என் மலர்
புதிய கேஜெட்டுகள்
அமேஸ்ஃபிட் டி-ரெக்ஸ் ஸ்மார்ட்வாட்ச் மாடலின் இந்திய முன்பதிவு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஹூவாமி நிறுவனத்தின் அமேஸ்ஃபிட் டி-ரெக்ஸ் ஸ்மார்ட்வாட்ச் மாடலுக்கான முன்பதிவு ஜூன் 7 ஆம் தேதி துவங்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கென அமேசான் தளத்தில் பிரத்யேக வலைப்பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.
வலைதள விவரங்களின்படி புதிய டி-ரெக்ஸ் ஸ்மார்ட்வாட்ச் விவரங்கள் இடம்பெற்றுள்ளது. அதன்படி புதிய ஸ்மார்ட்வாட்ச்சில் AMOLED டிஸ்ப்ளே, 20 நாட்கள் பேட்டரி பேக்கப் மற்றும் 12 ராணுவ சான்றுகளை பெற்று இருக்கிறது. புதிய அமேஸ்ஃபிட் டி-ரெக்ஸ் விற்பனை தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

- 1.3 இன்ச் 360x360 பிக்சல் AMOLED டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
- இதய துடிப்பு சென்சார்
- 3 ஆக்சிஸ் அக்செல்லோமீட்டர், ஜியோமேக்னெடிக் சென்சார், ஆம்பியன்ட் லைட் சென்சார்
- ப்ளூடூத் 5, ஜிபிஎஸ், GLONASS
- 390mAh பேட்டரி
- 14 ஸ்போர்ட்ஸ் மோட்
- 5ATM வாட்டர் ரெசிஸ்டண்ட்
- MIL-STD-810G சான்று
அமேசான் தள விவரங்களின் படி அமேஸ்ஃபிட் டி-ரெக்ஸ் ஸ்மார்ட்வாட்ச் விலை ரூ. 9,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் முன்பதிவு நாளை (ஜூன் 7) துவங்குகிறது. முன்னதாக ஜனவரி மாதம் நடைபெற்ற சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் அமேஸ்ஃபிட் டி-ரெக்ஸ் ஆஷ், பிளாக், கமோஃபிளேஜ், கிரீன் மற்றும் காக்கி என ஐந்து நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு சலுகையுன் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் விஐபி சந்தாவினை வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஒரு தனது சலுகைகளுடன் வருடத்திற்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தாவினை விரைவில் வழங்க இருப்பதாக தெரிவித்து இருக்கிறது. ஏற்கனவே ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இதுபோன்ற சலுகையினை அறிவித்து வழங்கி இருக்கிறது.
எனினும், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் விஐபி சந்தாவினை வாடிக்கையாளர்கள் ஒரு வருடத்திற்கு பெற இருப்பது இதுவே முதல் முறை ஆகும். புதிய சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு டிஸ்னி பிளஸ் நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் மற்றும் குழந்தைகளுக்கான தரவுகளை பார்க்க முடியும்.

புதிய சலுகை எப்போது வெளியிடப்படும் என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. ஜியோ டீசரில் இந்த சலுகை விரைவில் வழங்கப்படும் என்று மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக ஏர்டெல் நிறுவனம் ரூ. 401 விலையில் பிரீபெயிட் சலுகையை ஒரு வருடத்திற்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் விஐபி சந்தாவுடன் வழங்கியது. இந்த சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 3 ஜிபி டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
நோக்கியா நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் 43 இன்ச் ஸ்மார்ட் டிவி மாடலினை அறிமுகம் செய்தது.
ப்ளிப்கார்ட் மற்றும் நோக்கியா இணைந்து நோக்கியா பிராண்டு ஸ்மார்ட் டிவி மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளன. புதிய 43 இன்ச் 4K Ultra HD டிவி மெல்லிய பெசல்களை கொண்டிருக்கிறது.
இது இன்ஃபினிட்டி எட்ஜ் வியூவிங் அனுபவத்தை வழங்குகிறது. இத்துடன் MEMC தொழில்நுட்பம், இன்டெலிஜண்ட் டிம்மிங், வைடு கலர் கமுட் மற்றும் டால்பி விஷன் போன்ற அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளது. புதிய டிவியில் பில்ட்-இன் 24 வாட் ஸ்பீக்கர்கள் டிடிஎஸ் ட்ரூசரவுண்ட், டால்பி ஆடியோ மற்றும் ஜெபிஎல் ஆடியோ ஆப்டிமைசேஷன் வசதிகளை கொண்டிருக்கிறது.
ஆண்ட்ராய்டு 9 இயங்குதளம் கொண்டிருக்கும் நோக்கியா 43 இன்ச் டிவியில் கூகுள் அசிஸ்டண்ட், பில்ட்-இன் குரோம்காஸ்ட் வசதிகள் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் கூகுள் ஆண்ட்ராய்டு பிளே ஸ்டோரில் இருந்து செயலிகளை டவுன்லோடு செய்ய முடியும்.

- 43 இன்ச் 3840x2160 பிக்சல் டிஸ்ப்ளே, டால்பி விஷன், MEMC தொழில்நுட்பம், இன்டெலிஜண்ட் டிம்மிங்
- 1 ஜிகாஹெர்ட்ஸ் பியூர் எக்ஸ் குவாட்-கோர் கார்டெக்ஸ் ஏ53 பிராசஸர்
- மாலி 450MP4 GPU
- 2.25 ஜிபி ரேம்
- 16 ஜிபி மெமரி
- ஆண்ட்ராய்டு டிவி 9.0
- வைபை, ப்ளூடூத் 5
- 3xHDMI, 1xUSB 2.0, 1xUSB 3.0, ஈத்தர்நெட்
- 24 வாட் ஸ்பீக்கர்கள்
- ஜெபிஎல் சவுண்ட், டால்பி ஆடியோ, டிடிஎஸ் ட்ரூசரவுண்ட்
இந்தியாவில் புதிய 43 இன்ச் நோக்கியா ஸ்மார்ட் டிவி மாடலின் விலை ரூ. 31,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் ஜூன் 8 ஆம் தேதி துவங்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஒப்போ நிறுவனத்தின் ஃபைண்ட் எக்ஸ்2 மற்றும் எக்ஸ்2 ப்ரோ ஸ்மார்ட்போன்களின் இந்திய வெளியீடு தேதியை தொடர்ந்து பார்ப்போம்.
ஒப்போ நிறுவனம் தனது ஃபைண்ட் எக்ஸ்2 மற்றும் எக்ஸ்2 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்களை இந்தியாவில் ஜூன் 17 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. இதற்கென ஒப்போ பிரத்யேக டீசரை வெளியிட்டு இருக்கிறது.
முன்னதாக ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்2 மற்றும் ஃபைண்ட் எக்ஸ்2 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்களை மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்தது. பின் சீனா மற்றும் ஐரோப்பிய சந்தையில் இரு ஸ்மார்ட்போன்களின் விற்பனை துவங்கி நடைபெற்று வருகிறது.

சர்வதேச சந்தையில் அறிமுகமாகி இரு மாதங்களுக்கு பின் ஒப்போ தனது ஃபைண்ட் எக்ஸ்2 சீரிஸ் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
இந்திய வெளியீட்டுக்கு முன் ஒப்போ தனது ஃபைண்ட் எக்ஸ்2 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கான டீசரை அமேசான் தளத்தில் பிரத்யேக வலைப்பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இத்துடன் ஸ்மார்ட்போனின் புகைப்படம், மற்றும் அதன் சில முக்கிய அம்சங்கள் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
சியோமி நிறுவனத்தின் புதிய எம்ஐ நோட்புக் லேப்டாப் மாடல்கள் விரைவில் இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது.
சியோமி நிறுவனச்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் எம்ஐ நோட்புக் மாடல்கள் இந்தியாவில் ஜூன் 11 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. இதனை சியோமி தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளது.
புதிய லேப்டாப் மாடலின் சர்வதேச அறிமுக நிகழ்வு இந்தியாவில் நடைபெறும் என்றும் இது இந்திய சந்தைக்கான பிரத்யேக சாதனமாக இருக்கும் என்றும் சியோமி தெரிவித்துள்ளது. புதிய சியோமி லேப்டாப் அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது.

புதிய லேப்டாப் இந்திய வரவை முன்னதாக சியோமி நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டரில் டீசர்களாக வெளியிட்டது. அதைத் தொடர்ந்து தற்சமயம் புதிய லேப்டாப் மாடல்களுக்கான அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. வரும் நாட்களில் புதிய லேப்டாப் பற்றிய விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நோக்கியா நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் டிவி மாடல்களின் இந்திய வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.
ப்ளிப்கார்ட் மற்றும் நோக்கியா நிறுவனங்கள் இணைந்து நோக்கியா பிராண்டின் கீழ் முதல் ஸ்மார்ட் டிவி மாடலினை கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் அறிமுகம் செய்தன. இதுதவிர நோக்கியா பிராண்டிங்கில் வெவ்வேறு அளவுகளில் புதிய ஸ்மார்ட் டிவி மாடல்களை தொடர்ந்து வெளியிடுவதாக அறிவித்து இருந்தது.
அதன்படி புதிய நோக்கியா 43 இன்ச் அல்ட்ரா ஹெச்டி டிவி ப்ளிப்கார்ட் தளத்தில் ஜூன் 4 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. புதிய நோக்கியா ஸ்மார்ட் டிவியில் ஜெபிஎல் சவுண்ட், டிடிஎஸ் ட்ரூ-சரவுண்ட் மற்றும் டால்பி ஆடியோ, டால்பி விஷன் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படுகின்றன.

இவை தவிர புதிய டிவியின் மற்ற அம்சங்கள் 55 இன்ச் மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் நோக்கியா 55 இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல் விலை ரூ. 41,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் புதிய 43 இன்ச் நோக்கியா ஸ்மார்ட் டிவி மாடல் விலை ரூ. 35,000-க்குள் நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரியல்மி பிராண்டின் புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
ரியல்மி பிராண்டு தனது ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலான ரியல்மி பட்ஸ் கியூவினை சீன சந்தையில் சமீபத்தில் அறிமுகம் செய்தது. பின் இந்தியாவில் பட்ஸ் ஏர் நியோ எனும் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்தது.
தற்சமயம் ரியல்மி இந்தியா நிறுவனத்தின் ஃபிரான்சிஸ் வேங் பட்ஸ் கியூ இயர்பட்ஸ் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் என்றும் இதன் விலை ரூ. 2 ஆயிரத்திற்குள் நிர்ணயம் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார். சீன சந்தையில் ரியல்மி பட்ஸ் கியூ விலை இந்திய மதிப்பில் ரூ. 1580 என நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஃபிரெஞ்சு வடிவமைப்பாளரான ஜோஸ் லெவி புதிய ரியல்மி பட்ஸ் கியூ இயர்பட்சை வடிவமைத்தார். ரியல்மி பட்ஸ் கியூ இயர்பட்ஸ் அதிக மென்மையாகவும், பயனரின் உள்ளங்கை மற்றும் காதுகளில் கச்சிதமாக பொருந்தி கொள்ளும் வகையிலும் மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. இவற்றில் IPX4 வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளன.

இயர்பட்ஸ் கேசுடன் 20 மணி நேர பேட்டரி பேக்கப் வழங்கும். பட்ஸ் கியூ மாடலின் இயர்பட்ஸ் 4.5 மணி நேரத்திற்கு பிளேபேக் வழங்குகிறது. புதிய ரியல்மி பட்ஸ் கியூ பிளாக், வைட் மற்றும் எல்லோ என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இந்த இயர்பட்ஸ் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறைந்த விலை 5ஜி ஸ்மார்ட்போன்களில் வழங்குவதற்கென சாம்சங் நிறுவனம் புதிய பிராசஸரை உருவாக்கியுள்ளது.
பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் மாடல்களில் 5ஜி வசதி வழங்கும் திறன் கொண்ட 5ஜி எக்சைனோஸ் பிராசஸரை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. புதிய எக்சைனோஸ் 880 பிராசஸர் ஃபிளாக்ஷிப் ரக எக்சைனோஸ் 980 மற்றும் 990 சீரிஸ் பிராசஸர்களின் கீழ் நிலை நிறுத்தப்படுகிறது.
புதிய பிராசஸர் ஸ்மார்ட்போன்களில் அதிகபட்சமாக FHD+ அல்லது 1080 பிக்சல் டிஸ்ப்ளேக்கள், 4 ஜிபி ரேம், UFS 2.1 அல்லது eMMC 5.1 ஸ்டோரேஜ் வசதியை வழங்கும் என சாம்சங் தெரிவித்துள்ளது. புதிய எக்சைனோஸ் 880 சிப்செட் 8 நானோமீட்டர் தளத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் புதிய சிப்செட் கொண்ட ஸ்மார்ட்போன்களில் அதிகபட்சம் 64 எம்பி பிரைமரி கேமரா கொண்டிருக்கும் என்றும் 20 எம்பி டூயல் கேமரா செட்டப் இயக்க வழி செய்யும். இதை கொண்டு 4கே தரத்தில் 30fps வேகத்தில் வீடியோ பதிவு செய்ய முடியும்.
இதுதவிர 5ஜி திறன் கொண்டிருப்பதால் அதிகபட்சம் நொடிக்கு 2.55 ஜிபி வேகத்தில் டவுன்லோடு வேகமும், 4ஜி எல்டிஇ மோடில் அதிகபட்சம் நொடிக்கு 1 ஜிபி வேகத்தில் டவுன்லோடு செய்ய முடியும்.
ஒன்பிளஸ் நிறுவனம் குறைந்த விலையில் ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனம் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையின் பட்ஜெட் பிரிவில் களமிறங்க இருப்பதாக அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட் லௌ தனியார் நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார். இந்திய சந்தைக்கென புதிய திட்டமிடல் பற்றிய விவரங்கள் விரைவில் அறிவிக்கப்பட இருப்பதாக அவர் தெரிவித்தார்.
அந்த வகையில் இந்திய சந்தையில் குறைந்த விலையில் ஸ்மார்ட்போன் மாடல்களை இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகம் செய்ய இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். குறைந்த விலை மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டாலும், தொடர்ந்து பிரீமியம் மாடல்கள் ஒன்பிளஸ் தரத்துக்கு இணையாக வெளியிடப்படும் என அவர் தெரிவித்து இருக்கிறார்.

பட்ஜெட் பிரிவில் ஒன்பிளஸ் வரவு சியோமி நிறுவனத்துக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய சந்தையில் ஒன்பிளஸ் ஒன் மாடலுடன் 2014 ஆம் ஆண்டு ஒன்பிளஸ் களமிறங்கியது. இந்த ஸ்மார்ட்போன் ஃபிளாக்ஷிப் சிறப்பம்சங்களை கொண்டிருந்தது.
முதல் ஸ்மார்ட்போனே ஃபிளாக்ஷிப் கில்லர் சிறப்பம்சங்களுடன் ரூ. 21, 999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. இது அப்போது அறிமுகமாகி இருந்த சாம்சங் கேலக்ஸி எஸ்5 மாடலின் ரூ. 51,500 விலையை விட பெருமளவு குறைவு ஆகும். இதே ஆண்டில் ஆப்பிள் தனது ஐபோன் 6 மாடலை ரூ. 53,500 விலையில் அறிமுகம் செய்தது.
சாம்சங் நிறுவனத்தின் இரண்டு கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்கள் அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
இந்திய சந்தையில் சாம்சங் நிறுவனம் இரண்டு கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கேலக்ஸி எம்01 மற்றும் கேலக்ஸி எம்11 என்ற பெயரில் இரு ஸ்மார்ட்போன் மாடல்கள் ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் அறிமுகமாக இருப்பதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் இரு ஸ்மார்ட்போன் மாடல்களும் இந்தியாவில் அடுத்த வாரத்தில் அறிமுகமாகி இவை ரூ. 15 ஆயிரம் பட்ஜெட்டில் விற்பனை செய்யப்படலாம் என தெரிகிறது. இவை சாம்சங்கின் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் விற்பனை மையங்களில் விற்பனை செய்யப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் இரு ஸ்மார்ட்போன்களி சிறப்பம்சங்களும் தெரியவந்துள்ளது.

அதன்படி கேலக்ஸி எம்01 ஸ்மார்ட்போனில் 5.71 இன்ச் HD+ TFT 720×1560 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, வாட்டர் டிராப் நாட்ச், குவால்காம் ஸ்னாப்டிராகன் 439 பிராசஸர், 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இத்துடன் 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் கேமரா, 5 எம்பி செல்ஃபி சென்சார் வழங்கப்படுகிறது. இத்துடன் 4000 எம்ஏஹெச் பேட்டரி, 5 வாட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.
கேலக்ஸி எம்11 ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் HD+ TFT 720×1560 பிக்சல் டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 450 பிராசஸர், 3 ஜிபி / 4 ஜிபி ரேம், 32 ஜிபி / 64 ஜிபி மெமரி வழங்கப்படுகிறது. இத்துடன் 13 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி டெப்த் சென்சார் மற்றும் 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போனை சக்தியூட்ட 5000 எம்ஏஹெச் பேட்டரி, 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. இதுதவிர ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சாரும் வழங்கப்படும் என தெரிகிறது.
சியோமியின் ரெட்மி பிராண்டு என்ட்ரி லெவல் 5ஜி ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
குவால்காம் நிறுவனம் 5ஜி வசதி கொண்ட ஸ்னாப்டிராகன் 600 சீரிஸ் பிராசஸரை உருவாக்கி வருவதாக கடந்த வாரம் தகவல் வெளியானது. இந்நிலையில், தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களில் ரெட்மி ஸ்மார்ட்போன் மாடலில் புதிய பிராசஸர் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் எஸ்எம்6350 சிப் மற்றும் 5ஜி மோடெம் கொண்டிருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. ரெட்மி 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்கள் தற்போதைய 4ஜி மாடல் விலையிலேயே கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய தகவல்களின் படி ரெட்மி 5ஜி ஸ்மார்ட்போன் விலை 150 டாலர்கள், இந்திய மதிப்பில் சுமார் 11 ஆயிரம் ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இந்த விலையிலும் ரெட்மி ஸ்மார்ட்போன் அதிவேக 5ஜி வசதி வழங்கும் என தெரிகிறது.

அதிவேக 5ஜி தவிர புதிய ஸ்மார்ட்போன் எல்சிடி ஸ்கிரீன், மூன்று அல்லது நான்கு கேமரா சென்சார்கள், 4000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
குவால்காம் தவிர மீடியாடெக் மற்றும் ஹூவாய் போன்ற நிறுவனங்களும் குறைந்த விலையில் 5ஜி பிராசஸர்களை வெளியிட இருக்கின்றன. இவை முறையே எம்டி6853 5ஜி மற்றும் கிரின் 720 5ஜி என அழைக்கப்படும் என தெரிகிறது. இதே போன்று சாம்சங் நிறுவனமும் எக்சைனோஸ் 880 5ஜி பிராசஸரின் குறைந்த விலை மாடலை வெளியிட இருக்கிறது.
ரியல்மி பிராண்டின் புதிய ஆண்ட்ராய்டு டிவி ரூ. 12 ஆயிரம் பட்ஜெட்டில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
ரியல்மி பிராண்டு இந்தியாவில் புதிய ரியல்மி ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. இவை 43 இன்ச் ஃபுல் ஹெச்டி மற்றும் 32 இன்ச் ஹெச்டி ரெடி மாடல்களில் கிடைக்கின்றன.
இரு மாடல்களிலும் க்ரோமா பூஸ்ட் பிக்ச்சர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. புதிய ரியல்மி ஸ்மார்ட் டிவி பெசல்-லெஸ் டிசைன் கொண்டிருக்கிறது. இத்துடன் நெட்ஃப்ளிக்ஸ், யூடியூப், பிரைம் வீடியோ மள்ளும் லைவ் சேனல் உள்ளிட்ட செயலிகள் பிரீ இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்டு 9 இயங்குதளம் கொண்டிருக்கும் ரியல்மி டிவி மாடல்களில் பில்ட் இன் க்ரோம் காஸ்ட் கொண்டிருக்கிறது. இதனுடன் வழங்கப்படும் ரிமோட் யூடியூப், நெட்ஃப்ளிக்ஸ், பிரைம் வீடியோ, கூகுள் அசிஸ்டண்ட் உள்ளிட்ட சேவைகளுக்கு ஷார்ட்கட் பட்டன்களை கொண்டிருக்கிறது.
மேலும் 24 வாட் அவுட்புட் வழங்கும் ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 1.1 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் கார்டெக்ஸ் ஏ53 மீடியாடெக் பிராசஸர், மாலி 470 எம்பி3 GPU, 1 ஜிபி ரேம், 8 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது. கனெக்டிவிட்டிக்கு வைபை, ப்ளூடூத் 5, 3 x ஹெச்டிஎம்ஐ, 2 x யுஎஸ்பி, SPDIF, டிவிபி டி2, ஈத்தர்நெட் போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஸ்மார்ட் டிவி மாடல்களுடன் ரியல்மி பிராண்டு 10000 எம்ஏஹெச் பவர் பேங்க் 2 மாடலையும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. முந்தைய மாடலுடன் ஒப்பிடும் போது புதிய பவர் பேங்க் சற்று வித்தியாசமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 18 வாட் இருவழி ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, யுஎஸ்பி டைப் சி, யுஎஸ்பி டைப் ஏ போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ரியல்மி ஸ்மார்ட் டிவி 32 இன்ச் மாடல் விலை ரூ. 12999 என்றும் 43 இன்ச் ஃபுல் ஹெச்டி மாடல் விலை ரூ. 21999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ரியல்மி 10000 எம்ஏஹெச் பவர் பேங்க் 2 மாடல் விலை ரூ. 999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.






