என் மலர்tooltip icon

    செய்திகள்

    அச்சுறுத்தும் டெங்கு; ஆப் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் சுகாதார துறை
    X

    அச்சுறுத்தும் டெங்கு; ஆப் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் சுகாதார துறை

    தமிழ்நாடு சுகாதார துறையின் டெங்கு ஃபீவர் தமிழ் எனும் செயலி, பொது மக்களுக்கு டெங்கு குறித்த அனைத்து சந்தேகங்கள் மற்றும் விழிப்புணர்வு சார்ந்த தகவல்களை வழங்குகிறது.
    புதுடெல்லி:

    தமிழகத்தில் நாளுக்கு நாள் டெங்கு பாதிப்பில் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள தனியார் அமைப்புகள், பொதுநல தொண்டு இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சியினர் தங்கள் சார்பில் டெங்கு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்களில் ஈடுப்பட்டு வருகின்றன.

    டெங்கு பாதிப்பு வேகமாக பரவி வரும் நிலையில், தமிழக சுகாதாரத் துறை சார்பில் கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட டெங்கு ஃபீவர் தமிழ் ஆண்ட்ராய்டு செயலியை பற்றியும் அறிந்து கொள்ளும் அவசியம் ஏற்பட்டுள்ளது. தமிழக சுகாதார துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த செயலியில் டெங்கு குறித்து அனைத்து தகவல்களும் இடம்பெற்றுள்ளன.



    அனைவரும் பயன்படுத்தும் வகையில் முழுக்க முழுக்க தமிழில் காணப்படும் இந்த செயலியில் டெங்கு உற்பத்தியாகும் இடங்கள், கேள்வி பதில், சித்த மருத்துவம், தகவல் மற்றும் உதவி, ஆடியோ மற்றும் குறும்படம் என ஆறு ஆப்ஷன்கள் இடம்பெற்றுள்ளன.

    டெங்கு சார்ந்த அனைத்து தகவல்களையும் அனைவருக்கும் புரியும் படியான வரைபடங்கள், எழுத்து வடிவில் எளிய நடையில் முழு தகவல்கள், சித்த மருத்துவ குறிப்புகள், அனைவருக்கும் எழும் டெங்கு சார்ந்த சந்தேகங்களுக்கான விடை, ஆடியோ மற்றும் வீடியோ வடிவில் விளக்க குறும்படங்கள் உள்ளிட்டவை இதில் இடம்பெற்றுள்ளன.

    டெங்கு ஃபீவர் தமிழ் செயலி கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக கிடைக்கிறது.
    Next Story
    ×