என் மலர்
புதிய கேஜெட்டுகள்
ரியல்மி நிறுவனத்தின் புதிய வயர்லெஸ் இயர்பட்ஸ் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ரியல்மி நிறுவனம் இந்தியாவில் ரியல்மி பட்ஸ் ஏர் நியோ ட்ரூ வயர்லெஸ் இயர்போனினை அறிமுகம் செய்துள்ளது. இது ரியல்மி நிறுவனத்தின் இரண்டாவது வயர்லெஸ் இயர்பட்ஸ் ஆகும்.
புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலில் 13எம்எம் டிரைவர்கள், டைனமிக் பாஸ், ப்ளூடூத் 5.0, ஏஏதி ஆடியோ கோடெக், லோ லெடென்சி கேமிங் மோட் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. புதிய இயர்போன் பார்க்க பட்ஸ் ஏர் போன்றே காட்சியளிக்கிறது.

ரியல்மி பட்ஸ் ஏர் நியோ சிறப்பம்சங்கள்
- ப்ளூடூத் 5.0
- 13 எம்எம் டிரைவர்
- கால் கண்டோரல், பாடல்களை மாற்ற, கூகுள் அசிஸ்டண்ட் இயக்க தொடுதிரை வசதி
- ஆர்1 சிப்
- மூன்று மணி நேர பிளேபேக்
- சார்ஜிங் கேஸ் பயன்படுத்தும் போது 17 மணி நேர பேக்கப்
ரியல்மி பட்ஸ் ஏர் வைட், கிரீன் மற்றும் ரெட் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 2999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சியோமி நிறுவனத்தின் Mi மிக்ஸ்4 ஸ்மார்ட்போன் அன்டர் டிஸ்ப்ளே கேமராவுடன் உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சியோமி நிறுவனத்தின் Mi மிக்ஸ்4 ஸ்மார்ட்போன் செல்ஃபி கேமரா டிஸ்ப்ளேவின் கீழ் மறைக்கப்பட்டு இருக்கும் என நீண்ட காலமாக தகவல்கள் வெளியாகி வந்தது. தற்சமயம் வெளியாகி இருக்கும் லைவ் படங்களில் Mi மிக்ஸ்4 ஸ்மார்ட்போன் அன்டர் டிஸ்ப்ளே கேமரா கொண்டிருப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
சீனாவை சேர்ந்த சமூக வலைதளமான வெய்போவில் புதிய Mi மிக்ஸ்4 ஸ்மார்ட்போனின் லைவ் படங்கள் வெளியாகி இருக்கிறது. இதில் புதிய ஸ்மார்ட்போனில் அன்டர் டிஸ்ப்ளே கேமரா வழங்கப்படும் என தெரியவந்துள்ளது. ஸ்மார்ட்போனின் ஸ்கிரீனில் கேமரா காணப்படாததால், முன்புற கேமரா பெரும்பாலும் டிஸ்ப்ளேவின் கீழ் இருக்கும் என தெரிகிறது.

புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கான காப்புரிமைகளை சியோமி ஏற்கனவே பெற்று இருந்தது. மேலும் புதிய தொழில்நுட்பம் ஏற்கனவே சோதனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. இணையத்தில் வெளியாகி இருக்கும் ரென்டர்களில் இருக்கும் ஸ்மார்ட்போன் புதிய Mi மிக்ஸ் தான் என எடுத்து கொள்ள முடியாது என்றும் கூறப்படுகிறது.
முன்னதாக வெளியான தகவல்களின் படி மேலும் புதிய ஸ்மார்ட்போனின் அன்டர் டிஸ்ப்ளே கேமராவை இயக்கியதும், சென்சாரின் மேல் இருக்கும் ஸ்கிரீன் கண்ணாடி போன்று மாறும் என கூறப்பட்டது. இதனால் அதை கடந்து வெளிச்சம் உள்ளே போக முடியும். இதனால் புகைப்படங்களை எடுப்பது சாத்தியமாகும்.
கேமரா அம்சத்தினை ஆஃப் செய்ததும் டிஸ்ப்ளே அடியில் உள்ள கேமரா மறைந்து கொண்டு ஸ்கிரீன் வழக்கமானதாக மாறி நிறங்களை பிரதிபலிக்க துவங்கி விடும். இந்த தொழில்நுட்பத்துடன் வெளியாகும் ஸ்மார்ட்போன் விலை நிச்சயம் அதிகமாக இருக்கும்.
மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய தலைமுறை ரேசர் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.
மோட்டோரோலா நிறுவனம் இரண்டாம் தலைமுறை மோட்டோரோலா ரேசர் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை இந்த ஆண்டு அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை லெனோவோ நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார். மேலும் புதிய ஸ்மார்ட்போன் செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகமாகலாம் அவர் தெரிவித்திருக்கிறார்.
அதன்படி இரண்டாம் தலைமுறை மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் இந்த ஆண்டிற்குள் அறிமுகமாவது உறுதியாகி இருக்கிறது. 2019 மோட்டோரோலா ரேசர் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விற்பனை பிப்ரவரி மாத வாக்கில் விற்பனைக்கு வந்தது. இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 1.25 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டது.
இதனால் இரண்டாம் தலைமுறை மோட்டோ ரேசர் ஸ்மார்ட்போனின் விலை சற்று குறைவாக நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முந்தைய மாடலின் விலையை கருத்தில் கொண்டு புதிய மாடல் விலை குறைவாக நிர்ணயிக்கப்படலாம் என தெரிகிறது.
மோட்டோரோலா ரேசர் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனில் மடங்கக்கூடிய OLED ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது. இது ஸ்மார்ட்போனை பாதியாக மடிக்க வழி செய்கிறது. இத்துடன் ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் இரண்டாவது ஸ்கிரீன் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது. இரண்டாவது ஸ்கிரீனினை குவிக் வியூ எக்ஸ்டெர்னல் டிஸ்ப்ளே என அழைக்கப்படுகிறது.

மோட்டோரோலா ரேசர் 2019 சிறப்பம்சங்கள்:
– 6.2 இன்ச் QLED HD+ 876×2142 பிக்சல் மடிக்கக்கூடிய ஸ்கிரீன்
– 2.7 இன்ச் 600×800 பிக்சல் குவிக் வியூ டிஸ்ப்ளே
– ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர்
– 6 ஜி.பி. பேம்
– 128 ஜி.பி. மெமரி
– 16 எம்.பி. f/1.7 கேமரா
– 5 எம்.பி. கேமரா
– ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம்
– 2510 எம்.ஏ.ஹெச். பேட்டரி
– 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிக் வசதி
– இசிம் வசதி
– ப்ளூடூத், 4ஜி எல்.டி.இ., வைபை
கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போனின் வெளியீடு மேலும் தாமதமாகிறது. புதிய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
கூகுள் நிறுவனத்தின் புதிய பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போன் அறிமுகம் மீண்டும் தாமதமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முந்தைய தகவல்களின் படி புதிய பிக்சல் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 பீட்டா வெளியீட்டுடன் அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்டது.
இந்நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போன் ஜூலை 13 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதில் 4ஜி வெர்ஷன் மட்டுமே அறிமுகமாகும் என்றும் கூறப்படுகிறது. தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு ஸ்மார்ட்போன் வெளியீட்டை கூகுள் மாற்றி இருப்பதாக கூறப்படுகிறது.
பிக்சல் 4ஏ எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்
- 5.81 இன்ச் 1080x2340 பிக்சல் FHD+ OLED 18.5:9 டிஸ்ப்ளே
- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 730 பிராசஸர்
- அட்ரினோ 618 GPU
- டைட்டன் எம் செக்யூரிட்டி சிப்
- 6 ஜிபி LPDDR4X ரேம்
- 64 ஜிபி / 128 ஜிபி UFS 2.1 மெமரி
- ஆண்ட்ராய்டு 10
- 12.2 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், டூயல் PD ஆட்டோபோக்கஸ், OIS, EIS
- 8 எம்பி செல்ஃபி கேமரா
- டூயல் சிம்
- கைரேகை சென்சார்
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யுஎஸ்பி டைப்-சி
- 3080 எம்ஏஹெச் பேட்டரிட
- 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
மைக்ரோசாப்ட் நிறுவனம் சர்பேஸ் ஹப் 2எஸ் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இதன் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சர்பேஸ் ஹப் 2எஸ் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. முன்னதாக சர்பேஸ் ஹப் 2 மாடல் 2018 ஆம் ஆண்டு அறிமுகமானது.
சர்பேஸ் ஹப் 2எஸ் மாடல் வியாபார சூழல்களுக்கான ஒட்டுமொத்த டிஜிட்டல் வைட்போர்டு சாதனம் ஆகும். புதிய சர்பேஸ் ஹப் 2எஸ் மாடலுடன் ஸ்டீல்கேஸ் ரோம் மொபைல் ஸ்டாண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
புதிய சர்பேஸ் ஹப் 2எஸ் மாடலில் 50.5 இன்ச் 4கே மல்டி-டச் பிக்சல்சென்ஸ் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இது டிஜிட்டல் வைட்போர்டு, மீட்டிங் தளம் மற்றும் பணி சார்ந்த சூழல்களுக்கு பயன்படுத்த ஏதுவாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதில் விண்டோஸ் 10, மைக்ரோசாப்ட் டீம்ஸ், ஆபீஸ் 365, மைக்ரோசாப்ட் வைட்போர்டு ஸ்கைப் ஃபார் பிஸ்னஸ் மற்றும் மைக்ரோசாப்ட் கிளவுட் சேவை வழங்கப்படுகிறது.
இத்துடன் சர்பேஸ் ஹப் 2 கேமரா, சர்பேஸ் ஹப் 2 பென் உள்ளிட்டவை பொருத்தப்பட்டுள்ளது. புதிய சர்பேஸ் ஹப் 2எஸ் அதிகாரப்பூர்வ ஹப் விற்பனையாளர்களிடம் ரூ. 11,89,999 விலையில் கிடைக்கிறது. இத்துடன் அறிமுகம் செய்யப்பட்ட ஸ்டீல்கேஸ் ரோம் மொபைல் ஸ்டாண்ட் விலை ரூ. 1,17,500 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனம் தனது ரெட் சாதனங்கள் வரிசையில் புதிதாக பிரைடு எடிஷன் ஆப்பிள் வாட்ச் மாடலை அறிமுகம் செய்துள்ளது.
உலகில் எய்ட்ஸ் நோய் சிகிச்சைக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில் ஆப்பிள் ரெட் சாதனங்கள் வெளியிடப்பட்டு வருகிறது. தற்சமயம் இதேபோன்ற தொண்டு சேவை நோக்கில் ஆப்பிள் நிறுவனம் பிரைடு எடிஷன் ஆப்பிள் வாட்ச் மாடலை அறிமுகம் செய்துள்ளது.
ஆப்பிள் வாட்ச் பிரைடு எடிஷன் மூலம் உலகம் முழுக்க இயங்கி வரும் LGBTQ அமைப்புகளுக்கு ஆதரவு அளிக்க ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளது. பிரைடு எடிஷன் வாட்ச் மாடலில் பிரத்யேக வாட்ச் ஃபேஸ்கள், வாட்ச்ஒஎஸ் 6.2.5 அப்டேட் மூலம் வழங்கப்படுகின்றன. இதே அப்டேட்டில் பிழை திருத்தங்கள் மற்றும் சில அம்சங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளது.

பிரைடு எடிஷன் கலெக்ஷனில் பிரைடு எடிஷன் ஸ்போர்ட் பேண்ட் மற்றும் ஆப்பிள் வாட்ச் நைக் பிரைடு எடிஷன் ஸ்போர்ட் பேண்ட் என இருவித ஸ்டிராப்கள் வழங்கப்படுகின்றன. இரு ஸ்டிராப்களுடன் பொருந்தி கொள்ளும் வகையில் வாட்ச்ஒஎஸ் 6.2.5 வாட்ச் ஃபேஸ்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
புதிய வாட்ச்ஒஎஸ் 6.2.5 பதிப்பில் பொதுவான மேம்படுத்தல்கள் செய்யப்பட்டுள்ளன. இத்துடன் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 மாடலில் இசிஜி ஆப் அம்சம், சவுதி அரேபிய பயனர்களுக்கு இதய துடிப்பு சென்சார் உள்ளிட்ட வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
மோட்டோரோலா நிறுவனத்தின் 108 எம்பி கேமரா கொண்ட புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
மோட்டோரோலா நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்தியாவில் மோட்டோரோலா எட்ஜ் பிளஸ் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது.
புதிய மோட்டோரோலா எட்ஜ் பிளஸ் ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் 2520x1080 பிக்சல் FHD+ OLED என்ட்லெஸ் எட்ஜ் டிஸ்ப்ளே, ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர், 12 ஜிபி ரேம், 5ஜி வசதி கொண்டிருக்கிறது. இத்துடன் ஆண்ட்ராய்டு 10 மற்றும் மை யுஎக்ஸ் கஸ்டமைசேஷன் வழங்கப்பட்டுள்ளது.
புகைப்படங்களை எடுக்க 108 எம்பி பிரைமரி கேமரா, 16 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 8 எம்பி டெலிபோட்டோ லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 5000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 15 வாட் வயர்லெஸ் மற்றும் ரிவர்ஸ் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

மோட்டோரோலா எட்ஜ் பிளஸ் சிறப்பம்சங்கள்
- 6.7 இன்ச் 2520x1080 பிக்சல் FHD+ OLED ஹெச்டிஆர்10 பிளஸ் டிஸ்ப்ளே
- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர்
- அட்ரினோ 650 GPU
- 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி
- டூயல் சிம்
- ஆண்ட்ராய்டு 10
- 108 எம்பி பிரைமரி கேமரா, F/1.8, 0.8μm, OIS, லேசர் ஆட்டோஃபோக்கஸ்
- 16 எம்பி 117° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.2
- 8 எம்பி டெலிபோட்டோ லென்ஸ், OIS
- 25 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
- இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- யுஎஸ்பி டைப்-சி ஆடியோ
-ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
- 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யுஎஸ்பி டைப்-சி
- 5000 எம்ஏஹெச் பேட்டரி
- 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங், 5வாட் ரிவர்ஸ் சார்ஜிங்
மோட்டோரோலா எட்ஜ் பிளஸ் ஸ்மார்ட்போன் தன்டர் கிரே நிறத்தில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 74,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்சமயம் இதன் முன்பதிவு ப்ளிப்கார்ட் தளத்தில் நடைபெறுகிறது. ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு கொண்டு வாங்கும் போது, ரூ. 7500 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.
ஹெச்எம்டி குளோபல் நிறுவனத்தின் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் 24 எம்பி கேமரா, ஸ்னாப்டிராகன் 730 பிராசஸருடன் உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் கடந்த ஆண்டு வெளியிட்ட நோக்கியா 6.2 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷனான நோக்கியா 6.3 மாடல் ஸ்னாப்டிராகன் 730 பிராசஸருடன் உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக வெளியான தகவல்களில் இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 6 சீரிஸ் பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்பட்டது. தற்சமயம் வெளியாகியுள்ள புதிய தகவல்களில் பிராசஸர் தவிர நோக்கியா ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்களும் வெளியாகி இருக்கிறது.

அதன்படி புதிய நோக்கியா 6.3 ஸ்மார்ட்போனில் 24 எம்பி பிரைமரி கேமரா, அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், மேக்ரோ லென்ஸ் மற்றும் டெப்த் சென்சார் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இதுவரை நோக்கியா 6.3 ஸ்மார்ட்போனின் விவரங்கள் எதுவும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.
இத்துடன் நோக்கியா 6.3 ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 730 பிராசஸர் வழங்கப்படும் என்றும் பக்கவாட்டில் கைரேகை சென்சார் பவர் பட்டனிலேயே பொருத்தப்படும் என்றும் கூறப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போனை ஒரே கையில் பயன்படுத்த ஏதுவாக சிறிய ஸ்கிரீன் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
முந்தைய தகவல்களின் படி நோக்கியா 6.3 ஸ்மார்ட்போனில் 16 எம்பி செல்ஃபி கேமரா, 3 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி வழங்கப்படும் என்றும் இதன் விலை 249 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 20,400 வரை நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது.
சாம்சங் நிறுவனத்தின் ஃபிரேம் டிவி 2020 மாடல் அடுத்த வாரம் இந்தியா வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சாம்சங் ஃபிரேம் டிவி 2020 மாடல் அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதற்கான டீசர் ப்ளிப்கார்ட் தளத்தில் பதிவிடப்பட்டது.
புதிய ஃபிரேம் டிவி மாடல்களில் சாம்சங் ஆர்ட் ஸ்டோர் பிரீ-இன்ஸ்டால் செய்யப்படுகிறது. இத்துடன் ஆப்பிள ஏர்பிளே 2 வசதியும் வழங்கப்படுகிறது. இம்முறை ஃபிரேம் டிவியில் மூன்று வெவ்வேறு அளவுகளில் வெளியிடப்படும் என ப்ளிப்கார்ட் டீசரில் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவில் ஃபிரேம் டிவி 2020 சீரிசில் மொத்தம் ஆறு வெவ்வேறு மாடல்கள் இருக்கின்றன. இவற்றில் 75 இன்ச் மாடல் பெரியதாக இருக்கிறது. ப்ளிப்கார்ட் விவரங்களின் படி சாம்சங் ஃபிரேம் டிவி 2020 மூன்று மாடல்களில் அறிமுகமாகிறது.

முன்னதாக 2018 ஆம் ஆண்டு சாம்சங் 55 இன்ச் ஃபிரேம் டிவி மாடலையும், கடந்த ஆண்டு 65 இன்ச் மாடலையும் அறிமுகம் செய்தது. அந்த வரிசையில் அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்ட 75 இன்ச் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
சாம்சங் ஃபிரேம் டிவி 2020 மாடலில் ஆர்ட் மோட் வழங்கப்பட்டுள்ளது. இதை கொண்டு சாம்சங் ஆர்ட் ஸ்டோரில் இருந்து வரைபடங்களை டவுன்லோடு செய்து கொள்ளலாம். ஃபிரேம் டிவியில் கஸ்டமைஸ் செய்யக்கூடிய ஃபிரேம் மற்றும் குவாண்டம் டாட் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.
மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
மோட்டோரோலா நிறுவனம் தனது எட்ஜ் மற்றும் எட்ஜ் பிளஸ் ஸ்மார்ட்போன்கள் அமெரிக்க சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில், இதன் இந்திய வெளியீடு மே 19 ஆம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மோட்டோரோலா எட்ஜ் பிளஸ் ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டை ப்ளிப்கார்ட் தனது வலைதளத்தில் அறிவித்துள்ளது. அதன்படி மோட்டோரோலா எட்ஜ் பிளஸ் ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படலாம் என தெரிகிறது.

மோட்டோரோலா எட்ஜ் பிளஸ் சிறப்பம்சங்கள்
- 6.7 இன்ச் 2520x1080 பிக்சல் FHD+ AMOLED ஹெச்டிஆர்10 பிளஸ் டிஸ்ப்ளே
- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர்
- அட்ரினோ 650 GPU
- 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி
- டூயல் சிம்
- ஆண்ட்ராய்டு 10
- 108 எம்பி பிரைமரி கேமரா, F/1.8, 0.8μm, OIS, லேசர் ஆட்டோஃபோக்கஸ்
- 16 எம்பி 117° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.4
- 8 எம்பி டெலிபோட்டோ லென்ஸ், OIS
- 25 எம்பி செல்ஃபி கேமரா
- இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- யுஎஸ்பி டைப்-சி ஆடியோ
-ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
- 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யுஎஸ்பி டைப்-சி
- 5000 எம்ஏஹெச் பேட்டரி
- 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங், 5வாட் ரிவர்ஸ் சார்ஜிங்
மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ இ7 ஸ்மார்ட்போனின் ரென்டர்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.
மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோரோலா எட்ஜ் பிளஸ் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் சந்தையில் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
இந்நிலையில், மோட்டோரோலாவின் புதிய பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன் விவரங்கள் மற்றும் ரென்டர்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இது மோட்டோ இ6எஸ் மாடலின் மேம்பட்ட ஸ்மார்ட்போன் என்றும் இது மோட்டோ இ7 பெயரில் அறிமுகமாகும் என்றும் கூறப்படுகிறது.
புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் விவரங்கள் கூகுள் பிளே கன்சோல் டிவைஸ் கேட்டலாக் மற்றும் ஆண்ட்ராய்டு என்டர்பிரைஸ் பரிந்துரைக்கும் சாதனங்கள் பட்டியலிலும் இடம்பெற்று இருந்தது. அதன்படி புதிய மோட்டோ ஸ்மார்ட்போனில்:

- 6.2 இன்ச் 1520x720 பிக்சல் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே
- 2 ஜிபி / 4 ஜிபி ரேம்
- 32 ஜிபி / 64 ஜிபி மெமரி
- ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம்
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 632 பிராசஸர்
- 13 எம்பி பிரைமரி கேமரா
- 2 எம்பி ஆம்னிவிஷன் டெப்த் கேமரா
- 5 எம்பி செல்ஃபி கேமரா
- 3550 எம்ஏஹெச் பேட்டரி
உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படுகிறது. புதிய மோட்டோரோலா ஸ்மார்ட்போன் முதற்கட்டமாக வட அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டு, அதன்பின் மற்ற நாடுகளில் விற்பனைக்கு வரும் என தெரிகிறது. இதன் விலை மற்றும் வெளியீடு பற்றி இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.
ஹெச்எம்டி குளோபல் நிறுவனத்தின் புதிய நோக்கியா ஸ்மார்ட்போனில் 8கே வீடியோ பதிவு செய்யும் வசதி வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹெச்எம்டி குளோபல் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக நோக்கியா 9.3 பியூர்வியூ இருக்கிறது. புதிய மாடல் பற்றி இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியாகவில்லை. எனினும், இதன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி வருகின்றன.
அந்த வரிசையில், தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களில் நோக்கியா 9.3 பியூர்வியூ ஸ்மார்ட்போனில் 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, 108 எம்பி பிரைமரி கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் 8கே வீடியோ பதிவு செய்யும் வசதி வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

தற்போதைய தகவல்களின் படி நோக்கியா 9.3 பியூர்வியூ ஸ்மார்ட்போனில் நொடிக்கு 30 ஃபிரேம் வேகத்தில் 8கே வீடியோக்களை படமெடுக்கும் வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் இரண்டு கேமரா மோட்கள் ப்ரோ மற்றும் நைட் எனும் பெயர்களில் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
ப்ரோ மோடில் மேம்பட்ட கண்ட்ரோல்கள் வழங்கப்படும் என்றும் நைட் மோடில் இரவு நேரங்கள் மற்றும் வெளிச்சமற்ற பகுதிகளில் சிறப்பாக செயல்படும் என தெரிகிறது. இவைதவிர நோக்கியா 9.3 பியூர்வியூ ஸ்மார்ட்போனில் பிரத்யேக செய்ஸ் எஃபெக்ட்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நோக்கியா 9.3 பியூர்வியூ ஸ்மார்ட்போன் பிப்ரவரி மாதம் பார்சிலோனாவில் நடைபெற இருந்த 2020 சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்பட இருந்தது. எனினும், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இவ்விழா ரத்து செய்யப்பட்டது. இதன்பின் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் வெளியீடு பற்றி எந்த தகவலும் வழங்கப்படவில்லை.






