என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    ரியல்மி பிராண்டின் புதிய நார்சோ 10ஏ ஸ்மார்ட்போனின் 4ஜிபி வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.



    ரியல்மி பிராண்டு கடந்த மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்த நார்சோ 10ஏ ஸ்மார்ட்போனின் 4ஜிபி வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போனின் 3ஜிபி ரேம், 32ஜிபி மெமரி வேரியண்ட் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது. 

    தற்சமயம் நார்சோ 10ஏ ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம், 64ஜிபி மெமரி வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய மெமரி தவிர இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. ரியல்மி நார்சோ 10ஏ ஸ்மார்ட்போனில் 6.52 இன்ச் ஹெச்டி பிளஸ் மினி டிராப் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி70 பிராசஸர், ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.

    புகைப்படங்களை எடுக்க 12 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி மேக்ரோ சென்சார் மற்றும் 2 எம்பி டெப்த் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்டி ஸ்லாட் மற்றும் ஸ்மார்ட்போனின் பின்புறம் ஸ்கிராட்ச் ப்ரூஃப் டெக்ஸ்ச்சர் வழங்கப்பட்டு இருக்கிறது. 

    இத்துடன் கைரேகை சென்சார், 5000 எம்ஏஹெச் பேட்டரி, ரிவர்ஸ் சார்ஜிங், மைக்ரோ யுஎஸ்பி போர்ட் மற்றும் 10 வாட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

    ரியல்மி நார்சோ 10ஏ

    ரியல்மி நார்சோ 10ஏ சிறப்பம்சங்கள்:

    - 6.5 இன்ச் 1600x720 பிக்சல் ஹெச்டி+ 20:9 மினி டிராப் டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 3பிளஸ்
    - ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி70 பிராசஸர்
    - ARM மாலி-G52 2EEMC2 GPU
    - 3 ஜிபி LPDDR4x ரேம், 32 ஜிபி eMMC 5.1 மெமரி
    - 4 ஜிபி LPDDR4x ரேம், 64 ஜிபி eMMC 5.1 மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கு்ம வசதி
    - டூயல் சிம் ஸ்லாட்
    - ரியல்மி யுஐ சார்ந்த ஆண்ட்ராய்டு 10
    - 12 எம்பி பிரைமரி கேமரா, f/1.8, LED ஃபிளாஷ், PDAF
    - 2 எம்பி டெப்த் சென்சார், f/2.4
    - 2 எம்பி 4cm மேக்ரோ சென்சார், f/2.4
    - 5 எம்பி செல்ஃபி கேமரா
    - 3.5 எம்எம் ஆடியோ ஜாக், FM ரேடியோ
    - ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    - மைக்ரோ யுஎஸ்பி
    - 5000 எம்ஏஹெச் பேட்டரி
    - 10W சார்ஜிங்

    இந்தியாவில் ரியல்மி நார்சோ 10ஏ ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி வேரியண்ட் விலை இந்தியாவில் ரூ. 9999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முந்தைய 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி வேரியண்ட் விலை ரூ. 8999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
    அசுஸ் நிறுவனத்தின் புதிய சென்ஃபோன் 7 ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன.



    அசுஸ் நிறுவனத்தின் சென்ஃபோன் 7 அல்லது 7இசட் ஸ்மார்ட்போன் விவரங்கள் சீனாவின் கீக்பென்ச் வலைதளத்தில் லீக் ஆகி இருக்கிறது. இதில் ஸ்மார்ட்போனின் சில அம்சங்கள் தெரியவந்துள்ளது. 

    புதிய ஸ்மார்ட்போன் அசுஸ் நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த சென்ஃபோன் 6 / 6Z மாடல்களின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். கீக்பென்ச் விவரங்களின் படி அசுஸ் இசட்எஃப் எனும் குறியீட்டு பெயர் கொண்ட ஸ்மார்ட்போன் பென்ச்மார்க்கிங் தளத்தில் இடம்பெற்றுள்ளது. 

    இது சென்ஃபோன் 7 அல்லது 7இசட் எனும் பெயரில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய அசுஸ் ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர், ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    அசுஸ் சென்ஃபோன்

    மேலும் புதிய ஸ்மார்ட்போனில் 16 ஜிபி ரேம் வழங்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. புதிய அசுஸ் ஸ்மார்ட்போன் சிங்கிள்-கோர் டெஸ்டிங்கில் 973 புள்ளிகளையும், மல்டி-கோரில் 3346 புள்ளிகளையும் பெற்றுள்ளது. புதிய ஸ்மார்ட்போன் சென்ஃபோன் இசட்எஃப் அல்லது 7இசட் எனும் பெயர்களில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது.

    சர்வதேச சந்தையில் இந்த ஸ்மார்ட்போன் சென்ஃபோன் 7 எனும் பெயரில் அறிமுகமாகும் என தெரிகிறது. புதிய ஸ்மார்ட்போன் பற்றி இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. ஏற்கனவே வெளியான தகவல்களில் அசுஸ் சென்ஃபோன் 7 ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
    ஒப்போ நிறுவனத்தின் ஏ52 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஸ்மார்ட்போன் விவரங்களை பார்ப்போம்.



    ஒப்போ நிறுவனத்தின் ஏ52 ஸ்மார்ட்போன் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஒப்போ ஏ52 ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் FHD+ எல்சிடி ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர், 6 ஜிபி ரேம்,  128 ஜிபி மெமரி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

    புகைப்படங்களை எடுக்க 12 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு சென்சார், 2 எம்பி மேக்ரோ மற்றும் 2 எம்பி டெப்த் சென்சார் மற்றும் 16 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. 

    ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் மற்றும் கலர்ஒஎஸ் 7.1 கொண்டிருக்கும் ஒப்போ ஏ52 ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 5000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 18வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் யுஎஸ்பி டைப்-சி வழங்கப்பட்டுள்ளது.

    ஒப்போ ஏ52

    ஒப்போ ஏ52 சிறப்பம்சங்கள்:

    - 6.5 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+ டிஸ்ப்ளே
    - ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர்
    - அட்ரினோ 610 GPU
    - 6 ஜிபி LPDDR4x ரேம்
    - 128 ஜிபி (UFS 2.1) மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம்
    - கலர்ஒஎஸ் 7.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 10
    - 12 எம்பி பிரைமரி கேமரா, f/1.8, PDAF, எல்இடி ஃபிளாஷ்
    - 8 எம்பி 119° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்
    - 2 எம்பி டெப்த் சென்சார்
    - 2 எம்பி கேமரா 4cm மேக்ரோ, 1.75μm பிக்சல், f/2.4
    - 16 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
    - பக்கவாட்டில் கைரேகை சென்சார்
    - 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    - யுஎஸ்பி டைப்-சி
    - 5000 எம்ஏஹெச் பேட்டரி
    - 18 வாட் சார்ஜிங்

    ஒப்போ ஏ52 ஸ்மார்ட்போன் டுவிலைட் பிளாக் மற்றும் ஸ்டீம் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 16990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒப்போ ஏ52 ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட், அமேசான் மற்றும் ஆஃப்லைன் விற்பனை மையங்களில் கிடைக்கிறது.
    ஜெபிஎல் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய குவாண்டம் கேமிங் ஹெட்செட் சீரிசை அறிமுகம் செய்துள்ளது.



    ஜெபிஎல் நிறுவனம் இந்திய சந்தையில் கேமிங் ஹெட்செட் சீரிசை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஜெபிஎல் குவாண்டம் சீரிசில் மொத்தம் ஆறு ஹெட்செட்கள் அறிமுகமாகி இருக்கின்றன.

    புதிய கேமிங் ஹெட்செட்களில் ஜெபிஎல் நிறுவனத்தின் குவாணடம் சவுண்ட் சிக்னேச்சர் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் மொத்தம் ஆறு ஹெட்செட் மாடல்கள் உள்ளன. இவை பொழுதுபோக்கு கேமர்கள் மற்றும் போட்டிகளில் பங்கேற்கும் கேமர்களுக்கென பிரத்யேக ஆப்ஷன், வையர்டு மற்றும் வயர்லெஸ் ஆப்ஷன்களை கொண்டிருக்கின்றன.

    ஜெபிஎல் குவாண்டம் ஹெட்செட்

    ஜெபிஎல் குவாண்டம் சீரிஸ் கேமிங் ஹெட்செட்கள் கணினி, மேக், எக்ஸ்பாக்ஸ், பிளேஸ்டேஷன், நின்டென்டோ ஸ்விட்ச், மொபைல் மற்றும் விஆர் என பல்வேறு தளங்களுக்கான சப்போர்ட் கொண்டிருக்கிறது. புதிய குவாண்டம் 100, குவாண்டம் 200, குவாண்டம் 300 மாடல்களில் பியு லெதர்-ராப் செய்யப்பட்ட மெமரி ஃபோம் இயர் குஷன்களை கொண்டிருக்கிறது.

    விலை உயர்ந்த குவாண்டம் 600, குவாண்டம் 800 மற்றும் குவாண்டம் ஒன் மாடல்களில் பிரீமியம் லெதர் ராப் செய்யப்பட்ட மெமரி ஃபோம் இயர் குஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. அனைத்து ஹெட்செட்களிலும் ஃப்ளிப்-அப் அல்லது கழற்றக்கூடிய பூம் மைக்ரோபோன்களுடன் எக்கோ கேன்சலிங் தொழில்நுட்பம் கொண்டிருக்கின்றன.

    புதிய ஜெபிஎல் குவாண்டம் கேமிங் ஹெட்செட் சீரிஸ், குவாண்டம் 100 பேஸ் மாடலின் விலை ரூ. 3999 என துவங்கி டாப் எண்ட் ஃபிளாக்ஷிப் குவாண்டம் ஒன் மாடல் ரூ. 29999 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    ஹானர் பிராண்டின் புதிய ஹானர் 9ஏ ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் ஜூன் 23 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.



    ஹூவாயின் ஹானர் பிராண்டு தனது ஹானர் 9ஏ ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் ஜூன் 23 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. முன்னதாக இதே ஸ்மார்ட்போன் ரஷிய சந்தையில் ஏப்ரல் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    புதிய ஹானர் 9ஏ ஸ்மார்ட்போனில் 6.3 inch HD+ ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ பி22 பிராசஸர், மூன்று பிரைமரி கேமரா சென்சார்கள் மற்றும் 5000mAh பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஹானர் 9ஏ

    ஹானர் 9ஏ சிறப்பம்சங்கள்

    - 6.3 inch 1600x720 பிக்சல் HD+ 20:9 டிஸ்ப்ளே
    - ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ பி22 பிராசஸர்
    - IMG PowerVR GE8320 GPU
    - 3GB ரேம்
    - 64GB மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 10 மற்றும் மேஜிக் யுஐ 3.0.1
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 13MP பிரைமரி கேமரா, f/1.8, LED ஃபிளாஷ்
    - 5MP அல்ட்ரா வைடு கேமரா, f/2.2
    - 2MP டெப்த் கேமரா, f/2.4
    - 8MP செல்ஃபி கேமரா, f/2.0
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - மைக்ரோ யுஎஸ்பி போர்ட்
    - 5000mAh பேட்டரி

    ஹானர் 9ஏ ஸ்மார்ட்போன் பிளாக், புளூ மற்றும் கிரீன் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. ரஷியாவில் இதன் விலை 10990 ரூபிள், இந்திய மதிப்பில் ரூ. 12 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோரோலா ஒன் பியூஷன் பிளஸ் ஸ்மார்ட்போன் மாடலினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.



    மோட்டோரோலா நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்தியாவில் மோட்டோரோலா ஒன் பியூஷன் பிளஸ் ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஃபுல் ஹெச்டி+ 19.5:9 டோட்டல் விஷன் டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 730ஜி பிராசஸர், 6GB ரேம், 128GB மெமரி வழங்கப்பட்டுள்ளது. 

    இத்துடன் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டு இருக்கிறது. பிளாஸ்டிக் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கும் மோட்டோரோலா ஒன் பியூஷன் பிளஸ் ஸ்மார்ட்போன் கிளாஸி ஃபினிஷ், வளைந்த எட்ஜ்கள், பின்புறம் கைரேகை சென்சார் கொண்டிருக்கிறது.

    மோட்டோரோலா ஒன் பியூஷன் பிளஸ்

    மோட்டோரோலா ஒன் பியூஷன் பிளஸ் சிறப்பம்சங்கள்

    - 6.5 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி+ டோட்டல் விஷன் டிஸ்ப்ளே
    - ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 730ஜி பிராசஸர்
    - அட்ரினோ 618 GPU
    - 6ஜிபி ரேம்
    - 128ஜிபி மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம்
    - ஆண்ட்ராய்டு 10
    - 64 எம்பி பிரைமரி கேமரா, F/1.8, 0.8μm
    - 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், F/2.2, 1.12μm
    - 5 எம்பி மேக்ரோ கேமரா, F/2.4, 1.12μm
    - 2 எம்பி டெப்த் கேமரா, F/2.4, 1.75μm
    - 16 எம்பி செல்ஃபி கேமரா, F/2.2, 1μm
    - கைரேகை சென்சார்
    - 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப்-சி
    - 5000 எம்ஏஹெச் பேட்டரி
    - 15 டர்போ பவர் சார்ஜிங்

    மோட்டோரோலா ஒன் பியூஷன் பிளஸ் ஸ்மார்ட்போன் மூன்லைட் வைட் மற்றும் டுவிலைட் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 16,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை ஜூன் 24 ஆம் தேதி ப்ளிப்கார்ட் தளத்தில் துவங்குகிறது.
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி இசட் ப்ளிப் 5ஜி ஸ்மார்ட்போனின் வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.



    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி இசட் ப்ளிப் 5ஜி மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விரைவில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி புதிய 5ஜி வேரியண்ட் பிளாக் மற்றும் வைட் நிறங்களில் உருவாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய 5ஜி வேரியண்ட் SM-F707B எனும் மாடல் நம்பர் கொண்டு உருவாக்கப்படுவதாக தெரிகிறது.

    கேலக்ஸி இசட் ப்ளிப் ஸ்மார்ட்போன் SM-F700 எனும் மாடல் நம்பர் கொண்டிருந்தது. அந்த வகையில் புதிய SM-F707B மாடல் நம்பர் கொண்ட ஸ்மார்ட்போன் 5ஜி வேரியண்ட்டாக இருக்கும் என கூறப்படுகிறது. 

    கேலக்ஸி இசட் ப்ளிப்

    கேலக்ஸி இசட் ப்ளிப் ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் கொண்டிருக்கிறது. இதனால் இது எல்டிஇ வசதி மட்டுமே கொண்டிருக்கிறது. 

    இதனால் புதிய ஸ்மார்ட்போனின் பிராசஸர் மாற்றப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. முந்தைய தகவல்களின் படி கேலக்ஸி இசட் ப்ளிப் ஸ்மார்ட்போனின் 5ஜி வேரியண்ட் 256ஜிபி மெமரி கொண்டிருக்கும் என கூறப்பட்டது.
    சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.



    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஜூன் 17 ஆம் தேதி அறிமுகமாகிறது. இதனை சாம்சங் இந்தியா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

    புதிய கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே, 2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் பிராசஸர், ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன் யுஐ 2.0 வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ், 2 எம்பி டெப்த் மற்றும் 2 எம்பி மேக்ரோ சென்சார் மற்றும் 13 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

    ஹோலோகிராஃபிக் டிசைன் கொண்டிருக்கும் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார் மற்றும் 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

    சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ்

    சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் சிறப்பம்சங்கள்

    - 6.5 இன்ச் 720×1600 பிக்சல் ஹெச்டி பிளஸ் இன்ஃபினிட்டி-ஒ டிஸ்ப்ளே
    - எக்சைனோஸ் 850 ஆக்டா கோர் பிராசஸர்
    - 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி
    - 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன்யுஐ 2.0
    - 48 எம்பி f/2.0 பிரைமரி கேமரா
    - 8 எம்பி f/2.2 அல்ட்ரா வைடு கேமரா
    - 2 எம்பி f/ 2.4 டெப்த் சென்சார்
    - 2 எம்பி f/2.4 மேக்ரோ சென்சார்
    - 13 எம்பி f/2.2 செல்ஃபி கேமரா
    - பின்புறம் கைரேகை சென்சார், முக அங்கீகார வசதி
    - 4ஜி வோல்ட்இ, வைபை 802.11 b/g/n, ப்ளூடூத் 5.0
    - யுஎஸ்பி டைப் சி
    - 5,000 எம்ஏஹெச் பேட்டரி
    - 15W ஃபாஸ்ட் சார்ஜிங்

    சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போன் பிளாக், வைட், புளூ மற்றும் ரெட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை விரைவில் தெரியவரும்.
    சியோமி நிறுவனம் 30000 எம்ஏஹெச் எம்ஐ பவர் பேங்க் 3 மாடலை அறிமுகம் செய்தது. இதன் விவரங்களை பார்ப்போம்.



    சியோமி நிறுவனம் எம்ஐ பவர் பேங்க் 3 மாடலை சீன சந்தையில் அறிமுகம் செய்தது. இது அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த 20000 எம்ஏஹெச் எம்ஐ பவர் பேங்க் 3 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும்.

    புதிய பவர் பேங்கில் 24 வாட் யுஎஸ்பி டைப்-சி இன்புட், 18 வாட் அவுட்புட் மூலம் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது. இந்த பவர் பேங்க் கொண்டு சியோமியின் எம்ஐ 10 மற்றும் ரெட்மி கே30 ப்ரோ ஸ்மார்ட்போன்களை அதிகபட்சம் 4.5 முறையும், ஐபோன் எஸ்இ 2020 மாடலை 10.5 முறை சார்ஜ் செய்ய முடியும்.

    இதில் பாலிகார்பனேட் மற்றும் ஏபிஎஸ் பாடி கொண்டிருக்கிறது. இதில் இரண்டு யுஎஸ்பி டைப்-ஏ போர்ட்கள் அதிகபட்சம் 18வாட் அவுட்புட் வழங்குகிறது. மேலும் இதில் எல்இடி சார்ஜ் இன்டிகேட்டர்களும், பக்கவாட்டில் பட்டன் ஒன்றும் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் லோவர் பவர் மோட் வழங்கப்பட்டுள்ளது.

    சியோமி எம்ஐ பவர் பேங்க் 3

    இதை கொண்டு எம்ஐ பேண்ட் மற்றும் ஹெட்செட் போன்ற அக்சஸரீக்களை சார்ஜ் செய்ய முடியும். புதிய சியோமி பவர் பேங்க் மாடலை விமானங்களில் கொண்டு செல்ல முடியாது. தற்போதைய விதிமுறைகளின் படி விமானங்களில் அதிகபட்சமாக 20000 எம்ஏஹெச் திறன் கொண்ட பேட்டரிகளை மட்டுமே கொண்டு செல்ல முடியும்.

    சியோமி 30000 எம்ஏஹெச் எம்ஐ பவர் பேங்க் 3 பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை 169 யுவான், இந்திய மதிப்பில் ரூ. 1810 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சீனாவில் இதன் விற்பனை ஜூன் 18 ஆம் தேதி துவங்குகிறது. இதன் இந்திய வெளியீடு பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.
    லெனோவோ நிறுவனத்தின் புதிய கேமிங் சீரிஸ் ஸ்மார்ட்போனின் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    லெனோவோ நிறுவனம் லீஜியன் பிராண்டிங்கில் கேமிங் ஸ்மார்ட்போனை உருவாக்கி வருவதாக ஏற்கனவே அறிவித்து இருந்தது. அறிவித்தது முதல் லீஜியன் ஸ்மார்ட்போன் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்க துவங்கியது. தற்சமயம் லீஜியன் ஸ்மார்ட்போன் ஜூனை மாதத்தில் அறிமுகம் செய்யப்படும் என லெனோவோ அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. 

    புதிய ஸ்மார்ட்போன் வெளியீடு பற்றிய அறிவிப்பினை லெனோவோ சீன சமூக வலைதளமான வெய்போவில் டீசர் மூலம் வெளியிட்டது. லெனோவோ லீஜியன் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர் கொண்ட சக்திவாய்ந்த ஸ்மார்ட்போனாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    லெனோவோ லீஜியன்

    இத்துடன் கேமிங் அனுபவத்தை வழங்க ஏதுவாக சக்திவாய்ந்த சிறப்பம்சங்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் பல்வேறு பாப் அப் கேமராக்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இதன் காரணமாக கேமிங் தவிர ஸ்மார்ட்போனை கிடைமட்ட வாக்கில் பயன்படுத்த முடியும். இதற்கென யூசர் இன்டர்பேசில் மாற்றம் செய்யப்படலாம். 

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி லெனோவோ லீஜியன் ஸ்மார்ட்போன் 90 வாட் வையர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம், இரண்டாவது யுஎஸ்பி டைப் சி சார்ஜிங் போர்ட், நாட்ச் லெஸ் டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. லீஜியன் கேமிங் ஸ்மார்ட்போன் 0 முதல் 100 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 30 நிமிடங்களே போதும். 

    மேலும் இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர ஸ்மார்ட்போனுடன்  கேம் பேட்கள் மற்றும் வயர்லெஸ் இயர்பட்ஸ் மற்றும் ப்ரோடெக்டிவ் கேஸ் வழங்கப்படும் என தெரிகிறது. இத்துடன் 3.5 எம்எம் ஆடியோ ஜாக் வழங்கப்படலாம்.
    ஆன்லைன் மூலம் பதிவு செய்பவர்களுக்கு வீடுகளுக்கே நேரடியாக சென்று மது விற்பனை செய்வதை ஏன் பரிசீலிக்கக்கூடாது? என தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.



    கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் கடந்த மாதம் 7-ந்தேதி திறக்கப்பட்டன. இதை எதிர்த்து வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். 

    இதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கடந்த மாதம் 8-ந் தேதி மதுக்கடைகளை மூட உத்தரவிட்டது. இதே போன்ற மனு ஒன்றின் மீது மதுரை உயர்நீதிமன்றமும் கடந்த மே 11-ந் தேதி மதுக்கடைகளை மூடுவது தொடர்பான உத்தரவை பிறப்பித்தது.

    சென்னை மற்றும் மதுரை உயர்நீதிமன்றங்களின் இந்த தீர்ப்புக்களுக்கு எதிராக டாஸ்மாக் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், மதுக்கடைகளை மூடுமாறு பிறப்பித்த உத்தரவுகளுக்கு இடைக்காலத் தடை விதித்தது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் மீண்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.

    டாஸ்மாக்

    மேலும் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்த மனுதாரர்கள் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீது பதில்மனு தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டது. இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் அசோக் பூஷண், எஸ்கே கவுல், எம்ஆர் ஷா ஆகியோர் அடங்கிய காணொலி அமர்வில் விசாரணைக்கு வந்தது. 

    விசாரணை தொடங்கியதும் எதிர் மனுதாரர்கள் தரப்பில், ‘தமிழகத்தில் தற்போது கொரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் மது விற்பனையால் அது மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. மது அருந்துவோரின் எதிர்ப்பு சக்தி குறைவதால் கொரோனா மேலும் அதிகமாக பரவ வாய்ப்பு உள்ளது’ என்று வாதிடப்பட்டது.

    இதற்கு டாஸ்மாக் தரப்பில், ‘பெரும்பாலான மாநிலங்களில் மது விற்பனை நடைபெற்று வருகிறது. எனவே இந்த வழக்கை முடித்து வைக்க வேண்டும்’ என்று வாதிடப்பட்டது. இதற்கு நீதிபதிகள் மதுக்கடைகளில் விற்பனை உள்ளிட்டவற்றை கண்காணிக்க வேண்டியிருப்பதால் வழக்கு நிலுவையில் இருக்கட்டும் என்று கூறினார்கள்.

    மேலும் தமிழகத்தில் ஆன்லைன் மூலம் பதிவு செய்பவர்களுக்கு வீடுகளில் நேரடியாக சென்று மது விற்பனை செய்வதை ஏன் பரிசீலிக்கக் கூடாது? என்று மாநில அரக்கு கேள்வி எழுப்பினார்கள். இதைத்தொடர்ந்து டாஸ்மாக் கடைகளில் மதுபான விற்பனை குறித்த தகவல் அறிக்கையை 3 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி விசாரணையை ஒத்திவைத்தனர்.
    மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோரோலா ஒன் பியூஷன் பிளஸ் ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.



    மோட்டோரோலா நிறுவனம் தனது ஒன் பியூஷன் பிளஸ் ஸ்மார்ட்போனினை கடந்த வாரம் ஐரோப்பிய சந்தையில் அறிமுகம் செய்தது. தற்சமயம் இந்த ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதனை மோட்டோரோலா நிறுவனம் டீசர் மூலம் தெரியப்படுத்தி இருக்கிறது.

    டீசரில் பாப் அப் கேமரா கொண்ட ஸ்மார்ட்போனின் புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது. டீசர் புகைப்படத்தில் உள்ள ஸ்மார்ட்போன் இடதுபுறத்தில் பாப் அப் கேமரா கொண்டிருக்கிறது. அந்த வகையில் ஒன் பியூஷன் பிளஸ் மாடல் தான் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது என தெரியவந்துள்ளது. புதிய ஸ்மார்ட்போன் வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. 

    மோட்டோரோலா ஒன் பியூஷன் பிளஸ் டீசர்

    சிறப்பம்சங்களை பொருத்தவரை மோட்டோரோலா ஒன் பியூஷன் பிளஸ் மாடலில் 6.5 இன்ச் FHD+ டோட்டல் விஷன் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 730 பிராசஸர், 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, மெமரியை நீட்டிக்கும் வசதி கொண்டிருக்கிறது. பிளாஸ்டிக் பாடி மற்றும் கிளாசி ஃபினிஷ், வளைந்த எட்ஜ் கொண்டிருக்கிறது. இதன் பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்படுகிறது.

    புகைப்படங்களை எடுக்க 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 5 எம்பி மேக்ரோ மற்றும் 2 எம்பி டெப்த் கேமரா என நான்கு சென்சார்களை கொண்டிருக்கிறது. இதன் முன்புறம் 16 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. 

    மோட்டோரோலா ஒன் பியூஷன் பிளஸ் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம், 5000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 15 வாட் டர்போ பவர் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.
    ×