற்றும் வைட் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை CNY1198 இந்திய மதிப்பில் ரூ. 12878, 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை CNY1398 இந்திய மதிப்பில் ரூ. 15 ஆயிரம், டாப் எண்ட் மாடலான 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி விலை CNY 1598 இந்திய மதிப்பில் ரூ. 17200 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சியோமி நிறுவனத்தின் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.
சியோமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் M2007J1SC எனும் மாடல் நம்பருடன் 3சி சான்று பெற்று இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனுடன் 120 வாட் சார்ஜர் வழங்கப்படுகிறது.
இது 100 வாட் சூப்பர் சார்ஜ் டர்போவைவிட அதிவேகமானது ஆகும். இந்த தொழில்நுட்பத்தை சியோமி நிறுவனம் கடந்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்தது. எனினும், இந்த தொழில்நுட்பம் எந்த ஸ்மார்ட்போனிலும் வழங்கப்படவில்லை.

அந்த வகையில் தற்சமயம் சியோமி 120 வாட் சார்ஜர் MDY-12-ED எனும் மாடல் நம்பருடன் இம்மாத துவக்கத்தில் சான்று பெற்று இருந்தது. சியோமியின் 120 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட புதிய 5ஜி ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
முன்னதாக ஐகூ பிராண்டு தனது 120 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை இந்த வார துவக்கத்தில் அறிமுகம் செய்தது. இந்த தொழில்நுட்பம் டூயல் சார்ஜிங் சிப்செட்களை பயன்படுத்துகிறது. இதன் 120வாட் இரண்டு 60 வாட்களாக இரட்டை சிப்கள் வழங்கப்பட்டுள்ளது. இவை சார்ஜிங்கின் போது அதிக சூடாவதை தவிர்க்க செய்கிறது.
120 வாட் அல்ட்ரா ஃபிளாஷ் சார்ஜிங் கொண்ட ஸ்மார்ட்போன் 6சி செல் அரே-டைப் வடிவமைப்பு கொண்டுள்ளது. இது 4000 எம்ஏஹெச் பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போனை 15 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்துவிடும்.
ரியல்மி பிராண்டின் புதிய 30 வாட் டார்ட் சார்ஜ் 10000 எம்ஏஹெச் பவர் பேங்க் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
ரியல்மி நிறுவனம் 10000 எம்ஏஹெச் 30 வாட் டார்ட் சார்ஜ் பவர் பேங்க் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த பவர் பேங்க் 18 வாட் சார்ஜர்களை விட 53 சதவீதம் அதிவேக சார்ஜிங் வழங்குகிறது.
மேலும் இந்த பவர் பேங்க் கொண்டு 30 வாட் வூக், / டார்ட் சார்ஜ் வசதி கொண்ட சாதனங்களை சார்ஜ் செய்ய முடியும். இது 20 வாட், 18 வாட், 15 வாட் மற்றும் 10 வாட் சாதனங்களையும் சார்ஜ் செய்யும். இத்துடன் பவர் பேங்க் ஒரே சமயத்தில் டைப் சி மற்றும் டைப் ஏ போர்ட்களில் சார்ஜ் செய்யும்.
பவர் பேங்க் கொண்டு யுஎஸ்பி டைப் சி 30 வாட் சார்ஜிங் மூலம் லேப்டாப்களையும் சார்ஜ் செய்ய முடியும். பிரத்யேக கார்பன் ஃபைபர் டெக்ஸ்ச்சர் கொண்டிருக்கிறது.

ரியல்மி 30 வாட் டார்ட் சார்ஜ் 10000 எம்ஏஹெச் பவர் பேங்க் சிறப்பம்சங்கள்:
- 10000 எம்ஏஹெச் லித்தியம் பாலிமல் பேட்டரி
- டூயல் அவுட்புட் யுஎஸ்பி டைப் ஏ மற்றும் யுஎஸ்பி டைப் சி
- 30 வாட் இன்புட் யுஎஸ்பி டைப் சி
- 30 வாட் யுஎஸ்பி டைப் சி / டைப் ஏ சிங்கிள் போர்ட் அவுட்புட்
- 25 வாட் யுஎஸ்பி டைப் சி / டைப் ஏ டூயல் போர்ட் அவுட்புட்
- 15 அடுக்கு பாதுகாப்பு
- லோ பவர் மோட்
- எடை: 230 கிராம்
- 30 வாட் சார்ஜர் மூலம் பவர் பேங்க் 1.9 மணி நேரங்களில் சார்ஜ் செய்திட முடியும்
ரியல்மி 10000 எம்ஏஹெச் 30 வாட் பவர் பேங்க் பிளாக் மற்றும் எல்லோ நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 1999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை ஜூலை 21 ஆம் தேதி ப்ளிப்கார்ட் தளத்தில் நடைபெறுகிறது.
டெக்னோ பிராண்டின் புதிய ஸ்பார்க் 5 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
டெக்னோ பிராண்டின் புதிய ஸ்பார்க் 5 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்திய நச்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போனில் 6.6 இன்ச் ஹெச்டி பிளஸ் டாட் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஏ25 பிராசஸர், 4 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் 16 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா, 2 எம்பி டெப்த் சென்சார் மற்றும் ஏஐ லென்ஸ் வழங்கப்படுகிறது. இத்துடன் 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. இதன் பின்புறம் கைரேகை சென்சார், டெக்ஸ்ச்சர் டிசைன், பிரத்யேக டூயல் சிம் மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்கள் மற்றும் 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.

டெக்னோ ஸ்பார்க் 5 ப்ரோ சிறப்பம்சங்கள்
- 6.6 இன்ச் 1600x720 பிக்சல் ஹெச்டி+ 20:9 ரக 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலோ ஏ25 12nm பிராசஸர்
- IMG பவர்விஆர் GE8320 GPU
- 4 ஜிபி ரேம்
- 64 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 10 ஹை ஒஎஸ் 6.1
- டூயல் சிம் ஸ்லாட்
- 16 எம்பி பிரைமரி கேமரா, f/1.8, குவாட் எல்இடி ஃபிளாஷ்
- 2 எம்பி மேக்ரோ கேமரா
- 2 எம்பி டெப்த், ஏஐ கேமரா
- 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0, டூயல் எல்இடி ஃபிளாஷ்
- கைரேகை சென்சார்
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக், டிடிஎஸ் ஹெச்டி சரவுண்ட் சவுண்ட்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- மைக்ரோ யுஎஸ்பி
- 5000 எம்ஏஹெச் பேட்டரி
- 10 வாட் சார்ஜிங்
டெக்னோ ஸ்பார்க் 5 ப்ரோ ஸ்மார்ட்போன் ஐஸ் ஜடைட், ஸ்பார்க் ஆரஞ்சு மற்றும் சீபெட் புளு நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 10499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் அமேசான் ஆன்லைன் மற்றும் நாடு முழுக்க 35 ஆயிரத்திற்கும் அதிக விற்பனை மையங்களில் விற்பனை செய்யப்படுகிறது.
120 வாட் ஃபிளாஷ்சார்ஜ் அல்ட்ரா ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் கொண்ட புதிய ஐகூ ஸ்மார்ட்போனின் அறிமுக விவரங்களை பார்ப்போம்.
விவோவின் ஐகூ பிராண்டு தனது 120 வாட் ஃபிளாஷ் சார்ஜ் அல்ட்ரா ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்தது. முன்னதாக இதேபோன்ற தொழில்நுட்பத்தை விவோ கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது.
ஐகூ இசட்1 5ஜி மாடலில் உள்ள 44வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் போன்றே இந்த தொழில்நுட்பமும் டூயல் சார்ஜிங் சிப்செட்களை பயன்படுத்துகிறது. இதன் 120வாட் இரண்டு 60 வாட்களாக இரட்டை சிப்கள் வழங்கப்பட்டுள்ளது. இவை சார்ஜிங்கின் போது அதிக சூடாவதை தவிர்க்க செய்கிறது.

இந்த சார்ஜர் இன்டெலிஜண்ட் டெம்ப்பரேச்சர் கண்ட்ரோல் கொண்டுள்ளது. இது அதிக வெப்பம் ஆவதை தவிர்க்க செய்கிறது. 120 வாட் அல்ட்ரா ஃபிளாஷ் சார்ஜிங் கொண்ட ஸ்மார்ட்போன் 6சி செல் அரே-டைப் வடிவமைப்பு கொண்டுள்ளது. இது 4000 எம்ஏஹெச் பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போனை 15 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்துவிடும்.
ஸ்மார்ட்போனில் ஐகூ நிறுவனம் கிராஃபைட் ஹீட் டிசிபேஷன் ஃபிலிம் அளவை அதிகரித்துள்ளது. இத்துடன் சூப்பர்கன்டக்டிங் விசி லிக்விட் கூலிங் அமைப்பை மேம்படுத்தி இருக்கிறது.
120 வாட் அல்ட்ரா ஃபாஸ்ட் ஃபிளாஷ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் கொண்ட முதல் ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் மாத வாக்கில் அறிமுகம் ஆகலாம் என ஐகூ தெரிவித்து உள்ளது.
விவோ நிறுவனத்தின் புதிய எக்ஸ்50 சீரிஸ் இந்திய வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
விவோ நிறுவனம் தனது எக்ஸ்50 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் ஜூலை 16 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன் சீரிஸ் அறிமுக நிகழ்வு ஜூலை 16, மதியம் 12 மணிக்கு துவங்க இருக்கிறது.
முன்னதாக விவோ எக்ஸ்50 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்கள்- விவோ எக்ஸ்50, எக்ஸ்50 ப்ரோ மற்றும் எக்ஸ்50 ப்ரோ பிளஸ் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து இவற்றின் இந்திய வெளியீட்டை உறுதிப்படுத்தும் டீசரினை விவோ இந்தியா வெளியிட்டது.
விவோ டீசரின் படி புதிய விவோ எக்ஸ்50 சீரிஸ் ஸ்மார்ட்போனின் கேமரா அதிநவீன அம்சங்களை வழங்கும் என தெரியவந்துள்ளது. எனினும், விவோ எக்ஸ்50, எக்ஸ்50 ப்ரோ மற்றும் எக்ஸ்50 ப்ரோ பிளஸ் என மூன்று மாடல்களையும் இந்தியாவில் அறிமுகம் செய்யுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

விவோ எக்ஸ்50 ப்ரோ ஸ்மார்ட்போன் ஃபிளாக்ஷிப் தர பிரைமரி கேமரா கொண்டிருக்கிறது. இத்துடன் விவோ எக்ஸ்50 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் 5ஜி வசதி வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் ஸ்னாப்டிராகன் 765ஜி சிப்செட் வழங்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் விவோ எக்ஸ்50 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் விரைவில் வெளியாக இருக்கும் ஒப்போ ரெனோ 4, ஒன்பிளஸ் இசட் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. விவோ எக்ஸ்50 ப்ரோ பிளஸ் மாடலில் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் ஒன்பிளஸ் பாட்ஸ் எனும் பெயரில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
ஒன்பிளஸ் நிறுவனம் விரைவில் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய இயர்பட்ஸ் ஒன்பிளஸ் பாட்ஸ் என அழைக்கப்பட இருக்கிறது. புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலுக்கான டீசரை ஒன்பிளஸ் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது.
அமேசான் வலைதளத்தில் ஒன்பிளஸ் பாட்ஸ் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலுக்கான டீசர் வெளியிடப்பட்டது. முன்னதாக ஒன்பிளஸ் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் பின்லாந்தின் எஸ்ஜிஎஸ் ஃபிம்கோ சான்று பெற்றது குறிப்பிடத்தக்கது. புதிய இயர்பட்ஸ் ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் ட்ரூ வயர்லெஸ் ஸ்டீரியோ இயர்பட்ஸ் ஆக இருக்கிறது.

தற்போதைய தகவல்களின் படி புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் ஜூலை 21 ஆம் தேதி ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போனுடன் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. புதிய இயர்பட்ஸ் அமேசான் தளத்தின் சப்ஸ்க்ரிப்ஷன் பகுதியில் பட்டியலிடப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஃபின்லாந்து சான்று விவரங்களின் படி புதிய இயர்பட்ஸ் உடன் 5வோல்ட் அல்லது 7.5 வாட் சார்ஜிங் கேஸ் வழங்கப்படும் என கூறப்படுகிறது. புதிய இயர்பட்ஸ் கருப்பு நிறம் கொண்டிருக்கும் என்றும் இது இன்-இயர் வடிவமைப்பு கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.
ரியல்மி பிராண்டின் புதிய ரியல்மி 6ஐ ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாக இருக்கிறது.
ரியல்மி பிராண்டு இந்தியாவில் புதிய ரியல்மி சி11 ஸ்மார்ட்போனினை ஜூலை 14 ஆம் தேதி அறிமுகமாகி இருக்கிறது. தற்சமயம் ரியல்மி 6ஐ ஸ்மார்ட்போனிற்கான டீசர் ப்ளிப்கார்ட் தளத்தில் வெளியாகி இருக்கிறது. புதிய ரியல்மி 6ஐ ஸ்மார்ட்போன் ஜூலை 14 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
ப்ளிப்கார்ட் வலைதளத்தில் டீசரின் படி ரியல்மி 6ஐ ஸ்மார்ட்போன் புகைப்படம் மற்றும் ரியல்மி 6ஐ ரூ.15 ஆயிரம் பட்ஜெட்டில் ப்ளிப்கார்ட்டில் கிடைக்கும் சக்திவாய்ந்த மிட்ரேன்ஜ் ஸ்மார்ட்போன் எனும் வாசகம் இடம்பெற்று இருக்கிறது.
புதிய ரியல்மி 6ஐ ஸ்மார்ட்போன் ஜூலை 14 ஆம் தேதி மதியம் 1 மணிக்கு அறிமுகம் செய்யப்படுகிறது. புதிய ரியல்மி 6ஐ ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி90டி பிராசஸர், 90 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. ரியல்மி 6ஐ ஸ்மார்ட்போன் முன்னதாக ஐரோப்பிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட ரியல்மி 6எஸ் மாடலின் மேம்பட்ட வெர்ஷன் என கூறப்படுகிறது.
இந்தியாவில் ரியல்மி 6 ஸ்மார்ட்போனின் துவக்க விலை ரூ. 14999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் புதிய ரியல்மி 6ஐ ஸ்மார்ட்போனின் விலை ரூ. 13999 என நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

ரியல்மி 6ஐ எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்
- 6.5 இன்ச் 2400 ×1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன்
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
- ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி90டி பிராசஸர்
- 800MHz மாலி-G76 3EEMC4 GPU
- 4 ஜிபி LPPDDR4x ரேம்
- 64 ஜிபி (UFS 2.1) மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம் ஸ்லாட்
- ஆண்ட்ராய்டு 10 மற்றும் ரியல்மி யுஐ
- 48 எம்பி பிரைமரி கேமரா, 0.8μm, எல்இடி ஃபிளாஷ், EIS
- 8 எம்பி 119° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.3
- 2 எம்பி மோனோ சென்சார்
- 2 எம்பி 4cm மேக்ரோ சென்சார், f/2.4
- 16 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக், டால்பி அட்மோஸ், எஃப்எம் ரேடியோ
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யுஎஸ்பி டைப்-சி
- 4300 எம்ஏஹெச் பேட்டரி
- 30 வாட் ஃபிளாஷ் சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங்
ஒப்போ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
இந்தியாவில் ஒப்போ ரெனோ 4 ப்ரோ ஸ்மார்ட்போன் இம்மாத மூன்றாவது வாரத்தில் அறிமுகமாகலாம் என தகவல் வெளியாகி வருகிறது. புதிய ஸ்மார்ட்போனின் சரியான வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில் தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் ஒப்போ ரெனோ 4 ப்ரோ ஸ்மார்ட்போனுடன் ஒப்போ வாட்ச் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக ஒப்போ நிறுவனம் தனது ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது.

ஒப்போ வாட்ச் சீன சந்தையில் மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. ஒப்போ வாட்ச் மாடலில் AMOLED டிஸ்ப்ளே, 41எம்எம் மற்றும் 46எம்எம் என இரு மாடல்களில் கிடைக்கிறது. இவற்றில் முறையே 1.6 மற்றும் 1.9 இன்ச் டிஸ்ப்ளேக்கள் வழங்கப்பட்டுள்ளன.
புதிய ஒப்போ ஸ்மார்ட்வாட்ச் மாடலில் பிரீமியம் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் எடிஷனும் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் குவால்காம் ஸ்னாப்டிராகன் வியர் 2500 சிப்செட் கொண்டு இயங்குகிறது. புதிய ஸ்மார்ட்வாட்ச் கூகுள் வியர் ஒஎஸ் மற்றும் கலர் ஒஎஸ் இயங்குதளம் கொண்டுள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் 2 4ஜி அலுமினியம் எடிஷன் ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் 2 இந்தியாவில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. முதலில் கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் 2 44எம்எம் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மற்றும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கேஸ் மற்றும் 4ஜி வெர்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டது.
தற்சமயம் கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் 2 4ஜி அலுமினியம் எடிஷன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய ஸ்மார்ட்வாட்ச் எடிஷன் 1.4 இன்ச் வளைந்த சூப்பர் AMOLED ஸ்கிரீன், சுழலும் டச் பெசல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலில் 39 உடற்பயிற்சிகளை டிராக் செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் ஏழு உடற்பயிற்சிகளை இது தானாக டிராக் செய்யும் வசதி கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் இ-சிம் கனெக்டிவிட்டி வசதி கொண்டிருக்கிறது. இதனால் அழைப்புகள், குறுந்தகவல்கள் மற்றும் நோட்டிஃபிகேஷன்களை இயக்க முடியும்.

சாம்சங் கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் 2 4ஜி சிறப்பம்சங்கள்
1.4 இன்ச் 360×360 பிக்சல் சூப்பர் AMOLED, ஃபுல் கலர் ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே
கார்னிங் கொரில்லா கிளாஸ் டிஎக்ஸ் பிளஸ் பாதுகாப்பு
எக்சைனோஸ் 9110 டூயல் கோர் பிராசஸர்
1.5 ஜிபி ரேம்
4 ஜிபி மெமரி
டைசன் சார்ந்த வியரபிள் ஒஎஸ்
இதய துடிப்பு சென்சார், எலெக்ட்ரோகார்டியோகிராம், அக்செல்லோமீட்டர், கைரேஸ்கோப், பாரோமீட்டர்
5ATM + IP68 வாட்டர் ரெசிஸ்டண்ட், MIL-STD-810G சான்று
இ-சிம், 4ஜி எல்டிஇ பி1, பி2, பி3, பி4, பி5, பி7, பி8, பி12, பி13, பி20, மற்றும் பி66
சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு மட்டும் எல்டிஇ
ப்ளூடூத் 5, வைபை, A-GPS/ GLONASS/ Beidou
340 எம்ஏஹெச் பேட்டரி
WPC-சார்ந்த வயர்லெஸ் சார்ஜிங்
சாம்சங் கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ்2 4ஜி அலுமினியம் எடிஷன் கிளவுட் சில்வர், அக்வா பிளாக் மற்றும் பின்க் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 28490 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை ஜூலை 11 ஆம் தேதி துவங்குகிறது.






