search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    சாம்சங்
    X
    சாம்சங்

    சாம்சங் 50எம்பி கேமரா சென்சார் அறிமுகம்

    சாம்சங் நிறுவனத்தின் புதிய 50 எம்பி மொபைல் கேமரா சென்சார் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.


    சாம்சங் நிறுவனம் அதிக மெகாபிக்சல் சென்சார் கொண்ட ஸ்மார்ட்போன் கேமராக்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவது அனைவரும் அறிந்ததே.

    2018 ஆம் ஆண்டு 48 எம்பி IMX586 குவாட் பேயர் சென்சார் மற்றும் 64 எம்பி ISOCELL GW1 சென்சார்களை தொடர்ந்து, தற்சமயம் 50 எம்பி சக்திவாய்ந்த 1.2 மைக்ரான் பிக்சல் கொண்ட கேமரா சென்சாரை அறிமுகம் செய்துள்ளது. 
    போன் பயன்பாடு - கோப்புப்படம்
    புத்தம் புதிய கேமரா சென்சார் 1/1.31 இன்ச் சென்சார் கொண்டிருக்கிறது. இதன் GN1 டூயல் பிக்சல் ஆட்டோஃபோக்கஸ் வழங்குகிறது. மேலும் இந்த சென்சார் குறைந்த வெளிச்சமுள்ள பகுதிகளிலும் அதிக துல்லியமான புகைப்படங்களை எடுக்கும் திறன் கொண்டிருக்கிறது. 

    புதிய GN1 ஸ்மார்ட் ஐஎஸ்ஒ தொழில்நுட்பம், கைரோ சார்ந்த இமேஜ் ஸ்டேபிலைசேஷன், ரியல்-டைம் ஹெச்டிஆர், 1080 பிக்சல் தர வீடியோக்களை 400fps வேகத்திலும், 240fps ஆட்டோஃபோக்கஸ் மற்றும் 8கே/30fps வேகத்தில் பதிவு செய்யும் வசதி கொண்டுள்ளது என சாம்சங் தெரிவித்துள்ளது.

    புதிய சாம்சங் சென்சார் கொண்ட ஸ்மார்ட்போன் மாடல்கள் இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு காலக்கட்டத்தில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. புதிய GN1 சென்சார் டூயல் பிக்சல் மற்றும் டெட்ராசெல் தொழில்நுட்பங்களை வழங்கும் உலகின் முதல் சென்சார் ஆகும்.
    Next Story
    ×