என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    ஆப்பிள் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஐபோன்களில் எல்ஜி நிறுவன டிஸ்ப்ளேக்களை ஆப்பிள் பயன்படுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னதாக சாம்சங் நிறுவன டிஸ்ப்ளேக்களை ஆப்பிள் பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
    சான்பிரான்சிஸ்கோ:

    சாம்சங் கேலக்ஸி X மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை 2018-ம் ஆண்டில் வெளியிட சாம்சங் தயாராக வருகிறது. இதேபோல் ஆப்பிள் நிறுவனமும் தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை உருவாக்குவதற்கான பணிகளை துவங்கியுள்ளதாக கூறப்படுகிறது. மடிக்கக்கூடிய ஐபோன்களில் எல்ஜி நிறுவன டிஸ்ப்ளேக்களை பயன்படுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    ஆப்பிள் நிறுவனத்தின் நேரடி போட்டியாளராக இருக்கும் சாம்சங் நிறுவனத்திடம் டிஸ்ப்ளேக்களை பெற்றால் சிறப்பம்சங்கள் சார்ந்த தகவல்கள் அம்பலமாக வாய்ப்புகள் இருப்பதால் ஆப்பிள் நிறுவனம் எல்ஜி-யுடன் ஒப்பந்தமிட இருப்பதாக தென் கொரியாவில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    மேலும் புதிய ஐபோன்களில் பயன்படுத்துவதற்கென மடிக்கக்கூடிய OLED ஸ்கிரீன்களை எல்ஜி டிஸ்ப்ளே தயாரிக்க துவங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மடிக்கக்கூடிய ஐபோன் பேனல் தயாரிப்பு பணிகள் 2020-ம் ஆண்டு முதல் துவங்கும் என்றும் இதற்கான ப்ரோடோடைப் எல்ஜி நிறுவனம் ஏற்கனவே தயாரித்துள்ளதாக கூறப்படுகிறது.



    அந்தவகையில் எல்ஜி OLED பேனல்களின் தயாரிப்பை அதிகப்படுத்த ஆப்பிள் நிறுவனம் எல்ஜி நிறுவனத்தில் முதலீடு செய்ய இருப்பது குறித்த ஆலோசனைகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் X சாதனத்திற்கு சாம்சங் நிறுவனம் பிரத்தியேகமாக பேனல்களை விநியோகம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

    OLED தயாரிப்புகளில் சாம்சங் நிறுவனம் மும்முரமாக ஈடுபட்டு வருதை தொடர்ந்து ஆப்பிள் நிறுவனம் எல்ஜி நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை பலப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. ஆப்பிள் நிறுவனத்திற்கு எல்சிடி பேனல்களை வழங்குவதில் ஆப்பிள் மற்றும் எல்ஜி நிறுவனங்களிடையே நீண்ட கால ஒப்பந்தம் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

    டிஸ்ப்ளே பேனல்களை பொருத்த வரை 2017-ம் ஆண்டு வாக்கில் சாம்சங் நிறுவனம் 89 சதவிகித AMOLEDக்களை கொண்டிருக்கும் என UBI ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்சமயம் ஐபோன் X, சாம்சங் கேலக்ஸி S8, சாம்சங் கேலக்ஸி S8 பிளஸ், சாம்சங் கேலக்ஸி நோட் 8, ஒன்பிளஸ் 5, எல்ஜி V30 மற்றும் விவோ X9s உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களில் OLED ஸ்கிரீன்கள் வழங்கப்பட்டுள்ளன.
    ஹூவாய் ஹானர் பிரான்டு கடந்த ஆண்டு அறிமுகம் செய்த 6X ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட ஹானர் 7X ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
    பீஜிங்:

    ஹானர் 7X ஸ்மார்ட்போன் சீனாவில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போன் ஹானர் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த 6X ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன் ஆகும். புதிய ஸ்மார்ட்போன் 18:9 டிஸ்ப்ளே மற்றும் மூன்று வித மாடல்களில் வெளியிடப்பட்டுள்ளது.

    ஹானர் 7X ஸ்மார்ட்போனின் 32 ஜிபி மாடல் CNY 1299 அதாவது இந்திய இந்திய மதிப்பில் ரூ.12,890, 64 ஜிபி CNY1,699 அதாவது இந்திய மதிப்பில் ரூ.16,850 மற்றும் 128 ஜிபி CNY 1999 அதாவது இந்திய மதிப்பில் ரூ.19,820 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அரோரா பிளாக், கோல்டு மற்றும் பிளாக் நிறங்களில் கிடைக்கும் ஹானர் 7X விற்பனை சீனாவில் அக்டோபர் 17-ம் தேதி துவங்குகிறது.



    ஹானர் 7X சிறப்பம்சங்கள்:

    - 5.93 இன்ச் ஃபுல் எச்டி, 1080x2160 பிக்சல் வளைந்த டிஸ்ப்ளே
    - ஆக்டாகோர் ஹைசிலிகான் கிரின் 3659 பிராசஸர்
    - 4 ஜிபி ரேம்
    - 32 / 64 / 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 16 எம்பி + 16 எம்பி பிரைமரி கேமரா
    - 8 எம்பி செல்ஃபி கேமரா
    - 3340 எம்ஏஎச் பேட்டரி
     
    முழுமையான மெட்டல் வடிவைப்பு கொண்ட புதிய ஹானர் 7X ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் சார்ந்த EMUI 5.1 இயங்குதளம் கொண்டு இயங்குகிறது. இத்துடன் பின்புறம் கைரேகை ஸ்கேனர் அம்சமும் வழங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சீனாவில் அறிவிக்கப்பட்டுள்ள ஹானர் 7X ஸ்மார்ட்போன் மற்ற சந்தைகளில் விற்பனைக்கு வருவது சார்ந்து எவ்வித தகவலும் இல்லை.
    தமிழ்நாடு சுகாதார துறையின் டெங்கு ஃபீவர் தமிழ் எனும் செயலி, பொது மக்களுக்கு டெங்கு குறித்த அனைத்து சந்தேகங்கள் மற்றும் விழிப்புணர்வு சார்ந்த தகவல்களை வழங்குகிறது.
    புதுடெல்லி:

    தமிழகத்தில் நாளுக்கு நாள் டெங்கு பாதிப்பில் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள தனியார் அமைப்புகள், பொதுநல தொண்டு இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சியினர் தங்கள் சார்பில் டெங்கு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்களில் ஈடுப்பட்டு வருகின்றன.

    டெங்கு பாதிப்பு வேகமாக பரவி வரும் நிலையில், தமிழக சுகாதாரத் துறை சார்பில் கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட டெங்கு ஃபீவர் தமிழ் ஆண்ட்ராய்டு செயலியை பற்றியும் அறிந்து கொள்ளும் அவசியம் ஏற்பட்டுள்ளது. தமிழக சுகாதார துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த செயலியில் டெங்கு குறித்து அனைத்து தகவல்களும் இடம்பெற்றுள்ளன.



    அனைவரும் பயன்படுத்தும் வகையில் முழுக்க முழுக்க தமிழில் காணப்படும் இந்த செயலியில் டெங்கு உற்பத்தியாகும் இடங்கள், கேள்வி பதில், சித்த மருத்துவம், தகவல் மற்றும் உதவி, ஆடியோ மற்றும் குறும்படம் என ஆறு ஆப்ஷன்கள் இடம்பெற்றுள்ளன.

    டெங்கு சார்ந்த அனைத்து தகவல்களையும் அனைவருக்கும் புரியும் படியான வரைபடங்கள், எழுத்து வடிவில் எளிய நடையில் முழு தகவல்கள், சித்த மருத்துவ குறிப்புகள், அனைவருக்கும் எழும் டெங்கு சார்ந்த சந்தேகங்களுக்கான விடை, ஆடியோ மற்றும் வீடியோ வடிவில் விளக்க குறும்படங்கள் உள்ளிட்டவை இதில் இடம்பெற்றுள்ளன.

    டெங்கு ஃபீவர் தமிழ் செயலி கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக கிடைக்கிறது.
    இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சியோமி Mi மிக்ஸ் 2 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள், விலை மற்றும் விற்பனை சார்ந்த தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    சியோமி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 2 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 5.99 இன்ச் 18:9 ஃபுல் எச்டி டிஸ்ப்ளே, ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 835 பிராசஸர், 6 ஜிபி ரேம் மற்றும் 12 எம்பி பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது. முன்பக்கம் அழகிய செல்ஃபி மற்றும் முக அங்கீகார வசதி (face recognition) வழங்கும் 5 எம்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

    முற்றிலும் செராமிக் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளதோடு அல்ட்ராசோனிக் பிராக்சிமிட்டி சென்சார் முன்பக்கம் மறைக்கப்பட்டுள்ளது. இத்துடன் சவுண்டு கைடெட் ஸ்பீக்கர் மர்றும் 50 மெகாவாட் திறன் கொண்ட ஸ்பீக்கர் வழங்கப்பட்டுள்ளது. இது தலைச்சிறந்த மற்றும் துல்லியமான ஆடியோ அனுபவத்தை வழங்கும்.



    சியோமி Mi மிக்ஸ் 2 சிறப்பம்சங்கள்:

    - 5.99 இன்ச் டிஸ்ப்ளே, 18:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ
    - 10nm ஸ்னாப்டிராகன் 835 பிராசஸர்
    - அட்ரினோ 540 GPU
    - 6 ஜிபி ரேம்
    - 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - 12 எம்பி சோனி IMX386 பிரைமரி கேமரா
    - 5 எம்பி செல்ஃபி கேமரா
    - கைரேகை ஸ்கேனர்
    - 4ஜி எல்டிஇ, வைபை, ப்ளூடூத்
    - 3400 எம்ஏஎச் பேட்டரி, குவால்காம் குவிக் சார்ஜ் 3.0

    இந்தியாவில் சியோமி Mi மிகஸ் 2 ஸ்மார்ட்போனின் விலை ரூ.35,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பிளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்பட இருக்கும் Mi மிக்ஸ் 2 அக்டோபர் 17-ம் தேதி முதல் விற்பனை துவங்குகிறது. இதைத் தொடர்ந்து நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் பிளிப்கார்ட், Mi.com  மற்றும் சியோமி ஆஃப்லைன் விற்பனை தளங்களில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
    ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் வெளியானதைத் தொடர்ந்து அந்நிறுவனம் நேரடியாக ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனினை வெளியிடப்போவதாக தகவல்கள் வெளியாகின.
    புதுடெல்லி:

    இந்தியாவில் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வரும் ஒன்பிளஸ் நிறுவனம், இந்த ஆண்டு நேரடியாக ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனினை வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தது. இந்நிலையில் ஒன்பிளஸ் 3T போன்றே ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போனும் வெளியாகலாம் என கூறப்படுகிறது.

    புதிய ஒன்பிளஸ் 5T நவம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. ஒன்பிளஸ் 3T ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் 3 வெளியாகி ஐந்து மாதம் கழித்து வெளியிடப்பட்டதை போன்று ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் வெளியாகி ஐந்து மாதங்களுக்கு பின் வெளியாகும் என கிஸ்மோசீனா தெரிவித்துள்ளது.

    முன்னதாக ஒன்பிளஸ் வெளியிட்ட 3T ஸ்மார்ட்போனில் அதிகப்படியான மாற்றங்கள் மேற்கொள்ளப்படவில்லை. ஒன்பிளஸ் 3 ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்ட ஸனாப்டிராகன் 821 பிராசஸரிற்கு மாற்றாக ஸ்னாப்டிராகன் 820 பிராசஸர் வழங்கப்பட்டது. எனினும் புதிய ஒன்பிளஸ் 5 மற்றும் ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போன்களில் அதிகப்படியான மாற்றங்கள் மேற்கொள்ளப்படலாம் என கூறப்படுகிறது.



    தற்சமயம் வெளியாகியுள்ள தகவல்களின் படி புதிய ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போனில் 6.0 இன்ச் ஃபுல் எச்டி 1080x2160 பிக்சல் டிஸ்ப்ளே, 18:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ வழங்கப்படும் என கூறப்படுகிறது. ஒன்பிளஸ் 5 ஸ்மார்ட்போனில் 5.5 இன்ச் ஃபுல் எச்டி 1080x1920 பிக்சல் டிஸ்ப்ளே வழங்கப்பட்டது.

    இத்துடன் புதிய ஸ்மார்ட்போனில் மெல்லிய பெசல்கள், வளைந்த எட்ஜஸ் உள்ளிட்டவை கொண்டிருக்கும் என கூறப்படுவதால் பார்க்க சாம்சங் கேலக்ஸி S8 போன்றே காட்சியளிக்கலாம். சமீபத்தில் கசிந்த ஒப்போ F5 இதே போன்ற வடிவமைப்பை கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்தியாவில் ஒன்பிளஸ் 5 சாதனங்களின் விற்பனையில் நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது. இதே போன்று லண்டனிலும் ஒன்பிளஸ் 5 ஸ்டாக் விற்று தீர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து ஒன்பிளஸ் புதிய சாதனத்தை வெளியிடலாம் என்றும் கூறப்படுகிறது.

    புகைப்படம்: கிஸ்மோசைனா

    ஹூவாய் நிறுவனத்தின் மேட் 10 ப்ரோ ஸ்மார்ட்போனின் லைவ் புகைப்படம் இணையத்தில் கசிந்துள்ளது. ஹூவாய் மேட் 10 ப்ரோ சார்ந்து தற்சமயம் வெளியாகியுள்ள தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    ஹூவாய் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் மேட் 10 ப்ரோ ஸ்மார்ட்போனின் லைவ் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளது. இத்துடன் புதிய ஸ்மார்ட்போனின் பேட்டரி திறன் டீசரில் வெளியாகியுள்ளது. புதிய ஹூவாய் மேட் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் அக்டோபர் 16-ம் தேதி நடைபெற இருக்கும் விழாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஹூவாய் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட டீசரில் 4000 எம்ஏஎச் பேட்டரி வழங்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஹூவாய் டீசரில், ஒற்றை சார்ஜ் செய்து நாள் முழுக்க பேக்கப் வழங்கும் பேட்டரி பெறும் அனுபவம் சிறப்பானது என குறிப்பிட்டுள்ளது.  

    புதிய லைவ் புகைப்படங்களும் முன்னதாக வெளியான புகைப்படங்களும் மேட் 10 ப்ரோ ஸ்மார்ட்போனில் 18:9 ஆப்ஸெக்ட் ரேஷியோ மற்றும் டூயல் பிரைமரி கேமரா கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. முன்னதாக வெளியான தகவல்களிலும் மேட் 10 ப்ரோ ஸ்மார்ட்போனில் டூயல் பிரைமரி கேமரா வழங்கப்படும் என கூறப்பட்டது.



    புதிய ஸ்மார்ட்போனில் பெரும்பாலும் f/1.6 அப்ரேச்சர் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதே அளவு அப்ரேச்சர் சமீபத்தில் எல்ஜி அறிமுகம் செய்த V30 ஸ்மார்ட்போனிலும் வழங்கப்பட்டது. வெய்போ தளத்தில் கசிந்துள்ள புதிய புகைப்படங்கள் ஹூவாய் வெளியிட்ட டீசருக்கு முன் பதிவிடப்பட்டுள்ளது. இதன் பின்புற பேனலில் கிளாஸ் பேக் பேனல் கொண்டிருக்கும் என்றும் முந்தைய மேட் சீரிஸ் போன்களை போன்றே புதிய மாடலிலும் லெய்கா லென்ஸ் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    தற்சமயம் வெய்போவில் கசிந்துள்ள புகைப்படங்கள் ஸ்மார்ட்போனில் மேப் ஆன் செய்யப்பட்டிருக்கும் போது எடுக்கப்பட்டுள்ளதை வெளிப்படுத்துகிறது. இதுவரை வெளியாகியுள்ள மொத்த தகவல்களின் படி புதிய ஹூவாய் மேட் 10 ப்ரோ ஸ்மார்ட்போனில் QHD 1440x2880 பிக்சல் டிஸ்ப்ளே, 18:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 5.99 இன்ச் ஸ்கிரீன் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    மெமரியை பொருத்த வரை 6 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி, 6 ஜிபி ரேம், 128 ஜிபி இன்டெர்னல் மெமரி, 6 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம், 156 ஜிபி இன்டெர்னல் மெமரி என நான்கு மாடல்களில் வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது.
    சாம்சங் நிறுவனம் விரைவில் வெளியிட இருப்பதாக கூறப்படும் கேலக்ஸி A7 (2018) மற்றும் A5 (2018) ஸ்மார்ட்போன்களில் இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே மற்றும் பிக்ஸ்பி வசதி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
    புதுடெல்லி:

    சாம்சங் கேல்க்ஸி A-சீரிஸ் (2018) ஸ்மார்ட்போன்கள் சார்ந்து பல்வேறு தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. அடுத்த ஆண்டின் துவக்கத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்சமயம் வெளியாகியுள்ள தகவல்களில் புதிய ஸ்மார்ட்போன்களில் இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    புதிய ரென்டர்களில் கேலக்ஸி A5 (2018) மற்றும் கேலக்ஸி A7 (2018) ஸ்மார்ட்போன்கள் மிகவும் அழகாக காட்சியளிக்கிறது. கிஸ்மோசைனா மூலம் வெளியாகியுள்ள புகைப்படங்களில் இரண்டு சாதனங்களும் பிரீமியம் வடிவமைப்பு கொண்டிருக்கிறது. சாம்சங் S-சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கு பிரீமியம் அம்சங்களை வழங்கப்பட்டு வருகிறது. புதிய ஸ்மார்ட்போன்களுக்கு இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே மற்றும் பிக்ஸ்பி வாய்ஸ் அசிஸ்டண்ட் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.



    சாம்சங் பிக்ஸ்பி வாய்ஸ் அசிஸ்டண்ட் முதன் முதலாக இந்த ஆண்டு வெளியான கேலக்ஸி S8 மற்றும் S8 பிளஸ் ஸ்மார்ட்போன்களில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய கேலக்ஸி ஸ்மார்ட்போன்களில் பிக்ஸ்பி பட்டன்கள் வழங்கப்ட்டிருப்பது புதிய ரென்டர்களில் தெரியவந்துள்ளது. பிக்ஸ்பி பட்டன் வால்யூம் பட்டன்களுக்கு கீன் பொறுத்தப்பட்டுள்ளது.

    2017 கேலக்ஸி A3 ஸ்மார்ட்போனில் 4.7-இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்பட்ட நிலையில், புதிய ஸ்மார்ட்போனில் இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. கேலக்ஸி A5 மற்றும் A7 (2018) மாடல்களில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட், 4 ஜிபி மற்றும் 6 ஜிபி ரேம் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இந்த ஸ்மார்ட்போன் சார்ந்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.
    பிளாக்பெரி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் சார்ந்த தகவல்களை எவான் பிளாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதன்படி தற்சமயம் வெளியாகியுள்ள தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    உலக ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங், ஆப்பிள் மற்றும் இதர சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு போட்டியளிக்கும் வதிகமாக பிளாக்பெரி பல்வேறு புதிய முடிவுகளை எடுத்து வருகிறது. முன்னதாக ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போனை தொடர்ந்து இம்முறை முழுமையான டச் ஸ்கிரீன் கொண்ட ஸ்மார்ட்போனினை வெளியிட இருக்கிறது.

    ஸ்மார்ட்போன் சார்ந்த தகவல்களை முன்கூட்டியே வழங்குவதில் பிரபலமானவரான எவான் பிளாஸ் தனது டுவிட்டரில் புதிய பிளாக்பெரி ஸ்மார்ட்போன் சார்ந்த தகவல்களை வெளியிட்டுள்ளார். அதன்படி புதிய பிளாக்பெரி ஸ்மார்ட்போன் பிளாக்பெரி 'மோஷன்' என அழைக்கப்படலாம் என கூறப்படுகிறது.

    முன்னதாக வெளியான தகவல்களில் பிளாக்பெரி நிறுவனம் கிரிப்டான் என்ற ஸ்மார்ட்போனினை தயாரித்து வருவதாக கூறப்பட்டது. தற்சமயம் வரை புதிய ஸ்மார்ட்போன் கிரிப்டான் என்று அழைக்கப்படுமா அல்லது மோஷன் என அழைக்கப்படுமா என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இல்லாத நிலையில், இதன் சிறப்பம்சங்கள் கசிந்துள்ளது.



    அதன்படி புதிய பிளாக்பெரி ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 625 அல்லது 626 சிப்செட் மற்றும் 4 ஜிபி ரேம் வழங்கப்படும் என்றும் இந்த ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வரலாம் என்றும் கூறப்படுகிறது.

    இம்முறை வெளியாகியுள்ள புகைப்படங்களில் புதிய பிளாக்பெரி ஸ்மார்ட்போனின் முன்பக்கம் பெசல்கள் மற்றும் ஹோம் பட்டன் இடம்பெற்றுள்ளது தெளிவாக தெரிகிறது. இத்துடன் பிளாக்பெரி லோகோ மற்றும் ஹோம் பட்டனுடன் கைரேகை ஸ்கேனர் பொறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்கவாட்டுகளில் வால்யூம், பவர் பட்டன் மற்றும் கன்வீனியனஸ் பட்டன் உள்ளிட்டவை வழங்கப்படும் என கூறப்படுகிறது.  

    புதிய பிளாக்பெரி ஸ்மார்ட்போனில் 4000 எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படும் என்றும் டூயல் கேமரா அமைப்பு மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் அக்டோபர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டு அதன்பின் விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது.
    கூகுள் நிறுவனத்தின் ஹார்டுவேர் அறிமுக விழா அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்றது. இவ்விழாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பிக்சல் 2 ஸ்மார்ட்போன்களுடன் பல்வேறு இதர சாதனங்களும் அறிமுகம் செய்யப்பட்டன.
    சான்பிரான்சிஸ்கோ:

    அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற கூகுள் ஹார்டுவேர் விழாவில் கூகுள் நிறுவனம் ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள், செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட கேமரா, பிக்சல் ஸ்மார்ட்போன்கள் என பல்வேறு சாதனங்களை அறிமுகம் செய்தது.

    மெஷின் லெர்னிங் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் கூகுள் விழாவில் அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டிருந்தன. கூகுளின் ஹார்டுவேர் விழாவில் பிக்சல் 2 ஸ்மார்ட்போன்களுடன் அறிமுகமான மற்ற சாதனங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    கூகுள் பிக்சல் 2 & பிக்சல் 2 XL ஸ்மார்ட்போன்:

    கூகுள் விழாவின் முக்கிய சாதனங்களாக பிக்சல் 2 மற்றும் பிக்சல் 2 XL ஸ்மார்ட்போன்கள் இருந்தது. அதிகப்படியான புதிய அம்சங்கள் கொண்டுள்ள புதிய ஸ்மார்ட்போன்கள் முதற்கட்ட விற்பனை நடைபெறும் நாடுகளில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது. இந்தியாவில் புதிய பிக்சல் 2 விலை ரூ.61,000 முதல் துவங்கி பிக்சல் 2 XL 128 ஜிபி ஸ்மார்ட்போனின் விலை ரூ.82,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



    டேடிரீம் வியூ:

    பிக்சல் ஸ்மார்ட்போன்களை போன்றே கூகுளின் டேடிரீம் விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட் மேம்படுத்தப்பட்டுள்ளது. புதிய நிறங்கள் மற்றும் புதுவகை லென்ஸ் கொண்டிருக்கும் டேடிரீம் வியூ அதிக துல்லியமாக காட்சிகளை வழங்கும்படி மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரயிருக்கும் டேடிரீம் வியூ 99 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.6,500 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை இந்தியா, அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, ஃபிரான்ஸ், ஸ்பெயின், ஜப்பான் மற்றும் தென் கொரியா உள்ளிட்ட நாடுகளில் நடைபெற இருக்கிறது.



    கூகுள் ஹோம்:

    கூகுள் ஹார்டுவேர் விழாவில் இரண்டு ஹோம் ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. கூகுள் ஹோம் மேக்ஸ் மற்றும் கூகுள் ஹோம் மினி என அழைக்கப்படும் புதிய ஸ்பீக்கர்கள் அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களில் விற்பனைக்கு வரயிருக்கிறது.

    ஹோம் மினி சிறிய ரக ஸ்பீக்கர் என்பதோடு டச் கண்ட்ரோல் மற்றும் குரல் மூலம் இயக்கக்கூடிய வசதிகளை கொண்டுள்ளது. கூகுள் ஹோம் மேக்ஸ் 4.5 இன்ச் ஊஃபர்கள் மற்றும் 0.7இன்ச் டுவீட்டர்களை கொண்டிருக்கிறது. கூகுள் ஹோம் மினி 49 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.3,200 மற்றும் கூகுள் ஹோம் மேக்ஸ் 399 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.26,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



    கூகுள் பிக்சல்புக்:

    குரோம் இயங்குதளம் கொண்டு இயங்கும் பிக்சல்புக் சாதனமும் நேற்றைய கூகுள் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. 12.3 இன்ச் அளவு கொண்ட பிக்சல்புக் லேப்டாப், வாடிக்கையாளர் விருப்பத்திற்கேற்ப டேப்லெட் போன்று மடித்துக் கொள்ளும் வசதி கொண்டுள்ளது. இத்துடன் சர்ஃபேஸ் பென் போன்றே புதிய பென் சாதனமும் ஆண்ட்ராய்டு செயலிகளை இயக்கும் வசதியையும் கொண்டுள்ளது.

    கூகுள் பிக்சல்புக் விலை 999 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.65,000 மற்றும் பிக்சல்புக் பென் 99 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.6,500 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கூகுள் அசிஸ்டண்ட் வசதி கொண்ட முதல் லேப்டாப் என்பதோடு, 10 மணி நேர பேக்கப் வழங்கும் பேட்டரி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.



    பிக்சல் பட்ஸ்:

    ஆப்பிள் ஏர்பாட்ஸ் சாதனத்திற்கு போட்டியாக கூகுளின் வயர்லெஸ் ஹெட்போன்களாக பிக்சல் பட்ஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஏர்பாட்ஸ் போன்று இல்லாமல் பிக்சல் பட்ஸ் முழுமையாக வயர்லெஸ் வசதி கொண்டிருக்கவில்லை என்றாலும் ஒற்றை வையர் கொண்டுள்ளது.

    கூகுள் பிக்சல்பட்ஸ் விலை 159 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.10,400 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் ஏற்கனவே முன்பதிவு செய்யப்படும் பிக்சல்பட்ஸ் இந்திய விற்பனை குறித்து எவ்வித தகவலும் இல்லை. ஹெட்போன்களுடன் வழங்கப்படும் கேஸ் பேட்டரி பேக் போன்று செயல்படுவதோடு எவ்வித பட்டன்களையும் கொண்டிருக்கவில்லை.

    இயர்பீஸ் சாதனத்தை ஸ்வைப் செய்தே முழுமையாக இயக்கும்படி பிக்சல்பட்ஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்துடன் உடனுக்குடன் மொழி பெயர்க்கும் வசதி கொண்டிருப்பதால் மொழி தெரியாதவர்களிடமும் எவ்வித தயக்கமும் இன்றி பேச முடியும்.



    கிளிப்ஸ்:

    கூகுள் நிறுவனத்தின் முதல் கேமரா தான் கூகுள் கிளிப்ஸ். செயற்கை நுண்ணறிவு வசதி கொண்ட கிளிப்ஸ் கேமரா மெஷின் லெர்னிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தானாகவே புகைப்படங்களை எடுக்கும் வசதி கொண்டுள்ளது. மேனுவல் முறையில் இயக்கும் வசதி கொண்ட கிளிப்ஸ் கேமரா விலை 249 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.16,200 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    அருமையான நிகழ்வுகளை படமாக்குவதில் துல்லியமாக செயல்படும் கிளிப்ஸ் பதிவு செய்யும் போது மின்விளக்கை எரியவிடுகிறது. கேமரா வாங்குவோருக்கு எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி கூகுள் போட்டோஸ் கிளவுட் ஸ்டோரேஜ் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.
    ஃபேஸ்புக்கின் வாட்ஸ்அப் செயலிக்கு என பிரத்தியேக எமோஜிக்கள் செயலியின் பீட்டா பதிப்பில் வழங்கப்பட்டுள்ளது. விரைவில் புதிய எமோஜிக்கள் அனைவருக்கும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    புதுடெல்லி:

    ஃபேஸ்புக் நிறுவனத்தின் பிரபல குறுந்தகவல் செயலியான வாட்ஸ்அப் பீட்டா பதிப்பில் புதிய வகை எமோஜிக்கள் வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு பதிப்பில் சோதனை செய்யப்படும் புதிய வகை எமோஜிக்கள் ஆப்பிள் எமோஜிக்களை போன்றே காட்சியளிக்கிறது.

    ஆப்பிள் போன்றே ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டர் தளங்களில் தங்களுக்கென பிரத்தியேக எமோஜிக்கள் வழங்குகின்றன. வாட்ஸ்அப்பில் சோதனை செய்யப்படும் புதிய எமோஜிக்கள் ஆப்பிள் வடிவமைப்பை சார்ந்து இருப்பதால், ஒரே மாதிரியாக காட்சியளிக்கிறது. நடுவிரல் மற்றும் ஒலிம்பிக் வளையங்கள் எமோஜிக்களாக வழங்கப்பட்ட முதல் செயலியாக வாட்ஸ்அப் இருக்கிறது.

    தற்சமயம் வெளியாகியுள்ள எமோஜிக்கள் பீட்டா பதிப்பில் வழங்கப்பட்டிருப்பதால் இவை அனைவருக்கமான செயலியில் அப்படியே வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. சமீபத்திய தகவல் ஐஓஎஸ் எமோஜிக்களை வாட்ஸ்அப் முந்தியிருப்பதாக கூறப்படுகிறது.

    இந்த ஆண்டின் ஜூலை மாத வாக்கில் வாட்ஸ்அப் செயலியில் தினமும் 100 கோடி பேர் குறுந்தகவல் பரிமாறி கொள்வதாக வாட்ஸ்அப் அறிவித்தது. அந்த வகையில் இந்த செயலியில் தினமும் 5500 கோடி குறுந்தகவல்கள், 450 கோடி புகைப்படங்கள் மற்றும் 100 கோடி வீடியோக்கள் பரிமாறிக் கொள்ளப்படுகிறது.

    உலகம் முழுக்க 100 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வரும் வாட்ஸ்அப் செயலியில் இதுவரை 60 மொழிகளில் பயன்படுத்தும் வசதி வழங்கப்படுகிறது. சமீபத்திய எமோஜிக்கள் மட்டுமின்றி வாடிக்கையாளர்களுக்கு பயன்தரும் பல்வேறு அம்சங்களும் அவ்வப்போது வழங்கப்பட்டு வருகிறது. 
    ஹூவாய் நிறுவனத்தின் ஹானர் பிரான்டு புதிய பட்ஜெட் ரக ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. மெட்டாலிக் வடிவமைப்பு கொண்ட புதிய ஹானர் ஹால்லி 4 முழு சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:  

    ஹுவாய் நிறுவனத்தின் ஹானர் பிரான்டு இந்தியாவில் புதிய பட்ஜெட் ரக ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. ஹானர் ஹால்லி 4 என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன் மெட்டாலிக் வடிவமைப்பு, கைரேகை ஸ்கேன் மற்றும் 13 எம்பி பிரைமரி கேமரா கொண்டுள்ளது.

    ஆண்ட்ராய்டு நௌக்கட் சார்ந்த இயங்குதளம் கொண்டு இயங்கும் புதிய ஹானர் ஹால்லி 4 ஸ்மார்ட்போன் இந்தியா முழுக்க ஆஃப்லைன் விற்பனை மையங்களில் விற்பனை செய்யப்படுகிறது.



    ஹானர் ஹால்லி 4 சிறப்பம்சங்கள்:

    - 5.0 இன்ச் எச்டி 720x1280 பிக்சல் டிஸ்ப்ளே
    - ல்னாப்டிராகன் 430 சிப்செட்
    - 3 ஜிபி ரேம்
    - 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
    - 5 எம்பி செல்ஃபி கேமரா
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3020 எம்ஏஎச் பேட்டரி
    - கைரேகை ஸ்கேனர்

    டூயல் சிம் கார்டு ஸ்லாட் கொண்டு இயங்கும் ஹானர் ஹால்லி 4 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் சார்ந்த EMUI 5.1 சார்ந்த இயங்குதளம் கொண்டுள்ளது. கோல்டு, கிரே மற்றும் சில்வர் நிறங்களில் கிடைக்கும் ஹானர் ஹால்லி 4 ஸ்மார்ட்போன் விலை இந்தியாவில் ரூ.11,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    ஹூவாய் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீடு சார்ந்த டீசர் அந்நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன் சார்ந்து இதுவரை வெளியாகியுள்ள தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    ஹூவாய் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் வெளியீடு சார்ந்த தகவல்கள் அந்நிறுவன டுவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. மேலும் விழா அழைப்பிதழில் #ExplorewithHONOR என்ற ஹேஷ்டேக் மட்டும் இடம்பெற்றுள்ளது. இத்துடன் ஸ்மார்ட்போனின் மற்ற தகவல்கள் இடம்பெறவில்லை.

    ஹானர் அழைப்பிதழை குறிவைத்து, வெளியாகும் ஸ்மார்ட்போன் ஹானர் 9 தானா என்ற வாசகர் கேள்விக்கு, ஸ்மார்ட்போன் அக்டோபர் 5-ம் தேதி வெளிச்சத்திற்கு வரும் ஹானர் பதில் அளித்துள்ளது. முன்னதாக ஹானர் நிறுவனத்தின் ஹூவாய் P10 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஹானர் 9 ஸ்மார்ட்போனில் அந்நிறுவனம் ஏற்கனவே வெளியிட்ட ஹானர் 8 ப்ரோ போன்ற சிறப்பம்சங்கள் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனில் பின்புறம் கிளாஸ் பேனல் கொண்டிருக்கும் என்றும் கிளேசியர் கிரே, சஃபையர் புளூ, மிட்நைட் பிளாக், கோல்டு, புளூ பேர்டு, ராபின் எக் புளூ உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது.



    ஹானர் 9 சிறப்பம்சங்கள்:

    - 5.15 இன்ச் ஃபுல் எச்டி டிஸ்ப்ளே, 1080x1920 பிக்சல் ரெசல்யூஷன்
    - ஹைசிலிகான் கிரின் 960 சிப்செட்
    - 4 ஜிபி / 6 ஜிபி ரேம்
    - 64 ஜிபி / 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - 20 எம்பி + 12 எம்பி பிரைமரி கேமரா
    - 8 எம்பி செல்ஃபி கேமரா
    - பின்புறம் கைரேகை ஸ்கேனர்
    - 3200 எம்ஏஎச் பேட்டரி

    சமீபத்தில் வெளியான ஹானர் 8 ப்ரோ விலை ரூ.29,999 என நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில், புதிய ஸ்மார்ட்போனின் விலை ரூ.35,000 வரை நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் ஹானர் 9 ஸ்மார்ட்போன் நோக்கியாவின் சமீபத்திய வெளியீடான நோக்கியா 8 ஸ்மார்ட்போனுக்கு போட்டியாக அமையும் என கூறப்படுகிறது.

    இது மட்டுமின்றி ஹானர் 7X ஸ்மார்ட்போன் அக்டோபர் 11-ம் தேதி வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ×