என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    அசுஸ் நிறுவனத்தின் ரோக் 3 கேமிங் ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    அசுஸ் ரோக் 3 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஜூலை 22 ஆம் தேதி அறிமுகமாகும் என அசுஸ் இந்தியா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 பிளஸ் பிராசஸர் வழங்கப்படுகிறது. 

    புதிய அசுஸ் ரோக் 3 ஸ்மார்ட்போனிற்கான பிரத்யேக மைக்ரோசைட் ப்ளிப்கார்ட் தளத்தில் துவங்கப்பட்டு இருக்கிறது. இதில் ஸ்மார்ட்போன் டீசர் உள்பட அறிமுக தேதி மற்றும் நேரம் போன்ற விவரங்கள் இடம்பெற்று இருக்கிறது. அதன்படி அசுஸ் ரோக் 3 ஸ்மார்ட்போன் ஜூலை 22 ஆம் தேதி இரவு 8.15 மணிக்கு நடைபெறுகிறது.

    ஸ்னாப்டிராகன் 865 பிளஸ்

    அசுஸ் ரோக் 3 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்

    - 6.59 இன்ச் 2340×1080 பிக்சல் FHD+ 144Hz OLED 10-பிட் HDR டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 6
    - ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 865 பிளஸ்
    - அட்ரினோ 650 GPU
    - 8 ஜிபி / 12 ஜிபி / 16 ஜிபி LPDDR5 ரேம்
    - 128 ஜிபி / 256 ஜிபி / 512 ஜிபி (UFS 3.0) மெமரி
    - ஆண்ட்ராய்டு 10 மற்றும் ரோக் யுஐ
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 64 எம்பி பிரைமரி கேமரா, 0.8μm
    - அல்ட்ரா வைடு கேமரா
    - டெப்த் / மேக்ரோ சென்சார்
    - 13 எம்பி செல்ஃபி கேமரா
    - டூயல் முன்புற ஸ்பீக்கர்கள், எஃப்எம் ரேடியோ, ஹைரெஸ் ஆடியோ
    - டிடிஎஸ் ஹெட்போன், குவாட் மைக் மற்றும் நாய்ஸ் கேன்சலேஷன்
    - இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1
    - யுஎஸ்பி டைப்-சி
    - 6000 எம்ஏஹெச் பேட்டரி
    ரியல்மி பிராண்டின் புதிய ரியல்மி சி11 ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    ரியல்மி பிராண்டின் புதிய சி11 பட்ஜெட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஜூலை 14 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் மலேசியாவில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

    புதிய ரியல்மி சி11 ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர் கொண்ட முதல் ஸ்மார்ட்போனாக வெளியானது. ரியல்மி சி11 ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டை அந்நிறுவனம் தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு இருக்கிறது. 

    ரியல்மி சி11

    ரியல்மி சி11 சிறப்பம்சங்கள்

    - 6.52 இன்ச் 1600x720 பிக்சல் HD+ 20:9 மினி டிராப் டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பிளஸ் பிராசஸர்
    - 2.3GHz ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர்
    - IMG பவர்விஆர் GE8320 GPU
    - 2 ஜிபி LPDDR4x ரேம்
    - 32 ஜிபி (eMMC 5.1) மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம் ஸ்லாட்
    - ரியல்மி யுஐ சார்ந்த ஆண்ட்ராய்டு 10
    - 13 எம்பி பிரைமரி கேமரா, f/2.2, எல்இடி ஃபிளாஷ், PDAF
    - 2 எம்பி டெப்த் சென்சார், f/2.4
    - 5 எம்பி செல்ஃபி கேமரா, f/2.4
    - ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் (P2i coating)
    - 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ
    - டூயஸ்ல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    - மைக்ரோ யுஎஸ்பி
    - 5000 எம்ஏஹெச் பேட்டரி
    - 10 வாட் சார்ஜிங்

    ரியல்மி சி11 ஸ்மார்ட்போன் மின்ட் கிரீன் மற்றும் பெப்பர் கிரே நிறங்களில் கிடைக்கிறது. மலேசியாவில் இந்த ஸ்மார்ட்போன் RM 429 இந்திய மதிப்பில் ரூ. 7560 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
    ரியல்மி பிராண்டின் புதிய 30 வாட் டார்ட் சார்ஜிங் வசதி கொண்ட 10000 எம்ஏஹெச் பவர்பேங்க் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.



    ரியல்மி பிராண்டு மே மாத வாக்கில் 30 வாட் இருவழி ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட 10000 எம்ஏஹெச் பவர் பேங்க் மாடலை சீன சந்தையில் அறிமுகம் செய்தது. இந்த பவர் பேங்க் விரைவில் இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது. 30 வாட் டார்ட் சார்ஜ் பவர் பேங்க் ரியல்மி இந்தியா வலைதளத்தில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. 

    ரியல்மி இந்தியா சப்போர்ட் பக்கத்தில் 10000 எம்ஏஹெச் 30 வாட் டார்ட் சார்ஜ் பவர் பேங்க் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. இந்த பவர் பேங்க் RMA156 எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. புதிய பவர் பேங்க் சரியான வெளியீட்டு தேதி பற்றிய விவரங்கள் வெளியாகவில்லை.

     ரியல்மி  பவர் பேங்க்

    எனினும், வலைதளத்தில் பட்டியலிடப்பட்டு இருப்பதைத் தொடர்ந்து இதன் வெளியீடு விரைவில் துவங்கும் என கூறப்படுகிறது. சீனாவில் இந்த பவர்பேங்க் விலை 199 யுவான், இந்திய மதிப்பில் ரூ. 2115 எனநிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய பவர் பேங்க் வெளியீட்டு விவரங்கள் விரைவில் வெளியாகும் என தெரிகிறது. 

    ரியல்மி 10000 எம்ஏஹெச் 30 வாட் டார்ட் சார்ஜ் பவர் பேங்க் 18 வாட் பவர் பேங்க் மாடலை விட 53 சதவீதம் வேகமாக சார்ஜ் செய்யும். மேலும் இதை கொண்டு 30 வாட் வூக் மற்றும் டார்ட் சார்ஜ் சாதனங்களை சார்ஜ் செய்ய முடியும். 
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 20 சீரிஸ் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களின் அறிமுக விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
     

    சாம்சங் நிறுவனத்தின் 2020 கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வு ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. சாம்சங் வழக்கப்படி கேலக்ஸி அன்பேக்டு விழாவில் பிரீமியம் கேலக்ஸி ஸ்மார்ட்போன் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு கேலக்ஸி நோட் 20 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாக இருக்கிறது.

    ஏற்கனவே வெளியான தகவல்களின் படி இந்த ஆண்டு அன்பேக்டு விழாவில் கேலக்ஸி ஃபோல்டு 2, கேலக்ஸி இசட் ஃப்ளிப் 5ஜி மற்றும் கேலக்ஸி நோட் 20 சீரிஸ் உள்ளிட்ட சாதனங்கள் அறிமுகமாக இருப்பதாக கூறப்படுகிறது. கேலக்ஸி அன்பேக்டு விழா இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு துவங்குகிறது. 

    கேலக்ஸி அன்பேக்டு

    2020 கேலக்ஸி அன்பேக்டு விழா சாம்சங் வலைதளத்தில் நேரலை செய்யப்படுகிறது. முன்னதாக கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா ரென்டர்கள் வெளியாகி இருந்தது. அதன்படி புதிய ஸ்மார்ட்போன் காப்பர் கலர் ஸ்பிலாஷ் நிறம் கொண்டிருக்கிறது.

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின்படி கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் டிஸ்ப்ளே, சிறிய பன்ச் ஹோல் ஸ்மார்ட்போனின் மத்தியில் பொருத்தப்படுகிறது. இத்துடன் மெல்லிய பெசல்கள், வால்யூம் மற்றும் பவர் பட்டன்கள் மொபைலின் வலது புறத்தில் வழங்கப்படுகிறது.

    ஸ்மார்ட்போனின் கீழ்புறத்தில் யுஎஸ்பி டைப் சி போர்ட், ஸ்பீக்கர் கிரில் மற்றும் எஸ் பென் வைப்பதற்கான ஸ்லாட் வழங்கப்படுகிறது. கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போன் பின்புறத்தில் வளைந்த எட்ஜ்களை கொண்டிருக்கிறது. இது பார்க்க கேலக்ஸி எஸ்20 அல்ட்ரா போன்றே காட்சியளிக்கிறது.
    சியோமி நிறுவனத்தின் எம்ஐ ட்ரூ வயர்லெஸ் இயர்போன் 2 மாடல் ரூ. 3999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    சியோமி நிறுவனம் தனது எம்ஐ ட்ரூ வயர்லெஸ் இயர்போன் 2 மாடல் இந்தியாவில் மே மாதத்தில் ரூ. 4499 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. எனினும், இந்த இயர்போன் தற்சமயம் ரூ. 3999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இந்த இயர்போனுடன் கானா பிளஸ் சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது.

    எம்ஐ ட்ரூ வயர்லெஸ் இயர்போன்ஸ் 2 வாங்குவோருக்கு ரூ. 199 மதிப்புள்ள கூப்பன் கோட் வழங்கப்படுகிறது. இதனை பயனர்கள் மூன்று மாதங்களுக்கு பயன்படுத்தி இலவசமாக கானா பிளஸ் சந்தாவை பெற முடியும். இந்த சலுகை செப்டம்பர் 30 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது. 

     எம்ஐ ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் 2

    மாற்றப்பட்ட புதிய விலை அமேசான் மற்றும் சியோமி அதிகாரப்பூர்வ வலைதளங்களில் விற்பனை செய்யப்படுகிறது. சியோமி எம்ஐ ட்ரூ வயர்லெஸ் இயர்போன்ஸ் 2 மாடலில் 14.2 எம்எம் டைனமிக் டிரைவர் மற்றும் டைட்டானியம் கம்போசிட் டைஃப்கிராம் வழங்கப்பட்டுள்ளது. இது ஆடியோ தரம், கால் தரம் மற்றும் சிறப்பான பேட்டரி பேக்கப் வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

    எம்ஐ ட்ரூ வயர்லெஸ் இயர்போன்ஸ் 2 மாடலில் ப்ளூடூத் 5, டூயல் நாய்ஸ் கேன்சலிங் மைக்ரோபோன்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் யுஎஸ்பி டைப்-சி போர்ட் வழங்கப்பட்டுள்ளது. இதனை பத்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால் ஒரு மணி நேரத்திற்கு பயன்படுத்த முடியும்.

    போக்கோ பிராண்டின் புதிய போக்கோ எம்2 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.


    போக்கோ பிராண்டின் புதிய போக்கோ எம்2 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய போக்கோ எம்2 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் FHD+ 1080x2400 பிக்சல் டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. 

    இத்துடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம், 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு சென்சார், 5 எம்பி மேக்ரோ சென்சார், 2 எம்பி டெப்த் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் 16 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. 

    போக்கோ எம்2 ப்ரோ

    போக்கோ எம்2 ப்ரோ சிறப்பம்சங்கள்

    - 6.67 இன்ச் 2400x1080 பிக்சல் 20:9 FHD+ LCD டாட் டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
    - ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர்
    - அட்ரினோ 618 GPU
    - 4 ஜிபி / 6 ஜிபி LPPDDR4x ரேம், 64 ஜிபி (UFS 2.1) மெமரி
    - 6 ஜிபி LPPDDR4x ரேம், 128 ஜிபி (UFS 2.1) மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம்
    - ஆண்ட்ராய்டு 10 மற்றும் MIUI 11
    - 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.79, PDAF, EIS, 0.8μm, எல்இடி ஃபிளாஷ், EIS
    - 8 எம்பி 119° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்
    - 5 எம்பி 2cm மேக்ரோ லென்ஸ்
    - 2 எம்பி டெப்த் சென்சார்
    - 16 எம்பி செல்ஃபி கேமரா
    - பக்கவாட்டில் கைரேகை சென்சார்
    - 3.5எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ, டூயல் மைக்ரோபோன்
    - ஸ்பிலாஷ் ப்ரூஃப் (P2i coating)
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    - யுஎஸ்பி டைப்-சி
    - 5000 எம்ஏஹெச் பேட்டரி
    - 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    புதிய போக்கோ எம்2 ப்ரோ ஸ்மார்ட்போன் அவுட் ஆஃப் புளூ, கிரீன் அண்ட் கிரீனர் மற்றும் டூ ஷேட்ஸ் ஆஃப் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் போக்கோ எம்2 ப்ரோ 4 ஜிபி + 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 13999 என்றும், 6 ஜிபி+64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 14999 என்றும் 6 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 16999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    இந்தியாவில் புதிய போக்கோ எம்2 ப்ரோ ஸ்மார்ட்போன் விற்பனை ஃப்ளிப்கார்ட் தளத்தில் ஜூலை 14 ஆம் தேதி துவங்குகிறது. 
    இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் அம்சம் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
     

    இன்ஸ்டாகிராம் நிறுவனத்தின் ரீல்ஸ் அம்சம் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த அம்சம் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் பிரேசில் நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டு பின் இந்தியாவிலும் வழங்கப்பட இருப்பதாக கூறப்பட்டது. 

    இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்

    அந்த வகையில் இந்தியாவில் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து இன்ஸ்டாகிராம் செயலியில் ரீல்ஸ் அம்சம் சோதனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் சில பயனர்கள் ரீல்ஸ் அம்சம் தங்களுக்கு கிடைத்ததாக தெரிவித்து இருக்கின்றனர். 

    எனினும், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் அம்சம் அனைத்து பயனர்களுக்கும் இதுவரை வழங்கப்படவில்லை. தற்போதைய தகவல்களின் படி புது அப்டேட்டில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் அம்சத்தை வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. டிக்டாக் போன்றே ரீல்ஸ் அம்சத்திலும் வீடியோக்களை எடிட் செய்து பதிவேற்றம் செய்ய முடியும்.
    விவோ நிறுவனத்தின் புதிய விவோ வை30 ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.


    விவோ நிறுவனத்தி புதிய வை30 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. விவோ வை30 ஸ்மார்ட்போனில் 6.47 இன்ச் ஹெச்டி பிளஸ் எல்சிடி டிஸ்ப்ளே, ஆக்டாகோர் மீடியாடெக் பிராசஸர், 4ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்பட்டுள்ளது.

    புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ், 2 எம்பி டெப்த் சென்சார், 2 எம்பி சென்சார் மற்றும் 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.

    விவோ வை30

    விவோ வை30 சிறப்பம்சங்கள்:

    6.47 இன்ச் ஹெச்டி 720×1560 பிக்சல் எல்சிடி டிஸ்ப்ளே
    ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ பி35 பிராசஸர்
    4 ஜிபி ரேம்
    128 ஜிபி மெமரி
    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    13 எம்பி பிரைமரி கேமரா, f/2.2
    8 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ், f/2.2
    2 எம்பி டெப்த் சென்சார், f/2.4
    2 எம்பி சென்சார், f/2.4
    8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.05
    கைரேகை சென்சார்
    4ஜி எல்டிஇ, வைபை, ப்ளூடூத், 3.5எம்எம் ஹெட்போன் ஜாக்
    யுஎஸ்பி டைப்-சி
    5000 எம்ஏஹெச் பேட்டரி

    இந்தியாவில் விவோ வை30 ஸ்மார்ட்போன் விலை ரூ. 14990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் டேசில் புளூ மற்றும் எமரால்டு பிளாக் நிறங்களில் கிடைக்கிறது.
    சியோமி நிறுவனத்தின் புதிய 120 வாட் சார்ஜிங் தொழில்நுட்பம் சீன தளத்தில் சான்று பெற்று இருக்கிறது.


    சியோமி நிறுவனத்தின் 120 வாட் சார்ஜர் 3சி சான்று பெற்று இருக்கிறது. புதிய சார்ஜர் MDY-12-ED எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. இந்த சார்ஜர் 5V-3A,11V-6A மற்றும் 20V-6A வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த சார்ஜரை ஹன்ட்கீ வடிவமைத்து இருக்கிறது.

    முன்னதாக 4000 எம்ஏஹெச் பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போனை 17 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்யும் 100 வாட் சூப்பர் சார்ஜ் டர்போ ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை சியோமி நிறுவனம் காட்சிப்படுத்தி இருந்தது. விவோ நிறுவனமும் 120 வாட் ஃபிளாஷ் சார்ஜ் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்திருந்தது.
     சியோமி சார்ஜர்
    இந்த தொழில்நுட்பம் 4000 எம்ஏஹெச் பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போனை ஐந்தே நிமிடங்களில் 0 முதல் 50 சதவீதம் வரை சார்ஜ் செய்திடும். பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய 13 நிமிடங்களை எடுத்துக் கொள்கிறது. 

    முன்னதாக சியோமி சார்ஜர் பற்றிய வீடியோ இணையத்தில் லீக் ஆகி இருந்தது. இதில் ஒற்றை யுஎஸ்பி டைப் ஏ சார்ஜிங் போர்ட், யுஎஸ்பி டைப்-சி பிடி ஃபாஸ்ட் சார்ஜர்களை கொண்டிருக்கிறது. புதிய தொழில்நுட்பம் சியோமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனில் வழங்கப்படும் என தெரிகிறது. 
    உலகின் முதல் ரோலபிள் ஸ்மார்ட்போன் மாடலை எல்ஜி நிறுவனம் அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    சாம்சங் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களுடனான போட்டியை எதிர்கொள்ள முயற்சிக்கும் எல்ஜி நிறுவனம் உலகின் முதல் ரோலபிள் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பிராஜக்ட் பி பெயரில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    எல்ஜி நிறுவனம் கடந்த ஆண்டு விண்ணப்பித்த காப்புரிமை அடிப்படையில் பிராஜக்ட் பி ஸ்மார்ட்போன் உருவாகி வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் பக்கவாட்டில் நீளும் வகையிலும், தேவையற்ற போது மடித்து வைக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதற்கான ப்ரோடோடைப் மாடலை எல்ஜி உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
    எல்ஜி ரோலபிள் ஸ்மார்ட்போன்
    புதிய ஸ்மார்ட்போன் எல்ஜி நிறுவனத்தின் இரண்டாவது ரோபிள் சாதனம் ஆகும். முன்னதாக எல்ஜி சிக்னேச்சர் ஒஎல்இடி டிவி ஆர் மாடலை 2019 சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் காட்சிப்படுத்தியது. பிராஜக்ட் பி திட்டத்தில் வளையும் தன்மை கொண்ட  ஒஎல்இடி பேனலை எல்ஜி உருவாக்கவில்லை. இதனை சீன டிஸ்ப்ளே உற்பத்தி செய்யும் பிஒஇ நிறுவனம் உற்பத்தி செய்கிறது.

    ஸ்மார்ட்போன் சந்தையில் தனது இடத்தை பிடிக்க எல்ஜி நிறுவனம் பிராஜக்ட் பி திட்டத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. இதேபோன்று முற்றிலும் வித்தியாசமான வடிவமைப்பு கொண்ட ஸ்மார்ட்போனினை விங் எனும் குறியீட்டு பெயரில் எல்ஜி உருவாக்கி வருவதாகவும் கூறப்படுகிறது. 

    இத்துடன் ரெயின்போ பெயரில் மற்றொரு ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனினை எல்ஜி இந்த ஆண்டு அறிமுகம் செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 
    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ஜியோமீட் வீடியோ கான்பரன்சிங் செயலி அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டது.

    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் வீடியோ கானபரன்சிங் சேவையான ஜியோமீட் செயலி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. ஜியோமீட் செயலியில் ஒரே சமயத்தில் 100 பேருடன் வீடியோ கால் பேச முடியும். மேலும் இதை கொண்டு, இடைவிடாது 24 மணி நேரத்திற்கு உரையாடல்களை நடத்த முடியும். 

    ஜியோமீட் செயலி ஆண்ட்ராய்டு, ஐஒஎஸ், விண்டோஸ், மேக் ஒஎஸ் மற்றும் இணையம் என பல்வேறு தளங்களில் கிடைக்கிறது. பயனர்கள் இந்த செயலியினை ஜியோமீட் அதிகாரப்பூர்வ வலைதளத்திலும் பதிவிறக்கம் செய்ய முடியும்.
    ஜியோமீட்
    பயனர்கள் ஜியோமீட் இன்வைட் லின்க் கொண்டு அழைப்புகளில் இணைந்து கொள்ளலாம். இதற்கென செயலியை தனியே டவுன்லோட் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. எனினும், அழைப்புகளை துவங்குபவர் ஜியோமீட் செயலியை இன்ஸ்டால் செய்திருப்பது அவசியம் ஆகும்.

    இந்த சேவையில் ஹெச்டி ஆடியோ மற்றும் வீடியோ கால் வசதி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் அழைப்புகளை முன்கூட்டியே ஷெட்யூல் செய்யும் வசதியும், ஷெட்யூல் பற்றிய விவரங்களை அதில் கலந்து கொள்ள இருப்பவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஜியோமீட் அழைப்புகள் அனைத்தும் என்க்ரிப்ட் செய்வதோடு, பாஸ்வேர்டு கொண்டு பாதுகாக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் பயனர்கள் அனுமதியின்றி அழைப்புகளில் பங்கேற்பதை தவிர்க்க வெய்டிங் ரூம் எனும் அம்சம் வழங்கப்படுகிறது.
    ஐகூ பிராண்டின் புதிய ஐகூ இசட்1எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

    ஐகூ பிராண்டு தனது இசட்1எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனினை ஜூலை 9 ஆம் தேதி அறிமுகமாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. புதிய டீசரின்படி இசட்1எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் பன்ச் ஹோல் ஸ்கிரீன், பக்கவாட்டில் கைரேகை சென்சார் மற்றும் 120 ஹெர்ட்ஸ் ரிஃப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே வழங்கப்படுவது தெரியவந்துள்ளது.

    புதிய இசட்1எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் இசட்1 5ஜி மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். இதே ஸ்மார்ட்போன் விவரங்கள் சமீபத்தில் TENAA வலைதளத்தில் லீக் ஆனது. இந்த ஸ்மார்ட்போன் V2012A மாடல் நம்பர் கொண்டிருக்கிறது.

    அதன்படி புதிய ஸ்மார்ட்போனில் 6.57 இன்ச் எஃப்ஹெச்டி பிளஸ் எல்சிடி ஸ்கிரீன், 16 எம்பி பன்ச் ஹோல் செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. 

    இத்துடன் ஸ்னாப்டிராகன் 765ஜி பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 48 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் கேமரா மற்றும் 2 எம்பி மேக்ரோ கேமரா என மூன்று பிரைமரி சென்சார்கள் வழங்கப்படுகின்றன. மேலும் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது. 
    ஐகூ இசட்1எக்ஸ் 5ஜி
    ஐகூ இசட்1எக்ஸ் 5ஜி எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்

    - 6.57 இன்ச் 2408x1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி பிளஸ் எல்சிடி டிஸ்ப்ளே
    - குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 765ஜி பிராசஸர்
    - அட்ரினோ 620 GPU
    - 6ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி
    - 8 ஜிபி ரேம், 128 ஜிபி / 256 ஜிபி மெமரி
    - ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஐகூ யுஐ 1.0
    - டூயல் சிம்
    - 48 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், EIS
    - 2 எம்பி மேக்ரோ கேமரா
    - 2 எம்பி டெப்த் கேமரா
    - 16 எம்பி செல்ஃபி கேமரா
    - பக்கவாட்டில் கைரேகை சென்சார்
    - 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1
    - யுஎஸ்பி டைப் சி
    - 5000 எம்ஏஹெச் பேட்டரி
    - 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
    ×