என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ஆப்பிள் மேக்புக் ப்ரோ
    X
    ஆப்பிள் மேக்புக் ப்ரோ

    சக்திவாய்ந்த பிராசஸருடன் மேம்பட்ட மேக்புக் ப்ரோ இந்தியாவில் அறிமுகம்

    ஆப்பிள் நிறுவனம் தனது 13 இன்ச் மேக்புக் ப்ரோ மாடல்களை அப்டேட் செய்து சக்திவாய்ந்த பிராசஸர்களை வழங்கி உள்ளது.



    ஆப்பிள் நிறுவனத்தின் 13 இன்ச் மேக்புக் ப்ரோ மாடல் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. புதிய 2020 மேக்புக் ப்ரோ மாடலில் மேஜிக் கீபோர்டு, 10 ஆம் தலைமுறை இன்டெல் கோர் பிராசஸர் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    புதிய 13 இன்ச் மேக்புக் ப்ரோ 2000 ஜிபி எஸ்எஸ்டி வரை கான்ஃபிகர் செய்ய முடியும். இதன் பேஸ் வேரியண்ட் 256 ஜிபி எஸ்எஸ்டியுடன் கிடைக்கிறது. என்ட்ரி லெவல் மாடல்களில் 8-ம் தலைமுறை இன்டெல் கோர் ஐ5 பிராசஸரும், டாப் எண்ட் மாடலில் முற்றிலும் புதிய 10 ஆம் தலைமுறை இன்டெல் கோர் ஐ5 பிராசஸர் வழங்கப்படுகிறது.

    ஆப்பிள் மேக்புக் ப்ரோ

    இவற்றுடன்  32GB 3733MHz LPDDR4X  ரேம் வழங்கப்படுகிறது. இத்தகைய அம்சம் கொண்ட முதல் 13 இன்ச் மேக் நோட்புக் மாடலாக இது இருக்கிறது. இதுதவிர புதிய மாடலில் பட்டர்ஃபிளை கீபோர்டுக்கு மாற்றாக மேஜிக் கீபோர்டு வழங்கப்பட்டுள்ளது. டச் பார் மற்றும் டச் ஐடி வசதியுடன் எஸ்கேப் பட்டனும் வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் ரெட்டினா டிஸ்ப்ளே, ட்ரூ டோன் தொழில்நுட்பம், ஆப்பிள் டி2 செக்யூரிட்டி சிப் மற்றும் மேக் ஒஎஸ் கேட்டலினா இயங்குதளம் கொண்டுள்ளது. 

    இந்தியாவில் 13 இன்ச் மேக்புக் ப்ரோ 8 ஜிபி + 256 ஜிபி மாடல் ரூ. 1,22,990 என்றும் 16 ஜிபி + 1000 ஜிபி மாடல் விலை ரூ. 1,94,900 என விலை  நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    Next Story
    ×