என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    32 எம்பி டூயல் செல்ஃபி கேமரா கொண்ட விவோ நிறுவனத்தின் புதிய வி19 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
     


    விவோ நிறுவனம் வி19 ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது. புதிய விவோ வி19 ஸ்மார்ட்போனில் 6.44 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் சூப்பர் AMOLED அல்ட்ரா ஒ டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. 

    இத்துடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 712 பிராசஸர், 8 ஜிபி ரேம், காப்பர் டியூப் லிக்விட் கூலிங் வசதி, கிளாஸ் சான்ட்விச் டிசைன் செய்யப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி வைடு ஆங்கில் கேமரா, 2 எம்பி டெப்த் மற்றும் 2 எம்பி மேக்ரோ சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

    ஃபன்டச் ஒஎஸ் சார்ந்த ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் கொண்டிருக்கும் விவோ வி19 ஸ்மார்ட்போன் 4500 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் விவோ ஃபிளாஷ்சார்ஜ் 2.0 வசதி வழங்கப்பட்டுள்ளது. 

    விவோ வி19

    விவோ வி19 சிறப்பம்சங்கள்

    - 6.44 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+ 20:9 E3 சூப்பர் AMOLED 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 712 பிராசஸர்
    - அட்ரினோ 616 GPU
    - 8 ஜிபி LPDDR4x ரேம் 
    - 128 ஜிபி / 256 ஜிபி UFS 2.1 மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஃபன்டச் ஒஎஸ் 10
    - டூயல் சிம்
    - 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.79
    - 8 எம்பி வைடு ஆங்கில் கேமரா, f/2.2
    - 2 எம்பி டெப்த் கேமரா, f/2.4
    - 2 எம்பி மேக்ரோ கேமரா, f/2.4
    - 32 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
    - 8 எம்பி 105° வைடு ஆங்கில், f/2.2
    - இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    - யுஎஸ்பி டைப்-சி
    - 4500 எம்ஏஹெச் பேட்டரி
    - 33 வாட் விவோ ஃபிளாஷ் சார்ஜ் 2.0 ஃபாஸ்ட் சார்ஜிங்

    விவோ வி19 ஸ்மார்ட்போன் மிஸ்டிக் சில்வர் மற்றும் பியானோ பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் 8 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 27,990 என்றும் 8 ஜிபி + 256 ஜிபி மாடல் விலை ரூ. 31,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை மே 15 ஆம் தேதி முதல் துவங்குகிறது.
    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12 ப்ரோ ஸ்மார்ட்போனில் அசத்தல் அம்சங்கள் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



    ஆப்பிள் நிறுவனம் அடுத்த தலைமுறை ஐபோன் மாடல்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், ஐபோன் 12 சீரிஸ் விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

    புதிய விவரங்களின் படி ஐபோன் 12 ப்ரோ மாடலில் அதிக ரிஃப்ரெஷ் ரேட் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. ஐபேட் ப்ரோ போன்றே புதிய ஐபோன் 12 ப்ரோ மாடலிலும் ப்ரோ மோஷன் டிஸ்ப்ளே வழங்கப்படுவதாக தெரிகிறது. அதிகபட்சம் புதிய ஐபோனில் 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

    தற்போதைய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் அதிக ரிஃப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்ப்ளே வழங்கப்படுவதைத் தொடர்ந்து ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்களில் இந்த பாணியை வழங்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அதன்படி ஐபோன் 12 ப்ரோ மாடலில் 6.1 மற்றும் 6.7 இன்ச் டிஸ்ப்ளேக்களில் ப்ரோமோஷன் தரத்தை வழங்கலாம் என கூறப்படுகிறது.

    ஐபோன் 12 ப்ரோ

    மேலும் புதிய ஐபோனின் பேட்டரி அளவுக்கு ஏற்ப டிஸ்ப்ளே 60 ஹெர்ட்சில் துவங்கி 120 ஹெர்ட்ஸ் வரையிலான ரிஃப்ரெஷ் ரேட்களில் ஒன்றை தேர்வு செய்ய முடியும் என கூறப்படுகிறது. இத்துடன் ப்ரோமோஷன் டிஸ்ப்ளே தொழில்நுட்பம் வழங்குவதால், பேட்டரி திறனை அதிகப்படுத்தவும் ஆப்பிள் பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

    அதன்படி 6.7 இன்ச் ஐபோன் 12 ப்ரோ மாடலில் 4400 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இத்துடன் 5ஜி கனெக்டிவிட்டி, மேம்பட்ட ஃபேஸ் ஐடி தொழில்நுட்பம், சிறிய நாட்ச் உள்ளிட்டவை வழங்கப்படலாம் என தெரிகிறது. இதுதவிர ஃபேஸ் ஐடி சற்று அகலமான ஆங்கில் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இதனால் ஐபோன் வேகமாக அன்லாக் செய்ய முடியும். 
    ரெட்மி பிராண்டின் புதிய ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.



    சியோமியின் ரெட்மி பிராண்டு ரெட்மி நோட் 9 ப்ரோ மற்றும் நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது. சமீபத்தில் இவை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன. இந்நிலையில், ரெட்மி பிராண்டு ரெட்மி 9 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஆர்எஃப் எக்ஸ்போஷர் வலைதளத்தில் வெளியாகியுள்ள தகவல்களின் படி புதிய ரெட்மி 9 ஸ்மார்ட்போன் M2004J19G எனும் மாடல் நம்பர் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இதுதவிர M2004J19C எனும் மாடல் நம்பர் கொண்ட ரெட்மி ஸ்மார்ட்போன் 3சி சான்று பெற்றுள்ளது. இது சீன சந்தைக்கான ரெட்மி 9 மாடலாக இருக்கும் என கூறப்படுகிறது.

    ரெட்மி 8

    இந்த மாடலுக்கு 10 வாட் சார்ஜர் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. எனினும், ரெட்மி 9 ஸ்மார்ட்போனில் 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    முன்னதாக வெளியான தகவல்களின் படி ரெட்மி 9 ஸ்மார்ட்போன் மெர்லின் எனும் குறியீட்டு பெயரில் உருவாகி வருவதாக கூறப்பட்டது. சிறப்பம்சங்களை பொருத்தவரை ரெட்மி 9 ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர், 13 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 5 எம்பி மேக்ரோ, 2 எம்பி டெப்த் சென்சார் வழங்கப்படலாம் என தெரிகிறது.

    இத்துடன் பக்கவாட்டில் கைரேகை சென்சார், 6.6 இன்ச் ஹெச்டி பிளஸ் டாட் நாட்ச் டிஸ்ப்ளே, 4 ஜிபி + 64 ஜிபி மெமரி, 5000 எம்ஏஹெச் பேட்டரி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
    சியோமி நிறுவனத்தின் Mi 10 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை விவரங்களை பார்ப்போம்.



    சியோமி நிறுவனம் ஏற்கவனே அறிவித்தப்படி இந்தியாவில் Mi 10 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் வளைந்த AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர், 5ஜி, ஸ்னாப்டிராகன் எக்ஸ்55 மோடெம், லிக்விட் கூலிங் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.

    ஆண்ட்ராய்டு 10 மற்றும் MIUI 11 இயங்குதளம் கொண்டிருக்கும் சியோமி Mi10 5ஜி ஸ்மாரட்போனில் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 108 எம்பி சாம்சங் சென்சார், 13 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில், 2 எம்பி டெப்த் மற்றும் 2 எம்பி மேக்ரோ சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளன.

    சியோமி Mi 10 5ஜி

    சியோமி Mi 10 5ஜி சிறப்பம்சங்கள்:

    - 6.67 இன்ச் 2340x1080 பிக்சல் FHD+ AMOLED 19.5:9 HDR10 + 90Hz டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
    - ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர்
    - அட்ரினோ 650 GPU
    - 8 ஜி.பி. LPPDDR5 ரேம், 128 ஜி.பி. / 256 ஜி.பி. UFS 3.0 மெமரி
    - டூயல் சிம்
    - MIUI 11 சார்ந்த ஆண்ட்ராய்டு 10
    - 108 எம்.பி. பிரைமரி கேமரா, 0.8μm, f/1.69, OIS, 8P லென்ஸ் எல்.இ.டி. ஃபிளாஷ்
    - 13 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்
    - 2 எம்.பி. டெப்த் சென்சார்
    - 2 எம்பி மேக்ரோ லென்ஸ்
    - 20 எம்.பி. செல்ஃபி கேமரா
    - இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - யு.எஸ்.பி. டைப்-சி
    - 5ஜி SA/NSA டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1
    - 4780 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 30 வாட் QC 4+ / PD3.0 வயர் மற்றும் வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்
    - 10 வாட் வயர்லெஸ் ரிவர்ஸ் சார்ஜிங்

    சியோமி Mi 10 5ஜி ஸ்மார்ட்போன் கோரல் கிரீன் மற்றும் டுவிலைட் கிரே நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன்  8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 49,999 என்றும் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 54,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை மே 18 ஆம் தேதி துவங்குகிறது.
    போக்கோ பிராண்டின் புதிய போக்கோ எஃப்2 ஸ்மார்ட்போனின் வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.



    போக்கோ பிராண்டு 2018 ஆம் ஆண்டு அறிமுகம் செய்த போக்கோ எஃப்1 ஸ்மார்ட்போனிற்கு மேம்பட்ட வெர்ஷனை இந்த ஆண்டு அறிமுகம் செய்ய இருக்கிறது. 

    புதிய போக்கோ எஃப்2 பற்றிய விவரங்கள் ரகசியமாக உள்ள நிலையில், போக்கோ எஃப்2 ப்ரோ பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில், போக்கோ பிராண்டு சார்பில் மே 12 ஆம் தேதி விர்ச்சுவல் நிகழ்வு நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

    மேலும் இந்த நிகழ்வுக்கான டீசர் வீடியோவும் வெளியாகியுள்ளது. அதில் போக்கோ பிராண்டு தனது இரண்டாம் தலைமுறை ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இது பெரும்பாலும் போக்கோ எஃப்2 மாடலாக இருக்கும் என்றே தெரிகிறது.

    போக்கோ ட்வீட் ஸ்கிரீன்ஷாட்

    இதே விவரங்களை போக்கோ பிராண்டின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் இடம்பெற்று இருக்கிறது. அதிலும் போக்கோ பிராண்டின் இரண்டாம் தலைமுறை ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக போக்கோ எம்2 ப்ரோ ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தது. 

    இதனால் ஆன்லைன் நிகழ்வில் போக்கோ பிராண்டு எந்த ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருக்கிறது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. மேலும் போக்கோ பிராண்டு தனது போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போனினை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யலாம் என்றும் கூறப்படுகிறது.
    சியோமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் இன்-டிஸ்ப்ளே கேமரா சென்சாருடன் உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
      


    சியோமி நிறுவனம் கடந்த ஆண்டு வெளியிட்ட கான்செப்ட்களில் அந்நிறுவனம் அன்டர்-டிஸ்ப்ளே கேமரா கொண்ட ஸ்மார்ட்போனை உருவாக்கி வருவது தெரியவந்தது. இந்த கேமரா ஸ்கிரீனின் கீழ் இருக்கும், இதனை பயன்படுத்த முற்படும் வரை கேமரா இருப்பது ஸ்மார்ட்போனை பார்க்கும் போது தெரியாது.

    இது இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் போன்ற தொழில்நுட்பம் ஆகும். எனினும், இது கைரேகை சென்சாருக்கு மாற்றாக செல்ஃபி கேமரா கொண்டிருக்கிறது. இதனை வெற்றிகரமாக செயல்படுத்த வைக்க பிக்சல்களின் அடர்த்தி இடையூறாக இருக்கலாம். கேமராவுக்கும், வெளியில் உள்ள பொருளுக்கும் இடையில் செல்ல வேண்டிய வெளிச்சத்தை பிக்சல்களே மறைத்து கொள்ளலாம்.

    சியோமி காப்புரிமை புகைப்படம்

    இதே பிரச்சனையை சியோமி நிறுவன துணை தலைவர் லு வெய்பிங் தனது வெய்போ அக்கவுண்ட்டில் தெரிவித்து இருந்தார். ஒட்டுமொத்த தொழில்நுட்ப துறையும் இதற்கான தீர்வை எட்டும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது அவர் மேலும் தெரிவித்து இருக்கிறார்.

    தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி இந்த தொழில்நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போனிற்கு சியோமி காப்புரிமை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. காப்புரிமை புகைப்படங்களில் இரண்டு வடிவமைப்பு கொண்ட ஸ்மார்ட்போன் இடம்பெற்றுள்ளது. இதில் ஒன்று இடதுபுறத்திலும், மற்றொன்றில் ஸ்கிரீன் நடுவில் இன் டிஸ்ப்ளே கேமரா சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. 

    மேலும் இந்த ஸ்மார்ட்போன் கேமராவை இயக்கியதும், சென்சாரின் மேல் இருக்கும் ஸ்கிரீன் கண்ணாடி போன்று மாறுகிறது. இதனால் அதை கடந்து வெளிச்சம் உள்ளே போகும். இதை ஆஃப் செய்ததும் ஸ்கிரீன் வழக்கமானதாக மாறி நிறங்களை பிரதிபலிக்கும். இந்த தொழில்நுட்பத்துடன் வெளியாகும் ஸ்மார்ட்போன் விலை நிச்சயம் அதிகமாக இருக்கும்.
    ஆப்பிள் நிறுவனம் தனது 13 இன்ச் மேக்புக் ப்ரோ மாடல்களை அப்டேட் செய்து சக்திவாய்ந்த பிராசஸர்களை வழங்கி உள்ளது.



    ஆப்பிள் நிறுவனத்தின் 13 இன்ச் மேக்புக் ப்ரோ மாடல் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. புதிய 2020 மேக்புக் ப்ரோ மாடலில் மேஜிக் கீபோர்டு, 10 ஆம் தலைமுறை இன்டெல் கோர் பிராசஸர் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    புதிய 13 இன்ச் மேக்புக் ப்ரோ 2000 ஜிபி எஸ்எஸ்டி வரை கான்ஃபிகர் செய்ய முடியும். இதன் பேஸ் வேரியண்ட் 256 ஜிபி எஸ்எஸ்டியுடன் கிடைக்கிறது. என்ட்ரி லெவல் மாடல்களில் 8-ம் தலைமுறை இன்டெல் கோர் ஐ5 பிராசஸரும், டாப் எண்ட் மாடலில் முற்றிலும் புதிய 10 ஆம் தலைமுறை இன்டெல் கோர் ஐ5 பிராசஸர் வழங்கப்படுகிறது.

    ஆப்பிள் மேக்புக் ப்ரோ

    இவற்றுடன்  32GB 3733MHz LPDDR4X  ரேம் வழங்கப்படுகிறது. இத்தகைய அம்சம் கொண்ட முதல் 13 இன்ச் மேக் நோட்புக் மாடலாக இது இருக்கிறது. இதுதவிர புதிய மாடலில் பட்டர்ஃபிளை கீபோர்டுக்கு மாற்றாக மேஜிக் கீபோர்டு வழங்கப்பட்டுள்ளது. டச் பார் மற்றும் டச் ஐடி வசதியுடன் எஸ்கேப் பட்டனும் வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் ரெட்டினா டிஸ்ப்ளே, ட்ரூ டோன் தொழில்நுட்பம், ஆப்பிள் டி2 செக்யூரிட்டி சிப் மற்றும் மேக் ஒஎஸ் கேட்டலினா இயங்குதளம் கொண்டுள்ளது. 

    இந்தியாவில் 13 இன்ச் மேக்புக் ப்ரோ 8 ஜிபி + 256 ஜிபி மாடல் ரூ. 1,22,990 என்றும் 16 ஜிபி + 1000 ஜிபி மாடல் விலை ரூ. 1,94,900 என விலை  நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    போக்கோ பிராண்டின் புதிய எஃப்2 ஸ்மார்ட்போன் அதிகாரப்பூர்வ டீசர் வெளியிடப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.



    போக்கோ பிராண்டின் புதிய போக்கோ எஃப்2 ஸ்மார்ட்போன் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. புதிய டீசர்கள் போக்கோ பிராண்டின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டு இருக்கிறது. 

    போக்கோ எஃப்2 ஸ்மார்ட்போன் உருவாகி வருவதை அந்நிறுவனம் ஏற்கனவே உறுதி செய்து இருக்கிறது. அந்த வகையில் இந்த ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் விவரங்கள் கூகுள் பிளே தளத்தில் பட்டியலிடப்பட்டது. 

    போக்கோ டீசர்

    அதன்படி இந்த ஸ்மார்ட்போன் ரெட்மி கே30 ப்ரோ மாடலின் மேம்பட்ட வெர்ஷனாக இருக்கும் என கூறப்பட்டது. எனினும், போக்கோ இந்தியா பொது பேலாளர், போக்கோ எஃப்2 ஸ்மார்ட்போன் முற்றிலும் புதிய மாடலாக இருக்கும் என தெரிவித்து இருந்தார். 

    அந்த வகையில் போக்கோ எஃப்2 ப்ரோ ஸ்மார்ட்போன் ரெட்மி கே30 ப்ரோ மாடலில் வழங்கப்பட்ட சிறப்பம்சங்களுடன் இந்தியா தவிர்த்து சில சந்தைகளில் அறிமுகம் செய்யப்படலாம்.

    புதிய போக்கோ ஸ்மார்ட்போன் எந்தெந்த நாடுகளில் அறிமுகமாகும் என்பது பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களின்படி புதிய போக்கோ எஃப்2 ப்ரோ ஸ்மார்ட்போன் போக்கோ பிராண்டின் விலை உயர்ந்த மாடலாக இருக்கும் என கூறப்படுகிறது.
    ஹெச்டிசி நிறுவனத்தின் புதிய டிசையர் 20 ப்ரோ ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியிருக்கிறது.



    ஹெச்டிசி வைல்டுஃபயர் எக்ஸ் மற்றும் வைல்டுஃபயர் ஆர்70 ஸ்மார்ட்போன் மாடல்கள் கடந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன. 

    தற்சமயம் புதிய ஹெச்டிசி ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன. லீக் ஆன விவரங்களின் படி புதிய ஸ்மார்ட்போன் ஹெச்டிசி டிசையர் 20 ப்ரோ பெயரில் உருவாகி வருவது தெரியவந்துள்ளது.

    ஹெச்டிசி டிசையர் 20 ப்ரோ லீக் ரென்டர்

    மேலும் புதிய ஸ்மார்ட்போனில் பன்ச் ஹோல் ஸ்கிரீன், குவாட் கேமரா சென்சார்கள் மற்றும் பின்புறம் கைரேகை சென்சார் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. முன்னதாக HTC 2Q9J10000 மாடல் நம்பரில் பேமோ எனும் குறியீட்டு பெயரில் உருவாகும் ஹெச்டிசி ஸ்மார்ட்போன் விவரங்கள் கீக்பென்ச் தளத்தில் லீக் ஆகியிருந்தன.

    அந்த விவரங்களின் படி புதிய ஹெச்டிசி ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர், 6 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம், ஹெச்டி பிளஸ் ஸ்கிரீன் வழங்கப்படலாம் என கூறப்பட்டது. மேலும் புதிய ஹெச்டிசி ஸ்மார்ட்போன் பட்ஜெட் பிரிவில் அறிமுகம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.
    சியோமியின் ரெட்மி பிராண்டு டிமென்சிட்டி பிராசஸர்கள் கொண்ட ரெட்மி 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



    சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 9 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன்கள் கடந்த மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன. எனினும், இவை சீனாவில் அறிமுகம் செய்யப்படவில்லை. இந்நிலையில், சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 10 மற்றும் ரெட்மி நோட் 10 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்களை சீனாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

    சீன சந்தையில் 5ஜி ஸ்மார்ட்போன்களை மட்டும் வெளியிட சியோமி திட்டமிட்டிருப்பதால், இரு மாடல்களை வெளியிட இருக்கிறது. ரெட்மியின் இரு மாடல்களும் M2004J7AC மற்றும் M2004J7BC எனும் மாடல் நம்பர்களுடன் உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

    மேலும் இவற்றில் முறையே 22.5 வாட் மற்றும் 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் அடாப்டர் வழங்கப்படுகிறது. முன்னதாக இதே ஸ்மார்ட்போன்கள் 3சி சான்று பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இவை ரெட்மி நோட் 10 மற்றும் ரெட்மி நோட் 10 ப்ரோ பெயரில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.

    மீடியாடெக் டீசர்

    இதுதவிர மீடியாடெக் நிறுவனம் மே 7 ஆம் தேதி தனது புதிய டிமென்சிட்டி சிப்செட்டை அறிமுகம் செய்ய இருக்கிறது. இவை டிமென்சிட்டி 800 பிளஸ் பிராசஸராக இருக்கும் என கூறப்படுகிறது. இது அந்நிறுவனம் ஏற்கனவே வெளியிட்ட டிமென்சிட்டி 800 பிராசஸரின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும்.

    புதிய டிமென்சிட்டி 800 பிளஸ் 2.6 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் திறன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. முந்தைய டிமென்சிட்டி 800 பிராசஸர் 2 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்குகிறது. புதிய ரெட்மி நோட் 10 மற்றும் நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போன்களில் முறையே டிமென்சிட்டி 800 மற்றும் 800 பிளஸ் பிராசஸர்கள் வழங்கப்படலாம்.
    ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஒன்பிளஸ் இசட் 5ஜி ஸ்மார்ட்போனின் அறிமுக விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஒன்பிளஸ் 8 மற்றும் ஒன்பிளஸ் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்களை ஆன்லைன் நிகழ்வின் மூலம் சமீபத்தில் அறிமுகம் செய்தது. எனினும், இதன் லைட் வெர்ஷனான ஒன்பிளஸ் இசட் மாடல் பற்றி எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. 

    ஒன்பிளஸ் இசட் மாடல் ஒன்பிளஸ் 8 சீரிஸ் மாடல்களுடன் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஒன்பிளஸ் இசட் ஸ்மார்ட்போன் வரும் மாதங்களில் மற்றொரு நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்பட்டு இருக்கிறது.

    அதன்படி ஒன்பிளஸ் இசட் ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு ஜூலை மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. மேலும் ஸ்மார்ட்போனின் வரைபடங்களும் வெளியாகி இருக்கின்றன. இணையத்தில் வெளியாகி இருக்கும் வரைபடங்களின் படி ஒன்பிளஸ் இசட் ஸ்மார்ட்போனின் மத்தியில் பன்ச் ஹோல் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    ஒன்பிளஸ் இசட் 5ஜி ரென்டர்

    புதிய ஒன்பிளஸ் 8 சீரிஸ் மாடல்களில் பன்ச் ஹோல் இடது புறத்தில் வழங்கப்பட்டு இருந்தது. முந்தைய தகவல்களின் படி ஒன்பிளஸ் இசட் ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டிமென்சிட்டி 1000எல் 5ஜி சிப்செட் வழங்கப்படும் என கூறப்பட்டது. இந்த தகவல் உண்மையாகும் பட்சத்தில் மீடியாடெக் சிப்செட் கொண்ட முதல் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனாக ஒன்பிளஸ் இசட் இருக்கும் 

    மேலும் இந்த ஸ்மார்ட்போனில் ஃபிளாட் டிஸ்ப்ளே வழங்கப்படும் என கூறப்படுகிறது. ஸ்மார்ட்போனின் கீழ்புறத்தில் வளைந்த கிளாஸ் காணப்படும் என தெரிகிறது. ஒன்பிளஸ் 7 ப்ரோ மற்றும் ஒன்பிளஸ் 7 டி ப்ரோ மாடல்களை போன்று இந்த ஸ்மார்ட்போனில் வளைந்த டிஸ்ப்ளே வழங்கப்படாது என கூறப்படுகிறது. ஸ்மார்ட்போனின் ரென்டர்களின் படி அலெர்ட் ஸ்லைடர் பவர் பட்டன் வலது புறத்திற்கும், வால்யூம் ராக்கர்கள் இடதுபுறத்திலும் காணப்படுகிறது. 

    புகைப்படங்களை எடுக்க மூன்று பிரைமரி கேமரா சென்சார்கள் செவ்வக கேமரா பம்ப்பில் பொருத்தப்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் ஒன்பிளஸ் இசட் மாடலில் டைம் ஆஃப் ஃபிளைட் சென்சார் வழங்கப்படும் என தெரிகிறது. ஸ்மார்ட்போனின் கேமரா ரெசல்யூஷன் பற்றிய விவரங்கள் வெளியாகவில்லை.
    ஸ்னாப்டிராகன் 765 ஜி பிராசஸர், குவாட் கேமரா செட்டப் கொண்ட சியோமி எம்ஐ10 யூத் எடிஷன் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது.



    சியோமி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி தனது எம்ஐ 10 யூத் எடிஷன் 5ஜி ஸ்மார்ட்போனை சீன சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் 6.57 இன்ச் FHD+ AMOLED ஸ்கிரீன், HDR, இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், குவால்காம் ஸ்னாப்டிராகன் 765ஜி பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. 

    இதில் பில்ட் இன் 5ஜி வசதி, அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 48 எம்பி பிரைமரி கேமரா, 120° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 8 எம்பி 5x டெலிபோட்டோ லென்ஸ், OIS, 2 செமீ மேக்ரோ கேமரா, 16 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. கிளாஸ் பேக் கொண்டிருக்கும் எம்ஐ10 யூத் எடிஷன் 5ஜி மாடலில் 4160 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

    சியோமி எம்ஐ10 யூத் எடிஷன் 5ஜி

    சியோமி எம்ஐ10 யூத் எடிஷன் 5ஜி சிறப்பம்சங்கள்

    - 6.57 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+ AMOLED 20:9 டிஸ்ப்ளே, HDR 10+
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
    - ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 765ஜி பிராசஸர்
    - அட்ரினோ 620 GPU
    - 6 ஜிபி LPDDR4X ரேம், 64 ஜிபி / 128 ஜிபி (UFS 2.1) மெமரி
    - 8 ஜிபி LPDDR4X ரேம், 128 ஜிபி /  256 ஜிபி (UFS 2.1) மெமரி
    - ஆண்ட்ராய்டு 10 மற்றும் MIUI 11
    - டூயல் சிம்
    - 48 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், 0.8μm, f/1.79
    - 8 எம்பி 120° அல்ட்ரா வைடு சென்சார், f/2.2
    - 8 எம்பி டெலிபோட்டோ லென்ஸ், OIS
    - 2 செமீ மேக்ரோ கேமரா
    - 16 எம்பி செல்ஃபி கேமரா
    - இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார்
    - 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
    - 5ஜி SA/ NSA / டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    - யுஎஸ்பி டைப்-சி
    - 4160 எம்ஏஹெச் பேட்டரி
    - 22.5 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    சியோமி எம்ஐ10 யூத் எடிஷன் 5ஜி மாடல் டீப் கிரே, புளு-கிரீன் கிரேடியன்ட், ஆரஞ்சு, மில்க் கிரீன் மற்றும் பின்க்-வைட் கிரேடியன்ட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 2099 யுவான் (இந்திய மதிப்பில் ரூ. 22,630), டாப் எண்ட் மாடல் விலை 2799 யுவான் (இந்திய மதிப்பில் ரூ. 30,150) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    ×