search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    சியோமி 100வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
    X
    சியோமி 100வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    சியோமி 100 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரம்

    சியோமி நிறுவனத்தின் அதிநவீன 100 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் கொண்ட புதிய ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.

    சியோமி நிறுவனம் 100 வாட் சூப்பர் சார்ஜ் டர்போ வையர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது. இந்த தொழில்நுட்பம் இந்த ஆண்டு அறிமுகமாக இருக்கும் புதிய ஸ்மார்ட்போனில் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

    புதிய 100 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் முதல் ஸ்மார்ட்போன் பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. சியோமியின் 100 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரியை வெறும் 17 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்துவிடும். 
     சியோமி 100வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
    இத்தனை திறன் கொண்ட தொழில்நுட்பத்தை ஸ்னாப்டிராகன் 875 பிராசஸர் சீராக இயக்கும் திறன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில் புதிய தொழில்நுட்பம் கொண்டு வெளியாகும் ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 875 பிராசஸர் கொண்டிருக்கும் என உறுதியாகி இருக்கிறது. 

    சியோமி தவிர விவோ நிறுவனம் ஏற்கனவே 120 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்தது. இந்த தொழில்நுட்பம் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரியை வெறும் 13 நிமிடங்களில் சார்ஜ் செய்யும் திறன் கொண்டது என தெரிவிக்கப்பட்டது.
    Next Story
    ×