என் மலர்
புதிய கேஜெட்டுகள்
விவோ நிறுவனத்தின் விவோ எக்ஸ்50 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
விவோ நிறுவனம் தனது எக்ஸ்50 சீரிஸ் ஸ்மார்ட்போன்களான- எக்ஸ்50, எக்ஸ்50 ப்ரோ மற்றும் எக்ஸ்50 ப்ரோ பிளஸ் மாடல்களை கடந்த மாதம் சீன சந்தையில் அறிமுகம் செய்தது. சீன அறிமுக நிகழ்விலேயே இந்த ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்டது.
அந்த வகையில், விவோ நிறுவனம் தனது எக்ஸ்50 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்கள் விரைவில் இந்தியாவில் வெளியாக இருப்பதை உணர்த்தும் வகையில் டீசர்களை வெளியிட்டு இருக்கிறது.

விவோ டீசரின் படி புதிய விவோ எக்ஸ்50 சீரிஸ் ஸ்மார்ட்போனின் கேமரா அதிநவீன அம்சங்களை வழங்கும் என தெரியவந்துள்ளது. எனினும், விவோ எக்ஸ்50, எக்ஸ்50 ப்ரோ மற்றும் எக்ஸ்50 ப்ரோ பிளஸ் என மூன்று மாடல்களையும் இந்தியாவில் அறிமுகம் செய்யுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
விவோ எக்ஸ்50 ப்ரோ ஸ்மார்ட்போன் ஃபிளாக்ஷிப் தர பிரைமரி கேமரா கொண்டிருக்கிறது. இத்துடன் விவோ எக்ஸ்50 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் 5ஜி வசதி வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் ஸ்னாப்டிராகன் 765ஜி சிப்செட் வழங்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் விவோ எக்ஸ்50 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் விரைவில் வெளியாக இருக்கும் ஒப்போ ரெனோ 4, ஒன்பிளஸ் இசட் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. விவோ எக்ஸ்50 ப்ரோ பிளஸ் மாடலில் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்20 பிளஸ், கேலக்ஸி பட்ஸ் பிளஸ் பிடிஎஸ் எடிஷன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ்20 பிளஸ் மற்றும் கேலக்ஸி பட்ஸ் பிளஸ் வயர்லெஸ் ஹெட்செட் மாடல்களின் பிடிஎஸ் எடிஷன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இவற்றின் விலை முறையே ரூ. 87999 மற்றும் ரூ. 14990 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
இத்துடன் கேலக்ஸி எஸ்20 அல்ட்ரா ஸ்மார்ட்போன் புதிய கிளவுட் வைட் வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விலை ரூ. 97,9999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவற்றின் விற்பனை ஜூலை 10 ஆம் தேதி துவங்குகிறது.

சாம்சங் கேலக்ஸி எஸ்20 பிளஸ் பிடிஎஸ் எடிஷன்களில் பிடிஎஸ் சார்ந்த தீம்கள் மறஅறும் ஃபேன் கம்யூனிட்டி பிளாட்பார்ம், விவெர்ஸ் உள்ளிட்டவை பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டு இருக்கிறது. இத்துடன் டிகோரேட்டிவ் ஸ்டிக்கர்கள், போட்டோ கார்டுகள் உள்ளிட்டவையும் வழங்கப்படுகின்றன.
இதில் பர்ப்பிள் கிளாஸ் மற்றும் மெட்டல் வெளிப்புறம் கொண்டிருக்கிறது. கேலக்ஸி பட்ஸ் பிளஸ் பிடிஎஸ் எடிஷன் மற்றும் பட்ஸ் பிளஸ் சார்ஜிங் கேஸ் பர்ப்பிள் நிறங்களில் கிடைக்கிறது. மேலும் இதில் பிராண்டு லோகோ மற்றும் பர்ப்பிள் ஹார்ட் ஐகோன்கிராஃபி வழங்கப்பட்டு இருக்கிறது.
சாம்சங் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல் குறைந்த விலையில் உருவாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஃபோல்டு குறைந்த விலை எடிஷன் கேலக்ஸி ஃபோல்டு லைட் எனும் பெயரில் உருவாகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதிய குறைந்த விலை எடிஷனான கேலக்ஸி ஃபோல்டு லைட் 833 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ. 62800 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. புதிய கேலக்ஸி ஃபோல்டு லைட் ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய கேலக்ஸி ஃபோல்டு லைட் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. எனினும், ஏற்கனவே வெளியான தகவல்களின் படி கேலக்ஸி ஃபோல்டு லைட் ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்டது.
எனினும், கேலக்ஸி அன்பேக்டு விழாவில் அறிமுகம் செய்யப்பட இருந்த கேலக்ஸி ஃபோல்டு லைட் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சாம்சங் சார்பில் இதுவரை எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. தற்சமயம் கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போன் ரூ. 1.62 லட்சம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
தற்போதைய தகவல் உண்மையாகும் பட்சத்தில் கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போனின் சில அம்சங்கள் நீக்கப்படலாம் என கூறப்படுகிறது. மேலும் லைட் வேரியண்ட்டில் 2018, 2019 மற்றும் 2020 ஆண்டு பாகங்கள் பயன்படுத்தப்படலாம் என்றும் தெரிகிறது. இதில் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர், 256GB மெமரி உள்ளிட்டவை வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
மேலும் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் வெளிப்புறம் கேலக்ஸி இசட் ஃப்ளிப் மாடலில் இருந்ததை போன்று சிறிய டிஸ்ப்ளே வழங்கப்படும் என கூறப்படுகிறது.
சியோமி நிறுவனத்தின் அதிநவீன 100 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் கொண்ட புதிய ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.
சியோமி நிறுவனம் 100 வாட் சூப்பர் சார்ஜ் டர்போ வையர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது. இந்த தொழில்நுட்பம் இந்த ஆண்டு அறிமுகமாக இருக்கும் புதிய ஸ்மார்ட்போனில் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதிய 100 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் முதல் ஸ்மார்ட்போன் பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. சியோமியின் 100 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரியை வெறும் 17 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்துவிடும்.

இத்தனை திறன் கொண்ட தொழில்நுட்பத்தை ஸ்னாப்டிராகன் 875 பிராசஸர் சீராக இயக்கும் திறன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில் புதிய தொழில்நுட்பம் கொண்டு வெளியாகும் ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 875 பிராசஸர் கொண்டிருக்கும் என உறுதியாகி இருக்கிறது.
சியோமி தவிர விவோ நிறுவனம் ஏற்கனவே 120 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்தது. இந்த தொழில்நுட்பம் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரியை வெறும் 13 நிமிடங்களில் சார்ஜ் செய்யும் திறன் கொண்டது என தெரிவிக்கப்பட்டது.
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபேட் மற்றும் ஐபேட் மினி வெளியீட்டு விவரங்கள் வெளியாகி உள்ளது.
பிரபல ஆராய்ச்சியாளரான மிங் சி கியூ ஆப்பிள் நிறுவனம் 10.8 இன்ச் ஐபேட் மாடலினை இந்த ஆண்டும், 8.5 இன்ச் ஐபேட் மினி மாடலை அடுத்த ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதிய ஐபேட் மினி ஆப்பிள் ஏ13 பயோனிக் பிராசஸர் கொண்டிருக்கும் என்றும் 10.8 இன்ச் ஐபேட் மாடலில் ஏ10 ஃபியுஷன் சிப் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. ஐபேட் சீரிசில் ஆப்பிள் நிறுவனம் - 12.9 இன்ச் மற்றும் 11 இன்ச் ஐபேட் ப்ரோ, 10.5 இன்ச் ஐபேட் ஏர், 10.2 இன்ச் ஐபேட் மற்றும் 7.9 இன்ச் ஐபேட் மினி என நான்கு மாடல்களை விற்பனை செய்து வருகிறது.

அந்த வகையில் ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு 10.8 இன்ச் ஐபேட் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. எனினும், இது 10.2 இன்ச் ஐபேட் மாடல் மேம்பட்ட ஸ்கிரீன் பெறுமா அல்லது 10.5 இன்ச் ஐபேட் ஏர் மேம்படுத்தப்படுகிறதா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.
முன்னதாக கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் ஐபேட் மினி மேம்படுத்தப்பட்டு ஏ12 பயோனிக் சிப்செட் வழங்கப்பட்டுள்ளது. தற்போதைய தகவல்களின் படி 2021 ஆண்டில் ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபேட் மினி மாடலை அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.
புதிய ஐபேட் மாடல்கள் 10 வாட் சார்ஜருடன் வழங்கப்படும் என கூறப்படுகிறது. சமீபத்தில் வெளியான தகவல்களில் ஐபோன் 12 சீரிஸ் மாடல்களுடன் இயர்பாட்ஸ் மற்றும் பவர் அடாப்டர் உள்ளிட்டவை வழங்கப்படாது என கூறப்படுகிறது.
சாம்சங் நிறுவனத்தின் புதிய 50 எம்பி மொபைல் கேமரா சென்சார் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
சாம்சங் நிறுவனம் அதிக மெகாபிக்சல் சென்சார் கொண்ட ஸ்மார்ட்போன் கேமராக்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவது அனைவரும் அறிந்ததே.
2018 ஆம் ஆண்டு 48 எம்பி IMX586 குவாட் பேயர் சென்சார் மற்றும் 64 எம்பி ISOCELL GW1 சென்சார்களை தொடர்ந்து, தற்சமயம் 50 எம்பி சக்திவாய்ந்த 1.2 மைக்ரான் பிக்சல் கொண்ட கேமரா சென்சாரை அறிமுகம் செய்துள்ளது.

புத்தம் புதிய கேமரா சென்சார் 1/1.31 இன்ச் சென்சார் கொண்டிருக்கிறது. இதன் GN1 டூயல் பிக்சல் ஆட்டோஃபோக்கஸ் வழங்குகிறது. மேலும் இந்த சென்சார் குறைந்த வெளிச்சமுள்ள பகுதிகளிலும் அதிக துல்லியமான புகைப்படங்களை எடுக்கும் திறன் கொண்டிருக்கிறது.
புதிய GN1 ஸ்மார்ட் ஐஎஸ்ஒ தொழில்நுட்பம், கைரோ சார்ந்த இமேஜ் ஸ்டேபிலைசேஷன், ரியல்-டைம் ஹெச்டிஆர், 1080 பிக்சல் தர வீடியோக்களை 400fps வேகத்திலும், 240fps ஆட்டோஃபோக்கஸ் மற்றும் 8கே/30fps வேகத்தில் பதிவு செய்யும் வசதி கொண்டுள்ளது என சாம்சங் தெரிவித்துள்ளது.
புதிய சாம்சங் சென்சார் கொண்ட ஸ்மார்ட்போன் மாடல்கள் இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு காலக்கட்டத்தில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. புதிய GN1 சென்சார் டூயல் பிக்சல் மற்றும் டெட்ராசெல் தொழில்நுட்பங்களை வழங்கும் உலகின் முதல் சென்சார் ஆகும்.
வாடிக்கையாளர்கள் அவரவர் விரும்பிய டிவி சேனல்களை தேர்வு செய்ய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
வாடிக்கையாளர்கள் தாங்கள் விரும்பும் டிவி சேனல்களை மட்டும் தேர்வு செய்து அதற்கான கட்டணம் செலுத்தும் வசதியை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் இரண்டு ஆண்டுகளுக்கு முன் அறிவித்தது.
ஆனால், இந்த திட்டம் திருப்திகரமாக அமையவில்லை. இதையடுத்து, வாடிக்கையாளர்கள் தாங்கள் விரும்பிய டிவி சேனல்களை தேர்ந்தெடுக்க புதிய செயலி ஒன்றை டிராய் தொடங்கி இருக்கிறது.

டிடிஹெச் சேவை நிறுவனங்கள், எம்எஸ்ஓக்கள் ஆகியவற்றுடன் இணைந்து இந்த செயலி இயங்குகிறது. இதில், டிடிஹெச் நிறுவனங்கள் வழங்கும் ஒவ்வொரு சேனலின் கட்டணமும், சேனல் தொகுப்புகளின் கட்டணமும் இடம்பெற்று இருக்கும்.
வாடிக்கையாளர்கள் தாங்கள் விரும்பிய சேனல்களை தேர்வு செய்வதுடன், தேவையற்ற சேனல்களை நீக்கி விடலாம். சந்தா விவரங்களையும் இந்த செயலியில் சரிபார்த்துக் கொள்ளலாம். என டிராய் தெரிவித்துள்ளது.
ரியல்மி பிராண்டின் புதிய எக்ஸ்3 சீரிஸ் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
ரியல்மி பிராண்டின் ரியல்மி எக்ஸ்3 மற்றும் ரியல்மி எக்ஸ்3 சூப்பர்ஜூம் ஸ்மார்ட்போன் மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களில் 6.6 இன்ச் எஃப்ஹெச்டி+எல்சிடி ஸ்கிரீன், 120 ஹெர்ட்ஸ் ரிஃப்ரெஷ் ரேட், ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர் மற்றும் 12 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்டு 10 மற்றும் ரியல்மி யுஐ கொண்டிருக்கும் இரு ஸ்மார்ட்போன்களிலும் 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி 115° அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்பி டெப்த் கேமரா, 8 எம்பி பெரிஸ்கோப் லென்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. ரியல்மி எக்ஸ்3 ஸ்மார்ட்போனில் 12 எம்பி டெலிபோட்டோ லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

ரியல்மி எக்ஸ்3 / எக்ஸ்3 சூப்பர்ஜூம் சிறப்பம்சங்கள்:
- 6.6 இன்ச் 2400x1080 பிக்சல் 20:9 எஃப்ஹெச்டி+ எல்சிடி டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
- ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர்
- அட்ரினோ 640 GPU
- எக்ஸ்3 – 6ஜிபி / 8ஜிபி LPPDDR4x ரேம், 128ஜிபி (UFS 3.0) மெமரி
- எக்ஸ்3 சூப்பர்ஜூம் – 8ஜிபி LPPDDR4x ரேம், 128ஜிபி (UFS 3.0) மெமரி
- எக்ஸ்3 சூப்பர்ஜூம் – 12ஜிபி LPPDDR4x ரேம், 256ஜிபி (UFS 3.0) மெமரி
- டூயல் சிம்
- ஆண்ட்ராய்டு 10 மற்றும் ரியல்மி யுஐ
- எக்ஸ்3 சூப்பர்ஜூம் – 64எம்பி பிரைமரி கேமரா, f/1.8, 0.8μm, LED ஃபிளாஷ், EIS
- 8எம்பி 119° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.3
- 8எம்பி பெரிஸ்கோப் கேமரா, OIS, f/3.4
- 2எம்பி 4cm மேக்ரோ சென்சார், f/2.4
- எக்ஸ்3 சூப்பர்ஜூம் – 32எம்பி செல்ஃபி கேமரா, f/2.5
- 8எம்பி 105° அல்ட்ரா வைடு சென்சார், f/2.2
- எக்ஸ்3 – 64எம்பி பிரைமரி கேமரா, f/1.8, 0.8μm, எல்இடி ஃபிளாஷ்
- 8எம்பி 119° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.3
- 12எம்பி டெலிபோட்டோ கேமரா
- 2எம்பி 4cm மேக்ரோ சென்சார், f/2.4
- எக்ஸ்3 – 16எம்பி செல்ஃபி கேமரா
- 8எம்பி 105° அல்ட்ரா வைடு சென்சார், f/2.2
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- யுஎஸ்பி டைப் சி ஆடியோ, டால்பி அட்மோஸ், ஹை-ரெஸ் ஆடியோ
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யுஎஸ்பி டைப்-சி
- 4200 எம்ஏஹெச் பேட்டரி
- 30 வாட் டார்ட் சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங்
இந்தியாவில் ரியல்மி எக்ஸ்3 6ஜிபி+128ஜிபி மாடல் விலை ரூ. 24999 என்றும், 8ஜிபி+128ஜிபி விலை ரூ. 25999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ரியல்மி எக்ஸ்3 சூப்பர்ஜூம் 8ஜிபி+128ஜிபி ரூ. 27999 விலையிலும், 12ஜிபி+256ஜிபி ரூ. 32999 விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது. புதிய ரியல்மி ஸ்மார்ட்போன்களின் விற்பனை ஜூன் 30 ஆம் தேதி ஃப்ளிப்கார்ட் தளத்தில் துவங்குகிறது.
மோட்டோரோலா நிறுவனம் ஆம்ஃபிசவுண்ட்எக்ஸ் ஹோம் தியேட்டர் சிஸ்டம்களை இந்திய சந்தையில் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது.
மோட்டோரோலா நிறுவனத்தின் ஆம்ஃபிசவுண்ட்எக்ஸ் ஹோம் தியேட்டர் சிஸ்டம் மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
ஃப்ளிப்கார்ட் தளத்தின் மூலம் விற்பனை செய்யப்படும் புதிய ஆம்ஃபிசவுண்ட்எக்ஸ் சீரிஸ் ஹோம் தியேட்டர்கள் 80 வாட், 150 வாட் மற்றும் 160 வாட் என மூன்று வித ஆப்ஷன்களில் கிடைக்கிறது. புதிய ஹோம் தியேட்டர்களில் பல்வேறு ஸ்பீக்கர்களும், கூடுதலாக ப்ளூடூத் வசதியும் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இத்துடன் தனியே சப்-வூஃபர்கள் மற்றும் ஹெச்டிஎம்ஐ ஏஆர்சி, ஆப்டிக்கல் ஆடியோ மற்றும் யுஎஸ்பி போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும் வழங்கப்பட்டுள்ளன. மேலும் இவற்றில் 8 இன்ச் பேஸ் டிரைவர் வழங்கப்பட்டுள்ளன.
மோட்டோரோலா ஆம்ஃபிசவுண்ட்எக்ஸ் 80 வாட் ஹோம் தியேட்டர் விலை ரூ. 7999 என்றும் மோட்டோரோலா ஆம்ஃபிசவுண்ட்எக்ஸ் 150 வாட் மற்றும் ஆம்ஃபிசவுண்ட்எக்ஸ் 160 வாட் ஹோம் தியேட்டர் மாடல்களின் விலை ரூ. 10999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனிற்கான டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனின் டீசர் வெளியாகி உள்ளது. புதிய ஸ்மார்ட்போன் பொது மக்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும், பலரும் வாங்கக்கூடிய வகையில் குறைந்த விலையில் இருக்கும் என ஒன்பிளஸ் தலைமை செயல் அதிகாரி பீட் லௌ தெரிவித்தார்.
முதற்கட்டமாக இந்த ஸ்மார்ட்போன் இந்தியா மற்றும் ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அதன்பின் வட அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது. புதிய ஸ்மார்ட்போன் உருவாக்கும் குழுவினை, கடந்த ஐந்து ஆண்டுகளில் பல்வேறு ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களை உருவாக்கிய குழுவினை வழிநடத்திய பால் யு தலைமை வகிக்கிறார்.

ஒன்பிளஸ் நிறுவனம் புதிய ஸ்மார்ட்போனினை விளம்பரப்படுத்த இன்ஸ்டாகிராம் தளத்தில் OnePlusLiteZThing எனும் பெயரில் புதிய அக்கவுண்ட் ஒன்றை துவங்கி உள்ளது. இதனால் புதிய ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் இசட் பெயரில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி புதிய ஒன்பிளஸ் இசட் ஸ்மார்ட்போனில் 6.55 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படலாம் என கூறப்பட்டுள்ளது.
இதுதவிர 64 எம்பி+16 எம்பி+2 எம்பி கேமரா சென்சார்கள், குவால்காம் ஸ்னாப்டிராகன் 765 பிராசஸர் மற்றும் 4300 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
ஆடியோ சாதனங்களை விற்பனை செய்வதில் பிரபல நிறுவனமான போட் பட்ஜெட் விலையில் புதிய இயர்பட்சை அறிமுகம் செய்துள்ளது.
இந்தியாவில் ஆடியோ சாதனங்களை விற்பனை செய்வதில் பிரபல நிறுவனமான போட் ஏர்டோப்ஸ் 511வி2 பெயரில் புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்சை அறிமுகம் செய்துள்ளது.
புதிய இயர்பட்சில் நான்கு மைக்ரோபோன்கள், ப்ளூடூத் 5.0, IPX4 சான்று மற்றும் பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டு இருக்கிறது. ப்ளூடூத் 5.0 மூலம் இணைந்து கொள்வதால், இவை சாதனங்களுடன் சீரான இணைப்பினை தொடர்ந்து வழங்கும்.
போட் ஏர்டோப்ஸ் 511வி2 இயர்பட்ஸ் 6 மில்லிமீட்டர் ரிதமிக் டைனமிக் டிரைவர்களை கொண்டிருக்கிறது. இது தலைசிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது.

இதில் உள்ள நான்கு மைக்ரோபோன்கள் அழைப்புகளின் போது தலைசிறந்த அனுபவத்தை வழங்குகிறது. மேலும் இது IPX4 சான்று பெற்று இருப்பதால் உடற்பயிற்சிகளின் போதும் பயன்படுத்தலாம். இதன் இயர்பட்களில் மல்டி-ஃபன்ஷன் பட்டன் வழங்கப்பட்டுள்ளது. இதை கொண்டு பிளேபேக், வால்யூம் மற்றும் வாய்ஸ் அசிஸ்டண்ட் போன்ற அம்சங்களை இயக்க முடியும்.
புதிய இயர்பட்சில் வழங்கப்பட்டுள்ள பேட்டரியை ஒருமுறை சார்ஜ் செய்தால், ஆறு மணி நேரத்திற்கு பயன்படுத்த முடியும். இதன் கேசில் 500 எம்ஏஹெச் பேட்டரி 24 மணி நேரத்திற்கு பேக்கப் வழங்கும்.
போட் ஏர்டோப்ஸ் 511வி2 ஆக்டிவ் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 2999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை அமேசானில் நடைபெறுகிறது.
சாம்சங் நிறுவனத்தின் இரண்டு புதிய சாதனங்கள் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சம்சங் நிறுவனம் கேலக்ஸி 01எஸ் மற்றும் கேலக்ஸி வாட்ச் 3 சாதனங்கள் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இரு சாதனங்களும் இந்திய தரத்தை பூர்த்தி செய்வதற்கான சான்றினை பெற்று இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இவை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய கேலக்ஸி வாட்ச் 3 ஸ்மார்ட்வாட்ச் 41எம்எம் மற்றும் 45எம்எம் என இருவித அளவுகளில் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது.

இதுதவிர கேலக்ஸி வாட்ச் 3 டைசன் ஒஎஸ் 5.5 இயங்குதளம் கொண்டிருக்கும் என்றும் இதில் சுழலக்கூடிய பெசல், மெல்லிய வடிவமைப்பு மற்றும் பெரிய ஸ்கிரீன் வழங்கப்படும் என கூறப்படுகிறது. புதிய வாட்ச் 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்டிருக்கும் என தெரிகிறது.
கேலக்ஸி 01எஸ் ஸ்மார்ட்போனின் விவரங்கள் எதுவும் பிஐஎஸ் வலைதளத்தில் வெளியாகவில்லை. எனினும், முந்தைய தகவல்களின் படி கேலக்ஸி 01எஸ் ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ பி22 பிராசஸர், ஆண்ட்ராய்டு 9 இயங்குதளம், 3ஜிபி ரேம் கொண்டிருக்கும் என கூறப்பட்டது.






