search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ஒன்பிளஸ் இசட் 5ஜி
    X
    ஒன்பிளஸ் இசட் 5ஜி

    ஒன்பிளஸ் இசட் 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரம்

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஒன்பிளஸ் இசட் 5ஜி ஸ்மார்ட்போனின் அறிமுக விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஒன்பிளஸ் 8 மற்றும் ஒன்பிளஸ் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்களை ஆன்லைன் நிகழ்வின் மூலம் சமீபத்தில் அறிமுகம் செய்தது. எனினும், இதன் லைட் வெர்ஷனான ஒன்பிளஸ் இசட் மாடல் பற்றி எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. 

    ஒன்பிளஸ் இசட் மாடல் ஒன்பிளஸ் 8 சீரிஸ் மாடல்களுடன் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஒன்பிளஸ் இசட் ஸ்மார்ட்போன் வரும் மாதங்களில் மற்றொரு நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்பட்டு இருக்கிறது.

    அதன்படி ஒன்பிளஸ் இசட் ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு ஜூலை மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. மேலும் ஸ்மார்ட்போனின் வரைபடங்களும் வெளியாகி இருக்கின்றன. இணையத்தில் வெளியாகி இருக்கும் வரைபடங்களின் படி ஒன்பிளஸ் இசட் ஸ்மார்ட்போனின் மத்தியில் பன்ச் ஹோல் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    ஒன்பிளஸ் இசட் 5ஜி ரென்டர்

    புதிய ஒன்பிளஸ் 8 சீரிஸ் மாடல்களில் பன்ச் ஹோல் இடது புறத்தில் வழங்கப்பட்டு இருந்தது. முந்தைய தகவல்களின் படி ஒன்பிளஸ் இசட் ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டிமென்சிட்டி 1000எல் 5ஜி சிப்செட் வழங்கப்படும் என கூறப்பட்டது. இந்த தகவல் உண்மையாகும் பட்சத்தில் மீடியாடெக் சிப்செட் கொண்ட முதல் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனாக ஒன்பிளஸ் இசட் இருக்கும் 

    மேலும் இந்த ஸ்மார்ட்போனில் ஃபிளாட் டிஸ்ப்ளே வழங்கப்படும் என கூறப்படுகிறது. ஸ்மார்ட்போனின் கீழ்புறத்தில் வளைந்த கிளாஸ் காணப்படும் என தெரிகிறது. ஒன்பிளஸ் 7 ப்ரோ மற்றும் ஒன்பிளஸ் 7 டி ப்ரோ மாடல்களை போன்று இந்த ஸ்மார்ட்போனில் வளைந்த டிஸ்ப்ளே வழங்கப்படாது என கூறப்படுகிறது. ஸ்மார்ட்போனின் ரென்டர்களின் படி அலெர்ட் ஸ்லைடர் பவர் பட்டன் வலது புறத்திற்கும், வால்யூம் ராக்கர்கள் இடதுபுறத்திலும் காணப்படுகிறது. 

    புகைப்படங்களை எடுக்க மூன்று பிரைமரி கேமரா சென்சார்கள் செவ்வக கேமரா பம்ப்பில் பொருத்தப்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் ஒன்பிளஸ் இசட் மாடலில் டைம் ஆஃப் ஃபிளைட் சென்சார் வழங்கப்படும் என தெரிகிறது. ஸ்மார்ட்போனின் கேமரா ரெசல்யூஷன் பற்றிய விவரங்கள் வெளியாகவில்லை.
    Next Story
    ×