search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    சியோமி ஸ்மார்ட்போன்
    X
    சியோமி ஸ்மார்ட்போன்

    120 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட சியோமி 5ஜி ஸ்மார்ட்போன்

    சியோமி நிறுவனத்தின் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.
     

    சியோமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் M2007J1SC எனும் மாடல் நம்பருடன் 3சி சான்று பெற்று இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனுடன் 120 வாட் சார்ஜர் வழங்கப்படுகிறது. 

    இது 100 வாட் சூப்பர் சார்ஜ் டர்போவைவிட அதிவேகமானது ஆகும். இந்த தொழில்நுட்பத்தை சியோமி நிறுவனம் கடந்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்தது. எனினும், இந்த தொழில்நுட்பம் எந்த ஸ்மார்ட்போனிலும் வழங்கப்படவில்லை. 

    சியோமி சார்ஜர் விவரங்கள் ஸ்கிரீன்ஷாட்

    அந்த வகையில் தற்சமயம் சியோமி 120 வாட் சார்ஜர் MDY-12-ED எனும் மாடல் நம்பருடன் இம்மாத துவக்கத்தில் சான்று பெற்று இருந்தது. சியோமியின் 120 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட புதிய 5ஜி ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

    முன்னதாக ஐகூ பிராண்டு தனது 120 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை இந்த வார துவக்கத்தில் அறிமுகம் செய்தது. இந்த தொழில்நுட்பம் டூயல் சார்ஜிங் சிப்செட்களை பயன்படுத்துகிறது. இதன் 120வாட் இரண்டு 60 வாட்களாக இரட்டை சிப்கள் வழங்கப்பட்டுள்ளது. இவை சார்ஜிங்கின் போது அதிக சூடாவதை தவிர்க்க செய்கிறது. 

    120 வாட் அல்ட்ரா ஃபிளாஷ் சார்ஜிங் கொண்ட ஸ்மார்ட்போன் 6சி செல் அரே-டைப் வடிவமைப்பு கொண்டுள்ளது. இது 4000 எம்ஏஹெச் பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போனை 15 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்துவிடும்.

    Next Story
    ×