என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பம்
X
சாம்சங் கேலக்ஸி நோட் 20 சீரிஸ் வெளியீட்டு விவரம்
Byமாலை மலர்8 July 2020 2:21 PM IST (Updated: 8 July 2020 2:21 PM IST)
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 20 சீரிஸ் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களின் அறிமுக விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
சாம்சங் நிறுவனத்தின் 2020 கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வு ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. சாம்சங் வழக்கப்படி கேலக்ஸி அன்பேக்டு விழாவில் பிரீமியம் கேலக்ஸி ஸ்மார்ட்போன் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு கேலக்ஸி நோட் 20 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாக இருக்கிறது.
ஏற்கனவே வெளியான தகவல்களின் படி இந்த ஆண்டு அன்பேக்டு விழாவில் கேலக்ஸி ஃபோல்டு 2, கேலக்ஸி இசட் ஃப்ளிப் 5ஜி மற்றும் கேலக்ஸி நோட் 20 சீரிஸ் உள்ளிட்ட சாதனங்கள் அறிமுகமாக இருப்பதாக கூறப்படுகிறது. கேலக்ஸி அன்பேக்டு விழா இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு துவங்குகிறது.
2020 கேலக்ஸி அன்பேக்டு விழா சாம்சங் வலைதளத்தில் நேரலை செய்யப்படுகிறது. முன்னதாக கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா ரென்டர்கள் வெளியாகி இருந்தது. அதன்படி புதிய ஸ்மார்ட்போன் காப்பர் கலர் ஸ்பிலாஷ் நிறம் கொண்டிருக்கிறது.
இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின்படி கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் டிஸ்ப்ளே, சிறிய பன்ச் ஹோல் ஸ்மார்ட்போனின் மத்தியில் பொருத்தப்படுகிறது. இத்துடன் மெல்லிய பெசல்கள், வால்யூம் மற்றும் பவர் பட்டன்கள் மொபைலின் வலது புறத்தில் வழங்கப்படுகிறது.
ஸ்மார்ட்போனின் கீழ்புறத்தில் யுஎஸ்பி டைப் சி போர்ட், ஸ்பீக்கர் கிரில் மற்றும் எஸ் பென் வைப்பதற்கான ஸ்லாட் வழங்கப்படுகிறது. கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போன் பின்புறத்தில் வளைந்த எட்ஜ்களை கொண்டிருக்கிறது. இது பார்க்க கேலக்ஸி எஸ்20 அல்ட்ரா போன்றே காட்சியளிக்கிறது.
Next Story
×