search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    மோட்டோரோலா ரேசர்
    X
    மோட்டோரோலா ரேசர்

    ஸ்னாப்டிராகன் 765, 5ஜி கனெக்டிவிட்டியுடன் உருவாகும் மோட்டோ ரேசர் 2

    மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய ரேசர் 2 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.

    மோட்டோரோலா நிறுவனத்தின் 2020 ரேசர் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது. ஒடிசி எனும் குறியீட்டு பெயரில் உருவாகி இருக்கும் மோட்டோ ரேசர் 2 தோற்றத்தில் முந்தைய மாடல் போன்றே காட்சியளிக்கிறது.

    மோட்டோரோலாவின் முதல் தலைமுறை மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடலான ரேசர் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. வடிவமைப்பில் கோளாறுகள் நிறைந்து இருந்ததே இதற்கு காரணமாக கூறப்பட்டது. இந்நிலையில், இதே வடிவமைப்பில் மாற்றங்கள் செய்து புதிய ரேசர் 2 மாடலை வெளியிட மோட்டோரோலா திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

     மோட்டோரோலா ரேசர் 2 ரென்டர்

    புதிய மோட்டோரோலா ரேசர் மாடல் எக்ஸ்டி2071-4 எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. மேலும் இதில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 765 பிராசஸர், 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, 2845 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் ஸ்னாப்டிராகன் எக்ஸ்52 மோடெம் மூலம் 5ஜி கனெக்டிவிட்டி வழங்கப்படுகிறது.

    முந்தைய மாடலின் கேமரா சிறப்பானதாக இல்லை என குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில், புதிய ரேசர் 2 மாடலில் 48 எம்பி பிரைமரி கேமரா, 20 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10 ஒஸ் வழங்கப்படும் என்றும் முந்தைய மாடலில் உள்ளதை போன்றே குவிக் வியூ டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது.
    Next Story
    ×