search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ஹெச்டிசி லோகோ
    X
    ஹெச்டிசி லோகோ

    பன்ச் ஹோல் டிஸ்ப்ளே, நான்கு கேமராக்களுடன் உருவாகும் ஹெச்டிசி ஸ்மார்ட்போன்

    ஹெச்டிசி நிறுவனத்தின் புதிய டிசையர் 20 ப்ரோ ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியிருக்கிறது.



    ஹெச்டிசி வைல்டுஃபயர் எக்ஸ் மற்றும் வைல்டுஃபயர் ஆர்70 ஸ்மார்ட்போன் மாடல்கள் கடந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன. 

    தற்சமயம் புதிய ஹெச்டிசி ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன. லீக் ஆன விவரங்களின் படி புதிய ஸ்மார்ட்போன் ஹெச்டிசி டிசையர் 20 ப்ரோ பெயரில் உருவாகி வருவது தெரியவந்துள்ளது.

    ஹெச்டிசி டிசையர் 20 ப்ரோ லீக் ரென்டர்

    மேலும் புதிய ஸ்மார்ட்போனில் பன்ச் ஹோல் ஸ்கிரீன், குவாட் கேமரா சென்சார்கள் மற்றும் பின்புறம் கைரேகை சென்சார் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. முன்னதாக HTC 2Q9J10000 மாடல் நம்பரில் பேமோ எனும் குறியீட்டு பெயரில் உருவாகும் ஹெச்டிசி ஸ்மார்ட்போன் விவரங்கள் கீக்பென்ச் தளத்தில் லீக் ஆகியிருந்தன.

    அந்த விவரங்களின் படி புதிய ஹெச்டிசி ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர், 6 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம், ஹெச்டி பிளஸ் ஸ்கிரீன் வழங்கப்படலாம் என கூறப்பட்டது. மேலும் புதிய ஹெச்டிசி ஸ்மார்ட்போன் பட்ஜெட் பிரிவில் அறிமுகம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.
    Next Story
    ×