search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ரியல்மி 6ஐ
    X
    ரியல்மி 6ஐ

    ரூ. 15 ஆயிரம் பட்ஜெட்டில் விரைவில் இந்தியா வரும் ரியல்மி ஸ்மார்ட்போன்

    ரியல்மி பிராண்டின் புதிய ரியல்மி 6ஐ ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாக இருக்கிறது.

    ரியல்மி பிராண்டு இந்தியாவில் புதிய ரியல்மி சி11 ஸ்மார்ட்போனினை ஜூலை 14 ஆம் தேதி அறிமுகமாகி இருக்கிறது. தற்சமயம் ரியல்மி 6ஐ ஸ்மார்ட்போனிற்கான டீசர் ப்ளிப்கார்ட் தளத்தில் வெளியாகி இருக்கிறது. புதிய ரியல்மி 6ஐ ஸ்மார்ட்போன் ஜூலை 14 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

    ப்ளிப்கார்ட் வலைதளத்தில் டீசரின் படி ரியல்மி 6ஐ ஸ்மார்ட்போன் புகைப்படம் மற்றும் ரியல்மி 6ஐ ரூ.15 ஆயிரம் பட்ஜெட்டில் ப்ளிப்கார்ட்டில் கிடைக்கும் சக்திவாய்ந்த மிட்ரேன்ஜ் ஸ்மார்ட்போன் எனும் வாசகம் இடம்பெற்று இருக்கிறது. 

    புதிய ரியல்மி 6ஐ ஸ்மார்ட்போன் ஜூலை 14 ஆம் தேதி மதியம் 1 மணிக்கு அறிமுகம் செய்யப்படுகிறது. புதிய ரியல்மி 6ஐ ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி90டி பிராசஸர், 90 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. ரியல்மி 6ஐ ஸ்மார்ட்போன் முன்னதாக ஐரோப்பிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட ரியல்மி 6எஸ் மாடலின் மேம்பட்ட வெர்ஷன் என கூறப்படுகிறது.

    இந்தியாவில் ரியல்மி 6 ஸ்மார்ட்போனின் துவக்க விலை ரூ. 14999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. அந்த  வகையில் புதிய ரியல்மி 6ஐ ஸ்மார்ட்போனின் விலை ரூ. 13999 என நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

     ரியல்மி 6ஐ டீசர்

    ரியல்மி 6ஐ எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்

    - 6.5 இன்ச் 2400 ×1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன்
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
    - ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி90டி பிராசஸர்
    - 800MHz மாலி-G76 3EEMC4 GPU
    - 4 ஜிபி LPPDDR4x ரேம்
    - 64 ஜிபி (UFS 2.1) மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம் ஸ்லாட் 
    - ஆண்ட்ராய்டு 10 மற்றும் ரியல்மி யுஐ
    - 48 எம்பி பிரைமரி கேமரா, 0.8μm, எல்இடி ஃபிளாஷ், EIS
    - 8 எம்பி 119° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.3
    - 2 எம்பி மோனோ சென்சார்
    - 2 எம்பி 4cm மேக்ரோ சென்சார், f/2.4
    - 16 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
    - பக்கவாட்டில் கைரேகை சென்சார்
    - 3.5 எம்எம் ஆடியோ ஜாக், டால்பி அட்மோஸ், எஃப்எம் ரேடியோ
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    - யுஎஸ்பி டைப்-சி
    - 4300 எம்ஏஹெச் பேட்டரி
    - 30 வாட் ஃபிளாஷ் சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங்

    Next Story
    ×